JUNE 10th - JULY 10th
அழகிய காலை இளம் வெயில்
என்கிற நிலை மாறி சுரீர் என்றும்
வெயில் ஏறாத இதமான சூரிய
ஒளியில் சற்று நேரம் உலாவ பிடிக்கும்.
தினசரி செய்ய முனையும் அன்றாட
கடமையில் இதுவும் ஒன்று. மாடி
ஏறும் முன் அக்கா குமாரி விடியற்காலையில் எழுந்து துவைத்து
பிழிந்து வைத்திருக்கும் துணிகளை
எடுத்து கொண்டு தான் படியேறுவாள்
சுகுணா.தங்கைக்கு துணியை பிழியும்
கஷ்டத்தை கூட தரமாட்டாள் குமாரி.
துணிகாயப்போட்டு விட்டு சிறிது நேரம்
மாடியில் உலாத்தி விட்டு வரும் போதே
அக்கா துணிகளை காயப் போட்டுட்டேன்
என்று கூறியபடியே வந்த சுகுணாவிடம்
ஏண்டி இப்படி ஏலம் போடுற. அக்கத்து
வீடு பக்கத்து வீடுகளுக்கும் கேட்கும்
போல இருக்குது .
பெண்கள் இப்படி இறைஞ்சு சத்தம்
போடக்கூடாது சுகுமா என்ற குமாரியிடம்அக்கா என்று செல்லமாக சிணுங்கினாள் சுகுணா.இந்த சுக்குமா. மிளகு சீரகம்னு. கூப்பிடாதன்னு எத்தனைமுறைக்காஉன்னிடம் சொல்லுறது.தங்கையின்
செல்லமான சிணுங்களுக்கு சிரித்தபடியே எனக்கு அதுமாதிரி பழகிவிட்டது சுகுமா. ஸ்கூலுக்கு போகும்வரை சுகுமா என்பது தவறாக தெரியவில்லை. காலேஜ் போனதும்
நாகரீகம் முத்திவிட்டதடி உனக்கு.
அக்கா சமாதானம் சொல்ல முற்பட்ட
தங்கையிடம் சரி சுகுணா என்றே இனி
கூப்பிட்டு பழகி கொள்கிறேன். கவலைப்படதே சரியா.என் செலால அக்கா என்று முகவாய் பிடித்து கொஞ்சியவளைசரி சரி நேரமாச்சு காலேஜுக்கு கிளம்பு.
தன் தங்கையின் மீது அதிக பாசம் .
தாய் தந்தையை இளம் வயதில்
இழந்து நிலையில் இருவருமே ஒருவருக்கொருவர் ஆதரவாக
அன்பான பாசப்பிணைப்பில் திளைத்தனர்.தங்கை கிளம்பியவுடன்
காலிங் பெல்அடிக்கும் சத்தம் கேட்கவே
யாராக இருக்கும் என்று யோசித்தாள்
குமாரி.கதவை திறந்தவளுக்கு
ப்ரோக்கர் அவருடன் ஒரு அழகான இளைஞனும் நின்றிருந்தனர்.இதென்ன
குடும்பஸ்தர் மாதிரி தெரியவில்லை.
இவர்வீடுபார்க்க வந்துள்ளார்.பார்ப்போம்
சரியென சாவி கொண்டு வந்து கொடுத்தாள்..மாடில கூட்டிப் போய் காட்டுங்க மேல் கொண்டு பேசிக்கலாம்..
