JUNE 10th - JULY 10th
நிர்மலா....
»»»»»»»»»»»»»
என்ன எப்போ பார்த்தாலும் போன் பேசிட்டே இருக்கிறே
யார் கூட பேசுறே? உங்க அம்மா தான் செத்துப் போய் ஏழு வருஷம் ஆச்சி
உனக்கு அண்ணன், தம்பி, மாமன், அக்கா ன்னு சொல்ல எந்த ஓட்டும் உறவும் இல்லை யே அப்படி இருந்து நீ யார்கிட்ட பேசுறே.....
என்று கத்திக்கிட்டே வந்தான் அபினேஷ்.
நிறை மாத கர்ப்பிணியான நிர்மலா வுக்கு அவன் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.
அபினேசின் சொந்த அக்காப் பொண்ணு தான் நிர்மலா.
இவங்களுக்கு சின்ன வயசில் இருந்தே இவங்க அப்பா, அம்மா பேசி முடிவு பண்ணி. இவங்க பெரியவங்க ஆகி இரண்டு பேரும் காலேஜ் போய் படிச்சி படிப்பை முடித்தவுடன் அவங்க பேசி முடிவு பண்ணியப்படி.
ஒரு நல்ல நாள் பார்த்து கலியாணம் செய்து வைத்தார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே அபினேஷ் நிர்மலா மீதுசந்தேகப்பட்டுக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு இந்த கலியாணத்தில் கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது.
அப்பா, அம்மா வற்புறுத்தி தான் அவனுக்கு கலியாணம் செய்து வைத்தார்கள்.
ஆனால் நிர்மலா அப்படி இல்லை தன் மாமன் அபினேஷை ரொம்ப உயிருக்கு உயிராக நேசித்தாள்.
அவள் கண்ட கனவுகளில் எல்லாம் அவன் முகம் மட்டுமே இருக்கும்.
அவன் மீது அவள் அளவு அதிகமாகவே விரும்பினாள். அவள் நினைத்தப்படியே கலியாணம் சந்தோசமாக நடந்தது.
ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு அவள் வாழ்க்கையின் பயணத்துக்குள் நுழைந்தாள்.
ஆசை கனவுகளுக்கு ஒரு விடியல் வந்து விட்டதாக அவள் மகிழ்ச்சி அடைந்தாள்.
வானம் முட்டும் அளவுக்கு ஆசைகளை விரித்து வைத்து அவனுக்காக காத்து கிடந்தாள் அவள்
நிர்மலா ஒன்னும் அழகி என்று சொல்லும் அளவுக்கு இல்லை. மாநிறம். எடுப்பான நாசி. கருமையான கருங்கூந்தல்.
அவள் குழந்தை முகம் போல இருக்கும். கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை குணம் தான்.
நிர்மலா மிகவும் அடக்கமான பொண்ணு என்று எல்லோருக்கும் தெரியும்.
யார்கிட்டேயும் அதிகமா பேச மாட்டாள்.
என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கிறேன் ஆனால் நீ எதுவும் பதில் சொல்லவில்லை.
உங்க அம்மா உன்னை சரியாக வளர்க்கலா.
இது தான் உனக்கு சொல்லி கொடுத்து வளர்த்தாங்களா.
அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தான்.
நிர்மலா அதுக்கு ஒன்னுமே பதில் சொல்ல முடியாமல் கண்ணீரில் பதில் சொல்லிக்கிட்டு இருந்தாள்.
அன்று பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கலியாணம்.
வீட்டு படியேறி வந்து தேங்காய், வெற்றிலை பாக்கு பத்திரிகை வச்சி கண்டிப்பா வர சொல்லி கூப்பிட்டுப் போனாங்க.
அபினேஷும் நிர்மலாவும் கலியாணதுக்கு போய் கவரில் ஆயிரம் ரூபாய் வைத்து அந்த பொண்ணுக் கையில் கவர் கொடுத்து விட்டு திரும்பும் போது
ஹாய் நிம்மி எப்படி டா இருக்கே.? என்ன உன் கலியாணத்துக்கு என்னை கூப்பிடவே இல்லை.
