JUNE 10th - JULY 10th
-அன்புள்ள இதயங்கள்-
சி.சுரேஷ்
ராதிகா ஒரு பெண் மட்டும் அல்ல மகேஷ் ஊறுகாய் கம்பெனி ஓனரும் கூட
ஒரு காலத்தில் ஓஹோவென ஓடின அவளுடைய கம்பெனி ஊறுகாய்கள் இப்பொழுது எல்லா கடைகளிலும் தேக்கம் ஆகிவிட்டது போட்டிக்கு ஏராளமான கம்பெனிகள் துவங்கிவிட்டார்கள்
வீட்டோடு ஒட்டிய ஒரு பெரிய ஹாலில் பத்து பேர் வேலை செய்யும் குடிசை தொழில் என்றாலும் அதன் மூலம் வரும் வருமானத்தில் ராதிகா நிறைவாகத்தான் இருந்தாள்
அந்த பத்து பேருக்கு வயிறார மூன்று வேளை சாப்பிடும்படி குடும்பத்தோடு மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி தவறாமல் இந்த பதினைந்து ஆண்டுகளாக தந்து வந்தாள்
தீபாவளி, பொங்கலுக்கு அவர்களுக்கு புது துணி எடுத்து தந்தாள் முடிந்த அளவு போனசாக பணத்தை கொடுத்து வந்தாள்
தன்னுடன் இருப்பவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் அவர்கள் தம் முன்னால் கஷ்டப்படக் கூடாது எனும் உயரிய குணமுடையவர்களாக இருந்து வந்தாள்
தன் கூட இருந்த வயதான அப்பா, அம்மாவுக்கு மருத்துவ செலவு முதல் கொண்டு எல்லா தேவைகளையும் கவனித்து வந்தாள்
அவளுக்கு குழந்தைகள் கிடையாது திருமணமாகி ஒரு வருடத்திலே கணவன் மரித்து விட்டான் அவளுக்கு மறுமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை அப்படி மறுமணம் செய்து கொண்டால் தன் மாமனார் மாமியாரை யார் பார்த்துக் கொள்வது எனும் கேள்வி எழும்பும் ஆகவே அதைக் குறித்து அவள் சிந்திப்பதை விட்டுவிட்டாள்
இரவும் பகலும் உழைக்கும் ராதிகாவுக்கு அந்த வீதியில் இயங்கி வரும் ஒரு கருணை இல்லத்தில் இருக்கும் பிள்ளைகள் தான் ஆறுதல், சந்தோசம் எல்லாமே தனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை அந்த இல்லத்திற்கு கொடுத்து உதவினாள்
நேரம் கிடைக்கும் பொழுது அந்த இல்லத்து பிள்ளைகளோடு போய் பார்ப்பாள் அந்த பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவாள் அப்பிள்ளைகளும் "ராதிகாவை அம்மா என வாய் நிறைய கூப்பிட்டார்கள்" அங்கிருந்து அறுபது பிள்ளைகளும் ராதிகாவின் மேல் உயிரையே வைத்திருந்தார்கள்
அப்பிள்ளைகளோடு நிறைய பேசுவாள், சிரிக்க வைப்பாள், கொஞ்சுவாள், புத்திமதிகளை கூறுவாள்
இப்படியாய் ஓடிக்கொண்டிருந்த ராதிகாவின் வாழ்நாட்களில் திடீரென ஒரு பெரிய தொகை கடன் வாங்கும் படி ஆயிற்று ஆம் அது அவளுக்கு பெரிய தொகைதான்
அவளுடைய மாமனாருக்கு உடம்புக்கு முடியாமல் போக பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்க தெரிந்த நண்பர்களிடம் அங்குமிங்கும் என இரண்டு லட்சம் திரட்டி அவளுடைய மாமனாருக்கு பேஸ்மேக்கர் பொருத்தவும் மற்ற மருத்துவ செலவுகளையும் செய்தாள்
ஊறுகாய் பிஸினஸ் விரிவடைய ஒரு கார் இருந்தால் நல்லா இருக்கும் பல இடங்களுக்கு நினைச்ச நேரத்துக்கு கடைகளுக்கு சென்று வர வசதி படும் என ஒரு நண்பர் அவளுக்கு அறிவுரை கூற பழைய காரை ஐந்து லட்சம் கொடுத்து வாங்கினாள்
ஆக மொத்தம் ஏழு லட்ச ரூபாய்க்கு கடனாளியாகி ஆனாள்
