JUNE 10th - JULY 10th
சாதி இரண்டொழிய வேறில்லை
தொடாதே! "அதை நீ தொட்டால் தீட்டாகும்" என்றது ஒரு குரல்.
அதை தொடுவதால் எப்படி தீட்டாகும்? என்றது மற்றொரு குரல்.
ஆமாம். அப்படித்தான் உனக்கு நான் விரிவாகச் சொல்ல அவசியமில்லை. நீ எல்லாம் ஒரு ஆளு உனக்கெல்லாம் நான் விரிவாக சொல்லனுமா?
நான் ஒரு ஆளு இல்ல. நான் மனிதன், குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நான் ஒரு பெண் என்றாள் அவள்.
"நான் ஒரு மாவீரன்" ஆனா, "நீ ஒரு பெண்",அதுமட்டுமல்லாமல் நீ தாழ்த்தப்பட்டவள் என்று ஏளனமாக சிரித்தான் அந்த மாவீரன்.
அந்தப் பெண் தன் கையில் இருந்த கூர்மையான வாளினை கொண்டு தன் விரலில் லேசாக கோடு கிழித்தாள். அந்தப் பெண்ணின் விரலில் இருந்து குருதி சிவப்பு நிறத்தில் மண்ணில் சிந்தியது. பின், தன் வலியை பொறுத்துக் கொண்டவள், அந்த மாவீரனின் கை விரலில், கூர்மையான வாளினைக் கொண்டு ஒரு கீறல் போட்டதும் மாவீரனின் விரலில் குருதிச் சிவப்பு நிறத்திலே வழிந்தோடியது. அதுமட்டுமல்லாமல் அந்த மாவீரன் வலியால் துடித்தான்.
ஏ பெண்ணே! என்று தன் கண் சிவந்தபடி, உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? எதற்காக இவ்வாறு செய்தாய்? என்றான் மாவீரன்.
என் உடலில் ஓடும் ரத்தம் சிவப்பாக இருக்கிறது..... உன் உடலில் ஓடும் இரத்தம் அதுவும் சிவப்பாக தான் இருக்கிறது. உனக்கும் வலிக்கிறது எனக்கும் வலிக்கிறது. இதில் இருவரும் சரி சமமே! "அந்தப் போர்வாள் எடுக்க எனக்கு தகுதி உண்டு" என்றாள் அந்தப் பெண்.
இதையெல்லாம் கேட்ட அந்த மாவீரன் சிறிது நேரம் யோசித்தான்.
பெண்ணே நீ சொல்வதும் ஒருவகையில் சரிதான்! ஆனாலும்
இந்த வாளினை நீ எடுக்கக்கூடாது.
ஏன்? என்ற அந்தப் பெண்ணின் கேள்விக்கு, அது அப்படித்தான் என்று கூறினான் அந்த மாவீரன்.
மாவீரனே! "நான் சுவாசிக்கும் காற்றை தான் நீ சுவாசிக்கிறாய்! நெருப்பை நீ தொட்டாலும் சுடும்; நான் தொட்டாலும் சுடும்" என்றாள் அந்தப் பெண்.
ஆமாம்... நீ சொல்வதும் ஒருவகையில் சரிதான். காலம் காலமாய் இத்தகைய வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். உனக்குத் தெரியுமல்லவா? அப்புறம் ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்? என்றான் மாவீரன்.
இந்த பூமி அனைவருக்கும் சொந்தம். "ஊறும் நீரூற்று உனக்கு மட்டும் இனிக்குமா? இல்லை எனக்கு மட்டும் கசக்குமா? கூறுங்கள் மாவீரனே" என்றாள் அந்தப் பெண்.
"நீரின்றி அமையாது உலகு"
என்பது வள்ளுவரின் வாக்கு.
இப் பூமியில் உள்ள அனைத்து வளங்களும் நமக்குச் சொந்தம் தான். அதை பாதுகாப்பது நமது கடமை தான். இவ்வுலகில் இயற்கை, தன்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என ஒரு வேறுபாடு பாராமல் அனைவருக்கும் வழங்குகிறது.
மனித மனம் மட்டும் ஏனோ ஏற்க மறுக்கிறது.... என்று கூறினான் அந்த மாவீரன்.
நான் இந்த போர் வாளை எடுத்து கொள்ளலாமா? என்ற பெண்ணின் சொல்லுக்கு சிறிது தயக்கத்துடன் "ஆம்" எடுத்துக் கொள் என்றான் அந்த மாவீரன்.