என்று அவள் கூட காலேஜில் படித்த கிளாஸ் மென்ட் ரவிசங்கர் கேட்டு எதிரில் வந்து நிற்க.
நிர்மலா அதுக்கு ஒன்னும் பதிலே சொல்லவில்லை.
அவனே அபினேஷனிடம் நீங்கள் தான் நிர்மல் ஹப்பியா...சோ சாரி சார்..
நான் கொஞ்சம் லேட் நீங்கள் தான் கொடுத்து வைத்தவர். என்னை முந்திக்கொண்டு நிம்மியை கலியாணம் செய்துக் கொண்டீர்கள். இல்லை என்றால் நான் தான் கலியாணம் செய்து இருப்பேன். சோ ஐ மிஸ் மை நிர்மல். என்றான்
இதை நிர்மலா எதிர் பார்க்கவே இல்லை.
உடனே
நாயே எவ்வளவு தைரியம் இருந்த தாலி கட்டிய புருஷன் முன்னாடியே இப்படி நாகரீகம் இல்லாமல் பேசுறியே. என்று... சப்....பென்று அவன் கன்னத்தில் அறைந்தான் அவன்.
இந்த தாக்குதாலை சற்றும் எதிர் பார்க்காத ரவிசங்கர். அவன் ஒன்னும் பேசாமல் அந்த இடத்தை விட்டு விரைந்து போய் விட்டான்.
எல்லோரும் இவனை பார்த்து என்ன நடந்தது என்று கேட்பதற்கு முன்னாடி நிர்மலாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கலியாண மண்டபத்தை விட்டு வெளியே வந்து நிர்மலா
வை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அது தான் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தது கடைசியாகும்
அன்றையில் இருந்து வீட்டு சிறை சாலைப் போல தான் அவளுக்கு ஆகி விட்டது.
கலியாணம் ஆகி தனி குடித்தனம் வந்து ஒரு வருஷம் ஆகி விட்டது
இங்கே அவனுக்கு வேலை சரியாக இருக்கு என்று சொல்லி எங்கும் அவளை அனுப்ப வில்லை.
வளைகாப்பு செய்ய வேண்டாம் என்று கண்டிப்பா மறுத்து விட்டான்.
அன்றையில் நிர்மலாவை ஒரு புழுவை விட கீழ்தரமாக நடத்த ஆரம்பித்து விட்டான் அவன்.
அவன் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து இன்று அவன் ஒரு சைக்கோ மாதிரி ஆகிவிட்டான்.
வீட்டுக்கு வந்து அவள் சொன்ன சமாதானம் அவன் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை.
ஏண்டி கலியாணத்துக்கு முன்னாடியே அவனோடு உறவு வைத்துக் கொண்டு இப்போ ஒப்புக்காக என்ன கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துறீயா...
பக்கா தேவடியா நீ
அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்து இருந்தா நாலு பேர் முன்னாடி
அதும் உன்னை கட்டிக்கிட்ட என் முன்னாடி
நிம்மி என்கிறான். சோ சாரி உன்னை மிஸ் பண்ணிட்டேன் என்கிறான்.
அவளை வார்த்தைகளால் கொன்றுக்கொண்டு நாளும் சித்திரவதை செய்துக் கொண்டு தான் இருந்தான்.
ஒரு புள்ளத்தாச்சி பொண்ணு வாயும் வயிறுமாக இருக்கிறாளே. இந்த மாதிரியான நேரத்தில் அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கலாம் சந்தோசமா வைச்சுக்கலாம் என்று அவனுக்கு தோணவில்லை.
அவன் போக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வந்தது.
சத்தியமாக இவ்வளவு மோசமாக தாய் மாமன் இவன் இருப்பான் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
அசலில் கலியாணம் செய்து இருந்தால் ஒரு வேளை சந்தோசமா இருந்து இருப்பாளோ என்னவோ?
பாவம் நிர்மலா..
