உலகத்தின் முடிவில் நடக்கும் உரையாடல்கள்

vsathyagiri
அறிவியல் புனைவு
5 out of 5 (3 रेटिंग्स)
कहानी को शेयर करें

உலகத்தின் முடிவில் நடக்கும் உரையாடல்கள்

அலாரம் ஒலித்தது.‌அவன் படுக்கையில் இருந்து எழுந்தான்.காலை‌‌ சூரிய ஒளி அவன் கண்களை கூசியது.அவன்‌ அந்த வீட்டில் தனியாக இருந்தான்.வீடு சுத்தமாக இருந்தது.அலமாரியில் புத்தகங்கள் அழகாக அடுக்கப் பட்டு இருந்தன.அதில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'காலம் , தியரி ஆஃப் எவிரிதிங்க்', வெல்ஸ்சின் 'எ ஷார்ட் ஹிஸ்டரி ஆப் வேர்ல்ட்' இன்னும் நிறைய புத்தகங்கள் அதை போல் இருந்தன. அவன் காலை கடன்களை முடித்து விட்டு புத்தக அலமாரியில் இருந்து 'ஸித்தார்த்தா' புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கங்களை‌ படித்து விட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற
வீட்டை விட்டு வெளியே வந்தான். வானத்தை பார்த்தான். காலை வானம் அழகாக இருந்தது. காற்று நன்றாக அடித்தது. பட்சிகளின் சப்தங்கள் அவன் காதிற்க்கு ரம்மியமாக இருந்தது. பக்கத்து வீட்டில் பெரிய சப்தத்துடன் டீவியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அவன் குவளையில் தண்ணீர் மொண்டு செடிகளுக்கு ஊற்றினான். அப்போது திடீரென்று பெரும் சப்தம் ஒன்று கேட்டது . அவன் வானத்தை பார்த்தான் பெரிய அக்னி உருண்டை ஒன்று தரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

......................................

உலகத்தை தீப்பிழம்புகள் முழுங்கிக் கொண்டிருப்பது அவன் கண்களுக்கு தெரிந்தது.அவன்‌ ஒரு பாறைமேல் நடுங்கிக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தான். இன்னும் சில மணி நேரத்தில் அவனும் அழிந்து விடுவான்..மனிதர்கள் ஒருத்தர் மேல் ஒருத்தர் அனு குண்டால் தாக்கியதனால் பூமி அப்போது அழிந்து கொண்டிருந்தது. பாறை மேல் உட்கார்ந்திருந்த நம் கதாநாயகன் சத்யகிரி அழுதுகொண்டே மாசு படிந்த வானத்தை நோக்கி தன் கைகளை தூக்கி 'கடவுளே அழியும் இந்த உலகத்தையும் என்னையும்‌ காப்பாற்று' என்றுவேண்டிக்கொண்டான்.அப்போது அவன்‌ பக்கத்தில் திடீரென்று ஒரு மனிதன் தோன்றினான். சத்யகிரி அவனுடைய வேண்டுதலுக்கு கடவுள் வந்துவிட்டார்‌ என்று நினைத்தான்.

அவரிடம் 'கடவுளே! இப்போதாவது என்னுடைய வேண்டுதலுக்கினங்கி வந்தீரே' என்று அவர்முன் மண்டியிட்டு வணங்கினான். அதற்கு அவர் 'தம்பி நான் கடவுள் இல்லை எழுந்திரு' என்றார். அப்படியென்றால் நீங்கள் யார்‌? எங்கிருந்து வருகிறீர்கள்? எப்படி திடீரென்று இங்கு தோன்றினீர்கள்? என்று சத்யகிரி கேட்கிறான்.அதற்கு அவர் 'நானும் உன்னைப்போல் ஒரு மனிதன் தான், நான் கடந்த காலத்திலிருந்து இங்கு வந்திருக்கிறேன்'. சத்யகிரி அதற்கு, 'கடந்த காலத்திலிருந்து யாரும் வரமுடியாது பொய் சொல்லாதீர்கள், அதுமட்டுமின்றி நீங்கள் எந்த இயந்திரத்திலும் வந்து இறங்கவில்லை'. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே 'தம்பி காலத்தை கடக்க எந்த இயந்திரமும் தேவையில்லை, நம் உடம்பே கடவுள் தந்த மிகப் பெரிய இயந்திரம் தான். இந்த உடல் ,பூமி என அனைத்ததுமே ஐந்து பூதங்களால் ஆனதுதான், அதனால் பஞ்ச பூதங்களுடன் கலந்து காலப் பயணம் செய்வதெல்லாம் எங்களுக்கு சுலபம் எந்த இயந்திரமும் தேவையில்லை'.