என்ன மாவீரனே! "இந்த போர் வாளினை என்னிடம் கொடுக்க" ஏன் உங்களுக்கு தயக்கம்? என்று கேட்டால் அந்தப் பெண்.
தயக்கம் எல்லாம் ஒன்றும் இல்லை என்று மாவீரன் எப்படியோ சமாளித்தார். மாவீரனே! "உங்கள் கைவிரல்களை நீட்டுங்கள்" என்றாள் அந்தப் பெண்.
எதற்காக பெண்ணே! "நான் கைவிரல்களை எதற்காக நீட்ட வேண்டும்" என்று பயத்துடன் கேட்டார்.
"ஒரு நிமிடம் நீட்டுங்களேன்"
தன் கை விரல்களை நீட்டினார் அந்த மாவீரன். சரி உங்கள் கைகளின் ஐந்து விரல்கள் உள்ளன. அவை எதுவும் சரிசமமாக இல்லை. ஒன்று நெட்டை, இன்னொன்று குட்டை, மற்றொன்று கட்டை ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சரி இருக்கட்டும். உங்களுக்கு உங்கள் கைவிரல்களில் எந்த விரல் பிடிக்கும்?
சிறிது நேரம் யோசித்த அந்த மாவீரன், எனக்கு என்னுடைய கை ஐந்து விரல்களையும் பிடிக்கும்.
ஆஹா! மாவீரனே நீங்கள் இப்போது சரியாக கூறியுள்ளீர்கள். உங்கள் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் உள்ளது; அதற்கு ஒவ்வொரு பெயர்கள் உள்ளது. ஒவ்வொரு விரலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
உங்களுடைய ஐந்து கை விரல்களை கொண்டு பெரிய வேலையை கூட ஒரு நிமிடத்தில் முடித்து விடலாம். ஆனால் இந்த விரல்களின் ஒற்றுமை இல்லை என்றால் கண் முடி அளவு உடைய ஒரு சின்னஞ்சிறு வேலையை கூட இந்த யுகம் கடந்தாலும் அந்த வேலையை செய்ய முடியாது.
அதேபோலத்தான் மனிதர்களிடையே வேற்றுமை இருக்குமேயானால் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் என்பது சறுக்கல் பாதையில் ஏறி ஏறி கீழே வருவது போல தான் இருக்கும். ஆனால் மனிதர்களிடையே ஒற்றுமை மலர் மலரும் போது தான் அதன் ஒற்றுமை சுவையின் வாசம் இவ்வுலகம் முழுவதும் வீசும்!
மனித இனத்திற்கு ஒரு நல்ல முன்னேற்றம் பாதையாக அமையும்.
சரி பெண்ணே நீ இப்படி எல்லாம் பேசினாய்! ஆனால் எதற்காகப் போர் வாள் வேண்டும் என்று
அடபிடித்தாய் சொல்! என்று கேட்டார் மாவீரன்.
மாவீரரே! சொல்லுகிறேன் கேளுங்கள்!
"பூமி என்பது புனிதமானது! இதில் வேற்றுமை என்பது பூமியில் உள்ள மரங்களை அழிப்பதற்கு சமம். பூமியில் உள்ள மரங்களை அழித்தால் மழை பொழியாது; மழை பொழியாவிட்டால் பாலைவனமாகும்"
அதுபோல் பூமியில் ஒற்றுமை சுவையுடைய அமைதி நிலவினாலும் மட்டும் மனித குலம் செழிக்கும்! இல்லையென்றால் அதை சொல்வதற்கு வார்த்தையே இல்லை!
பூமியை தாயை நாம் தினமும் வணங்க வேண்டும்.
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, பொறுத்துக்கொள்ளும் பண்பு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனித மனங்களிலும் மனித நேயம் இருக்க வேண்டும். இவ்வுலகில் "ஜாதி இரண்டொழிய வேறில்லை"
என்று கூறினாள் அந்த பெண்.
வித்யா அக்கா இந்த கதை சூப்பரா இருந்துச்சு.
நித்தியா! இங்கே வா!
எதுக்குகா என்ன கூப்பிடுற? என்றாள் நித்தியா.
மாமரம், கொய்யா மரச் செடிகளை வைக்கலாம்; அதற்காக தான் உன்னை கூப்பிட்டேன் என்றாள் வித்யா.
"நீ ஒரு கதை சொன்னா தான் நான் நீ சொல்ற வேலையை செய்வேன்" என்றாள் நித்தியா.
