JUNE 10th - JULY 10th
இரவு.இரவு நள்ளிரவை நெருங்கி அதை மெதுவாக ஓசைப்படாமல் மென்மையாக கடந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று எங்கும் வீசி அனைத்தையும் குளிர்ச்சி அடைய செய்தது. அமைதியான இரவு வேளையிலும் இதயத்தின் ஓட்டமும் சத்தமும் அதிகரிக்க கண்ணீர் துளிகளும் நிற்காமல் அவரின் மனச்சுமையை தெளிவாக உணர்த்தின. குளிர்ந்த காற்று வீசியும் அவருக்கு வியர்த்து கொட்டியது. வேறு வழி இல்லாமல் எழுந்து உட்கார்ந்தார் அருகில் படுத்திருந்த பிள்ளைகளையும் மனைவியையும் பார்த்தார். அவர்கள் அமைதியாக அழகாக தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென நினைவு வந்தவராக எழுந்து சத்தம் வராமல் அருகில் இருந்த அறைக்குச் சென்றார். கதவை சாத்தி தாலிட்டு விளக்கை போட்டார் .மேஜை அருகில் உட்கார்ந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தார். அன்பான அழகான மனைவிக்கு, வர வர நீ அழகாய் கொண்டு போர அழகும் இளமையும் ஒரு சேர உனக்கு பொங்கி வழியுது. எனக்கோ வயது முதிர்வின் காரணமாக முடி முழுவதும் நரைத்து விட்டது .வயது அதிகமாவதின் பயன் என் உடல் முழுதும் பரவி கிடக்கிறது. உன்னை பார்க்க எனக்கு வெட்கமாகவும் பயமாகவும் இருக்கிறது. என்னோடு எல்லாவிதத்திலும் நீ சிறந்து விளங்குற. நானோ!? எனக்கு பயம் அதிகமாகி கொண்டே போகிறது. உடல் நடுங்குது.உன் அருகில் வர என்னை விட என் இதயமே அதிகமாக பயப்படுகிறது. அதற்கு வியர்த்து கொட்டுகிறது. நீ இருக்கும் அறிவுக்கும் அழகுக்கும் உன் பரந்த மனப்பான்மைக்கும் நான் எந்த விதத்திலும் தகுதியானவன் இல்லை. நான் உன்னை என்னுள் பூட்டி வைத்து இருக்கிறேன். பத்திரமாக.மிக மிக பத்திரமாக.இருந்தும் அந்த பூட்டை நீ ரசிக்கிறாய்.கூண்டில் சிக்கிய பறவை நீ!. ஆனால் அதற்காக நீ கவலைப்படவில்லை கண்ணீர் சிந்தவில்லை. அதை நீ சந்தோசமாக ஏற்றுக் கொண்டிருக்கிறாய். சிறகை உடைத்து சிறையில் தள்ளியும் அதற்காக தான் ஆசைப்பட்டது போல் ஆனந்தமடைகிறாய். நீ மிகவும் நல்லவள். நீயோ ஒன்றும் அறியாத குழந்தை. நான் நல்லவன் என்று நம்புகிறாய். நான் உன்னை ஏமாற்றி விட்டேன். ஏமாற்றுகிறேன். கள்ளங்கபடமற்றவள் நீ நாய்க்கு நரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை உனக்கு. எனக்கு நீ மிக மிக உண்மையாக நடந்து கொண்டாய். நடக்கிறாய். நடப்பாய். ஆனாலும் அதை என் வயதும் மனதும் நம்ப மறுக்கிறது. நீ என்னிடம் அன்பாக ஆதரவாக இருந்தாலும் என் மனம் மகிழ்ச்சியடைய மறுக்கிறது. அது வேறு ஒரு கண்ணால் உன்னை வேவு பார்க்கிறது.உன் கண்களை நம்ப மறுக்கிறது. உன் சிரிப்பை கண்ணீரை நம்ப மறுக்கிறது. உன் சிறிய நெற்றியில் தவழும் அழகிய கூந்தலை நம்ப மறுக்கிறது. உன் உடலை ஊடுருவி மனதின் ஆழம் பார்க்க ஆசைப் படுகிறது. உனக்குத் தெரியாமலேயே உன்னை தெரிந்து கொள்ள நினைக்கிறது. அதில் வெற்றி பெற மட்டுமே துடிக்கிறது. உன் இதயம் துடிப்பதே எனக்காகத்தான் என்று நீ சொன்னதை நம்பவில்லை. என் வாழ்க்கை உங்களுக்காகத்தான் இன்று நீ சொல்லும்போதெல்லாம் என்னிடம் ஒரு நாள் வசமாக மாட்டுவாய் என உன் கண்களையே பார்த்துக் கொண்டு இருப்பேன்.அதன் வழியே உள்ளே சென்று உன்னை அறிய முயல்வேன். நானும் உன்னை ரகசியமாக கண்காணிக்கிறேன். தொடர்கிறேன்.நீ என்னிடம் மாட்டவே இல்லை. என்னை விட நீ புத்திசாலி தான் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்றாவது ஒருநாள் உன்னை ஜெயிப்பேன் என காத்திருந்து காத்திருந்து தோல்வியும் ஏமாற்றமும் அடைந்தேன். என்னிடம் நீ அன்பை பொழிய பொழிய அந்த அன்பின் ஊற்றை வெறுத்தேன். அழிக்க நினைத்தேன்.