"மெய்நிகர் மனிதம்"

கற்பனை
5 out of 5 (18 Ratings)
Share this story

உறுதிமொழிக் கடிதம்


அனைவருக்கும் பணிவான வணக்கம்!. Bynge மற்றும் Notion press சார்பாக நடத்தும் இந்த மாபெரும் சிறுகதை போட்டியில் கலந்து கொள்வதில் பெரும் உவகை கொள்கிறேன்! இதுபோன்ற முன்னெடுப்பு வளரும் எழுத்தாளர்களுக்கு பெரும் ஊக்கத்தையும், மகிழ்வையும் அளிக்கிறது! எனது சிறுகதையான [மெய்நிகர் மனிதம்] என்கிற சிறுகதையை தங்களுக்கு அனுப்பிவைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இக்கதை வேறு எந்த இதழிலோ, இணையவழி ஊடகங்களிலோ பிரசுரம் ஆகவில்லை என்று உறுதி கூறி, உத்தரவாதமும் தருகிறேன். மேலும், இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையே என்றும், பிற மொழிபெயர்ப்போ, தழுவலோ அல்ல என்றும் உறுதிமொழி கூறுகிறேன்!


அன்புடன்

சுப்ரமணியன் காந்தி

+919841788286

Lawsubbu007@gmail.com


(சிறுகதை)

“நீயா? நானா? ....என்ற போட்டியில் வரிந்து கட்டிக்கொண்டு “குபு குபுவென்று” புகைந்து கொண்டிருந்த, அந்த புகைவண்டியின் தலையின் உச்சியில் இருந்த குடுமியில் இருந்து கிளம்பிய கரும்புகைக்கும், மேல் வானத்தில் உழன்று கொண்டிருந்த கருமேகத்திரள்களுக்கும் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருந்தது!”.

தாலுக்கா அலுவலகத்தை தாண்டியிருந்த சாலைக்கு அப்பால், வலப்புறமாக விரிந்து கிடந்த தண்டவாளத்தில், புறப்படுவதற்கு தயாராக இருந்த புகைவண்டியின் எஞ்சினின் முன்னால் நின்றுகொண்டு, பய பக்தியுடன் எலுமிச்சை பழத்தின் மீது கற்பூரம் ஏற்றி சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தான் முனியன்.

“அடே...கூறு கெட்ட மவனே...விலகி சீக்கிரம் வாடா..இல்லன்னா ?? என் தாலி அந்து போகிடும்.....என்று கோபத்தோடு கூவிக்கொண்டிருந்தார் அந்த புகைவண்டி நிலைய பொறுப்பாளர்!.

“முடிஞ்சது சாமி!...எங்க முதலாளி அம்மாவும், அய்யாவும் வெளியூர் பயணம் போறாங்க! ...”அவங்க நல்லபடியா போய்ச் சேரணும்னு அந்த காவல் தெய்வம் கருப்பன வேண்டிகிட்டு சுத்தி போட்டுக்கிட்டு இருக்கேன்...இதோ வந்துட்டேன் சாமி என்று கெஞ்சலாக அவருக்கு பதில் சொன்னபடி, எலுமிச்சை பழத்தை மும்முரமாக சுத்திப் போட்டுக் கொண்டிருந்தான்.

போடா ...பொசகெத்த பயலே!....”நீ இப்படியே பண்ணிகிட்டே இருந்தா ...அப்புறம் சங்குதான்.. சீக்கிரம் மேல வாடா ....நான் கொடிய ஆட்டி, வண்டிய கிளம்பச் சொல்லணும்” என்று அதட்டினார் அந்த வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தவ ஆசாமி!.

“இதோ வந்துட்டேன் சாமி!...என்று சொல்லிக்கொண்டே கையில் சுத்திய எலுமிச்சை பழத்தை காலில் வைத்து ஒரே நசுக்காக நசுக்கி, அதனை நாலாபுறமும் சுற்றி வீசிவிட்டு அங்கிருந்து ரயில் மேடை மீது கைவைத்து ஒரே தாவாக தாவி மேலே ஏறி நடைபாதை மீது ஏறினான் முனுசாமி.