சத்யகிரி சிரிது நேரம் மௌனமாக இருந்தான் பிறகு சிரித்தான்.

ஏனப்பா சிரிக்கிறாய் என்று அவர் கேட்டார்.அதற்கு சத்யகிரி 'நீங்கள் சொல்வது உண்மை என்றால் நீங்கள் ஏன் ஸ்டீபன்‌ ஹாக்கிங் ‌நட்திய‌ காலப் பயணர்களுக்கான‌ விழாவில் கலந்து கொள்ளவில்லை?

அவர் அதற்கு 'பரவாயில்லை தம்பி உன்‌ உயிர் போகப் போகும் நேரத்தில் கூட இந்த மாதிரியான கேள்விகளை கேட்கிறாய்'. சத்யகிரி அதற்கு தன்னுடைய கைகளை அழிந்து கொண்டிருக்கும் இடங்களை நோக்கி காட்டி 'பின்‌ என்ன‌‌ செய்வது ஐயா இந்த உலகம் முழுவதுமாக அழியப் போகிறது நானும் நிச்சயமாக இறக்கப் போகிறேன்‌ கடைசியாக சாவதற்கு முன்பு நீங்கள் சொல்வது பொய்யாக இருந்தாலும் அதை கேட்டுவிட்டு சாகலாம் என்ற அல்ப ஆசை தான் என்று அழுதுகொண்டே சொல்கிறான்'.

அந்த மனிதன் சத்யகிரியை இறக்கக் கண்களுடன்‌ பார்க்கிறான்.சத்யகிரி விம்மிக் கொண்டே சொல்கிறான்

'இந்த அண்ட சராசரத்திலேயே அனைத்து வளமும் கொண்ட இந்த பூமியை போல் வேறெங்கும் தோன்றவில்லை , அப்படி பட்ட இந்த பூமியை ஏன் கடவுள் இப்படி அழிக்க விட்டார்'.

தம்பி நீ பார்த்தாயா? ஒரே ஒரு க்ரகம் மட்டும் தான் இந்த பூமி மாதிரி இருக்கிறது என்று , உன்‌ கற்பனையால் கூட அளக்க முடியாத அளவிற்கு இந்த அண்டம் பெரியது, அதற்கு முடிவே கிடையாது , இதுபோல் பல க்ரகங்கள் தோன்றி மறைந்திறுக்கின்றன.

அதெப்படி நீங்கள் சொல்வதை எல்லாம் நான் குருட்டுத் தனமாக நம்ப முடியும் , நான் என்‌‌ கண்ணால் காண்பதை மட்டுமே நம்புவேன் என்றான் சத்யகிரி.

தம்பி, அப்படியென்றால் சிறிது நேரத்திர்க்கு முன் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாயே அவரை மட்டும் நீ பார்த்திருக்கிறாயா ?

இந்த கேள்விக்கு ஒரு வினாடி சத்யகிரி அசந்தாலும் மறுகணமே சொன்னான் , ஐயா கடவுள் என்பது என்னுடைய உணர்வு அவரை என்னால் பார்க்க முடியாது.

யார் சொன்னார்கள் கடவுளை பார்க்க முடியாதென்று, கடவுளை பார்க்கும் அளவிற்கு உனக்கு சக்தி கிடையாது என்பது தான் உண்மை. என்னால் அனைத்து அண்ட சரா சரங்களையும் காண முடியும் ஆனால் உன்னால் அது முடியாது .