சரி சொல்றேன் என கதையை தொடங்கினாள் வித்யா.....
ஒரு ஊர்ல ரெண்டு சிட்டுக்குருவி இருந்துச்சாம். அதுல ஒரு சிட்டுக்குருவி சிட்டுக்குருவி இன்னொரு சிட்டுக்குருவி பெண் சிட்டுக்குருவியாம். சிட்டுக்குருவி ரெண்டும் சந்தோசமா வாழ்ந்திருந்தார்களாம். ஆனா அவங்க இருந்த இடத்தில பஞ்சம் ஏற்பட்டதால் அந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு செல்வதற்காக ரொம்ப தூரம் தேடிக்கிட்டே வந்துச்சாம்.
ரெண்டு சிட்டுக்குருவியும் பறக்க முடியாமல் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்ததும், அந்த பெண் சிட்டுக்குருவி பசியெடுக்க ஆரம்பிச்சுருச்சு; சிட்டுக்குருவி வேற எங்கேயாவது கிடைக்குமா அப்படின்னு போயிருச்சாம்.
வெகுநேரம் ஆண்சிட்டுக்குருவி
வராதது பார்த்த அந்தப் பெண் சிட்டுக்குருவிக்கு ஒரே பயமா இருந்துச்சாம். அப்படி இருக்கும்போது அந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆண் சிட்டுக்குருவி வந்துருச்சாம்.
அந்த ரெண்டு சிட்டுக்குருவியும், இந்த இடம் நமக்கு பாதுகாப்பானதா இல்ல அதனால நாம வேற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்து, இந்த ரெண்டு சிட்டுக்குருவி பேசுவதை கேட்ட அந்த மரம் ரொம்ப மனசு கவலையா போயிருச்சாம்.
ஏன்னா அந்த சிட்டுக்குருவி இந்த மரத்துல ஒரு இலை கூட இல்லை எப்படி நாம் இந்த இடத்தில் வாழ்வது? அதுமட்டுமல்ல இது ஒரு காய்ந்த மரம் அப்படின்னு சொல்லுச்சாம். ஆனால் சிட்டுக் குருவி என்னதான் சமாதானம் படுத்தினாலும் பெண் சிட்டுக்குருவி அதை ஏற்கவே இல்லை.
அந்த மரம் தனக்குள் தானாகவே பேசிக்கொண்டன... தன் வெளித்தோற்றத்தில் தான் காய்ந்த மரமாக இருக்கின்றேனே தவிர என் மனதில் ஈரம் இருக்கின்றது என்று தன்னுள்ளே பேசிக்கொண்டிருந்தது அந்த மரம்.
அவ்வாறு புலம்பிக் கொண்டிருந்த அந்த மரத்தின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.... கண்களிலிருந்து சிந்திய நீர் அதன் வேரானது உறிஞ்சி சிறிதுசிறிதாக துளிர் ஆரம்பித்தன.... மேகம் பார்த்து மழை பெய்ய ஆரம்பிச்சது! அந்த மாதிரி கிடுகிடுன்னு ஒரு மலை காடு மாதிரி பெருசா இருந்துச்சு. இதெல்லாம் பார்த்த அந்த ரெண்டு சிட்டுக்குருவியும் அந்த மரத்திலேயே தங்கி கொள்ள முடிவு பண்ணிடுச்சு...
அந்த மரத்தோட அனுமதியுடன் அந்த மரத்தின் மேல் ஒரு கூடு கட்டி சந்தோசமா வாழ்ந்துட்டு வந்துச்சாம். ஆண் சிட்டுக்குருவி
நகரத்துக்கு போயி; தன்னோட மனைவிக்கு வித்தியாசமான ஒரு பொருள் வாங்கிட்டு வரணும் அங்குச் சென்றதாம்....
ஆனால் அந்த ஆண் சிட்டுக்குருவி வேகவேகமாக தன் சிறகுகளை அடித்துக் கொண்டு அந்த மரம் இருக்கும் இடத்திற்கு வந்தது.
என் நண்பரே! ஏன் இவ்வளவு பரபரப்பாக வேகமாக வருகிறீர்கள்? என்று அந்த மரம் கேட்டது?
உங்களைக் கொல்வதற்கு இந்த நிலத்தின் உரிமையாளர், திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். அதனால்தான் நான் வேகமாக பறந்து வந்தேன் என்று கூறியது அந்த சிட்டுக்குருவி.