அவனோடு கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளை, அவனது முதலாளி அம்மா உட்கார்ந்து கொண்டிருந்த புகைவண்டி பெட்டியின் இருக்கைக்கு மேற்புறத்தில் இருந்த பரண் மீது அடுக்க ஆரம்பித்தான்.அவனது அசைவிலும் , பரபரப்பிலும் விசுவாசம் ஏகத்துக்கும் தெறித்துக் கொண்டிருந்தது!

“அடே கூறு கேட்ட பயலே .... எந்த நேரத்துல என்ன பண்ணறதுன்னு உனக்கு விவஸ்தையே கெடையாதா?...இப்ப போயி சூடம் கொளுத்துறேன், சுத்திப் போடறேன்னு” எதையாவது கோமாளித்தனமா பண்ணிக்கிட்டு கெடக்கிறீயே” என்ற முதலாளி அம்மாவின் வார்த்தைகள் முனுசாமியின் உள்ளத்தில் முள்தைப்பது போல் இருந்தாலும், அது பழக்கப்பட்ட ஒன்று என்பதால், அதற்கு அவன் எந்தவித புதிய முகபாவனையையும் காட்டவில்லை!.

எல்லாவற்றையும் அடுக்கி முடித்தவன் தயங்கி தயங்கி முதலாளி அருகே சென்று , “ஐயா! இன்னும் அந்த புல்லட் வண்டிய பணம் கொடுத்து வாங்கிட்டு போறேன்னு சொன்ன பக்கத்துக்கு ஊரு மைனர் வரவே இல்ல..அதனால, நான் அந்த புல்லட் வண்டிய நான் எடுத்துக்கவா!...இனாமா வேணாம் ஐயா, நான் மாசா மாசம் கூலி வேலை பாத்தாவது அதுக்கு உண்டான காச உங்க பேங்ல தவணை முறையில போட்டுடறேன்” என்று தலையை சொறிந்தபடி பம்மிக்கொண்டே சொன்னான் முனியன்..

“டேய்..என்னடா!..வாய் இஷ்டத்துக்கும் நீளுது!..”இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்ட கதையா இல்ல இருக்கு!...”தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாதுன்னு உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்..நம்ம கை வரவை வச்சிக்கிட்டு வாழப் பழகிக்கோ” புரியுதா? ரெண்டு பொட்ட புள்ளைங்களை பெத்து வச்சிருக்க, தெரியும் இல்ல! ஒழுங்கா அதுங்கள நல்லா படிக்க வச்சி கல்யாணம் காச்சின்னு கரை சேர்க்கிற வேலையைப் பாரு. அது உட்டுபுட்டு இப்படி ஆடம்பரமா வாழறேன், அவங்கள மாதிரி இருக்கப் போறேன்னு புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதையா ஆகி தொலைக்காத! “ குடிக்கவே கஞ்சி இல்லையாம், இதுல துரைக்கு கொப்பளிக்க பன்னீர் கேட்குதோ?..என்று படபடவென பொரிந்து தள்ளினாள் மீனாட்சி..

“விடுடி...எப்ப பார்த்தாலும் அவன திட்டிகிட்டு..என்று மனைவியை அதட்டியவர் “டேய் முனியா!...அதெல்லாம் உனக்கு சரிபட்டு வராது...அந்தமாதிரி ஆசையை எல்லாம் வச்சிக்காதாடா” உனக்கு இருக்குற கஷ்டத்துல இதெல்லாம் தேவையா? போ..போய் குடும்பத்த பத்திரமா பாத்துக்கோ” என்றார்...

“முனியனின் எஜமானர்களின் பதிலுக்கு முன்னால், முனியனின் கோரிக்கைகள் உணர்வற்று, ஊமையாக விம்மிக் கொண்டிருந்தன! அவனது எத்தனிப்புகள் எகத்தாளம் செய்யத் தொடங்கின!”.

“உணர்வற்ற ஒரு இயந்திரத்துக்கு இருக்கும் மதிப்பு கூட, உயிருள்ள இந்த மனுசனுக்கு இருப்பதில்லையே” என்று நினைத்து உள்ளுக்குள் புழுங்கினான்! புல்லட்டாம் பெரிய புல்லட் , பேசாமல் அந்த வண்டிக்கு தீவைத்து எரித்துவிட்டால் என்ன? என்று குரூர எண்ணம் கூட அவனுக்குள் ஒருநொடி தோன்றி மறைந்தது.