ஐயா நானும் நீங்கள் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் , ஏதேதோ உளறி கொண்டு இருக்கிறீர்களே? கடந்த காலத்திலிருந்து வந்தீர்கள் என்று சொல்கிறீர்கள் அண்டம் குண்டம் என்றெல்லாம் சொல்கிறீர்கள், அப்படியே‌ நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் எதற்காக நீங்கள் கடந்த காலத்திலிருந்து இங்கு அதுவும் இந்த உலகம் முழுவதுமாக அழியப் போகும் வேளையில் வரவேண்டும்?

'தம்பி நான்‌ இதற்கு முன்பு இங்கு வந்ததில்லை என்று உனக்கு தெரியுமா? இந்த சமயத்தில் நான் இங்கு வந்ததிற்கு காரணம் நாங்கள் ஆசைப் பட்டது போல் இந்த உலகம் அழிகிறதா என்று‌ பார்ப்பதற்காக , நாங்கள் இந்த அழிவிற்காக செய்த செயல்களுக்கான பலனை பார்ப்பதற்காக !'

சத்யகிரிக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆயிற்று . அனு குண்டால் ஏற்பட்ட நச்சுப் புகை அவன்‌ இருக்கும் இடத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது. அவன் இறுமினான்.அவனுடைய உடல் எறிய‌ ஆரம்பித்தது அவனுடைய கையில் இருக்கும் சதைகள்‌ சிறிது சிறிதாக உதிர‌ ஆரம்பித்தது.ரத்தம் வழிந்தது.

இதைப் பார்த்த அந்த மனிதன்‌, 'தம்பி என்னை நீ இன்னும் நம்பவில்லை அல்லவா ? உன் உடல் எறிகிறதா?உன் உயிர் போகப் போகும் நேரம் வந்துவிட்டதாக உனக்கு தோன்றுகிறதா? இப்படி வா என்னை கையை பிடி நாம் சிறிது தூரம் நடக்கலாம் , உனக்கு தெரியாத அனைத்தையும் விளக்குகிறேன்' என்று சொல்லி அவன்‌ கையை பிடிக்கிறார் .அவர்‌ தொட்டவுடன்‌ சத்யகிரிக்கு வலி எல்லாம் பறந்து போனது , அவன்‌உடம்பு எறிவது நின்றது , விழுந்த அவனுடைய‌ சதைகள் அவன் கையில் முன்போல் ஒட்டி கொண்டது. அவர் அவன் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.


அவன்‌ கண்முன் அழிந்து கொண்டிருந்த உலகம் மறைந்தது , அவனை சுற்றி‌ ஒளிமயமாக மாறியது , திடீரென்று அவன் மண்டையில் ஆயிரம் முட்கள் குத்துவது போல் வேதனை ஏற்பட்டது , அவன்‌ கத்துதிறான்‌ 'ஐயோ என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள்' என்று . 'நீ நம்பாத அனைத்து விஷயங்களையும் உனக்கு காண்பிக்க போகிறேன்'.

'நாம் இப்போது காலப் பயணம் செய்து‌ கொண்டிருக்கிறோம்' . எதை நோக்கி? என்று சத்யகிரி கேட்டான்.'ஆரம்பத்திற்கு என்றான்' அந்த மனிதன்.

திடீரென்று அவனை சுற்றி‌ இருந்த ஒளி அனைத்தும் மறைந்தது. ஒரு இருள் சூழ்ந்தது. அப்படி ஒரு இருளை சத்யகிரி அதுவரை கண்டதே இல்லை .அவன்‌ அந்த மனிதரிடம் கேட்டான் , நாம் இப்போது எங்கிருக்கிறோம் ? . நாம் இப்போது பெருவெடிப்பு ( Big Bang ) நடக்கப் போகும் காலத்தில் இருக்கிறோம் என்றான்‌ அந்த மனிதன். பெரு வெடிப்பிற்கு முன்‌ எதுவுமே இருந்திருக்காது பின்‌ எப்படி நாம் இந்த காலத்தில் இருக்க முடியும் என்று‌ சத்யகிரி கேட்டான்.

