இருள் தந்த வெளிச்சம்

உண்மைக் கதைகள்
4.7 out of 5 (6 Ratings)
Share this story

இருட்டின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
குருவிகளும் காக்கைகளும் அசந்து தூங்கி கொண்டிருந்தது
ஆந்தைகள் மட்டும் விழித்து அதன் சத்தத்தை ஊரெங்கும் பரப்பி கொண்டிருந்தது
தெருவெங்கும் மின்விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்தது.

சற்று திகில் நிறைந்த இரவு தான்
அந்த நிறைந்த இரவில் நிலவும் அன்று விடுப்பு எடுத்துவிட்டது.
நெருக்கமாக வீடுகள் இருந்தாலும்
வீடுகள் அனைத்தும் உறங்கிதான் கொண்டிருந்தது
வீடுகள் உறங்கிக்கொண்டிருக்க சில இதயங்கள் மட்டும் உறங்காமல் விழித்து தான் கொண்டிருந்தது உறங்கிக்கொண்டே..

அந்த வழியே வந்த ஒருவன் தான் ராஜு.
ராஜு பயத்துடன் நடந்து வந்து பாதி வழியிலேயே நின்று விட்டான் பாதையும் தெரியவில்லை யாரோ அழைப்பது போல இருந்தது திரும்பி பார்த்து யாரும் இல்லையே என்று அசைபோட்டுக்கொண்டே நடை போட்டான்.

ராஜுவிற்கு 25 வயது இயந்திர பொறியியல் முடித்துள்ளான்.
நன்றாக படிப்பவன் நடுத்தர குடும்பம் தான் ஒரு அக்கா ஒரு தங்கை இருக்க வீட்டுக்கு ஒரு பிள்ளை ராஜூ
ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்க்கப்படவில்லை அவன்
இரண்டு பெண் பிள்ளைகள் என்பதால்
சேமிப்பு அதிகமாக இருந்தது.
அனாவசிய செலவுகள் செய்யாத ராஜு படிக்கும் போது பகுதி நேர வேலைக்கு சென்றான் அவன் தேவைகளை அவனே பூர்த்தி செய்து கொள்வான்,
தேவைகள் முடிந்து மீதம் இருக்கும் காசுகளில் அக்காவிற்கு தேவையான அழகுசாதன பொருட்களும் தங்கைக்கு விளையாட பொருட்களும் வாங்கிதருவான்
இது ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் நடக்கும் இருந்தாலும் பாசக்காரான் தான் ராஜு தந்தையின் பாரத்தை அவனால் முடிந்த அளவிற்கு குறைத்தான்.
குறும்புக்கார பையன் தான் ராஜு
அக்காவிடம் பாசத்தை காண்பிக்கும் ராஜு தங்கையிடம் பாசத்தை கோபங்கள் மூலம் வெளிப்படுத்துவான் இருவரும் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள்
இவர்களின் சண்டையை சமாதானம் செய்ய அக்கா தான் மாட்டிக்கொள்வாள்..

இப்படியே மகிழ்வோடு நாட்கள் செல்ல
கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் தன் திறமையின் மூலம் வெற்றி பெற்ற ராஜுவிற்கு பெரிய கம்பெனியில் நிரந்தர வேலையும் கிடைத்தது ஆனால்
அவன் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தால் அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற கட்டாயம்.

இந்த மகிழ்வான செய்தியை நண்பர்களோடு பகிர்ந்து குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடினார்கள்.

இறுதி தேர்வும் நெருங்கியது பகுதி நேர வேலையில் இருந்து விலகிய ராஜு முழு கவனத்தையும் படிப்பின் மீது செலுத்தி தீவிரமாக படித்தான்
இதனால் ராஜுவின் தந்தைக்கு கொஞ்சம் பாரம் கூடியது இதை தெரிந்த ராஜு தந்தையிடம் இன்னும் இரண்டு மாதம் தான் வேலைக்கு சென்றவுடன் எல்லாம் சரி ஆகிவிடும் என்று தந்தைக்கு ஆறுதல் கூறி நகர்ந்தான்..

