கனா காணும் காவலன்

திகில்
4.7 out of 5 (9 रेटिंग्स)
कहानी को शेयर करें

அன்று காலையில் நல்ல அசதியான உறக்கம்
மெல்ல கண்விழித்தேன் எப்போதும் என்னை எழுப்பும் என் மனைவியின் குரல் அன்று இல்லை.


என் தூக்கத்தை கலைக்கும் என் குழந்தைகளின் விளையாட்டு சத்தமும் இல்லை.

வீட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவியது.

மெதுவாக எழுந்து கால்களை தரையில் வைத்தேன் ஏதோ எனது காலை வழுக்கி விட்டது கீழே விழுந்தேன்.


நான் விழும் பொழுது என்னை யாரோ மடியில் தாங்கி பிடித்தார்கள்.

நான் திரும்பும் பொழுது என்னை தாங்கியவரை பார்த்தேன் அவள் ஒரு பெண்... அவள் முகம் பார்க்க மெல்ல திரும்பினேன் எனது மனைவியின் சேலையை கட்டி இருந்தாள்.

என் மனைவியின் சேலையை பார்த்து அவள் தான் என அவளை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க சென்றேன்.

ஆனால் அவள் தலை வெட்ட பட்டு வெறும் முண்டமாக அமர்ந்திருந்தாள்.

பயத்தில் அலறி அடித்துக்கொண்டு எழுந்தேன் எனது கையில் ஏதோ தென்பட்டது என்ன என்று பதறிபோய் பார்த்தேன் எனது மகளின் தலை மட்டும் இரத்தம் ஒழுக கிடந்தது அதை கண்டு மயங்கி விட்டேன்.

பிறகு கண் விழித்ததும் மருத்துவமனையில் இருந்தேன்.

அதற்கு பிறகு நடந்த அனைத்தும் உங்களுக்கு தெரியுமே சார்.

இவ்ளோ தான் சார் அந்த கருணாகரன் என் கிட்ட சொன்னான்.

அப்டின்னு சொல்லிக்கொண்டே அந்த விசாரணை வீடியோ முடிவை இன்ஸ்பெக்டர் சாரிடம் காட்டினேன்.

சிறிது யோசனைக்கு பிறகு இதலாம் நீங்க நம்புரிங்களா சிவா என்று என் கிட்ட கேட்டார் இன்ஸ்பெக்டர்.

தெரில சார் உண்மை என்னனு விசாரிக்கணும்னு.

இவனே கூட கொலையபண்ணிட்டு நம்மகிட்ட நாடகம் போடலாம் இல்ல சார் .

கருணாகரனை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா கண்டிப்பா உண்மை என்னன்னு தெரிஞ்சிடும் சார் .

எஸ் சிவா இதுமாதிரி நெறைய கேஸ்ல கொலை பண்ணவன்தான் கேஸ் கொடுத்துட்டு தம்பிச்சிடலாம்னு நினைச்சிட்டு போலீஸ் ஸ்ட்டேஷன் வருவானுங்க.

சரிங்க சிவா சீக்கிரம் இன்வெஸ்டிகேஷன் முடிச்சி குற்றவாளியை கண்டுபிடிங்க.

சரிங்சார் அப்போ நான் வரன் சார் னு சொல்லிட்டு வந்து வண்டிய எடுத்தேன்.

நான் வரும் ரோட்டில் ஒரு 5 வயது மதிக்க தக்க ஆண் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தான்.

அவனை தூக்கி முகத்தில் தண்ணீர் அடித்தேன் மெல்ல கண்விழித்தான் அவன் முகத்தின் தோற்றத்திலேயே பசி என் கண்களில் தெரிந்தது.

முதலில் அவனை சாப்பிட வைத்தேன் அவன் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தான்.

பின்பு அவனிடம் அவன் யார் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவன் பதிலளிக்கும் போது தான் தெரிந்தது அவன் வாய் பேச இயலாதவன் என்று.