பெரிய வீடு. கீழே நான்கு போர்ஷன்.மாடியில் இரண்டு போர்ஷன். அதில் ஒன்று காலியாக இருக்கிறது.இந்த வாடகை மற்றும் எம்பிராய்டிங் வொர்க் என தொழில் செய்துவரும் வருமானத்தில் தங்கைக்கு தேவையான அளவு சேமிப்பு செய்து வருகிறாள்..பி காம் ஃபைனல் இயர் முடித்ததும் தங்கைக்கு ஒரு நல்ல வரன் பார்த்து முடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாள் குமாரி.. தனக்கு ஒரு வழி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை குமாரி..அவளுக்கு தன் தங்கையின் வாழ்க்கையே முக்கியம்.குமாரி மிகவும் பொறுப்புள்ள குடும்பபாங்கு நிறைந்த பெண்.சுகுணா விளையாட்டு பெண். துருதுருப்பானவள்.. சற்று முன் கோபி..
மாடியில் வீடு பார்க்க வந்த இளைஞனின்தோற்றத்தில் சற்று
ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.அவளுக்கான
ஈர்ப்பு கிடையாது. தங்கைக்காக
பொருந்தி வருவானா என்று தோன்றியது.வாடகை பார்க்க இப்போது
தான் வந்திருக்கான். இதற்குள் இந்த
சிந்தனையா.தேவையா இது நல்லவனா
கெட்டவனா போக போக தான் தெரியும்.
தடுமாறித்தான் போனாள் குமாரி..
கீழே இறங்கி வந்தப்ரோக்கரும் அந்த அழகான இளைஞனும் வீடு பிடிச்சிருக்கு வாடகை அட்வான்ஸ் வாடகை பேசி நாளைக்கு குடி வருவதாக
சொல்லிவிட்டு கிளம்பினர்..
அந்த இளைஞனின் முகம் நெஞ்சில் ஆழப் பதிந்தது குமாரிக்கு..இதுவரை பேட்ச்சிலருக்கு வீடு விட்டதில்லை..
ஆனால்ஏனோஅந்தஇளைஞனுக்கு மறுக்க மனம் வரவில்லை குமாரிக்கு..
மாலை வீடு திரும்பியதும் சுகுணா, அக்கா எனக்கு அடை சுட்டு கொடேன்.
அடை சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு
இல்லே. அடிப்பாவி போன வாரம் தானே
சுட்டு தந்தேன். அது போன வாரம்
தானேக்கா.உள்ளேபோய்சூடான
அடைகளை ஒரு தட்டில் வைத்து நீட்டினாள்.சூப்பர்க்கா எப்படி நான் ஆசைப் பட்டது தெரியும். கௌலி
சொல்லிச்சு.சிரித்தாள் குமாரி.
லவ்லி என்று ஆசையுடன் அக்காவை அணைத்து கொண்டாள் சுகுணா .போதும் கொஞ்சியது சீக்கிரம்ரெடியாகு கோவிலுக்கு போகலாம்..
கோவிலில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் அக்கா நீ லைன்ல நில்லு.. நான் போய்அர்ச்சனைக்குதேவை
ஆனதை வாங்கிக்கொண்டு வரேன்..
சரி அங்கே போய் ஏதேனும் தகராறு
பண்ணிட்டு வராதே. நான் என்ன
சண்டைகாரியா. சே...சே அடாவடி
செய்வே அவ்வளவு தான்.சமத்து
தான் போடி. வெவ்வே என்று அழகு
காட்டி விட்டு பரபரப்புடன் ஓடியவள் எதிரே வந்த இளைஞனின் மீதுமோதி நின்றாள் சுகுணா.ஹலோ சுண்டல் வாங்க அவ்ளோ அவசரமா..எனக் கேட்ட உடனே முறைத்தபடி ஹலோ அதோ அந்த வரிசையில் கொடுக்கிறார்கள் சுண்டல் நீங்கள் சீக்கிரமா ஓடிப்போய் வாங்கிகொள்ளுங்கள்?தீர்ந்து விடப் போகிறது ஓடுங்கள் ஓடுங்கள்.. என்கிறாள் கேலியாக .
யார் இந்த பெண் யார்?துடுக்கு தனமாக
பேசினால் கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே.முகம் கோபத்தில் செந்தாமரை போல் சிவந்து விட்டதே..
