JUNE 10th - JULY 10th
பிரபாவதி.
===========
சென்னை அண்ணா சாலை சுறு சுறுப்பாக இருந்தது.
LIC கட்டிடம் சென்னைக்கு வருபவர்களை வரவேற்றது.
தலைமை தலைமை அஞ்சலகமோ மெல்ல சிரித்துக் கொண்டிருக்க.
மக்கள் சுறுசுறுப்பாக போய்வந்துக்கொண்டோருந்தார்கள்.
மதரசா ஏ ஆசாம் மேல்நிலைப்பள்ளி பச்சை மரங்கள் சூழ அமைதியாக காட்சியளித்தது.
தமிநாடு அரசு தொழிற்நுட்ப ஆசிரியர் பயற்சி மையம் என்ற பெயர் பலகை முகப்பில் இருந்தது.
ராஜாவும், சில நண்பர்களும் கேட்டில் வகுப்பு முடித்து விட்டு வெளியே போக வந்து நின்றுக்கொண்டு இருந்தார்கள் .
சுமார் 45. வயதுள்ள ஒருவர் ராஜாவை பார்த்து" தம்பி இங்கு டீச்சர் ட்ரைனிங் படிக்கும் மாணவிகள் ஹாஸ்டல் எங்கே இருக்கு'?கேட்க 'கேட்டார்.
ராஜா சட்டென்று 'சார் நானும் அங்கு தான் போறேன் வாங்க போகலாம்' என்றான்.
இருவரும் ரோடை கிராஸ் செய்து ஹாஸ்டல் போக ஆட்டோ வாடகை பேசி ஏறினார்கள். ஆட்டோ கொஞ்ச தூரம் போனதும் அந்த பெரியவர் பேச்சை துவக்கினார்.'
,'நீ என்ன தம்பி படிக்கிறியா? 'என்றார் 'ராஜா தலையை ஆட்டினான்.
அவரே பேச்சை தொடர்ந்தார். என் மகள் இங்குமாணவிகள் ஹாஸ்டலில் தங்கி டீச்சர் ட்ரைனிங் படிக்குது நான் அதை பார்க்க தான் ஊரிலிருந்து வந்திருக்கிறேன் 'என்றார்
'நீ யாரை பார்க்க போற' என்று கேட்க ராஜா 'என் அத்தை மகள் என்கூட படிக்குது இங்கே ஹாஸ்டலில் தங்கி இருக்கு அதை பார்க்க தான் போறேன் 'என்றான்.
ஹாஸ்டல் வர ஆட்டோவுக்கு ராஜா தான் காசு கொடுத்தான் அவர் கொடுக்க வந்தது வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இருவரும் ஹாஸ்டல் உள்ளே போக வார்டன் கோபால் எழுந்து ராஜாவுக்கு "வா ராஜா வா ராஜா 'என்று ரொம்ப சந்தோசமா கூப்பிட்டான்.
ராஜா அவனை பணம் கொடுத்து மயக்கி வைத்திருந்தான். அடிக்கடி அவன் பர்ஸ் நிரப்புவான் அதான் ராஜாவை கண்டதும் ராஜா மரியாதை
இவனுடன் படிக்கும் பிரபாவதிக்கும் இவனுக்கும் ஒரு அது அதாங்க காதல் இருவரும் வகுப்பு முடித்தவுடன் மெரினா பீச்,கோல்டன் பீச், சாந்தி தியேட்டர் முதல் அப்சரா தியேட்டர் வரை ஒவ்வொரு நாளும் சென்னையை கலக்கிக்கொண்டு இருந்தார்கள். தாஜ் ஹோட்டல் முதல் எவரெஸ்ட் ஹோட்டல் வரை சாப்பிடாத ஹோட்டலே இல்லை எனலாம்.
ராஜாவின் காசு கரியாகிக்கொண்டு இருந்தது. ராஜா அவன் வீட்டு செல்லப்பிள்ளை அவன் அப்பா சென்னையில் பிள்ளை படிக்குதே என்று ஆயிரம் ஆயிரமாய் அனுப்ப ராஜா ஜாலியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து வந்தான்.
