மர்ம கடிதம்

த்ரில்லர்
4.9 out of 5 (113 Ratings)
Share this story

லீலா தோட்டத்தில் மெதுவாக நடந்து கொண்டு இருந்தாள்.அப்போது வந்த குயில் தன் இனிமையான குரல் மூலம் கூவி அங்கு இருந்த அமைதியை கலைத்தது.படபட வென்று தன் இறக்கைகளை அடித்து கொண்டு மரத்தில் இருந்து பறந்து வந்து அவள் அருகே அமர்ந்தது.அப்போது பக்கத்து வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் யாரோ நடந்து கொண்டு இருபது போல இருந்தது.இவ்வளவு வருடத்தில் அந்த வீட்டின் பக்கம் யாரும் வந்தது இல்லை. இதன் காரணமாக அந்த வீட்டின் பின் பக்கம் சிடலம் அடைந்து இருந்தது. திடீர் என்று அந்த ஆள் இவளை பார்க்க,லீலா உறைந்து போய் நின்றாள்.அந்த ஆளின் முகத்தில் ஒரு விதமான மிரட்சி,அவளை கண்டு ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றான்.பின்பு வேகமாக ஓடி அந்த வீட்டின் பின் புறத்தில் இருந்த கதவின் பின் ஒளிந்து கொண்டன்.பின்பு அங்கு இருந்து மெல்ல தலையை எட்டி பார்த்தான். லீலா மிகவும் ஆச்சரியம் அடைந்தால்.

யார் அந்த நபர்?

"எதற்கு இப்படி என்னை பார்த்து பயந்து ஓடினான்" என்று அவள் குழம்பினாள்.

அன்று முதல் அந்த வீட்டில் இருந்து யாரும் பின் பக்கம் வருவது இல்லை.
பின் லீலா கூட பின் பக்கம் இருக்கும் தோட்டத்தில் யாரும் வருவது இல்லை என்று எண்ணி,தோட்டம் பக்கம் செல்வதை நிறுத்தினால்.

அவள் பார்த்த அந்த மனிதனை பற்றி தன் தந்தையிடம் கூறினால்.

அவள் தந்தை,"லீலா இதற்கு தான் துப்பறியும் நாவல் படிக்க வேண்டாம் என்று சொன்னேன்" என்று சொன்னார்.

இருந்தாலும் லீலா மனதில் இருந்த அந்த சந்தேகம் மட்டும் குறையவில்லை,அன்று நள்ளிரவு திடீர் என்று சத்தம் கேட்டு எழுந்து பக்கத்து வீட்டை பார்த்தாள் லீலா. அந்த இருட்டு வேளையில் சில மனிதர்கள் வருவதும் அங்கு இரும்பு கதவு சத்தம் கேட்பதும் என்று இருந்தது.நெறய நபர்கள் அங்கு வந்து செல்வதும் என்று இருந்தது.

மறுநாள் காலை அவள் காலை நாளிதழ் படித்து கொண்டு இருந்தாள், அப்போது அந்த செய்தியில் நாட்டில் நாச வேலை செய்ய ஒரு கும்பல் அந்த ஊரில் இருப்பது பற்றி செய்தி இருந்தது.அந்த கும்பல் பற்றி தகவல் கொடுத்தல் தக்க சன்மானம் தரப்படும் என்று காவல்துறை அறிவித்து இருந்தது.அந்த கும்பல் உடனே அவள் மனதில் ஆயிரம் சந்தேகம்,ஒரு வேளை பக்கத்து வீட்டிற்கு குடி வந்த அந்த ஆளின் மீது சந்தேக வந்தது.இவளோ ஆண்டுகள் யாரும் வராத வீட்டிற்கு இவர் வந்தது ஏன் என்று யோசித்தாள்.

அப்போது அந்த செய்தித்தாளை கொண்டு சென்று தன் தந்தையிடம் காட்டி அந்த ஆளை பற்றி சொன்னால்,அதற்கு அவள் தந்தை மற்றவர்கள் பற்றி நாம் எதற்கு தேவையில்லாமல் யோசிக்க வேண்டும் என்று சொன்னார்.அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கம் வரவில்லை, மறு நாள் காலையில் அவள் மீது சூரிய ஒளி அவள் மீது பட,மெல்ல விழித்து கொண்டாள் லீலா.அவள் கண்கள் சிவந்து இருந்தது,மிகவும் சோர்ந்து இருந்தால் அந்த ஆள் பற்றி நினைவுகள் அவளை தூங்க விடவில்லை.

காலை நடை பயற்சி செய்து விட்டு வந்தால், அப்போது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு இருந்தார் அந்த நாள் வெள்ளை உடை அணிந்து கொண்டு இருந்தான்,அப்போது அவன் "லீலா ஒரு நிமிடம் உங்களோடு பேச வேண்டும்"என்றார்.

"எதற்கு?" என்று கேட்டாள் லீலா.

தயவு செய்து ஒரு நிமிடம் என்றார் அவர்.

எதற்கு என்று கேட்டாள் லீலா.

எதற்கு என்னை பின்தொடர்ந்து வந்தீர்கள்,எப்போதும் உங்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை நோட்டம் விடுறீர்கள்,என்று கேட்டாள்.

இல்லையே நான் என்ன பயித்தியமா,உங்களை பின் தொடர என்று கேட்டாள் லீலா.

அப்போது இது என்ன என்று புகைப்படம் எடுத்து காட்ட, மிரண்டு போனாள் லீலா.
நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள தான் என்றால் லீலா.