பெரு வெடிப்பிற்கு முன்‌ எதுவும் இல்லை ஆனால் , எதுவும் இல்லாமல் இருப்பதும்‌‌ ஒரு‌ நிறை தான் அல்லவா?


ஒரு சொடுக்கு போடும் நேரத்திற்குள் அவன் கண்‌முன்னே தூரத்தில் ஒரு‌ ஒளி பிம்பம் தோன்றியது. அதை நோக்கி கை நீட்டி அந்த மனிதன் சொல்கிறான், அங்கே பார் சத்யகிரி பெரு வெடிப்பு ( Big Bang ) நிகழப் போகிறது அந்த தீ பிரம்மத்திலிருந்து பல அண்டங்கள் தோற்றப் போகிறது.அதிலிருந்து தான் நீ வாழ்ந்த பூமியும் தோன்றப் போகிறது.சத்யகிரி அந்த ஒளி பிழம்பை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அது வெடித்தது என்று சொல்வதை விட அது விரிந்தது என்று சொல்வது தான்‌ சரி. சத்யகிரி கேட்கிறான் ஐயா இது பெரு வெடிப்பு இல்லையே இது பெரு‌ விரிவு ( Big expansion ) அல்லவா?
' ஆமாம் நீ சொல்வது உண்மை தான் உன்‌ காலத்து மனிதர்கள் தான் அதற்கு தவறான பெயரை வைத்து விட்டார்கள்'.


'சரி உன்னை அடுத்த காலத்திற்கு அழைத்து செல்கிறேன். அதோ பார்‌‌ பெரு விரிவின் விளைவால் உண்டான பூமி அதாவது நீ‌ வாழ்ந்து கொண்டிருந்தாயே அந்த அழகான பூமி
அது முதன்‌ முதலில் உருவான போது வெறும் அக்னி உருண்டையாக தான்‌ இருந்தது' . சத்யகிரி அதை பார்க்கிறான் வெறும்‌ நெருப்பு உருண்டையாக அது தெரிந்தது , அதே போல்தான்‌ அந்த பூமி அழிந்து கொண்டிருக்கும் போதும் காட்சியளித்தது என்று நினைத்தான்.

அந்த மனிதன்‌ சத்யகிரியை வேறு காலத்திற்கு அழைத்து போய்‌ காண்பித்தான் .'அதோ பார் சத்யகிரி அக்னி உருண்டையாக இருந்த பூமி பல கோடி ஆண்டுகள் சூட்டால் தன்னைத் தானே‌ சுற்றி சுற்றி ஒரு சமயத்தில் அனைத்து நெருப்பும் அனைந்து மாசு படிந்து காணப்படுகிறது . நீ நினைத்து கொண்டிருப்பாய் பூமியில் தண்ணீர் தானாக தோன்றியது என்று அது தவறு தண்ணீர்‌ பூமிக்கு வெளியிலிருந்து தான்‌ வந்தது.அதோ பார்‌ அங்கு தெரிகிறதே வாள் நட்சத்திரங்கள் அது ஒன்றோடொன்று மோதி பூமி மேல் விழுந்தது , பூமியின் சூட்டில் அந்த வாள் நட்சத்திரங்கள் உருகி தண்ணீராக மாறியது '.

சத்யகிரி கேட்கிறான் , பின்‌ எப்போது
முதல் முதலாக உயிர் என்பது இந்த பூமியில் தோன்றியது? . 'அதுவா அது‌ இந்த காலத்தில் தான்' என்று ஒன்றை காண்பித்தார்,' அதில் பூமி நன்றாக சூடிறங்கி தண்ணீருடன் காட்சியளித்தது , அதை பார்த்துக் கொண்டே சத்யகிரி கேட்கிறான் , அதுசரி முதல் உயிர் எப்படி தோன்றியது ?
இப்படி தான் என்று அந்த மனிதன் சத்யகிரியின்‌ தலையில் ஓங்கி அடித்தான் அதனால் அவன்‌ ஒரு‌ துளி எச்சில் பூமியில் இருந்த தண்ணீரில் போய்‌ விழுந்தது. பார் சத்யகிரி இப்படி தான் முதல் உயிர் உருவானது , தண்ணீருக்குள் விழுந்த உன்‌ எச்சில் தான் முதன்முதலில் ஒரு உயிரியாக இந்த உலகத்தில் உருவாகியது.