இறுதியாக தேர்வின் நாள் அது
இரவு நன்றாக உறங்கி விடியற்காலை எழுந்து படித்துக்கொண்டிருந்தான்.
தீடிரென தந்தை குரல் கேட்டது இந்த நேரத்தில் என்ன என்று ஓடி போய் பார்த்தான் ராஜூ,
தந்தை படுத்துக்கொண்டு தண்ணி தண்ணி என்று கேட்டார் உடனே ராஜு அம்மா அக்கா தங்கை என அனைவரையும் எழுப்பி தண்ணியோடு தந்தையிடம் சென்றான் அனைவரும் பதட்டத்தோடு என்ன என்ன என்று கேட்க எதுவும் ராஜுவின் தந்தையால் சொல்ல முடியவில்லை உடனே ராஜு ஆம்புலன்சை அழைத்தான் ஆம்புலன்சும் வந்தது அவசர அவசரமாக மருத்துவமனை சென்றார்கள்

இருதயத்தில் ஏதோ அடைப்பு உள்ளது உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூற அறுவைசிகிச்சையும் நடந்தது..

ராஜூவிற்கு என்ன செய்வதென தெரியவில்லை தேர்விற்கும் செல்ல முடியவில்லை தேர்வு எழுதினால் வேலை நிச்சயம் ஆனால் அவனால் தேர்விற்கு செல்ல முடியவில்லை இந்த நிலையில் எப்படி விட்டு செல்வது என்று யோசித்தான்
அவனது அம்மா அக்கா இருவரும் நீ சென்று எழுதி விட்டு வா நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கூற அவனால் செல்ல முடியவில்லை கண் மூடினால் தந்தையின் முகம் அவன் நான் செல்லவில்லை என்று அங்கேயே நின்று கதறி கதறி அழுதான்.

தந்தைக்கு அறுவைசிகிச்சை முடிந்தது உடல்நிலை சற்று பரவாயில்லை
ஆனால் ஒரு வருட காலத்திற்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
இப்போது
குடும்ப பாரம் முழுவதும் ராஜுவிடம்
இதோடு அடுத்த ஆண்டு தான் அவனால் தேர்வு எழுத முடியும்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் பகுதி நேர வேலையை முழுநேரம் செய்தான் ஆனால் போதுமான வருமானம் இல்லை
அக்காவிற்கு திருமண வயது வந்துவிட்டது சேமிப்பில் இருந்த காசு பாதி செலவாகிவிட்டது.

நல்ல வரன் ஒன்று வந்தது ராஜுவின் அம்மா அக்காவிற்கு இப்போது திருமணம் செய்துவிடலாம் என்று ராஜுவிடம் கூற ராஜுவும் சரி என்றான்
சேமிப்பில் இருந்த பாதி பணத்தை கொண்டு மீதத்திற்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி அக்காவிற்கு கல்யாணம் முடித்துவிட்டான்..

அவன் வேலை செய்த இடத்தில் முதலாளி மாறிவிட்டதால் அவனுக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டார்கள்.
புது முதலாளியிடம் கெஞ்சி பார்த்தான் தனது கஷ்டங்களை கூறினான் அவர் காதுக்கு அது கேட்கவில்லை..

வேலை போனதை வீட்டில் கூறவில்லை ராஜு தினமும் கிடைக்கும் வேலைக்கு சென்றான் தின கூலியை சேர்த்து வைத்தான் அப்பாவிற்கு மாதம் மருந்துகள் மாத்திரைகள் வாங்கவே அந்த காசு சரியாக இருந்தது மூன்றுவேளை உணவு இரண்டுவேலையாக மாறியது ஒரு சில நாட்களில் ராஜு உணவு உண்ணாமல் கூட வேலை செய்வான் தங்கையோ 12 ஆம் வகுப்பு அவளிடம் எதையும் கூறாமல் நன்றாக படி என்று அவ்வப்போது கூறுவான்.
ஆனால் அவன் பாரம் அறிந்த தாய் அவளால் முடிந்த அளவு சிக்கனமாய் குடும்பத்தை நடத்தினாள்.