அவன் அழத்தொடங்கினான் நான் ஏதும் கேட்கவில்லை பின்பு காவல் நிலையம் அழைத்து சென்றேன்.

யாராவது தேடி வருவார்கள் என்று பார்த்தேன் யாரும் வரவில்லை. அந்த சிறுவன் நன்றாக அயர்ந்து தூங்கினான்.

மீண்டும் அந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கருணாகரனை விசாரணைக்கு அழைத்தேன்.

அவன் வந்ததும் இந்த சிறுவனை பார்த்து பதற்றப் பட்டான்.

நான் உடனே இந்த பையனை பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா என்று கேட்டேன் அவன் ஒரு வித சமாளிப்புடன் இல்லை என்றான்.

எனக்கு சந்தேகம் எழுந்தது அவனை மீண்டும் மீண்டும் கேட்டேன் அவன் சமாளிக்க முடியாமல் தனது எதிர் வீட்டு பையன் ஜாடையில் இருக்கான் அவன் தானான்னு சரியா தெரியல என்றான்.

சரி அன்னைக்கு என்ன நடந்துச்சி. எதையும் மறைக்காம என்கிட்ட சொல்லு அப்போதான் சீக்கிரம் உன் பொண்டாட்டி புள்ளைய கொன்னவனை கண்டுபிடிச்சி தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.

சார் அதான் எல்லாத்தையும் ஆஸ்பிட்டல் ல உங்க கிட்ட சொன்னான் சார் நீங்க கூட வீடியோ எடுத்திங்களே.

அப்போ உனக்கு வேற ஏதும் தெரியாது இல்ல கருணாகரா.

சரி உனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுனு சொன்ன.. உன்னோட பையன் எங்க .

அவன் என் மாமியார் வீட்டுல தான் இருப்பான் சார் அதுனால தான் என் புள்ளை தப்பிச்சிட்டான் இல்லனா அவனையும் கொன்னுட்டு இருப்பாங்க சார்.

அதையேன் யோசிச்சி யோசிச்சி சொல்ற கருணாகரா.

சரி அப்போ உன் மாமியார் வீட்டுக்கு போனா உன் பையன பாக்கலாம் இல்லையா.

இல்ல சார் அங்க போகவேணாம்.

என்ன போகவேணாமா ஏன் போகவேணாம் சொல்ற .

இல்ல சார் என்னை யாரோ பின்தொடருர மாதிரி தோணுது. நம்ம போனா நம்மள வச்சே என் பையன் இருக்குற எடத்த கண்டு பிடிச்சி அவனையும் கொன்னுடுவானுங்க சார்.

ஓ அப்படியா சரி நீ வீட்டுக்கு போலாம் கருணா எதா தகவல் வேணும்னா உனக்கு போன் பன்றன் வா என்றேன்.

சரிங்க சார் என்று சொல்லிவிட்டு ஒருவித தயக்கத்துடன் சென்றான்.

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து கருணாகரனுக்கு போன் செய்தேன் அவனது கைபேசி அணைக்க பட்டு (Switch off) இருந்தது. அவன் மீீது இருந்த சந்தேகம் அதிகமானது.

உடனடியாக அந்த கொலை நடந்த கருணாகரன் இல்லத்திற்கு சென்றேன் அவன் வீடு பூட்டப்பட்டு வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது.

இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தேன்.

அவரும் அவருடன் காவலர்களும் வந்ததும் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு தூக்கில் அழுகிய நிலையில் கருணாகரன் உடல் தொங்கி கொண்டு இருந்தது.

நான் அதிர்ந்து போனேன் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் நம்மிடம் வந்து பேசிய நபர் செத்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியதை போன்று அழுகிய நிலையில் எப்படி இருக்க முடியும் என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும் போதே. வீட்டின் பின்புறம் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

நான் ஓடிசென்று வீட்டின் பின்புறம் பார்த்தேன். அங்கு அவனின் பெண் குழந்தை தலை மற்றும் உடல் தனியாக வெட்டப்பட்டு துடித்த நிலையில் அலரிக்கொண்டிருந்தது.