இதற்கு முன்பு வாடகை வண்டி அமர்த்தி தாலுக்கா, கிராமங்களுக்கு ஊறுகாய்கள் எடுத்துச் செல்வாள் இப்பொழுது சொந்த காரை பயன்படுத்தி வந்தாள் எங்கு சென்றாலும் அவளுக்கு உதவி செய்ய ஒரு பையன் இருந்தான் அவன் தான் கார் ஓட்டுவான்
புதுப்புது கடைகளுக்கு எல்லாம் ஆர்டர் எடுத்து சரக்கு கொடுத்தாள் இருந்தும் என்ன பயன்
வாங்கிய ஊறுகாய்கள் விற்கவில்லை விற்றால் தானே காசு தர முடியும் என பெரிய பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் எல்லாம் கைவிரித்தது
இப்பொழுது ஊறுகாய் பிசினஸில் ஏராளமான போட்டிகள்
புது புது டிரேட்மார்க்கில் அறிமுகமாகி கொண்டிருந்தது
வாங்கிய கடன்களை திருப்பி கட்ட முடியாமல் கால அவகாசம் கேட்டு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள்
ஊறுகாய் வியாபாரம் அவளுக்கு பிடித்த தொழில் அவளுடைய மாமனார் செய்த, கற்றுத்தந்த தொழில் இந்த ஊறுகாய் வியாபாரம்
தொடர்ந்து நடத்த, மாத சம்பளம் தர போட்ட முதலீட்டில் பாதியாவது கிடைத்தால் தானே தொடர்ந்து இந்த தொழிலை செய்ய முடியும் என வீட்டின் வெளிப் படிக்கட்டில் விரக்தியாய் இரு கைகளுக்குள் முகம் புதைந்து குந்தி இருந்தாள்
தயங்கித் தயங்கி பணியாளர்களிடம் சம்பளம் கொடுக்க முடியாமல் இருக்கும் நிலை சொல்லி மனவருத்தத்துடன் "அடுத்த மாசம் இருந்து வேறு தொழில் ஏதாவது செய்யப் பாருங்க" என கண்கலங்கினாள்
பிறகு சும்மா நிறுத்திவிட்டால் என்ன செய்வார்கள் ஏதாவது கையில் கொடுத்து நிறுத்திவிடலாம் என்று யோசித்து தன்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு நகை கடைக்கு சென்றாள் நான்கு லட்சம் கிடைத்தது
அதை அந்த பத்து நபர்களிடமும் "பல வருஷமா கூடவே இருக்கிறீங்க என்னால முடிஞ்சது இவ்வளவுதான்" என கவரில் நாற்பது ஆயிரமாக போட்டு வைத்திருந்த பத்து கவர்களை அவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்தாள்
அவர்கள் கண் கலங்கினார்கள்
"நீங்க நல்லா இருக்கணும் சாமி"
"உடம்ப பத்திரமா பார்த்துக்கோங்க"என்றாள்
"எப்ப வேணும்னாலும் எங்கள தயங்காம கூப்பிடுங்க அம்மா உதவி செய்ய நாங்க கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்கள் பிரிய முடியாமல் பிரிந்தார்கள்
தமிழகமெங்கும் கொரோனா பரவல் கடைகள் மூடப்பட்டன தமிழக அரசாங்கம் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது பதினைந்து நாட்களுக்கு பொது முடக்கம் என்றது
கல்லூரி,பள்ளிகள்,கடைகள் எல்லாம் மூடப்பட்டது போக்குவரத்து இல்லாமல் தார்ச் சாலைகள் வெறிச்சோடி கிடந்தது
ராதிகாவின் கையில் காசு இல்லை தன் மாமனார் மாமியாரை பார்த்து
ஆதரவாய் "நான் இருக்கேன் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க இப்படியே இருக்குமா காலம் மாறும்" என்றாள்
இடி போன்ற பிரச்சனைகள் வாழ்வில் வரும் போதெல்லாம் கலங்காமல் உறுதியான மன திடத்துடன் இருக்கும் மருமகளை நினைக்கையில் அவர்களுக்கு பெருமையாகத்தான் இருந்து