வார்டன் கோபால்' சார் யாரை பார்க்கணும் '?என்று கேட்க 'மகளை பார்க்கணும்' என்று சொல்ல வார்டன் ரெஜிஸ்டர் புக்கை நீட்டி இதில் யார் யாரை பாக்கணும் என்றும் அட்ரஸ் போன் நம்பர் எழுதி கையெழுத்து போட சொன்னான்.
அவரும் கையெழுத்து போட்டார். ராஜா விசிட்டர் ஹாலில் ஷேரில் உட்கார்ந்து இருந்தான்.
கோபால் உள்ளே போய் பிரபாவதியை அழைத்து வந்தான்.
ராஜா எழுந்து 'பிரபு வா நேரம் ஆச்சு சீக்கிரம் வா என்று சொல்ல.'அவர் இது தான் உங்க அத்தை மகளா!"என்று ராஜாவை கேட்க ராஜாவும் ஆமா சார் இது என் அத்தை மகள் பிரபாவதி என்றான்.
அவர் கண்களில் கோபம் ஆச்சரியத்தில் அகல விரிந்தது. பிரபாவதி நேராக 'அப்பா எப்போ வந்திங்க'?என்று சொல்லி அவரிடம் போய் நின்றாள்.
அவ்வளவு தான் ராஜா
பொய் சொல்லி வசமாக மாட்டிக்கொண்டன்.
பேயறைந்தது போல நிற்க பிரபாவதி செய்கை காட்ட ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்து அவன் மாணவர்கள் விடுதிக்கு வந்து ரூமில் படுத்துக்கொண்டான்.
அவனுடன் தங்கி இருக்கும் நண்பர்கள் யாருக்கும் விஷயம் தெரியாது.
மறு நாள் வகுப்பு ஆரம்பித்தது பிரபாவதி வகுப்புக்கு வர வில்லை.
அவோளோடு தங்கி இருந்த அவள் தோழி சரோஜா அவள்அம்மா உடல்நிலை சரி இல்லைஎன்று அவள் அப்பா ஊருக்கு அழைத்து சென்று விட்டார். என்று லீவு லெட்டர் பிரின்சிபால் இடம் கொடுக்க
அதோடு அவள் தேர்வு எழுத வேறு மையம் போட்டு தேர்வு எழுத அவள் அப்பா சாமிநாதன் பிரின்சிபால் அனுமதி பெற்று வேறு வேலூர் தேர்வு எழுதியதாக அறிந்தான்.
ராஜா.பயற்சி முடிந்து தேர்வும் முடிந்து வீடு திரும்பி ராஜா வுக்கு அதிர்ச்சி காத்திருந்து.
பிரபாவதிக்கும் அவள் அத்தை பையனுக்கும் ஆம்பூர் பதிவுதிருமணம் நடந்து விட்டது என்று பிரபாவதியின் தோழி சரோஜா பதிவு தபாலில் கடிதம் சில போட்டோ அனுப்பி இருந்தாள். அது யாரும் பிரிக்காமல் அவன் டேபிளில் இவனை பார்த்து சிரித்தது.
வெட்ட வெளிச்சத்தில் மின்மினிபூச்சிபறந்தாலும் என்ன பயன்?
வெளிச்சம் தெரியவா போகிறது?
ராஜாவும் பாக்யலக்ஷ்மி யும் கீழேப்பாளையம் வந்து இறங்கிக் கொண்டனர்.
இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
நடைப்பிணம் போல் நடந்து வீட்டை அடைந்தான் தான் ராஜா.
பிரிஷ் ஆகிவிட்டு டாக்டர் கொடுத்த பிரிப்கிரேஷன் எடுத்துக்கொண்டு பைகில் கிளம்பினான்.
டானிக். மாத்திரைகள் எல்லாம் மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிக்கொண்டு வந்து இருந்தான்
இளங்கோ ஹோட்டல் சென்று இரவுக்கு இரண்டு பேருக்கு டிபன் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து இருந்தான் அவன்
பாக்கிய லட்சுமி கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்
அருகில் சென்று மாத்திரை, டானிக் டேபிள் மீது வைத்தப்பின் பாக்கியலட்சுமியிடம் டிபன் டேபிள் மீது வைத்து விட்டு சாப்பிட அழைத்தான் ராஜா. ஆனால் கலகலப்பு இல்லை.
