தாவணிக் கனவுகள்.

பெண்மையக் கதைகள்
4.5 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

தாவணிக் கனவுகள்.

--------------------------------------

அவளின் இதய துடிப்பில் அவன் பெயர் மட்டுமே கேட்கிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அவன் முகமே தெரியும் அவன் இதய துடிப்பில் அவளின் இதய துடிப்பின் ஓசை கேட்கிறதோ என்னவோ?

காலங்கள் கரைந்துப் போகிறது. காணும்கனவுகளில் எல்லாம் அவனாக தெரிகிறான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சுற்றும், முற்றும் பாத்தாள் கொஞ்சம் கூட சப்தமே இல்லை. அந்த இடத்தில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது.

எங்கேயோ சிந்தனைகள் அவளை இழுத்துச் சென்றது.

அந்த அழகான பங்களா வீடு பட்டுக்கோட்டையில்பெரிய கடை வீதியில் 31. நம்பர் வீடு பெரிய கேட் வீடு.

வேதா இல்லம்.

சின்னராஜ் தேவர், சங்கீதவள்ளி

மூத்த பெண் பிள்ளை. C. பாக்கிய லட்சுமி. சின்ன பிள்ளை. C. ராமலக்ஷ்மி. இரண்டே பெண்குழந்தைகள் தான் ஆண் வாரிசு கிடையாது.

தேவர் குடும்பம். பாக்யலக்ஷ்மி ஜவளி கடை ஓனர் சின்ன ராஜ் தேவர்.

சின்ன ராஜ் தேவர் சின்ன வயசுலேயே சிங்கப்பூர் போய் கோடி கணக்கில் பணம் சாம்பாதித்து. இங்கே சொந்தமாய் இடம் வாங்கி தன் பெரிய பொண்ணு பாக்யலக்ஷ்மி பெயரில் ஜவளி கடையும், அம்மா வேதவள்ளி பெயரில் வீடும் கட்டி வசதியாக இருக்கும் கோடிஸ்வரர் தான் சின்ன ராஜ் தேவர்.

பாக்யலக்ஷ்மி பிள்ஸ் டூ வரைக்கும் தான் படிக்க வைத்தார்.

ராமலக்ஷ்மிக்கும் டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார்.

அது இப்போ கோவை மெடிக்கல் காலேஜில் படித்து வருகிறது.

பத்து வருடங்களுக்கு முன்னர்..

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் போகும் பஸ்சில் இரண்டு பெண் பிள்ளைகள் ஏறினார்கள். அதே பஸ்சில் பஸ் ஸ்டாண்டில் இரண்டு சீட்டு பிடித்து கொண்டு வந்தான் ராஜா. பெரிய கடை வீதி நிறுத்தத்தில்.

வண்டி நின்றதும் ராஜா பிடித்து கொண்டு வந்த ஏறி அமர்ந்தார்கள்.

ராஜா,பாக்யலக்ஷ்மி,கீதா மூன்று பேரும் தஞ்சாவூர் பெரிய கோயில் சென்றார்கள். சரஸ்வதி மஹால் நந்தீஸ்வரர் எல்லாம் பார்த்து விட்டு லட்சுமி விலாஸ் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பட்டுக்கோட்டை திரும்பினார்கள்.

எங்கேடி போய் வந்தே? யார்கூட போய் வந்தே!

ஏண்டி திமிரு பிடிச்ச கழுதை உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஸ்கூல் போறேன்னு சொல்லிட்டு யாரோ ஒரு பையன் கூட பட்டம் பகலில் போய் ஊரு சுத்திட்டு வருவே!

ஐயோ...ஐயோ.. இது உங்க அப்பனுக்கு

தெரிஞ்சா என்ன நடக்கப்போகுதோ. சாமி?

யாரு அந்த பையன்? உண்மையே சொல்லு? எத்தனை நாளா இது நடக்குது?

அவ்வளவு தான் எத்தனை தலை ஊருலப்போவுதோ?

வாயிலும் வயிற்றிலும் அடிச்சிகிட்டு வாசற்ப்படியில் கத்திக்கிட்டு கிடந்தது பாக்யலக்ஷ்மி யின் பாட்டி பூவத்தா?

இப்போ எதுக்கு கத்தி நாரடிசிக்கிட்டு இருக்கிற பெருசு. சும்மா இரு கத்தி உசுரே எடுக்காதே!

சும்மா இரு ஆத்தா. சோளப்பொறி பொறியற மாதிரி பொறியாதே!இப்போ என்ன நடந்துப் போச்சுன்னு ஊரையெல்லாம் கூப்பிட்டு வச்சு ஒப்பாரி வைக்கிறே!

ஏதோ கோயிலே பார்க்கணும்னு ஆசை வந்து இருக்கு அவ பிரிண்ட் கீதா கூட தானே போய் இருக்கா.

அத்தான் போய் கோயிலை பார்த்து விட்டு வந்து இருக்காங்களே!

விக்கிர வீர பாண்டி தேவர் பரம்பரை யில் வந்த தேவர் பரம்பரை பொண்ணுக்கு ஒரு இழுக்கு வந்து விட்டதே,!