அந்நேரம் புகைவண்டியின் எஞ்சின் புறப்பட தயாராகிவிட்டதை உணர்த்த “கூ வென்று கணைக்கத் தொடங்கியது ....நிலையத்தில் இருந்து “டங் டங்கென்ற மணியோசையும் கிளம்பின!.

“அவமானங்கள் ஒருபுறம் அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், இத்தனைக் காலம் தனது குடும்பத்துக்கு சோறு போட்ட முதலாளிகள், இப்போது கிளம்பிச் செல்வது அவனுக்கு “ஈச்சம்பாயை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, ஊர் எல்லையில் இருந்த காவல் சாமிகள் இடம்பெயர்ந்து எங்கேயே புறப்பட்டு செல்வதுபோல்” இருந்தது முனியனுக்கு!....”அவனை அறியாமல் அவனது விழிகளில் கண்ணீர்த் துளிகள் வழிந்து கொண்டிருந்தது!”

“கடந்த இருபது வருடமாக முனியன் அஞ்சலையின் பண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு கல்யாணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் பிறந்து அவர்கள் ஆறு கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருக்கும் அரசாங்க பள்ளியில் பெரியவள் பத்தாம் வகுப்பும், சிறியவள் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். முனியனின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலைமை. அதைத் தவிர வேறு வழியில்லை. இத்தனைக் காலம் எப்படியே குடும்பத்தை காப்பாற்றியும், பிள்ளைகளை படிக்கவைத்தும் காலத்தை ஒட்டிவிட்டான். முனியனுக்கு உழைப்பின் அசதி போக்க எப்போதாவது மாதமொருமுறை கள் குடிக்கும் பழக்கத்தை தவிர, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. இப்போது திடீரென, தனது முதலாளியம்மா இப்படி பண்ணையை விற்றுவிட்டு, டெல்லிக்கு புறப்பட்டு போவார்கள் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை!

“முனியனுக்கு ஏனோ துக்கம் நெஞ்சை அடைப்பதைபோல இருந்தது. அவனை அறியாமல் அவனது விழிகள் அவனது கண்களில் இருந்து பொலபொலவென்று கொட்டத் தொடங்கியது! அவன் முன்பாக புகைவண்டியில் அமர்ந்து கொண்டிருந்த அவனது முதலாளி அம்மாவும், ஐயாவும் மங்கலாக தெரிந்தார்கள்! அதனூடே முன்சென்ற காலத்தின் நிகழ்வுகள் அவனுக்குள் ஊசலாடத் தொடங்கின.

“ஏங்க, அந்த வண்டியில அப்படி என்னதான் இருக்குதுன்னு தெரியல! இவ்ளோ நேரமா அதையே கழுவி தொடச்சிக்கிட்டு கெடக்கறீங்களோ.. சட்டுபுட்டுன்னு கெளம்புங்க நேரத்துக்கு பத்திர ஆபிசுக்கு போகணும்..என்று அந்த கிராமத்து பண்ணை வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து தனது பட்டுப் புடவைகளை மடித்து டிரங் பெட்டிக்குள் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை.

“போலாம் போலாம்”...அதுக்கு இன்னும் நேரம் இருக்கு! உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், அப்படி சொல்லாதேன்னு! என் வண்டியபத்தி குறை சொல்லலைன்னா உனக்கு தூக்கம் வராதே! என்று முணுமுணுங்கினார்!

“ஆமா..உலகத்துல இல்லாத பெரிய உசத்தி வண்டி, அதப் பத்தி நான் குறை சொல்றேனாம் என்று சிடுசிடுதவள்,”இந்த நேரம் பாத்து அந்த கடன்காரன் முனுசாமி எங்கபோயி தொலைஞ்சானோ தெரியலையே! என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் அஞ்சலை.

“இங்கதான் எங்காவது தோப்புல வேலையா இருப்பான்...வந்துடுவான்! நீ போயி அசல் பத்திரத்த எடுத்து பத்திரமாக பையில போட்டு வச்சுக்கோ, அப்புறம் பத்திர ஆபிசுக்கு போயி அது இல்ல இது இல்லன்னு திரும்பி இவ்ளோ தூரம் மெனக்கிட்டு வரமுடியாது என்றார் சுந்தர கோபால்.