அந்த ஊற்று யாருக்கு சொந்தம் என காண ஆவலாக இருந்தேன். அது எனக்கான ஊற்று அல்ல, அது யாருக்காகவோ உண்டான ஊற்று நான் சந்தேகப்படாமல் இருக்க வெறுக்காமல் இருக்க ஒரு சிறு துளையையிட்டு அதன் வழியே அந்த ஊற்றை என் பக்கம் திருப்பி விடுகிறாய். ஒரு நாள் அந்த துளை வழியே உள்ளே நுழைந்து அதன் இருப்பிடத்தை கண்டுபிடிப்பேன். அப்போது வைத்துக் கொள்கிறேன் உன்னை என நினைத்தேன். என்னிடம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லையே பின் ஏன் என்னையே சுற்றி வருகிறாய். நான் தான் உலகம் என்றும் உங்களைத் தவிர யாரும் எனக்கு முக்கியம் இல்லை என்றும் நீ சொல்லும் அளவுக்கு நான் உனக்கு எதுவும் செய்யவில்லையே! உன் பாசத்துக்கு ஒரு எல்லை இல்லையா?. அழகாக இளமையாக ஆரோக்கியமாக இருந்தாலும் பரவாயில்லை இதில் எதுவுமே என்னிடம் இல்லையே பின் நான் எதை வைத்து உன்னை புரிந்து கொள்வது நம்புவது. நீ சொல்வது பொய். செய்வதெல்லாம் நடிப்பு என எனக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் அந்த பொய்யும் நடிப்பும் எனக்கு பிடித்திருக்கிறது.ஒரு நப்பாசை எனக்கும் ஒரு ஜீவன் இருக்கிறது. அக்கரைப்பட உயிரை விட எனக்கே எனக்காக ஓர் உயிர் இருக்கிறது என்று நினைத்தேன். உன்னிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் பொய் சொல் நடி தவறு இல்லை. ஆனால் அதை கடைசி வரை செய்.கடைசி வரை. அது எனக்கு பொய் என்றும் நடிப்பென்றும் தெரியாமலும் தெரிந்தும் போகட்டும். நான் உன்னை சிறை வைத்து பூட்டியது உனக்கு பிடிக்காமல் அந்த பூட்டின் சாவியை கேட்க பயந்தோ அதை உடைத்தால் எனக்கு சத்தம் கேட்டு விடும் மாட்டிக்கொள்வோம் என நினைத்து என யோசித்து கள்ளசாவியை போட்டு திறந்து எனக்கு தெரியாமல் வெளியே சென்று பின் மீண்டும் உள்ளே வந்து கூட்டிக் கொள்வாயோ என பயந்தேன். கண்டிப்பாக நடந்திருக்கலாம் . நடந்தும் கொண்டிருக்கிறது இல்லையென்றால் என்றாவது ஒருநாள் நடக்கும் என சாவியை பத்திரமாக வைத்திருக்கிறேன். உன்னையும் கண்காணிக்கிறேன். நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி என்னை விட்டு எனக்குத் தெரியாமல் உன்னால் செல்ல முடியும் என தூக்கம் கொள்ளாமல் இரவிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன். உன்னை முன்பை விட அதிகமாக ஆழமாக காதலிக்கிறேன். நீயும் காதலிக்கிறாய் என்று தெரியும், நான் சொல்வது நீ என்னை மட்டும் காதலி. நீ போதும் என்னால இதுக்கு மேல தாங்க முடியாதுன்னு சொல்லும்போது என்னையே நான் நம்ப மறுக்கிறேன். உன்னோடு நடிப்புக்கு ஒரு அளவில்லையா!?ஏன் உன் அன்பால என்னை கொல்ற. சொல்லு. என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா! என்னைப் பற்றி என்னை விட உனக்கு நல்லா தெரியுமா? போதும்னு உண்மையா சொல்றியா இல்ல நான் உன்னை விட்டு சீக்கிரமே விலகிடம்ன்னு சொல்றியான்னு தெரியல. உன்னால நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா இல்லையா.நான் பாவம் இல்லையா? உன்னோடு உயிர் இல்லையா? என்னை நீ ஏமாற்றலாமா? நான் என்ன சின்ன பிள்ளையை ஏமாற! நான் உனக்கு எந்த விதத்திலும் செட் ஆகல.ஆகவும் மாட்டேன்.