தன் மருமகள் எல்லா சூழ்நிலைகளையும் பொறுத்துக் கொள்கிறாள் ஏற்றுக்கொள்கிறாள் கஷ்டங்கள், நஷ்டங்கள் எதையும் தாங்கிக் கொள்கிறாள்
இவள் எங்களுக்கு மருமகள் அல்ல நாங்கள் பெறாத மகள் என யாவரிடமும் அவளின் மாமனார் சொல்லிக் கொள்வார்
எங்களுக்கு இவள் இறைவன் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும் என மனதுக்குள் அடிக்கடி அவளை நினைத்து சந்தோசப்படுவாள் அவளின் மாமியார்
ஆகவே அவர்கள் கடவுளிடம் எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாக இருந்து வந்தார்கள் நாட்கள் கடந்தது
கொரோனா கட்டுப்பாட்டுக்கு வரவில்லை அரசாங்கம் தொலைக்காட்சியின் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருந்தது
சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் மனபீதி அடைந்திருந்தனர் எவரும் சுதந்திரமாய் வெளியே வர விருப்பமின்றி வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள்
தொலைக்காட்சி முன்பாக மணிக்கணக்காக நேரத்தை செலவிட்டுக் கிடந்தார்கள்
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் வீட்டிலே மொபைல் கேமில் மூழ்கி இருந்தார்கள்
பெரியோர்கள் வீட்டில் தாயமும், பல்லாங்குழியும் விளையாடி நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்
கொரோனாவால் ஆங்காங்கே ஏற்பட்டுக்கொண்டிருந்த உறவினர்களின் மரணத்திற்கு செல்லமுடியாமல் பல குடும்பங்கள் அலைபேசியின் மூலம் துக்கம் விசாரித்து கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது
அவர்வர்களின் குடும்பங்களை அவரவர்களே காப்பாற்ற முடியாத சூழல் திடீரென குடும்பத்திற்குள்ளேயே ஒருவருக்கு கொரோனா வந்தால் தனிமைப் படுத்தப்படுகிறார் தனிமைப் படுத்துதல் என்பது வீட்டுக்குள்ளே சிறைப் போல இருந்து வந்தது
இந்த கொரோனா எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டிருந்தது
இந்தக் கொரோனாவால் எத்தனையோ வேண்டப்பட்ட உறவினர்கள் எல்லாம் மரித்துக்கொண்டிருந்தார்கள்
அரசாங்கம் என்ன சொல்லுவது என்று அறியாமல் கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்து கொண்டும் இருந்தது
தெருவில் அன்றாட பிழைப்புக்காக கடை வைத்திருப்போர், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வோர், கூலித் தொழிலாளிகள் எல்லாரும் பொருளாதாரத்தில் அதிக பாதிப்படைந்து கொண்டிருந்தார்கள்
இப்படி இருக்க ராதிகாவுடைய ஊறுகாய் தொழில் மட்டும் எப்படி சிறப்பாக நடத்திவிட முடியும் நாளுக்கு நாள் அவள் மனம் துயரத்தை மட்டுமே குடி வைத்தது
வீட்டில் அரிசி பருப்பு தீர்ந்து கொண்டிருந்தது
ஏற்கனவே பணம் சேர்த்து வைத்திருந்த உண்டியல்கள் எல்லாம் உடைத்தாயிற்று
இனி என்ன செய்வது "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம்" பாரதி சொன்னார் அது உண்மைதான்
பசியின் அருமையை உணர்ந்தவர்கள் அந்த அனுபவத்தை கடந்து வந்தவர்கள் பிறர் பசியால் துடிப்பதை கண்டால் அவர்களால் சும்மா இருக்க முடியாது