பசக்கென்று நெஞ்சில் அவள் முகம்
ஒட்டிக்கொண்ட மாதிரி பீல்.மீண்டும் அவளைசந்தித்துபேசவேண்டும். முடியுமா. துடிப்பும் ஆவலும் ஏற்பட்டது .அர்ச்சனை பொருட்கள் வாங்கி கொண்டு அக்காவுடன் நல்ல பிள்ளை போல நின்றாள் சுகுணா.யாரது சுகுணா தெரியாதுக்கா பக்கத்தில் பஸ்ஸ்டாண்ட் இருக்கான்னுகேட்டார் சொன்னேன்..அப்படிதெரியவில்லையே. என்னவோசண்டை போட்டுக் கொண்டு வந்த மாதிரி இல்ல தெரியுது. அதெல்லாம்ஒன்னும்கிடையாது. கூட்டம் நகருது பார்..சுகுணாசொல்வது நிஜமா. அந்த இளைஞரின்முதுகு பக்கம் மட்டும் தான்.தெரிந்தது.
அர்ச்சனை முடிந்தது. கோயில் பிரகாரத்தில்அமர்ந்து தங்கையின் நெற்றியில் குங்குமம் இட்டாள்குமாரி.
மகேஷ் தன் பிரண்ட் வாசுக்கு கால் பண்ணிநான் தங்க வீடு பார்த்து விட்டேன்..நீ நாளைக்கு வந்துவிடு என்றான்.காபி போட்டு இறக்குமுன்வந்து வர்றேனா இல்லையா பாரு மச்சி.அடிச்சு தோல உரித்து உப்பு சேர்த்து காய போட்டு விடுவேன்..ஏண்டா உனக்கு நான் என்ன கொடுமை செய்தேன்.நீ ஆணையிடு ஓடிவருவேன்நண்பா.நண்பேன்டா. அப்படிவா வழிக்கு..மறுநாள் காலையில் எழுந்ததும் வீட்டு வாசலில் வேன் வந்த நிற்கும் ஓசையை கேட்ட குமாரி வேகமாக கேட்டை திறந்து விட்டாள்.
எல்லா பொருட்களையும் மாடியில் சேர்த்து விட்டுஅசதியில் சோஃபாவில் அமர்ந்தவர்களைபால்காய்ச்சிட்டீங்களா.என்று கேட்டபடியே உள்ளே வந்த குமாரி கையில் பால் பாத்திரம் செம்பில்பால்.
சர்க்கரை சகிதமாக உள்ளே நுழைந்தாள்குமாரி அவளே பாலைகாய்ச்சி காபி கலந்து கொடுத்தாள்.நன்றிஎன்று நன்றி சொல்ல இதல்லாம் உதவியா மதியம் சாப்பாடு நானே கொண்டு வந்து தந்து விடுகிறேன்.
வாசு தேங்க்ஸ்ங்க என்றவனிடம் மகேஷ் முறைத்து விட்டு நாங்கள் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வந்து விடுவோம்..சிரமபடாதிங்க .அதெல்லாம் எனக்கு சிரமம் கிடையாது.எங்கே நண்பன் மறுத்து விடுவானோ என பயந்தான் வாசு...சரி என்று உற்சாகமாக போனாள் குமாரி..மச்சி நான் ஒன்னு சொன்னாதிட்டமாட்டியே.சொல்லி தொலைடா.குமாரி உன்னை விரும்புறாங்களோன்னு
நினைக்கிறேன். நண்பன் மனதை
ஆழம்பார்க்க,நினைக்காதே.காயபோடு.வெக்கமாயில்லை.செய்ய வந்த உதவிக்கு கைமாறு இதுதானா??