எழுந்து பிரெஷ் ஆகி வந்தாள்.
இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்பாவும் சரியாக பேச வில்லை.
சாப்பிட்டப்பின் கட்டிலில் போய் படுத்துக்கொண்டான் ராஜா.
முகத்துக்கு மேல் மின்விசிறி
சுழன்றுக்கொண்டு இருந்தது.
பாக்கிய லட்சுமி விளக்கை அணைத்துவிட்டு ஒரு ஓரமாக படுத்தாள்.
ராஜா பக்கத்து ஜன்னலைத் திறந்தான். சில்லேன்று காற்று வீசியது. வெளியே எங்கேயோ நாய் ஊலையிட்டுக்கொண்டுஇருந்தது.
இது நல்லதுக்கு இல்லை அபசகுணம் என்று சொல்லுவார்கள்.
தொலைத்தூரத்தில் வானில் தெரிந்த நட்சத்திரங்கள் இவனைப்பார்த்து கண் சிமிட்டுவது போல் இருந்தது. அவன் உள்ளத்தில் நிஜமா இப்படி இருக்குமோ!? இல்லை அப்படி இருக்குமோ?. ஒரே குழப்பம்.
கண்கள் மூடி இருந்தான். ஆனால் உள்ளம் விழித்துக் கொண்டு இருந்தது.
அவன் உள்ளத்தில் கிளர்ந்தெழும்
கொடுமையான நினைவுகளை தூரத்த அவனால் முடியவில்லை
அவனிடம் டாக்டர் வசந்தி சொன்னது நெஞ்சில் கனத்துக்கொண்டே இருந்தது.
நெனைச்சு நெனச்சு அவன் இதயத்தில் ஒரு மூலையில் அவன் ஏமாற்றுப்பாட்டு விட்டேனா என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.
இல்லை மெலிதாகத் தான் குற்றம் செய்கிறோமா என்று கூட பயம் இருந்தது.
தூக்கமே வர வில்லை புரண்டு புரண்டு பார்க்கிறான். ஒருகளித்துப் படுத்தும் பாத்தான்.
ஜாமாக்கோழி கூவியது.
அவனுக்கு உள் மனசோடு அவசமாக சந்தேக சாயல் படிய ஆரம்பித்து விட்டது.
பக்கத்துல திரும்பி பார்க்கிறான் ராஜா அந்த ஸிரோ வாட்ஸ் பல்ப் ஒளியில் அவள் முகம் கண்கள் மூடி இருந்தாலும் இவனைப்போலவே அவளும் தூக்கம் வராமல் இருக்கிறாள் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
ஒருவழியாக விடியற்பொழுதில் காக்காங்களின் கரையும் சப்தம்.
எழுந்து காலையில் பள்ளிக்கு கிளம்பு வேண்டும். மாதத்துக்கு ஒரு நாள் தான் தற்சயல் விடுப்பு அவனுக்கு. அவன் பணிவரண்முறை முடித்து இருந்தால் ஒரு வருடத்துக்கான தற்சயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலம். இவனுக்கு இன்னும் ஆணை வரவில்லை. அதனால் சலுகை கிடையாது.
பாடக்குறிப்பேடு இன்னும் எழுத வில்லை.
வாரத்தில் முதல் நாள் படக்குறிப்பேடு வைத்து கையெழுத்து ஆனதும் எடுத்துக் கொண்டு வகுப்புக்கு கூடவே எடுத்துக்கொண்டு போக வேண்டும்.
ராஜா ஹீட்டர் போட்டு விட்டு வந்து குளிக்க ரெடியானான்.
நேற்று நடந்து எதுவும் நடக்காததுப் போலவே எதையும் காட்டிக்கொள்ளமல். வழக்கமாக எப்பவும் போலவே இருந்தான் அவன்.
பாக்கிய லட்சுமியும் அதேப் போல் எழுந்து இவனுக்கு முன்னாடி குளித்து விட்டு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தால்.
ராஜா காபி குடித்து விட்டு படக்குறிப்பு வேகமாக எழுதி முடித்தான்.
குளிக்க போய் சீக்கிரமே முடித்து வந்தான்.