“என்னத்த சொல்றது, நம்மால முடியாமதான் நமக்கு உதவிக்கு ஆளுங்கள வேலைக்கு வைக்கிறோம். ஆனா இந்த முனுசாமி எப்ப எனக்கு வேலை இருக்குதோ அப்ப கூட மாட இருந்து உதவறதே இல்ல...அப்படி என்னதான் அவனுக்கு தலைக்குமேல வேலை இருக்கோ தெரியல” என்று முணு முணுங்கிக் கொண்டிருந்தாள் அஞ்சலை.

அந்நேரம்,தோட்டத்திலிருந்து பண்ணை வீட்டின் பின்புறமாக சுவற்றினை ஒட்டியபடி வேக வேகமாக ஓடிவந்தான் முனியன் . அவனது தலையில் பெரிய பலாப்பழம் ஒன்று இருந்தது.

“வீணா போனவனே எங்கே போய் தொலைந்தாய்? என்று கோவமாக கேட்டாள் அஞ்சலை

“நீங்க நாளைக்கு ஊருக்கு கெளம்பறீங்க இல்லையா, அதான் நம்ம பண்ணையில இருக்குற பலாப்பசம் , வாழைத்தார் எல்லாத்தையும் பறிச்சி எடுத்து வைச்சிக்கிட்டு இருக்கேம்மா” என்று தலையில் சுமந்து வந்த பாசத்தை இறக்கி அங்கிருந்த வாராண்டாவில் இருந்த திண்ணை மீது வைத்தபடி சொன்னான் முனியன்.

“எல்லாத்துக்கும் ஒரு பதில, தயாரா தலைப்பாவிலேயே வச்சிக்கிட்டு இருப்பியே? சரி..சரி...வண்டிய கட்டு என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள் அஞ்சலை...

பட்டணத்துக்கு போய் சேர்ந்ததும், அவர்கள் இருவரும் பத்திர பதிவு அலுவலகத்துக்குள் சென்றுவிட, வண்டியில் இருந்த காளை மாடுகளை இளைப்பாற அவிழ்த்து விட்டு அதனை பத்திரப் பதிவு அலுவலகத்தின் எதிரே இருந்த குளக்கரையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான் முனியன்!

“மாலை வேளை வந்தது. பத்திரம் பதிவு முடிந்து பணம் கைக்கு வந்திருக்கும் போல, அதனை வங்கியில் போடுவதற்கு பணப்பையோடு முதலாளியும், அந்த வங்கியை ஒட்டியிருந்த தபால் நிலையத்துக்குள் முதலாளியம்மாவும் நுழைவதை முனியன் கவனித்தான்.

“டேய்..அடேய்..முனியா...என்று அவனை அவனது முதலாளியும், முதலாளியம்மாவும் அதட்டும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டவன், அவர்களை பார்த்து திருதிருவென்று முழித்தான்..

“பகல் கனவா? போடா..வண்டி கிளம்பிடுச்சி...பத்திரமா பாத்து இறங்கு! கீழ விழுந்து தொலைச்சிடாத , அப்புறம் அந்த பாவமும் எங்க தலையில விடிஞ்சிட போகுது” என்று அதட்டிய முதலாளியம்மாவின் திட்டுகளை கேட்டபடி அவசர அவசரமாக அந்த மெல்ல நகரத் தொடங்கிய புகைவண்டியில் இருந்து கீழே இறங்கி நடைபாதையில் நடக்கத் தொடங்கினான் முனியன்.

அவனது வீடு வந்து சேர்ந்தபோது அன்றைய சூரியன் மறைந்து இருள் ஆரம்பித்து வானில் விண்மீன்கள் முளைக்கத் தொடங்கி இருந்தன.“கனத்த இதயத்தோடு தனது ஓலைக் குடிசைக்குள் நுழைந்தான் முனியன்!

அவனைப் பார்த்ததும், “என்னங்க முதலாளி அம்மாவும், ஐயாவும் பத்திரமாக கேளம்பிட்டாங்களா? என்று ஆவலோடு கேட்டாள் அவனது மனைவி அஞ்சலை.