நான் உன்னை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை பண்றேன். உன்னோட நிம்மதியை கெடுக்கிறேன். என்னால உன்னை விட்டு விலகவும் முடியல! உன் கூட இருக்கவும் முடியல! நான் என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியல. நான் உன்னை விட்டு ஒரேடியாக நிம்மதியா விலகிட்டா! ஆனா நீ எம்மேல வச்ச பாசம் உண்மையிலேயே உண்மையாக இருந்தா என்னோட இழப்ப உன்னால தாங்க முடியாது. துடி துடிச்சி போயிடுவ. நீ எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதான் என்னோட ஆச. நான் இப்படியெல்லாம் நினைக்கிறதால உன் மேல பாசம் இல்லை என்று மட்டும் நினைக்காதே!உன் மேல் நான் உயிரையே வைத்திருக்கிறேன். என்ன அளவுக்கதிகமா பாசம் வச்சிருக்கேன். அதான் இந்த மாதிரி எல்லாம் நினைக்கிறேன். நான் எவ்வளவுதான் எனக்கே ஆறுதல் சொன்னாலும் என்னோட மனசு கேட்க மாட்டேங்குது. நான் நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்கிறேன். நான் பூட்டின பூட்டை நானே திறந்து விடுகிறேன். இனிமேல் நீ சுதந்திரமான பறவை. உன்னோட மனசு போல நடந்துக்க நான் இனிமேல் உன்னை தப்பா நினைக்க மாட்டேன். நான் தானே போக சொல்றேன் குழந்தைகளைப் பற்றி நீ கவலைப்படாதே! எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். இத்தனை நாளா உன்ன பூட்டி வைச்சதக்கு என்னை மன்னிச்சிரு.உனக்கு எது விருப்பமோ அதை பண்ணு. எனக்கு சந்தோசம் தான். என்னால ஏமாற்றத்தை தாங்க முடியாது.நான் ஏதும் தவறாகவோ உன் மனதை புண்படுத்தும்படி நடந்திருந்தாலோ பேசி இருந்தாலோ எழுதி இருந்தாலோ என்னை மன்னிச்சிடு.உன் அன்புக்காக மட்டும் ஏங்குகிறேன். I LOVE YOU. என எழுதி ஒரு முறை படித்துவிட்டு மேஜையை திறந்து உள்ளே வைத்தார். அவருடைய கைகளும் கண்ணீர் துளியும் நடுங்கிக் கொண்டிருந்தன. அறையை விட்டு வெளியே வந்தார். கூடத்தில் பட்டிருந்த பிள்ளைகளையும் மனைவியையும் பார்த்தார்.அவர்கள் கனவில் வெகு தூரம் சென்றிருந்தனர். மெல்ல குனிந்து உறுத்தாத அதிக சுமை இல்லாத முத்தத்தை மனைவிக்கு பதித்துவிட்டு மீண்டும் பிள்ளையின் அருகில் படுத்து கொண்டார். இருபுறமும் படுத்திருந்த தன் பிள்ளைகளின் கைகளை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டார். வானம் சூரியனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. பிள்ளைகளை வருடிக் கொண்டிருந்தவர் பின் அயர்ந்து தூங்கிப் போனார். நெடுநாள் கழித்து நிம்மதியாக. திடீரென விழிப்பு வரவே எழுந்து அமர்ந்தார். பிள்ளைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தன. மனைவி சமையல் அறையோடு போராடிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. ஓசைப்படாமல் எழுந்து அறைக்குச் சென்று இந்த மேஜையில் இருந்த கடிதத்தை பார்த்தார். அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் மேஜையை மூடி விட்டு படுக்கையில் விழுந்தார். கடித்ததை கொடுக்கலாமா? வேண்டாமா? என நினைத்துக் கொண்டே படுத்திருந்தார்.நேரம் வெப்பத்தை கண்ட பனி போல உருகிக் கொண்டிருந்தது. குழந்தைகளை எழுப்ப வந்த மனைவி அவரும் படுத்திருப்பதை பார்த்து மெதுவாக தட்டி எழுப்பினாள். என்ன ஆச்சு காலையிலேயே எழுந்திடுவீங்களே! உடம்பு சரியில்லையா? என தொட்டுப் பார்த்தாள். சிரித்துக் கொண்டே எழுந்து அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றார். பிள்ளைகளை எழுப்பி பள்ளிக்கு தயார்படுத்தினாள். குழந்தைகள் சாப்பிட்டு பள்ளிக்கு தயார் இருந்தனர். ஆட்டோ வரவே பள்ளிக்கு கிளம்பிச் சென்றனர். அவரும் சாப்பிட்டு மேஜையின் உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து மேஜையின் மேல் வைத்து