எல்லாம் விதி இப்படி எல்லாம் நடக்கணும் என்று இருக்கே!
சரியாக டாக்டர் கிட்ட அழைத்துக் கொண்டு போய் செக்கப் கூட அவன் செய்யவில்லை.
மருந்து மாத்திரை கூட அவன் வாங்கி கொடுப்பதில்லை.
அவன் செய்யும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
கடன் தொல்லை அவனது கழுத்தை நெறிக்க இன்னும் அவனது கோபம் உச்சியை அடைந்தது.
நிர்மலாக்கு லேசா அடி வயிற்றில் வலி எடுக்க அதான் அவள் காலையில் அவள் அத்தை அது தான் அபினேஷ் அம்மா கிட்ட தான் அடி வயிறு வலிக்கிறது என்ற விஷயம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அவள்.
ஆனால் இவன் அவள் தாய்கிட்டே தான் பேசுகிறாள் என்பது தெரியாமல்
வார்த்தைகளால் அவளை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தான்.
போன் மட்டும் இரண்டு நாளாக பேச அனுமதித்து இருக்கிறான்.
பிரசவ நேரம் என்பதைளோ என்னவோ பைத்தியக்காரன்.
சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க போக வர கூட வழி விடாமல்.... சலித்துக் கொண்டு வாயில் முனுமுத்துக்கொண்டே போனால் நர்ஸ்.
அபினேஷ் அம்மா, அப்பா எல்லோரும் அந்த பிரசவ வார்டின் முன்னாடி நின்று கொண்டு இருந்தனர்.
டாக்டர் உள்ளே பிரசவம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரே எதிர்பார்ப்புகள்.. என்ன குழந்தையோ! ஆணா இருக்குமா? இல்லை பெண்ணா இருக்குமா?
கருப்பா இருக்குமா இல்லை சிவப்பா இருக்குமா?
ஐந்து நிமிடத்தில் நர்ஸ் வெளியே வந்தாள்.
சார் இங்கே நிர்மலா கணவர் யாரு சார்
அபினேஷ் நான் தான் என்றான்
உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு சார் என்றாள்.
எல்லோருக்கும் குழந்தை பிறந்தது என்றால் எவ்வளவு சந்தோசமா இருக்கும்.
ஆனால் இவனுக்கு அப்படி இல்லை
மாறாக வெறுப்பு தான் அவன் மூஞ்சியில் பார்க்க முடிந்தது
என்னடா உனக்கு பையன் பிறந்து இருக்கிறான். நீ என்னடா என்றால் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாய்.
என்ன ஆச்சு உனக்கு?
அவர்கள் பேசியதும் கேட்டதும் அவன்
காதுகளில் விழவில்லை.
அவன் என்ன செய்கிறான் எங்கே போகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
அவன் ஹாஸ்பிடல் விட்டு வெளியே கால் போன போக்கில் போய்க்கொண்டு இருந்தான்.....
அவன் போவதையே அவன் அப்பா அம்மா பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
ஏண்டி நிர்மலா உன் புருஷன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லையா
நேற்று என் மூத்தார் சொன்னார் நிர்மலா புருஷனை கோவையில் ஒரு ஹோட்டலில் பார்த்தார் என்று.
ரொம்ப மாறி விட்டார் என்று பார்க்கறதுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
அவர் இவரை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்து விட்டார் என்று சொன்னார்.
நிச்சயம் கண்டிப்பா அவர் திரும்பி வருவார்.
ஆமா நிர்மலா
அது திரும்பி வரும் நீ எதுக்கும் கவலை படாதே போய் குழந்தைக்கு பால் கொடு என்று அவள் அத்தை சொன்னது கூட அவள் காதுகளில் கேட்க வில்லை
கண்களில் கண்ணீர் மட்டும் போயிக்கொண்டே இருந்தது......
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
#863
Current Rank
40,050
Points
Reader Points 50
Editor Points : 40,000
1 readers have supported this story
Ratings & Reviews 5 (1 Ratings)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points