“ம்...பத்திரமா கெளம்பிட்டாங்க!” என்று சொல்லியபடி பெருமூச்சு விட்டவன், ஏய் புள்ள! என்னதான் நாம ஜென்மம் சாகற அளவுக்கு , நாயா பேயா அடுத்தவங்களுக்கு உழைச்சாலும், இந்த பெரிய மனுசங்களுக்கு, நம்மல மாதிரி ஏழை பாழைங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும் அப்படிங்கற பெரிய மனசு இல்லாம போயிடுது பாத்தியா! என்று சலிப்போடு சொன்னான் முனியன்..

“என்னங்க ஆச்சு...ஏன் ஒரு மாதிரி பேசறீங்க...முதலாளியம்மா வழக்கம்போல ஏதாவது திட்டிட்டாங்களா?என்று அஞ்சலை பதறிய வேளையில்...

” டேய் முனியா! வீட்ல இருக்கீயா? என்று அவனது குடிசைக்கு வெளியே ஒரு பழக்கப்பட்ட குரல் ஒன்று கேட்டது!

“இருக்கேன் சாமி! ..யாருங்க?....என்று கேட்டுக்கொண்டே உள்ளேயிருந்து வெளியே வந்தான் முனியன். அவனது மனைவி அஞ்சலையும் அவன் பின்னால் குடிசையைவிட்டு வெளியே வந்தாள்.

“ அட..நம்ம போஸ்ட் மாஸ்டர் ஐயா!...சொல்லுங்க சாமி..நீங்க ஏன் இவ்ளோ தூரம் இந்த ஏழை வீட்டுக்கு வந்தீங்க...யார்கிட்டயாவது சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பனே என்றவன்.. ஏய் புள்ள!. ஐயாவுக்கு குடிக்க தண்ணி கொண்டுவா..ஐயா உட்காருங்க ஐயா என்று தனது தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து அவனது குடிசையின் முகப்பில் இருந்த திண்ணையில் இருந்த தூசியை தட்டிவிட்டான்.

“அடேய்...நீ யோகக்காரண்டா! உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சி இருக்கு என்றவர்..” அடேய் முனியா..மீனாட்சி அம்மா மாதிரி ஒரு முதலாளி உனக்கு கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும், நீ நெனைக்கிற மாதிரி அவங்க டெல்லி போகல...காசிக்கு போயிருக்காங்க...”நானும் உங்க முதலாளி சுந்தர கோபாலும் சின்ன வயசில இருந்தே சிநேகிதக்காரங்க.. அது உனக்கு தெரியும்தானே!..அவர் சம்சாரம் மீனாட்சி அம்மாவுக்கு புத்து நோயாம்..அது உங்க முதலாளி ஐயாவுக்கே ஒரு வருசத்துக்கு முன்னாடிதான் தெரிய வந்திருக்கு. எத்தனையோ டாக்டர பாத்தும், எவ்ளோ வைத்தியம் பண்ணியும் அவங்களுக்கு குணமாகதுன்னு கைய விரிச்சிட்டங்கலாம்! அதனால, அவங்க பண்ண பாவமே, இல்லன்னா அவங்க முன்னோர்கள் பண்ண பாவமோ அதனால்தான் இப்படியெல்லாம் நடந்திருக்குன்னு, காசிக்கு போயி அங்கயே இருந்து கடைசி காலத்த முடிச்சிக்க போயிருக்காங்க” என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தார் அந்த தபால் அலுவலர்.

“என்னங்க சாமி..சொல்றீங்க...அம்மாவுக்கு புத்து நோயா? என்று பதறினான் முனியான்..உடனிருந்த அஞ்சலையும் திகிலுற்றாள்!

ஆமாண்டா...முனியா! பாவம் அந்த அம்மா..இன்னும் எத்தனை நாளுக்கு உயிரோட இருப்பங்களோ? என்று வருத்ததோடு சொன்னவர், “நான் பாரு, வந்த வேலைய விட்டுட்டு வேற எதையே பேசிக்கிட்டு இருக்கேன் என்றவர், “இந்தாடா..பண்ணை வீட்டு சாவி...வச்சிக்கோ என்று சாவியை அவனிடம் நீட்டினார்.,

ஐயா..பண்ணை வீட்டு சாவி ...எங்கிட்ட ஏன்? என்று ஒன்றும் புரியாமல் திகைப்போடு முனியன் அவரை ஏறிட்டபடி கேட்டான்