இந்த நேரத்தில் தான் மீண்டும் ஒரு முறை தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது மருத்துவமனை சென்று அறுவைசிகிச்சை செய்தும் தந்தையை காப்பற்ற முடியவில்லை அவனால், அவன் முழுவதும் உடைந்து போனான்.

தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தந்தையின் நம்பிக்கையான வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலாயிருந்தது. இப்போது அதுவும் இல்லை என்றான போது அவன் சுக்கு நூறாய் உடைந்து சில்லு சில்லாய் சிதறிவிட்டான்.

தங்கையின் பள்ளி படிப்பு முடிந்தது அவளை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற யோசனையும் தலை பிரசவத்திற்கு அக்கா வீட்டிற்கு வந்து உள்ளாள் நல்ல முறையில் அவளை கவனிக்க வேண்டும் என்ற கடமையும் அப்பாவை இழந்த அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வும் அவனுள்ளே துடித்து கொண்டிருந்தது.

இதனிடையே கடன் வட்டி என்று குட்டி போட்டுக்கொண்டே போனது.

அவன் தினக்கூலிக்கு தான் வேலைக்கு சென்றிருந்தான் நிரந்தர வேலை இருந்தாலும் அதற்கான வருமானம் ராஜுவிற்கு இல்லை இந்த விரக்தியில் இருந்தான் ராஜு நேரத்திற்கு வீடு வருவதில்லை யாரிடமும் சரியாக பேசுவதில்லை நம்பிக்கை இழந்தான் ராஜு அவனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை அவனிடம் இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய்விட்டது.

அந்த நேரத்தில் தான் அவன் அந்த அடர்ந்த இருளில் நடந்து கொண்டிருந்தான்
அப்போது தான் ஒரு குரல் அவனை அழைத்தது..

திரும்பி பார்க்காமல் எதையோ உளறிய படியே நடை போட்டான்

திரும்ப ஒரு குரல் உன்னை தான் என்றழைத்தது நின்று திரும்பி பார்த்தவர் யாரா இருந்தாலும் நேரில் வந்து பேசுங்கள் என்று கேட்டார் நேரில் வந்த உருவம் ஒட்டு மொத்த வெளிச்சத்தையும் ராஜுவின் கண் முன் காண்பித்தது..

ஒரு நிமிடம் ஆடி போய் நின்ற ராஜு, நீ யார் என கேட்க உனக்கு தேவை இல்லாதது என அந்த உருவம் கூற இந்த நேரத்தில் இவ்வளவு விரக்தியாக எங்கு செல்கிறாய் என்று கேட்க
ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்த ராஜுவை உனக்கு சரியான வேலை இல்லை
அதனால் உனக்கு மரியாதை இல்லை
அக்காவையும் தங்கையையும் பார்த்து கொள்ள வேண்டும் தாயை பத்திரமாய் பார்த்துக்கொள்ள வேண்டும்
மேலும் வட்டி குட்டி போட்டு விட்டது.
உன் படிப்பு பாதியில் நிற்கிறது
எந்த வேலையும் உனக்கு நிரந்தரமாக அமையவில்லை என்று உண்மையை போட்டு உடைத்த உருவம், ஆதரவு சொல்ல யாருமில்லாமல்
நம்பிக்கை கொடுக்க யாரும் இல்லாத ராஜு ஆம் என்றபடி தலை அசைத்தான்.

பிறகு எனக்கு தெரிந்த வேலையை கூறுகிறேன் பிடித்திருந்தால் சேர்ந்துகொள் என்று அந்த உருவம் கூற அவனுடன் கைகோர்த்த படி நடந்து
அவன் தோள் தட்டி
நீ ஏன் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறாய்
உனக்கான வேலையை நீயே அமைத்துக்கொள் உன்னிடம் திறமையும் அறிவும் அதிகம் இருக்கிறது..

நீண்ட நேரம் உரையாடல் தொடர்ந்தது உன்னால் முடியும்
உன்னிடம் என்ன இருக்கிறது என்று யோசி
பொருளை மூலதனமாக வைக்காமல் உன் நம்பிக்கையை மூலதனமாய் போடு
தீர உழை அதற்கான பலனாக
உயர்ந்த மனிதனாக நீ மாறுவாய் என்ற உருவம் மீண்டும் மீண்டும் அதையே கூறியது.
அவனிடம் இருந்த முயலாமை முற்றிலும் முயலாமல் முடங்கியது..

