எதிர்பாராத வார்த்தை

udaiyammaimarimuthu
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (83 Ratings)
Share this story

எதிர்பாராத வார்த்தை

2010 அன்று மாலை 3.55 மாணவிகள் அனைவரும் தங்கள் பைகளுக்குள் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தன. நானும் அவர்களுடன் மும்முரமாக அதை செய்து கொண்டிருந்தேன். பள்ளி பருவ காலத்தில் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் இருக்கும் சாதாரண தருணம். எப்போது பள்ளி முடியும் எப்போது வீட்டுக்கு போவோம் என்று, அப்போது தான் நான் கவனித்தேன் என் தோழி ராகவியை. அவள் நாளை நடைபெறவிருக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவள் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள். எங்கள் பள்ளியில் திடீரென்று அன்று அறிவிக்கப்பட்டது அந்த கட்டுரைப் போட்டி. அவளுடன் இன்னும் சில மாணவிகளும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டிருந்தன. சில நிமிடங்களில் மாணவிகள் அனைவரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தன. நானும் அவளிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குச் சென்றேன். ஆனால் என் தோழி ராகவி பள்ளி முடிந்தவுடன் தட்டச்சு வகுப்பிற்கு செல்வாள். படிக்கும் போதே கூடுதலாக தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவள் அம்மா தான் தட்டச்சு வகுப்பில் சேர்த்து விட்டார். ஆறு மாதம் ஆகிவிட்டது இன்னும் சில நாட்கள் தான் அவளது லோயர் கிரேடு வாங்கி விடுவாள். அன்றும், வழக்கம் போல் தட்டச்சு வகுப்பிற்கு போனாள். அவள் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது தான் ஞாபகம் வந்தது அந்த கட்டுரைப்போட்டி உள்ளூரில் நடைபெறவில்லை வெளியூரில் நடைபெற போகுது என்று. எந்த இடம், நேரம் என்று எதுவும் அவளுக்கு தெரியவும் இல்லை, அதை அறியவும் இல்லை. என்னென்றால் அந்த போட்டியின் அறிவிப்பு அன்று தான் அவர்களுக்கு அறிவித்தனர். போட்டிக்கு குறிப்பு எடுக்கும் நோக்கத்தில் அதை அவள் தெரிந்து வைக்கவில்லை எல்லாம் வீணாகி விட்டது என்று நினைத்த வேளையில் தான் ராகவிக்கு இன்னொரு தோழியான தீபா அவளுக்கு ஞாபகம் வந்தது. அவளும் அப்போட்டியில் கலந்து கொண்டிருந்தாள். தட்டச்சு வகுப்பு முடிந்த பிறகு அவள் வீட்டிற்கு சென்று எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டு போகலாம் என்று நினைத்தாள்.

மாலை 5 மணி தட்டச்சு வகுப்பு முடிந்த பிறகு அவள் சைக்கிளை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டிற்கு விரைந்தாள். சற்று பெரிய தெரு தான் தூரத்தில் வருபவரை கூட தெருவின் ஆரம்ப இடத்தலே பார்த்து கொள்ளலாம் அவ்வளவு நீண்ட தெரு. ராகவி தீபாவின் வீட்டை நெருங்கினாள் அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. தீபாவின் வீட்டிற்கு செல்ல அவள் அந்த ரோட்டை கடக்க வேண்டியிருந்தது. ரோட்டின் இருபுறமும் யாராவது வருகிறார்களா என்று கவனித்தாள். தூரத்தில் ஒரு பைக் வருவதை கண்டாள் அதிகம் நெரிசல் இல்லாத நேரம் ஒரே ஒரு பைக் வருவதை மட்டும் கவனித்த அவள் அந்த பைக் வருவதற்குள் நாம் சென்று விடலாம் என்று நினைத்த ராகவி சைக்கிளை எடுத்து ரோட்டை கடக்க முயன்றாள். பைக் வரவும் சைக்கிள் கிராஸ் ஆகவும் இருந்த நிலையில் என்னவென்று அறிவதற்கு முன் அங்கு ஒரு சிறு விபத்து நடந்து விட்டது. ராகவி அவளது சைக்கிளின் பிரேக் பிடித்து கீழே விழாமல் அப்படியே நின்று விட்டாள். ஆனால் அந்த பைக் சைக்கிளின் பம்பரில் சிறு உரசல் பட்டு நிலை தடுமாறி தூரத்தில் சறுக்கீட்டு விழுந்தது. அப்பொழுது அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு போடப்பட்டு இருந்த சிமெண்ட் கலவையில் பைக் டயர் பட்டதும் அது மேலும் விபத்தை உண்டாக்கி விட்டது. அங்கிருந்தவர்கள் அனைவரும் உடனே ஒன்று கூடி விட்டனர் ராகவிற்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை உறைந்து போய் விட்டாள். அப்போது பெரியவர் பாத்து வர கூடாதம்மா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட இவளுக்கோ பயம் தொற்றி கொண்டது. இவளின் பயத்தால் அடிப்பட்டவருக்கு என்ன ஆனது என்று கூட கவனிக்காமல் அருகில் இருந்த அவளது தீபாவின் வீட்டிற்கு சென்றாள். தீபா வெளியே வந்ததும் ராகவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்ததும் என்ன ஆச்சு, என்ன நடந்தது என்று கேட்க அவளோ எதுவும் சொல்ல முடியாமல் நின்றிருந்தாள். அவள் உடனே அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். ராகவி நடந்த எல்லாவற்றையும் கூறினாள் இதை கேட்ட தீபா ஆறுதலாக ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் சொன்னாள். ஆனால் ராகவிற்கோ பயம் விட்டு போகவில்லை அவளது அழுகை அதிகமாகியது. சரி நீ உள்ளே இரு நா வெளியே போய் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள் தீபா.