அதோ இக் காலத்தை பார் , அப்போது தான்‌ தண்ணீருக்குள் இருந்து சுற்றுச்சூழல் காரணமாக அந்த உயிரினம் நிலத்திற்கு வருகிறது.இந்த இடத்தில்‌ சத்யகிரி ‌கேட்கிறான்‌ , ஐயா அந்த உயிரினம் ஆணா பெண்ணா? இரண்டுமே கிடையாது ஆண் பெண்‌ என்பது‌ காலப்‌ போக்கில் பரிணாம வளர்ச்சியில் வந்தது என்று அந்த மனிதன் சொல்கிறான். அடுத்தடுத்த அவர்‌ பல காலங்களுக்கு வனை அழைத்துச் சென்று காண்பிக்கிறார்.

அதோ பார் சத்யகிரி மரங்களும் செடிகளும் ‌உருவாகின்றன, பற்பல உயிரினங்கள்‌ தோன்றுகிறது.

ஐயா‌ டைனோசர்கள்‌ காலத்தை காட்டுங்கள்.

அதோ பார்‌ டைனோசர்களை , எப்படி உன் காலத்தில் மனிதர்கள் மற்ற உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தீர்களோ , அதுபோல் டைனோசர்கள் அதுங்களுடைய காலத்தில்‌ ஆதிக்கம் செலுத்தி வந்தன.

அங்கு பார்‌ ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று‌‌ ஒன்று கண்டிப்பாக இருக்கும்‌ , பெரிய விண்கல் ஒன்று பூமி மீது வந்து மோதுகிறது , அதன் விளைவால் டைனோசர்களின்‌ இனம் அழிகிறது , அதுபோல் தான் மனித இனமும் உன்‌ காலத்தில் அழிகிறது.


சத்யகிரி அங்கு பார் உயிரை காப்பாற்றிக் கொள்ள உன் மூதாதையர்களான உயிரினங்கள் மரத்திற்கு மரம் தாவ வேண்டியிருந்தது.அவர்களுடைய வாழ்க்கை வெறுமனே மற்ற ஆபத்துக்களில் இருந்து தப்பவது உயிர் பிழைப்பது , சாப்பிடுவது மற்றும் இன பெருக்கம் செய்வது ஆகியதிலேயே சுழன்று கொண்டிருந்தது. பரிணமித்த மனிதர்களுக்கு அடிக்கடி வரும் கனவு - உயரமான இடத்திலிருந்து வீழ்ந்து சாவது தான் , அதற்கு காரணம் அங்கு பார்‌ உன்னுடைய மூதாதைய உயிரினங்கள் மரத்தின்‌மேல் தூங்கிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்து இறக்கின்றன .

அதோ பார் உன் மூதாதையர்கள் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பிக்கின்றனர் , முதன்முதலில் நெருப்பை கண்டு பிடிக்கின்றனர்,
தட்டையாக இருக்கும் அதுங்களுடைய கை கால்களில் பரிணாம வளர்ச்சியில் விரல்கள் தோன்றுகின்றன. நெருப்பால் ஆகாரத்தை சுட்டு சாப்பிடுவதால் மூலை வளர்கிறது .

அங்கு பார்‌ முதல் மனித இனம் தோன்றிவிட்டது . விவசாயம் செய்கின்றனர்.இன பெருக்கம் நடக்கிறது. சண்டை வந்து சாகாமல் இருக்க தலைவர்கள் தோன்றுகின்றனர் . மற்ற உயிரினங்களை வேட்டையாடி உண்கின்றனர். பல மனிதர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்கிறார்கள். மொழிகள் உருவாகின்றன.

பல ராஜ்யங்கள் தோன்றுகிறது . .

அலெக்ஸாண்டர் படை எடுக்கிறான்‌ பார்.