போய் வாயை கழுவு.இல்லைனா பெனாயில் இருக்கும் வாயில் ஊத்திவிட்ருவேன்ஒழுங்காபேசு. அப்பாடி என் லைன் கிளியர்.ஹிஹி என்றவனிடம் கிறுக்காடா உனக்கு. உதைபடாமல் போகும் எண்ணம் இல்லையா??என் நல்ல மனதைை புரிந்து கொள்ள வேண்டும்,குமாரிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்க நினைப்பது தவறாகபுரிந்து கொள்ளாமல் பேசாதே மச்சி.ஏன் இப்ப நடுத்தெருவில் நிற்கிறேன் வழிகாட்டுங்கஎன்று சொன்னாங்களா. மூஞ்சியைபாருஎன்ற மகேஷிடம் எனக்கென்னடா குறைச்சல்.. அழகில்லையா.வசதி இல்லையா?? நல்ல வருமானம் இல்லையா??
அறிவில்லையா!! போதும் நிறுத்துடா இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் சரிதான்..அறிவுக்கும் உனக்கும் என்னடா சம்மந்தம்..நண்பனை மனதிற்குள் ரசித்த வாறே காலை வாரிக் கொண்டு இருந்தான் மகேஷ்.சுகுணாவுக்கு அன்று காலேஜ் லீவு.சௌகரியமாகிவிட்டது குமாரிக்கு...சமையல் முடிந்தது.சுகுணா இந்த சாப்பாட்டை மாடியில் இருப்பவர்களுக்கு கொடுத்திட்டு வந்திடேன் பாவம்..சரிக்கா சாப்பாட்டை வாங்கிகொண்டுமாடியேறியவள் அங்கே இருந்த மகேஷை கண்டதும் சுகுணாவுக்கு கோபம் தான் வந்தது..இவனுக்கு போய் உணவு கொண்டுவந்தோமேஎன்று.திருப்பி கொண்டு போனால் அக்கா திட்டுவது உறுதி..விழித்து கொண்டு நிற்பவளை மகேஷ் ரசித்து பார்பபதை கண்ட வாசுவுக்கு ஆச்சரியமாக இருந்தது..
டேய் சாப்பாடை வாங்கு எவ்வளவு நேரம் நிப்பாங்க லிஸ்டர்..மகேஷ் கைநீட்ட சிலுப்பிக் கொண்டு வாசுவிடம். நீட்டினாள்..தேங்க்ஸ் சிஸ்டர்.வாசுவை நெற்றி கண்திறந்து முறைத்து பார்த்தான்மகேஷ்..வாசு உணவைஉண்ணஆரம்பித்துவிட்டான்.ஆஹாஆஹாமகேஷ் சூப்பர்சாப்பாடு உசுப்பேத்த போடா தீனி பண்டாரம்.என் சிஸ்டர் உன்னை திரும்பி பாக்கனும்னு நினைத்தால் என் உதவி தேவைப்படும் . ஞாபகம் வைத்துக் கொள்.
உடனே மகேஷ் சாம்பார் போட்டுக்கோ வாசு.பொரியல் சாப்பிடு..வாசுவுக்கு ஏகப்பட்ட கவனிப்பு மகேஷிடம் .
மச்சி உன்ன மாதிரி பச்சோந்திய கண்டதில்லை.என் சிஸ்டர் மேல்
அம்புட்டு லவ்வாடா செல்லம்.வாசு கேட்க நேரம்டாடேய் எனக்கு உன்னை விட்டால்யாருடா.நண்பேண்டா.வாசு நீ.போதும்டா.என்ன செய்யனும்..
என் சிஸ்டர் இனி உன்னுடைய ஆள்.
உன்னுடைய சிஸ்டர் என் ஆள்.
டீல் ஓகேவா...அரை மனதுடன் தலையாட்டியமகேஷ்எப்படியோ;
அழகு தேவதை தன் வசமானால் சரி நினைப்பே இனித்தது.. சுகுணா அக்காவிடம் எனக்கு மாடியில்
வாடகைக்கு இருப்பவர்களை பிடிக்கவில்லை..ஏன் ரொம்ப நல்லவர். உன் வால் தனத்தை அவரிடம் காட்டாதே.போக்கா.என்ற தங்கையின் தலையை கோதி விட்டாள்.