நான் ஒரு பணக்கார வீட்டு பையன் என் குடும்பத்தில் சொத்து பிரச்சனை உள்ளது அதனால் என் அண்ணன் என்னை கொலை செய்து விடுவான் அதனால் தான் இங்கு வந்து தங்கி இருக்கேன் என்று சொன்னான் அந்த ஆள்.

லீலா மிகவும் குழம்பி போனால்,அவர் சொன்னது உண்மையா இல்லை பொய்யா என்று மிகவும் குழம்பி இருந்தால்,அப்படியே அந்த நாள் முடிந்தது.

மறுநாள் அந்த நபர்யிடம் நீங்கள் சொல்வது உண்மை யா இல்லை பொய்யா எதை நம்புவது என்று கேட்டாள் லீலா.ஏன் அப்படி கேட்கிறாய் என்று அவன் கேட்டான்.

உண்மையை சொல்லுங்கள் என் தலை வெடிப்பது போல இருக்கிறது என்றால் லீலா.உண்மை தான் லீலா என்று அவன் சொன்னான்.

அதற்குள் லீலா தாயார் அழைக்க,அவள் வீட்டிற்கு சென்றாள்.

மறுநாள் காலை அவள் வீட்டின் முன்புறம் உள்ள ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.அப்போது மிக வேகமாக ஒரு வாகனம் வந்து நின்றது,அதில் இருந்து ஒரு ஆள் வேகமாக வெளியே வந்து அங்கு இருந்த புதர் ஒன்றில் ஒரு கடிதம் வைத்து விட்டு அந்த வாகனத்தில் ஏறி மிக வேகமாக சென்று விட்டான்.இதை கவனித்த லீலா வேகமாக ஓடி சென்று அந்த கடிதத்தை எடுத்து கொண்டு வீட்டின் உள்ளே வந்தாள்.

அந்த கடிதம் அந்த சதி கும்பல் நபர் ஒருவர் எழுதியது,லீலா மிகவும் பயத்துடன் அந்த கடிதத்தை படித்தால்.
அதில்.

"அருமை நண்பரே,

இந்த நாட்டில் நாசம் வேலை செய்ய வந்த சதி கும்பல் நாம் தான் என்பதை காவல் துறை கண்டு பிடித்துவிட்டனர்.
அது மட்டுமல்ல நம் கும்பலை சேர்ந்த மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்து விட்டனர்.இன்னி இங்கு நீங்கள் இங்கு இருப்பது ஆபத்து.நான் உங்களை சந்திப்பது காவல் துறைக்கு தெரியாது.ஆகவே நீங்கள் உடனே கிளம்பி விடவும்" என்று அதில் எழுதி இருந்தது.

லீலா மிகவும் அதிர்ச்சியில் இருந்தால். நான் நல்லவன் நான் சொல்லுவது அனைத்தும் உண்மை என்று சொன்னார்,
ஆனால் இப்போது இப்படி ஒரு கடிதம் வந்து இருக்கிறது என்று யோசித்தாள்.

தன் தந்தையிடம் அந்த கடிதம் காட்டி.
அப்பா பாருங்கள் அப்பா அந்த பக்கத்து வீடு மனிதருக்கு இந்த கடிதம் வந்து இருக்கிறது.இவரும் அந்த கூட்டத்தின் ஆள் தான் உடனே காவல் துறைக்கு தகவல் குடுங்க என்று சொன்னால் லீலா.

ஆம் நீன் சரியாக தான் சொல்லி இருக்கிறாய்,நான் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வருவதாக சொல்லி சென்றார் லீலா வின் தந்தை.

ஆனாலும் லீலா மனதில் சந்தேகம் உண்மையில் இவர் அந்த கும்பல்யின் ஆள் தானா இல்லை வேறு யாருக்காவது இந்த கடிதம் வந்து இருக்குமா என்று யோசித்தாள்.

ஒரு பக்கம் நாட்டிற்கு நல்லது செய்வது என்று சந்தோசம்,இன்னொரு பக்கம் அவர் நிரபரதியாக இருந்தால் என்ன செய்வது என்று வருத்தம்.

மனதில் உறுதி கொண்டு அவர் வீட்டிற்கு சென்று அவர்யிடம் நடந்தது எல்லாவற்றையும் சொன்னால்.அந்த மனிதர் மிக்க நன்றி என்னை தக்க சமயத்தில் காப்பாற்ற என்று சொன்னான்.அதற்குள் காவல் வண்டியின் சிரென் சட்டம் கேக்க,லீலா வீட்டின் வசாலில் சென்று நின்றாள்.

அப்போது அந்த வண்டி அவள் வீட்டின் வாசலில் நின்றது,அவளுக்கு எதுவும் புரியவில்லை அதற்குள் அவள் தந்தை கையில் விலங்குடன் இறங்கி வர,பக்கத்து வீட்டு ஆள் சிறிது நேரம் கிழித்து தன் காக்கி உடையில் வந்தார்.

ஆம்,அவள் தந்தை தான் அந்த கும்பலின் தலைவர் என்றும்,தான் அவரை பிடிக்க வந்த ரகசிய காவல் அதிகாரி என்றும் சொன்னார்.நல்ல வேளை நீங்கள் என் மீது சந்தேகம் கொண்டீர்கள் இல்லை என்றால் உங்கள் தந்தை தப்பித்து இருப்பார் என்றார் அந்த காவல் அதிகாரி,அதை கேட்ட லீலா மயக்கம் போட்டு விழுந்தால். தன் சொந்த மகளை பார்த்து வெட்க பட்டார் அவள் தந்தை.அவளுக்கு அவள் தந்தையை பிடித்து தந்தற்கு சன்மானம் வழங்க பட்டது.

லீலா தந்தைக்கு 14 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை தர பட்டது.

. முற்று

Stories you will love

X
Please Wait ...