அதனால்தான் பல நல்ல உள்ளங்கள் கொரோனாவின் தாக்குதலை பொருட்படுத்தாமல் தேவையள்ளோரின் பசிப்பிணியை நீக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்க சமூக பணியாற்றுகிறார்கள்
இவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது வியந்தாள் அவளும் அப்படியே களத்தில் இறங்கி உதவி செய்தவள்தான்
தன்னுடன் இருந்தவர்களுக்கு தன்னால் இயன்றதை செய்ததற்கு மன சமாதானம் கொண்டிருந்தாள்
இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது பரமசிவன் அண்ணனுக்கு ஒரு போன் பண்ணிடலாம் இப்ப பண்ணா எடுப்பாரா, தூங்கப் போயிருப்பாரா சரி என்னவோ ஒன்று ஆகட்டும் என முடிவுசெய்து
மொபைலில் அவர் நபரை தேடிப்பிடித்து போன் செய்தாள் எதிர்ப்பக்கம் இருந்து "சொல்லுங்க ராதிகாம்மா நல்லா இருக்கிங்களா என்ன எதாவது முக்கியமானதா"
"நல்லா இருக்கோம் அண்ணா ஒன்னுமில்ல எல்ஐசியில போட்ட பணம் இப்ப கிடைக்குமா"
"அது இப்ப கிடைக்காதே அந்த பாலிசியை மறந்துட்டிங்களா விபத்து அல்லது இயற்கை மரணம் ஏற்பட்டாதான் மொத்த பணம் இருபது லட்சம் கிடைக்கும்"
"அப்படியா மறந்து போச்சு அண்ணே"
" வேற ஏதாவது உதவி "
" இல்ல அண்ணா"
"சரி வச்சிடறேன்"
பிறகு படுக்கையறைக்கு சென்றாள்
மாமனார், மாமியார் தங்கியிருக்கும் இன்னொரு அறையில் இருந்து மாமனாரின் நிம்மதி குறட்டை சத்தம் கேட்டது
பிறகு சமையலறைக்குள் நுழைந்தாள் அரிசி பருப்பு இருக்கா பார்த்தாள் எதுவும் இல்லை
நாளைக்கு என்ன செய்வது யோசித்தாள்
பிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்
நிம்மதியாய் ஹாட் பாக்ஸில் இருந்த இரண்டு சப்பாத்தியை தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்
பிறகு படுக்கை அறைக்கு சென்று உறங்க ஆரம்பித்தாள்
விடிந்தது காலை பிறந்தது
வீட்டு புரோக்கர் ரங்கனுக்கு போன் செய்தாள் அதற்கு முன் தன் மாமனாரிடம் "அப்பா நம்ம வீடு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விலைக்கு கேட்டாங்க அப்ப நாம கொடுக்கல இப்ப கொடுத்து விடலாமா கட்டடம் எல்லாம் பழசு ஆயிடுச்சு" என்றாள்
மாமனார் "நீ எது செஞ்சாலும் சரியா செய்வ நான் என்னத்த சொல்ல போறேன் உன் விருப்பப்படியே செய்யுமா" என்றார்
புரோக்கர் ரங்கன் நேரிடையாக வந்தான் "அம்மா ஒரு பார்ட்டி இருக்கு வித்துடலாம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்" என்றான்
"அண்ணா உங்களுக்கு தெரியாதது இல்லை நம்ம வீடு சிட்டி நடுவுல இருக்கு முப்பது லட்சம் பேசிப் பாருங்க என்றாள் உங்களுக்கு கமிஷன் மேல இரண்டு பர்சன்டேஜ் அதிகமாக வாங்கிக்கோங்க"
"அவ்வளவு போகாதம்மா"
"பேசிப் பாருங்க"
"சரிம்மா"
சம்பந்தப்பட்ட ஆளோடு பேசப்பட்டது முடிவாக அந்த வீடு இருபத்தி ஐந்து லட்சத்திற்கு விற்கப்பட்டது
அதில் பத்து லட்ச ரூபாயை தன்னுடைய மாமனார் பெயரில் டெபாசிட் செய்தாள்
அவர் எவ்வளவோ வற்புறுத்தி "என் பேர்ல வேண்டாமா" என சொல்லியும்
" இல்லப்பா உங்க பேர்ல இருக்கட்டும் நாமினி என் பெயர் போட்டுக்கிறேன் மாசம் உங்களுக்கு பத்தாயிரம் வட்டி காசு கிடைச்சா அது எவ்வளவு பிரயோஜனமா இருக்கும் இது நீங்க கட்டின வீடு" என சொல்லி அப்படியாக செய்தாள்