“இன்னுமாடா உனக்கு புரியல!..மீனாட்சியம்மா உன்ன சொந்த புள்ள மாதிரி நெனைச்சிகிட்டு இருந்திருக்காங்க...அதனாலதான் அவங்க பண்ணைவீட்டை உன் பேர்ல எழுதி வச்சி இருக்காங்க”.. அதுமட்டுமா, உன் புள்ளைங்க படிப்பு செலவுக்காக போஸ்ட் ஆபிஸ்ல உங்க பொண்ணுங்க ரெண்டு பேர் பேர்லயும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கு போட்டிருக்கிற வைப்புநிதி பத்திரம்...பத்திரமா வச்சிக்கோ!” இதுதாண்டா பெரிய மனுஷத்தனம், நாம பண்ற உதவி கூட, மூணாவது மனுசங்க யாருக்கும் தெரியக்கூடாதுன்னு காதும் காதும் வச்ச மாதிரி பண்ணிட்டு போயிருக்காங்க பாரு” என்று சொல்லிவிட்டு சாவியையும், பத்திரத்தையும் அவனிடம் கொடுத்தவர் “டேய் முனியா! உங்க முதலாளி அம்மா உன்கிட்ட ஒரு விஷயத்த சொல்ல சொன்னாங்க! “உன்ன அவங்க அடிக்கடி திட்டுவது கடுமை காட்டி பேசுவது இதெல்லாம் அவங்க முதலாளியம்மா அப்படிங்கற உசத்தில இல்லையாம். உம் மேல வச்சிருந்த பாசத்துல தான் அப்படி திட்டுனாங்கலாம்! உரிமை இருக்குற இடத்துல தானே கோபப்பட முடியும்! ஒருவேளை அதையெல்லாம் நெனைச்சி, நீ மனசுல வருத்தம் வச்சிருந்த, அதுக்காக அவங்க மன்னிப்பும் கேட்கச் சொன்னாங்கடா! “பாத்தியா இதுதான் பெரிய மனுசத்தனம்னு சொல்லுவாங்க!” சரி, நான் கேளம்பறேண்டா, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது டைனமோ விளக்கு வைத்த சைக்கிளில் ஏறி மிதித்தபடி அங்கிருந்து கிளம்பினார் அவர்.

“ முனியனின் நெஞ்சம் இப்போது குற்ற உணர்ச்சியில் வெட்கியது. விழிகள் வெம்பத் தொடங்கின. இத்தகைய கருணை பொருந்திய தாயுள்ளம் கொண்ட தனது முதலாளி அம்மாவைப் போய், இப்படி புத்தி பேதலித்து விரக்தியில் மனதுக்குள் தவறாக எண்ணிவிட்டோமே” என்று வெட்கி, துக்கம் தொண்டையை அடைக்க, மனம் வருந்தி நிஜ வேதனையில் கண்ணீர் விட்டான் முனியன்.

“அவன் கையில் வாங்கிய பண்ணைவீட்டு சாவியும், பத்திரமும் அவனை ஏளனப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. அவனது குற்ற உணர்ச்சி ஒரே அடியாக அவனை கொன்று கூறு போட்டுக் கொண்டிருந்தது!

“மனித மனம் ஒரு குரங்கு என்பது எத்தனை உண்மையாக போய்விட்டது. நமது முதலாளியம்மா நமக்கு இத்தனைக் காலம் செய்த உதவியை மறந்து, கடைசி நேரத்தில் அற்பத்தனமாக நாம் அந்த புல்லட்டை கேட்டு அதனை அவர் தரவில்லை என்ற, ஒற்றை அற்பக் காரணத்திற்காக, அவர்கள் செய்த வாழ்நாள் உதவியை, நான் அவர்கள் மீது வைத்திருந்த விசுவாசத்தை மறந்து, ஒரு கனத்தில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டேனே ” என்று வாய்விட்டு சத்தமாக அழத் தொடங்கினான் முனியன்!”

“முனியன் சிந்திய கண்ணீர்த் துளிகள், எங்கேயோ தூரத்தில் புகைவண்டியில் சென்று கொண்டிருக்கும் “அவனது முதலாளியம்மாவின்” பாதங்களை கழுவி, மன்னிப்பு கேட்க காற்றில் கலந்து, இப்போது பயணப்படத் தொடங்கியது!.

- சுப்ரமணியன் காந்தி

Stories you will love

X
Please Wait ...