அந்த நேரத்தில் யாரும் அவளுடன் இல்லை நேரம் ஆக ஆக அவளின் மனம் என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பித்தது. அடிப்பட்டவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ன நடக்குதுன்னு அவளுக்கு புரியவில்லை. அவள் பல யோசனைக்கு ஆளாக்கப்பட்டாள் ஆம்புலன்சு வர போகுது, போலீசும் வரும் என்னைய கைது செய்ய போறாங்க, இனிமேல் நா ஸ்கூல், காலேஜ் எல்லா போக முடியாது, வேலைக்கும் போக முடியாது. அம்மா, அப்பா இரண்டு பேரும் என்னைய நல்லா திட்ட போறாங்க போச்சு போச்சு எல்லா போச்சு என்று தனக்குள் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள். நேரம் வேற போய் கொண்டிருந்தது ஏன் லேட்டா வந்த என்று வீட்டில் கேட்டால் என்ன சொல்வது, இங்கிருந்து எப்படி போவது என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து தனக்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு வெளியில் அப்படி என்னதா நடக்குதுன்னு போய் பார்த்து விடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. வீட்டு வாசலில் வந்து நின்ற போது சற்று இருள் சூழ் இருந்தது. அந்த இருளில் ஆட்கள் இருப்பது நன்றாக தெரிந்தது ஆனால் முகம் மட்டும் தெளிவாக தெரியவில்லை. ராகவி அங்கு அழுது கொண்டு நின்று இருந்தாள். இப்போது அதிகம் கூட்டம் இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே கூட்டம் நின்றிருந்தது. ராகவி தீபாவின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் சிமெண்ட் கலவை இருந்த இடத்தில் விழுந்ததால் உடம்பெங்கும் அந்த கலவை கொஞ்சம் ஒட்டிருந்தது அதனை கழுவுவதற்காக தோழியின் வீட்டிற்கு வந்தார். அவள் வீட்டின் முன்பு தொட்டியில் நீர் இருந்தது அதனால் தான் அவர் அங்கு வந்தார். அப்போது தான் கவனித்தாள் பைக்கில் வந்தவருக்கு விபத்தில் பெரிய காயங்கள் ஒன்றுமில்லை. அவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததை நினைத்து அவளது மனம் அப்போது தான் சிறு நிம்மதி அடைந்தாள். சற்று தூரத்தில் இருந்ததால் அவருடைய முகம் ராகவிற்கு சரியாக தெரியவில்லை அரையும் குறையுமாக தெரிந்தது. அப்போது அங்கு நின்ற சில பேர் இதோ அந்த பெண் தான் என்று தீபாவை காட்ட, அவளோ நான் இல்லை என்று கையை நீட்டி பின்னால் காட்ட ராகவியோ எங்க என்னை திட்டுவார்களோ என்று நினைத்து இருவிழிகளை திருதிருவென முழித்தாள் ஆனால் அங்கு யாரும் அவளை திட்டவில்லை. அப்போது தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவர் எதிர்பாராமல் ஒரு வார்த்தையை கூறிவிட அதனை கேட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். அவர் அந்தப் பெண்ணின் மனது கஷ்ட்டப்பட கூடாது என்பதற்காக ராகவியை பார்த்து தங்யூ என்று கூற அவளுக்கு அழுவதா? இல்லை சிரிப்பதா? என்று தெரியாமல் குழம்பி நின்று விட்டாள். இந்த மாதிரி பல விபத்துக்களை அவள் பார்த்து இருக்கிறாள். சில பேர் கடுமையான வார்த்தையை கூறுவர், ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான வார்த்தையை அவள் கேட்டதில்லை அது அவளுக்கு புதிதாக இருந்தது. அந்த வார்த்தையை சொன்ன பிறகு அவர் உடனே புறப்பட்டு விட்டார். அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர்.

ராகவியும் தீபாவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டாள் நடந்த விபத்தில் அவளால் சைக்கிளை ஓட்ட முடியவில்லை அதனால் அவள் சைக்கிளை தள்ளிக் கொண்டே செல்ல முடிவு செய்தாள். வீட்டுக்கு செல்லும் வழியில் விபத்தையும், அவர் சொன்ன வார்த்தையும் நினைத்துக் கொண்டே இருந்தாள். அது ஒரு சாதாரண வார்த்தை தான் ஆனால் அதை கூறும் போது ராகவியையும், அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார் அதை நினைக்க நினைக்க அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது அவளுக்கு. ஏன்னென்றால் அவரிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. இந்த நாளில் இந்த மாதிரி ஒரு விபத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சீரியசாக ஆரம்பித்து கடைசியில் காமெடியாக முடிந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத வார்த்தை வந்ததை நினைத்து அவள் மனது லேசாக மாறியது. அதை அவள் தினமும் நினைத்து முகம் கூட தெரியாத நபருக்கு மனதளவில் தான் செய்த தவருக்கு ஒரு மன்னிப்பும், அதே சமயத்தில் அவர் அவளை திட்டாமல் போனதற்கு ஒரு நன்றியும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். எப்பொழுது எல்லாம் ஞாபகம் வருதோ அப்பொழுது எல்லாம் இந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டே இருப்பாள் எப்போதும் மறக்க மாட்டாள்.

இத்துடன் ’எதிர்பாராத வார்த்தை’ கதை முடிவடைகிறது.

Stories you will love

X
Please Wait ...