ராமா.. இவளை ராவுக்கு ராவாய் போய் காளி கோயிலுக்கு பொலி போட்டுட்டுவானே!

பெத்த பொண்ணு எவன் கூடவோ ஊரை சுற்றி விட்டு வந்திருக்கு என்று தெரிஞ்சுது என்றால் என்ன ஆகுமோ!

அதுக்கு தான் சொன்னேன் இவ கொஞ்ச நாளாய் நடக்கிற விதமே சரி இல்லை. அப்போவே இவளை வீட்டுக்கு வெளியே விட்டதே தப்பு.

ஸ்கூல் போய் படிச்சி கிழிச்சது போதும். இனி இவளை ஸ்கூல் கூட அனுப்ப மாட்டான்.

ஐயோ இவன் பொண்ணா இப்படி எவன் கூடவோ சுத்திக்கிட்டு வந்தது என்று சொன்னால். உயிரை மாய்ச்சுக்குவானே!

என்ன சாமி இந்த சோதனை.?

பச்சை தண்ணி கூட வாயில் படவே இல்லை. ராத்திரி முழுசா அழுது தொலைச்சி, கன்னங்கள் வீங்கி போய் இருந்தது. பாக்யலக்ஷ்மிக்கு.

ச்சி உண்மையில் அப்படி ஓடிப் போனாதான் என்ன?

கெட்ட பெயர் கெட்டுப் போச்சு இனி என்ன பாக்கி இருக்கு கெட்டுப் போக. இனி என்ன சமாதானம் சொன்னாலும் கேட்க போவது இல்லை. யாரும் கேட்கும் நிலையிலும் இல்லை.

இனி பேசாமல் இருப்பது பிரயோஜனம் இல்லை.

சரி ஒரு முடிவுக்கு வந்தாள் அவள். கீதாவுக்கு போன் போட்டு எப்படியும் ராஜாகிட்டே பேசி ஒரு முடிவு உடனே இப்போவே செய்யணும்.

போன் புடுங்கி வச்சி இருக்காங்க. போன் பேச முடியாது. யாரு போன் வாங்கி பேசுவது. யோசிக்கலானாள் பாக்யலக்ஷ்மி.

பாக்யலக்ஷ்மியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் போதும் மல்லியின் பெரியப் பொண்ணு வசந்தி ஊரில் இருந்து நேற்று வந்து இருக்கிறாள். அவளின் பெரியப் பொண்ணு வசந்தி அம்மா போன் எடுத்துக் கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தவள் பாக்யலக்ஷ்மி ரூமுக்கு வந்து ஆண்ட்டி இந்த போன் ஆன் ஆகல கொஞ்சம் பாருங்கள்.

அம்மா போன் கெட்டுப் போச்சுன்ணு என்னை கொன்னு போட்டுடும். என்று பாக்யலக்ஷ்மி கிட்டே கொடுக்க.

ஆஹா ஆண்டவனா பார்த்து இந்த குழந்தை வடிவில் வந்து உதவி செய்கிறான் என்று ரொம்ப சந்தோசம் அடைந்தாள் அவள்.

சரி நீ போய் கொஞ்சம் இங்கே ரூமுக்கு வெளியே விளையாடிட்டு இரு.

என்று சுவிட்ச் ஆப் ஆகி இருந்த போன் ஆன் பன்னி பேசினாள். கீதா கிட்டே பேசுறது விட நாமே நேரடியாக அவனிடமே பேசினால் தான் என்னை? என்று அவனுக்கே போன் போட்டாள்.

அத்து... எப்படி இருக்கே? உன்னால் தான் ஏகப்பட்ட பிரச்சனை நீ இப்போ ஒரு முடிவு உடனே செய்யுறே இல்லைன்ணு வச்சிக்கோ. நான் தூக்கில் தொங்கறது தவிர வேறு வழி இல்லை.

என்ன சொல்லுறீங்க அத்து.

சரி நான் ரெடியாகி பாப்பாநாடு பஸ் ஸ்டாப்பில் காரோடு காத்துக்கிட்டு இருக்கிறேன். நீ எப்படியாவது வந்து விடு. அப்புறம் பார்க்கலாம்.

என்ன சரியா..

சரி அத்து... நீ மட்டும் வரலேன்னு வச்சிக்கோ அங்கு வந்திட்டு நீ இல்லைன்னா? மீண்டும் நான் வீட்டுக்கு போக முடியாது. என் பொணம் கூட போகாது சொல்லிட்டேன். இந்த விஷயம். நமக்குள்ளே இருக்கட்டும்

நான் எப்படியும் வந்து விடுவேன். நீ மிஸ் பண்ணாதே அத்து.. ப்ளீஸ் என் வாழ்க்கை உங்க கையில் தான் இருக்கு அத்து.

நான் எப்படியும் பத்து மணிக்கு முன்னாடியே வந்து விடுவேன். நீ திருச்சி பஸ் ஏறி எப்படியும் கிளம்பி வந்து விடு.

இல்லை நேர உங்க தெரு முனைக்கு வந்து நிக்கவா சொல்லு.?