கண்ணாடி ஜாடியை அதன் மேல் வைத்தார். அவருடைய இதயம் போலவே கடிதத்தின் ஓரமும் அடித்துக் கொண்டிருந்தது. மனைவியை அனணத்து இதழில் முத்தமிட்டார். ஆசைத்தீர. இன்னைக்கு காலையில அய்யாவுக்கு என்ன ஆச்சு மூடெல்லாம் பலமா இருக்கு , ரொம்ப நாளாச்சு வேனுன்னா லீவு போட்டீங்களா? என்றாள். சிரித்துவிட்டு மனைவியிடம் சொல்லிக் கொண்டு பைக்கில் அலுவலகம் புறப்பட்டு சென்றார். கணவன் மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றாள். வேலைக்கு வந்ததும் அவருக்கு வேலையே ஓடவில்லை தான் எழுதிய கடிதத்தையே நினைத்துக் கொண்டிருந்தார். தவறு செய்து விட்டோமோ! கடிதத்தை எழுதியிருக்கக் கூடாதோ! கடிதத்தை படித்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள். என்னை பற்றி என்ன நினைப்பாள். என்னை மிக மிக கேவலமாக நினைக்க மாட்டாளா? இத்தனை நாளும் நேரில் நடித்துக் கொண்டு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தேன் என நினைத்தால் என்னை உண்மையாகவே வெறுத்து விடுவாளே! நான் ஏன் கடிதம் எழுதினேன். எனக்காக வாழ்ந்த அவள் வாழ்க்கையை ஒரே இரவில் ஒரு கடிதத்தில் கெடுத்து விட்டேனே! மணித்துளிகள் கரைந்து கொண்டே சென்றது. கண்டிப்பாக வீட்டு வேலைகளில் மூழ்கி போயிருப்பாள். கடிதத்தை படித்திருக்க மாட்டாள். இப்பவே வீட்டுக்கு சென்று அவளுக்கு தெரியாமல் கடிதத்தை எடுத்து சுக்கு நூறாக கிழித்து என்னையும் என் மனதையும் சுத்தப்படுத்த வேண்டும் என எழுந்தார். உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துவிட்டு வீடு நோக்கி விரைந்தார். வீடு வரவும் வண்டியை நிறுத்திவிட்டு ஓசை இல்லாமல் தள்ளிக் கொண்டே வந்தார். சமையலறையில் பாத்திரங்களை மனைவி கழுவிக் கொண்டிருந்தாள். மெதுவாக வீட்டுக்குள் நுழைந்து அறைக்கு ஓடிச்சென்றார்.கடிதம் கண்ணாடி ஜாடியின் கீழ் உறங்கிக் கொண்டிருந்தது. அடுப்படியை நோக்கி முக்கியமான பைலை வைத்து விட்டேன் எடுத்துக் கொள்கிறேன் என சொல்லி வேகமாக சென்று கடிதத்தை எடுத்து சட்டை பையில் வைக்கப் போனவர் கடிதத்தை பார்த்து பிரித்தார். நான் உன்னை மட்டும் தான்டா காதலிக்கிறேன் முட்டாளே! ஏன்டா உனக்கு அறிவு இல்லையா!ஏண்டா இப்படி எல்லாம் நினைக்கிற. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா. போ போன்னா உன்னை விட்டு நான் எங்கடா போவேன். எனக்கு உன்னை விட்டா யார் டா இருக்கா. நீ என்னைப் பற்றி இப்படி எல்லாம் நினைச்சு இருக்கேன்னு எனக்கு கோபமே வரல டா அந்த அளவுக்கு நீ என் மேல பாசம் வச்சிருக்கேன்னு புரிஞ்சுக்கிறேன். நான் எதுவும் தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சுக்கடா.இந்த ஜென்மம் மட்டும் இல்ல இன்னும் நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு நான் தான் பொண்டாட்டியே வரணும். இதான் என்னோட ஆசை. டேய் உண்மையிலேயே என்னால முடியலடா. நீ பெரிய ஆளுடா. கள்ளுனி மங்கா. I LOVE YOU டா . டேய் பாபு மரமண்ட I LOVE YOU டா. நீ வருவேன்னு எனக்கு தெரியும் லெட்டர எடுத்து கிழிக்க வந்தியா பயந்தாங்கொள்ளி பயலே. சமையலறையில் மனைவியின் அவனுக்கு பிடித்த அங்கங்கள் அவனின் முத்தத்திற்காக சிவந்து வெட்கப்பட காத்துக் கொண்டிருந்தது.
#636
Current Rank
31,917
Points
Reader Points 250
Editor Points : 31,667
5 readers have supported this story
Ratings & Reviews 5 (5 Ratings)
tomgopu
pktprakash
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points