அங்கு பார்‌ அரிஸ்டாட்டில் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு உயிரியல் (Biology) பற்றி குறித்துக் கொண்டிருக்கிறான்.

அங்கு பார்‌ புத்தர் பிறக்கிறார்‌, ராஜ சிம்மன் காஞ்சிபுரத்தில் கயிலாய நாதர்‌ கோவில் கட்டுகிறான் , இராஜராஜன்‌ தஞ்சையில் in பெரிய கோவில்‌ எழுப்புகிறான்.இதோ உன் காலத்திற்கு வந்துவிட்டோம் . சத்யகிரி‌ நீ‌ பிறக்கிறாய் பார் , ஸ்கூலில் அடிபட்டு வந்து உன்‌ அப்பாவிடம் அடி வாங்குகிறாய் பார்‌ , உலகம் அழியும்‌ தருவாயில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறாய்‌ பார்.

இதை அந்த மனிதர்‌ சொல்லி முடித்தவுடன் சத்யகிரி தொப்பென்று கதை ஆரம்பித்த போது உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுகிறான்.


அவன் உடம்பு முழுவதும்‌ எரிகிறது. சதைகள் அனைத்தும் உதிர‌ ஆரம்பித்து முன்பு போல் ரத்தம் வழிகிறது.ஆனால் அந்த மனிதருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . அவர் கேட்கிறார் இப்போதாவது உனக்கு நான் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை வருகிறதா?

சத்யகிரி கஷ்டப்பட்டு பேசுகிறான் 'நான் நம்புகிறேன் ஐய்யா'.ஆனால் நான் சாவதற்கு முன்பு உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டுக் கொள்கிறேன் 'கடவுள் இருக்கிறாரா'?

அப்போது அந்த மனிதன் திடீரென்று மறைந்தார்.அப்போது வானத்தை பிளந்து கொண்டு மனிதர்கள் போல இருக்கும் பலர் பறந்து வந்து பூமியில் இறங்கினார்கள்.ஆனால் அவர்கள் மனிதர்கள் இல்லை , வேற்று கிரக வாசிகள் . அவர்களில் தலைவன் போல் தெரிந்த ஒருவன் அவன் அருகில் வந்தான். தன் கையில் உள்ள ஆயுதத்தை அவன் முகத்துக்கு நேராக நீட்டினான் . இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர் " கடவுள் இருக்கிறாரா ? அவரை பார்த்து விட்டீர்களா?

அப்போது காலம் ஸ்தம்பித்தது. அவன் கண்களுக்கு ஆகாசத்தில் ஒரு ஒளி பிம்பம் தெரிந்தது ........

அலாரம் அடித்தது.

.............................

அவன் படுக்கையில் இருந்து எழுந்தான்.காலை‌‌ சூரிய ஒளி அவன் கண்களை கூசியது.அவன்‌ அந்த வீட்டில் தனியாக இருந்தான்.வீடு சுத்தமாக இருந்தது.அலமாரியில் புத்தகங்கள் அழகாக அடுக்கப் பட்டு இருந்தன.அதில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'காலம் , தியரி ஆஃப் எவிரிதிங்க்', வெல்ஸ்சின் 'எ ஷார்ட் ஹிஸ்டரி ஆப் வேர்ல்ட்' இன்னும் நிறைய புத்தகங்கள் அதை போல் இருந்தன. அவன் காலை கடன்களை முடித்து விட்டு புத்தக அலமாரியில் இருந்து 'ஸித்தார்த்தா' புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கங்களை‌ படித்து விட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற

வீட்டை விட்டு வெளியே வந்தான். வானத்தை பார்த்தான். காலை வானம் அழகாக இருந்தது. காற்று நன்றாக அடித்தது. பட்சிகளின் சப்தங்கள் அவன் காதிற்க்கு ரம்மியமாக இருந்தது. பக்கத்து வீட்டில் பெரிய சப்தத்துடன் டீவியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அவன் குவளையில் தண்ணீர் மொண்டு செடிகளுக்கு ஊற்றினான்.

.முற்றும்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...