நானும் என் அண்ணனும் சந்தோஷமா தான் இருந்தோம். நான் இந்த கிராமத்திலும் என் அண்ணன்அந்த நகரத்திலும் இருக்கிறான். அவனோ கிராமத்தை எண்ணிக் கொண்டே இருக்கிறான்.... நானும் அவனை எண்ணிக் கொண்டே இருக்கிறேன்... ஆனா இந்தக் காலம் சீக்கிரமா போயிருச்சு என்றது அந்த மரம்.
இதனையெல்லாம் கேட்ட அந்த சிட்டுகுருவி ஐயோ பாவம் என்றது.
அந்த நிலத்தின் உரிமையாளர் கோடாரியை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வந்தார். வந்தவர் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அந்த மரத்தடியிலேயே ஓய்வெடுத்து சிறிது நேரம் தூங்கி விட்டார்.
ஏ மனிதா! உன்னை நான் ஒருபோதும் உனக்கு தொந்தரவு செய்தது இல்லை!
உனக்கு கொடுத்திருக்கிறேன் காய் கொடுத்திருக்கிறேன்
கனி கொடுத்து இருக்கின்றேன் நிழல் கொடுத்து இருக்கின்றேன்.க்ஷ உன் நிலத்தின் மண்ணரிப்பைத் தடுக்கின்றேன்.
சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் கொடுக்கின்றேன்.
ஆனால் ஒருகணம் இதை நினைத்துப் பார்த்தாயா?
இல்லை! அப்புறம் ஏன் மனிதநேயம் என்று ஒரு வார்த்தையை கூறிக் கொண்டு திரிகின்றார்கள்! இன்னும் உனக்கு தராதது நானிருப்பது என் உயிர் மட்டும்தான் என்று நான் நினைக்கின்றேன். அதுவும் என்னை வேரோடு பிடிங்கினால் மட்டுமே என் உயிர் உனக்கு கிடைக்கும். என்னை நீ வெட்டி சாய்த்தாள் ஒருபோதும் எனக்கு இறப்பு என்பது கிடையாது! நான் மறுபடியும் மறுபடியும் உயிர் பெற்றுக் கொண்டே தான் இருப்பேன். இதற்கு மேல் நீ என்னை கொல்ல நினைத்தால், நீ எடுத்துவந்த கோடாரியால் வெட்டாதே! பூமித்தாயின் அடியிலிருந்து என் உயிர் புதைந்து கிடக்கின்றது; அதனை வேரோடு பிடுங்கினால் தான் உன் கைக்கு என் உயிர் கிடைக்கும் என்று கூறியது அந்த மரம்.
திடுக்கென்று எழுந்த அந்த நிலத்தின் உரிமையாளர்; நான் உன்னை கொல்ல மாட்டேன்.... நீ என் நண்பன் நான் உன்னை கொல்ல மாட்டேன்...... என்று கூறி அழுதார்.... கண்விழித்து பார்த்ததுதான் அது கனவு என்றும்; அம்மரத்தினடியில் தான் சின்ன வயதில் விளையாடிய நினைவுகளுடன் அம்மரத்தை கொல்லாமல் அந்த நிலத்தின் உரிமையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்த இரண்டு சிட்டுக் குருவிகளும் அந்த மரத்திற்கு நன்றி சொன்னது.
நித்தியா இந்த கதை முடிஞ்சிருச்சு
அடுத்தது நம்ம என்ன செய்யணும்?
வித்யா அக்கா நாம ரெண்டு பேரும் சேர்ந்து மரச் செடியை நட போகணும் என்றாள் நித்தியா.
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே
சிட்டுக்குருவி இருக்கு.
அந்த மரத்திலுள்ள கொஞ்சம் ஈரம் இருக்கு.
இந்த பூமியிலே சாரம் இருக்கு.
மரங்களைக் காக்க வேண்டியது நமது கடமை!
இயற்கையைப் பாதுகாப்பது நமது உரிமை!
... என்று கூறினாள் நித்தியா.
பெண்ணே, உன் வார்த்தைகள் அனைத்தும் வைரங்கள்!
என்னை அறியாமை என்ற இருளிலிருந்து என்னை வெளிக்கொணர்ந்தற்கு மிக்க நன்றி என்று கூறினார் மாவீரன்.
#714
Current Rank
35,150
Points
Reader Points 150
Editor Points : 35,000
3 readers have supported this story
Ratings & Reviews 5 (3 Ratings)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
deepashvini
vijayaselvamani45
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points