அவன் ஒரு இயந்திர பொறியாளன் அல்லவா அதனால் குறைந்த முதலீட்டில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் சிறிய கடை ஒன்றை அமைத்தான் தெரிந்தவர்களிடம் கடை பற்றி கூறினான் நாளுக்கு நாள் அவனிடம் வாடிக்கையாளர்கள் அகிகரித்தார்கள் அவன் மட்டுமே வேலை செய்த இடத்தில் அவனுக்கு உதவியாக இரண்டு நபர்களை வைத்து கொண்டான் இரண்டு நான்காக பெருகியது. நான்கு எட்டாக பெருகியது இவ்வாறே அவனது பழுது பார்க்கும் கடை பெரிய கடையாக மாறியது அது மட்டுமில்லாமல் சிறந்த முறையில் குறைந்த விலையில் அவனது வேலை இருந்தது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனத்தை பழுது நீக்கி அவர்களிடம் ஒப்படைத்தான் அது எல்லார்க்கும் பிடித்து போய்விட்டது அதனால் அனைவரும் ராஜுவின் மெக்கானிக் கடையை தேடி ஓடினர்.

கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலுமே அவனது ஆர்வம் முழுவதும் அவனது தொழிலில் சென்றது படித்ததையும் பார்த்ததையும் கொண்டு அவன் தொழிலை ஆரம்பித்தான். இப்போது சிறந்த தொழிலாளியாக இருக்கிறான்.
ராஜு எப்போதுமே அவனை முதலாளி என்று நினைத்ததில்லை அவனும் ஒரு தொழிலாளியகவே நினைத்து தொழில் செய்து வந்தான்.

இதனிடையே சிறுக சிறுக பெருகிய கடனை அடைத்தான்.
அக்காவிற்கும் சுலபமாக தலை பிரசவம் நடந்தது தங்கையையும் நல்ல கல்லூரியில் சேர்த்தான். தனது அம்மாவையும் நன்றாக பார்த்து கொண்டான்.

இவ்வாறே அவனது தொழில் பெருகியது அந்த ஊரின் சுற்றுவட்டாரத்தில் சிறந்த கடையாக ராஜுவின் கடை இருந்தது.

அவனுக்கு தெரிந்த தொழிலில் பயிற்சி அதிகம் செய்து விடாமுயற்சி கொண்டு
வெற்றி பெற்றான்...

அந்த உருவம் தான் அவனுக்கு நம்பிக்கை வரிகளை பருக தந்தது பருகி பெருகி விட்டான்
அந்த பெருத்த வெளிச்சத்தை அவனுக்கு காட்டிய அந்த உருவம் வேறு யாரும் இல்லை அவனுடைய மனசாட்சி தான்.

இன்று ராஜு போன்ற இளைஞர்களும் இளைஞிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆறுதல் சொல்ல யருமில்லாமல் அவதிபடுகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் கூற ஆசைப்படுகிறேன்
துன்பம் எப்போதுமே வாழ்வில் பயணிக்கும் ஒன்றுதான்
துவலும் போதும் உடைந்து அமரும் போது ஆறுதல் தேடிதான் அலைகிறோம்
சிலருக்கு ஆறுதல் எளிதில் கிட்டும் கனியாக இருந்து விடுகிறது சிலருக்கு எட்டாகனியாக மாறிவிடுகிறது
எட்டாக் கனியை எட்டி பிடிக்க முயற்சிப்பதை விட நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்வோம்
அடுத்த அடியை அழகாய் அறிவோடு எடுத்து வைப்போம். நம்பிக்கை மட்டுமே மூலதனமாக வைத்து வெற்றியை ஈட்டுவோம் மகிழ்ச்சியை லாபமாக பெறுவோம்.

அந்த அடர்ந்த இருள் தான்
மங்காத ஒளி தந்து
அவன் நம்பிக்கையாய் படர்ந்தது.

நாளை விடியும்
நம்மால் முடியும்
நம்பிக்கையோடு பயணிப்போம்..

Stories you will love

X
Please Wait ...