காரை இரண்டு லட்சத்திற்கு விற்று தன் மாமனாருக்காக வாங்கின கடனை அடைத்தாள் இப்பொழுது வீடு விற்ற காசில் மீதி பதினைந்து லட்சம் இருந்தது அதில் கார் கடன் ஐந்து லட்சம் அடைக்கப்பட்டது மீதி பத்து லட்சம் அவள் கையில் இருந்தது
அவள் தொடர்ந்து உதவி செய்யும் கருணை இல்லத்திற்கு சென்றாள் அதை நிர்வகிக்கும் நிர்வாகி ரவீந்தரிடம் இந்த கொரோனா காலத்தில எந்த உதவியும் இல்லாமல் இந்த பிள்ளைகளுடைய தேவையை எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ என அக்கறையாக கேட்டாள்
ரவீந்தர் அவளிடம் ராதிகா எத்தனையோ டோனர்ஸ் எனக்கு இருந்தாலும் முழுமனதோடு இந்த பிள்ளைகளை நேசிக்கிற அவங்க மேல ஒரு அம்மாவைப் போல அதிக அக்கறை காட்டுகிற உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல
"பரவால்ல இதுக்கு போய் எதற்கு நன்றி"
"உங்கிட்ட நான் மனம் விட்டு எவ்வளவோ விஷயங்கள் பேசி இருக்கேன் இப்ப நான் பேசப்போவது கேட்டு நீ வருத்தப்படக்கூடாது" என்றான்
"சொல்லுங்க" என அவனை புதிராக பார்த்தாள்
"இந்தப் பிள்ளைகள் எல்லாரும் என்னைய மனப்பூர்வமா அப்பான்னு கூப்பிடுறாங்க உங்கள் அம்மான்னு கூப்பிடறாங்க இதுவரைக்கும் நான் திருமணத்தை பற்றி யோசித்தது இல்லை உங்களைப் பார்க்கும்போது சமீபகாலமாக அந்த எண்ணம் வருது
நாம ரெண்டு பேரும் ஒத்த கருத்துக்களை உடையவர்களாக இருக்கிறோம் இந்த பிள்ளைகளுக்காக நமக்காக உங்க மாமனார் மாமியாருக்காக இன்னொரு நல்ல வாழ்க்கையை நீ ஏன் அமைசிக்க கூடாது"
அவனின் நீண்ட பேச்சு அவளை அதிகம் சிந்திக்க வைத்தது அவள் உடனே எந்த பதிலும் சொல்லவில்லை காரணம் அவள் இதை எதிர்பார்க்கவில்லை
மேலும் அவன் தொடர்ந்தான் "நீ சமூகவியல் படிச்சிருக்கா என்னோடு நீ இருந்தா நீ எதற்காக படிச்சியோ அந்த நோக்கம் நிறைவேறும் தனியா ஒருத்தன என்னால இந்த கருணை இல்லத்தை தொடர்ந்து நடத்த அளவுக்கு எனக்கு திராணி இல்லை" என்றான் கண்ணீர் மல்க
அவள் அவன் பேசுவதை சரியாய் புரிந்து உணர்ந்து நீங்க சொல்ற படி எல்லாம் நல்லபடியா நடக்கும் என சிரித்த முகத்துடன் அவனைப் பார்த்து "இந்த எட்டு லட்ச ரூபாயை நம்ம கருணை இல்லத்துக்கு வச்சுக்கோங்க"
என்றாள்
நாட்கள் கடந்தது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தேறியது
இப்பொழுது அந்தக் கருணை இல்லத்தில் யாரும் அனாதைகள் இல்லை அந்தப் பிள்ளைகளுடன் ரவீந்தர் எனும் அப்பாவும் ராதிகா எனும் அம்மாவும் கூடவே இருந்தார்கள்
சி.சுரேஷ்
தர்மபுரி
முகவரி
சி.சுரேஷ்
2/436 ஜி ஜீவா நகர்
தோக்கம்பட்டி அஞ்சல்
தர்மபுரி மாவட்டம்
636705
அலைபேசி எண்
8610422455
#858
मौजूदा रैंक
45,050
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 50
एडिटर्स पॉइंट्स : 45,000
1 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (1 रेटिंग्स)
C.Suresh
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स