குழந்தை போல அடங்கும் சுகுணாவை மூன்று மாதங்களில் உன் படிப்பு முடிந்ததும் உனக்கு நல்ல வரன்
தேட வேண்டும் சுகுணா.நான் மேல் கொண்டு படிக்க வேண்டும்.நம் அப்பா. திடீரென்று ஒருநாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்..அந்த அதிர்ச்சியில் நம் அம்மாவும் இறந்துட்டாங்க..உன்னை என்னால் முடிந்த அளவு வளர்த்து ஆளாக்கி விட்டேன்..நீ திருமணம் செய்து கொள்.பிறகு மேலும் படி ..அதற்கு தகுந்த வரனை உனக்கு நான் பார்த்து வைக்கிறேன்.காலாகாலத்தில் நடந்தது
என்றால் தானே எதற்கும் மதிப்பு.
கண்ணீருடன் குமாரி பேச அக்கா நீ சொல்றதை நான் கேட்பேன்.அதற்கு முன் நீ திருமணம் செய்து கொள்..
நானும் நிச்சயமாக செய்து கொள்வேன்.முதலில் நான் செய்து கொண்டால் கணவன் விருப்பப்படி
நடக்கவேண்டும்.உன்னைநான்
மற்றவர்களுக்கு. அடிமை படுத்த விட மாட்டேன்.உன்னை ராணி மாதிரி வாழ வச்சிட்டு தான்நான்கல்யாணம்
பண்ணிக்குவேன்.அக்காவை கட்டி அனைத்து அழுதாள்..என் நினைப்பு மட்டுமே உள்ளது உனக்கு. நான் கொடுத்து வைத்தவள்..மகேஷ் சுகுணாவை தூர இருந்தே ரசிப்பது வழக்கம்.கிட்ட நெருங்க பயம்.. அவளின்
கோப பார்வை நெருப்பை வீசுகிறதே.
சந்தர்ப்பம்வரும்.பார்ப்போம்.
அவளின்றி நான் இல்லை என்பதில் முடிவாக இருந்தான் மகேஷ்.அக்கா மாலை ஃபிரண்ட் ஸோட பீச் போகிறேன்.சீக்கிரம் வந்து விடுவேன்.படியேறி சென்ற வாசு மகேஷ் அருகில் சென்று நா மாலை பீச்சுக்கு போகிறேன் வருகிறாயா..வேலையிருக்கு ஆளவிடு.சரிசரி வேலை முக்கியம் மச்சி.என்ன என் சிஸ்டர் பீச்ச்ச் போகுது என்று லென்தாக இழுத்துசொல்லி விட்டு நான் வரட்டுமா மச்சி என்று வாசு நகர்ந்தான்...
நண்பா நீ பீச்சுக்கு போனால் நான் வராமல் இருப்பேனா?வாசுவின் கையைபிடிக்க தோள் பட்டை வலிக்குது கொஞ்சம் பிடிச்சு விடறியா.தோள்பட்டை என்னா உன் கழுத்தை பிடிக்கட்டுமா.வேணாம் மச்சி அலறினான் வாசு..மாலை பீச்சுக்கு போன சுகுணா அவளுடைய தோழியர் , கடலில் கால்நனைத்துவிளையாடி கொண்டு இருக்கும் போது ஒர் வாலிப கூட்டம் போய் அருகில் நிற்க மிரண்டனர் பெண்கள்.கரைக்கு வர எத்தனிக்கும் போதுஒருவன் ஏன் எங்க கூட ஓடி விளையாட மாட்டிங்களா.ஒருத்தியின் கையை பிடித்து விட பெண்கள் கூட்டம் அலறியது...