ஐயோ.. அப்படி வந்து தொலைக்காதே அத்து. எங்க அப்பன் உயிரை எடுத்துடும்.

உன்னை என்னால் காப்பாத்த முடியாது.

சரி இப்போ நிச்சயம் வந்து விடு. போன் இது பக்கத்து விட்டுக் காரர்கள் உடையது.

என் போன் புடுங்கி ஆத்தா வைச்சின்னு இருக்கு? நீ போன் போடாதே அத்து.

ஓகே போன் வைச்சுறேன்..

இரவும் அழுதது, அந்த நிலவும் அழுதது, மெல்லியதாக சன்னமாக இருட்டு நீண்டுக் கொண்டே சென்றது.

அந்த பாப்பாநாடு பஸ் ஸ்டாப்பில் ஓரமாக இருட்டில் அந்த ஸ்விபிட் கார் நிற்க வைத்து விட்டு தஞ்சாவூர் போகும் ஒவ்வொரு பஸ்சாக எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எல்லோரும் ஏறி இறங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

ஆனால் அவளைக் காணோம். தண்டனைகளில் மிகவும் மோசமான தண்டனை எது என்று சொன்னால். அது எதிர்ப்பது ஏமாந்துக் கொண்டு இருப்பதே பெரிய தண்டனை.

நேரம் வேகமாக போகவில்லை அவனுக்கு மட்டும்.போன் கூட பேச.முடியாது.

நாயின் ஊலைச் சப்தம். நாய் அழுகிறது. அது நல்ல சகுனம் கிடையாது.

அப்படி தான் கிராமத்தில் சொல்லுவார்கள்.

எதாவது எழவு விழும் என்றும் சொல்லுவார்கள். கெட்ட சகுனம் என்றும் சொல்லுவார்கள்.

இருக்க இருக்க ஆள் நடமாட்டமே இல்லை. இரவு பத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு நிமிடங்கள் மணிகள் என்று நகர்ந்துக்கொண்டே இருந்தது.

வண்டியில் இருக்கும் டிரைவர் ஒரு குட்டி தூக்கம் போட்டுக்கொண்டு இருந்தான். அவனுக்கு ஓசூர் வரை வாடகைக்கு பேசி கார் எடுத்துக் கொண்டு வந்து இருந்தான். அவன்

வண்டி எடுக்கும் போதே பூனை ஒன்று வண்டி மீது தாவி குத்தித்து குறுக்கே ஓடியது.

அதுவே கெட்ட சாகுணம் தான். பூனை குறுக்கேப் போனால் போகும் காரியம் நடக்காது என்பார்கள்.

இவர்கள் வண்டி நிறுத்தியது கண்டு போலீஸ்க்கு சந்தேகம் வந்து இருக்கும் போல. வண்டி அருகே வந்து லட்டியில் தட்ட விழித்து கொண்ட டிரைவர் என்ன சார் என்று கேட்டான்.

சார் இங்கே வந்து வண்டி ரிப்பேர் ஆகி விட்டது. மெக்கானிக் கடை நாளைக்கு தான்

எல்லாம் மூடி விட்டு சென்று விட்டனர் வேறு வழியே இல்லை. நாளைக்கு மெகானிக் வந்து பார்த்தால் தான் உண்டு. என்றான்.

ஓ.. அப்படியா எங்க உங்க லைசென்ஸ் என்று கேட்டதும் எடுத்து காண்பித்தான் அவன்.

சரி பார்த்து உஷாரா இருங்க என்றுசொல்லி விட்டு அந்த இரண்டு போலீஸ் காரர்களும் சென்று விட்டனர்.

கண்களில் எரிச்சல். இன்னும் அவள் வந்தப் பாடில்லை. என்ன நடந்து இருக்கும்? என்று ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைகலானான். அவள் வர வில்லை என்றாலும் கூட பரவாயில்லை

ஆனால் வேறு எதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டாளா என்று நினைத்து தான் அதிகமா கவலைப் பட்டான் அவன்.

அங்கு என்ன நடந்து இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரும் போது மாட்டிக்கொண்டு இருப்பாளா!

இல்லை அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சி எதாவது செய்து இருப்பானோ. நினைக்க நினைக்க அவனுக்கு பயமாகவே இருந்தது.

மணி மூன்று ஆகி விட்டது. தஞ்சாவூர் திருச்சிக்கு போகும் பஸ்கள் ஒவ்வொன்றாக வந்துகிட்டு இருந்தது. நான்கு மணி, ஐந்து மணி, வானத்தில் விடி வெள்ளி முளைத்து விட்டது. கோழி கூவி கூவி எல்லோருக்கும் பொழுது விடிஞ்சி விட்டது என்று சொல்லிக்கொண்டு இருந்தது. லேசாக வாடைக் காற்று வீசிக்கொண்டு இருக்க.. பல.. பல வென்று பொழுது விடிய இனிமேல் அவள் வர வாய்ப்பு இல்லை என்று வண்டி எடுக்க சொல்லி புறப்பட்டு விட்டான் அவன்...

»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»தொடரும்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...