இங்கு நடப்பது எதையும் என்னால் நம்பமுடியவில்லை.

வீட்டின் உள்ளே இருந்து சிவா இங்க வாங்க என்று இன்ஸ்பெக்டர் குரல் கேட்டது.

நான் பதறிக்கொண்டு அந்த வீட்டினுள் சென்றேன் அங்கு ஒரு பழைய போட்டோவை காட்டி இன்ஸ்பெக்டர் இதை பாரு சிவா என்றார்.

அந்த போட்டோவில் கருணாகரனின் மனைவி மகள் மற்றும் அவனுடைய மகன் ஆகிய மூன்று பேர் இருந்தனர் அந்த போட்டோவிற்கு பொட்டு வைத்து மாலை போடப்பட்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் அச்சமடைந்த குரலில் என்னய்யா சிவா இது.

இவன் இன்னைக்கு வந்து என் பொண்டாட்டி புள்ளைங்களை கொன்னுட்டாங்கன்னு கம்பலைன்ட் கொடுத்தான். ஆனா

இவனும் செத்து ஒரு நாலுநாள் ஆகி இருக்கும் போல.

கொன்னுட்டாங்கன்னு சொன்ன இவன் பொண்டாட்டி புள்ளைங்க செத்து 4 வருஷம் ஆகி இருக்குன்னு இந்த போட்டோல இருக்க இறந்த தேதி சொல்லுது.

தேதி இருக்கா சார் அப்டின்னு கேட்டுக் கொண்டே போட்டோவை பார்த்தேன்.

அப்போதுதான் அந்த பையனின் முகம் சரியாக கவனித்தேன்.

சார் சார் இங்க பாருங்க நம்ம ஸ்டேஷன்ல ஒரு பையனை கூப்பிட்டு வந்தன் இல்ல அவன் தான் சார் இவனோட பையன்.

என்ன சொல்றே சிவா அது எப்படி நாலு வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போன பையன் ஸ்டேஷன்க்கு வந்திருக்க முடியும் ஒன்னுமே புரியல சிவா.

எனக்கும் ஒண்ணுமே புரியல சார் உடனே வாங்க நாம ஸ்டேஷனுக்கு போயிட்டு பார்க்கலாம்.

நாணும் இன்ஸ்பெக்டரும் காவல் நிலையம் வந்தோம் அங்கு அந்த பையனை காணவில்லை ஸ்டேஷன் முழுக்க தேடினோம்.

அப்போது லாக்கப் திறந்து இருந்தது அதனுள் சென்றிருப்பான் என்று மெதுவாக நான் உள்ளே சென்று பார்த்தேன்.

திடீரென எனக்கு பின்னால் கோர சத்தத்துடன் அந்தரத்தில் பறந்த நிலையில் என் தலையை பிடித்து இழுத்து சுவற்றில் மோதினான் அந்த பையன்.

அவனை தள்ளி விட்டு அலறிக்கொண்டு லாக்கப்பில் இருந்து வெளியே ஓடினேன் அங்கு இன்ஸ்பெக்டர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த பயத்தில் இன்ஸ்பெக்டர் சார் என்று கண்ணை மூடிக்கொண்டு கத்தினேன்.

உடனே எனது வாயில் யாரோ உதைத்தார்கள்.

கண்விழித்து பார்த்தேன் எனது அண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு பரிச்சைக்கு தானடா அப்ளை பன்னி இருக்க.

அதுக்குள்ளையே சப்-இன்ஸ்பெக்டர் ஆகிட்ட மாதிரி கனவு காணுர என்று கூறிக்கொண்டே சென்றான்.

நானும் எழுந்து பல் துலக்கி கொண்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் உறங்கினேன்.

இப்படிக்கு
கனா காணும் உங்க சப்- இன்ஸ்பெக்டர் சிவா....

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...