சூடா தேசை டைனிங் டேபிளில் இருந்தது.
சாப்பிட்டு கிளம்ப நினைத்து பேக் எடுத்து எல்லாம் வைத்துக்கொண்டான்.
பேனா சரி இல்லை தேட ஆரம்பித்தப் போது.
சூட்கேஷில் சரியா மூடாததினால் படக் என்று திறந்தது கொண்டது.
ராஜாவின் கண்ணில்
போட்டோ ஒன்று தெரிய எடுத்தான்.
அதில் பாக்கிய லட்சுமியும் அவள் அக்கா புருஷன் ஜெகன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ அது.
அதிர்ச்சி..... அவனுக்கு
அடுத்த போட்டோ இப்படி பத்து போட்டோ இருந்தது. அதில் அவள் அக்கா ரஞ்சிதம். அவள் அம்மா ஜெயா லட்சுமி. ஆகியோறும்
சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள்.
கால் கொலுசு சத்தம் வரவே ராஜா வேகமாக எப்படி எடுத்தானோ அப்படியே
வைத்து சூட்கேஷ் மூடி விட்டான் ராஜா.
அவனுக்கு இன்னும் சந்தேகம் வலுத்து விட்டது. என்றாலும் இன்னும் ஒரு
முடிவுக்கு வரவில்லை அவன்.
,கண்ணில் பார்ப்பதும் பொய்.காதால
கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்,,,:
அதனால அவன் பொறுமையாகவே இருந்தான்.
இவனிடத்தில் வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு பொறுமையாக இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
ஸ்கூல் புறப்பட்டுவிட்டான் ராஜா.
அவன் போன உடனே பாக்கிய லட்சுமி போய் சூகேஷ் திறந்து பார்த்தாள் அவள்.
அவள் நினைத்தது சரி தான்.
ராஜா போட்டோ பார்த்து விட்டான் என்பது புரிந்து போனது அவளுக்கு.
அதிர்ச்சி....அதிர்ச்சி... ஒன்றும் புரியாமல் ஒரு கனம் நின்று விட்டாள் அவள்.
ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு எல்லாம் போட்டோ வும் எடுத்துக் கொண்டு
கிட்சன் ரூம் சென்றாள்.
டின் னில் கிழித்து போட்டாள். தீ வைத்து கொளுத்தி விட்டாள்.
எல்லாம் எரிந்து விட்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. ஆமா அவள் அழுகிறாள்.
அவள் மண்டையில் ஒரு யோசனை.
போன் எடுத்தால் அவள் அக்காவிற்கு போன் செய்து அழுது தீர்த்தாள்
ரஞ்சிதம் ஏதோ சொல்ல
."...அக்கா..... அக்கா..... சீக்கிரம்.... அண்ணாவை அனுப்பு நான் இங்கு ஒரு நாள் கூட இருக்க மாட்டேன்.
நீங்கள் யாரும் வரவில்லை என்றால் நான் தீ வைத்து கொள்ளுத்திக் கொண்டு செத்து போவேன்..
என்னை உயிரோடு பார்க்க முடியாது இது உன்மேல். அம்மா மேல் சத்தியம். "
"டி....லூசு.... பைத்தியம்...அப்படி எதுவும் செய்யாதடி. நான் அம்மாவுக்கு சொல்லி அண்ணாவை உடனே பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கிறேன். நீ இங்கே வா அப்புறம் பேசலாம்.
அவங்க வர்ற வரை நீ பத்திரமா இரு.'
என்றாள்.
"அம்மா என்ன நடந்துச்சு?....
சொல்றி.... சொல்றி....'
பாக்கிய லட்சுமி ஒர்த்தநாடு டாக்டர் வசந்தி யிடம் போய் செக்கப் செய்து வந்த விஷயம் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் அவள்.
" ஏண்டி... உன்னை மாப்பிளை எதாவது சொன்னாரா?'
' இல்லை அக்கா....'
என்று சொல்லத் தான் நினைத்தாள்
ஆனால் சொல்லவில்லை.
#868
Current Rank
26,717
Points
Reader Points 50
Editor Points : 26,667
1 readers have supported this story
Ratings & Reviews 5 (1 Ratings)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points