ஓடி வந்த மகேஷ் வாசு மற்றும் சிலர் ஓங்கி குத்த ஓடிய வாலிபர்களை விரட்டி போலிஸிடம் ஒப்படைத்தனர்..இது வரைக்கும் கோப பார்வை மட்டுமே பார்த்து வந்த சுகுணாமுதன் முறையாக மகேஷை மரியாதை தந்து தேங்க்ஸ் தேங்க்ஸ்ங்க என்றாள்..பரவாயில்லை தவறாக நினைக்க வேண்டாம் நீங்கள்
விரும்பினால் உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன்..தேங்க்ஸ் என்றாள் சுகுணா...
பைக்கில்ஏறிஅமர்ந்துகொண்ட
சுகுணாவை ஏக்கத்தோடு பார்த்த வாசு மச்சி நானு என்று கேட்க ஸ்டாப்பிங் பக்கம் தானே நண்பா பை என்ற மகேஷை துரோகி வாசு கூற சிரித்தபடியே சுகுணாவுடன் வானத்தில் பறப்பது போல இருக்கவேஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது மகேஷின் மனம்..சுகுணா கோபமா.இனி இல்லை என கலகலவென்று நகைத்தாள்.நான் செய்த பாக்கியம்.பழைய டயலாக்ஸ் பேசிக்கொண்டு வரீங்க..நான் காதலுக்கு புதுசு உன்னை தவிர நா யாரையும்காதலித்தது இல்லை..என்ன விட்டா நீங்கள் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டு போறிங்களே..
விருப்பமில்லை என்றால் விட்டு விடுகிறேன்..இல்லைஎன்அக்கா
சம்மதிக்கனும்.அப்பதான் நம்ம திருமணம்.ஐயோ என்னை விட பாஸ்ட்.
பெண்களுக்கு இருக்கும் தைரியம் எங்களுக்கு வருவதில்லை..பைக்கை நிறுத்துங்கள்.. நான் இறங்கனும். பிளீஸ் வேண்டாம் டார்லிங்.ஸாரி கேட்டுகிறேன்.அக்கா பண்ணிக்காம நாம் திருமணத்தை பண்ணிக்கிட்டா நல்லாயிருக்குமா.
ஒரே கல்லில்இரண்டுமாங்காய் ஒரு ஐடியா தரட்டுமா. தந்தால் ஐயாவுக்கு என்ன தருவாய் கண்மணி.உதை தருவேன். கண்ணாளா..ஆள விடு தாயே. வாசு மிகவும் நல்லவன்.உங்கஅக்காவுக்கு பொருத்தமானவன்..உன் அக்காவை கட்டாய படுத்தி நாம் வாழ்க்கை தேடி வைப்பதுநமது கடமையாகும்.
என்ற மகேஷிடம் நன்றிமகேஷ்புருஷண்டி
பேர்சொல்றே.
குமாரிக்கு இவர்கள் காதல் தெரிவிக்க பட்டது..ஆனால் நீ வாசுவை திருமணம் செய்ய உறுதி அளித்தால் மட்டுமே
நான் திருமணம்செய்துகொள்ளுவேன்.
தங்கையின் நல் வாழ்வுக்காக வாசுவை மணக்க சம்மதம் தெரிவித்தாள் குமாரி.....குமாரிக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்ச்சதுஅவள்பாக்கியம்.வாசு
மகேஷ், சுகுணா மூவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்..
குமாரி திருமணம் செய்து கொண்ட பின் வாசுவை உயிருக்கு உயிராக காதலித்தாள்.. காதல் என்னும்
ஓடம் சுகமாக கரையில் சேர்ந்தது.
நன்றி.
#757
मौजूदा रैंक
35,100
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 100
एडिटर्स पॉइंट्स : 35,000
2 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (2 रेटिंग्स)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
h.hema5477 Hemavathy
சூப்பர் கதை
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स