JUNE 10th - JULY 10th
நள்ளிரவு கடந்திருந்த நேரம். வீட்டின் திண்ணையில் பாயில் மெல்லிய மிருதுவான அம்மாவின் புடவையின் மேல் தூங்கி கொண்டிருந்த ஒரு வயது அருணன் "வீல்"லிட்டு அலற...
வீடு விழித்து கொண்டது. அருகில் நல்லதொரு ஆழ்நிலை தூக்கத்தில் இருந்த மிருதுளா அருணனின் அழுகை குரல் மிக வேகமாக அசைத்து எழுப்ப...மிரண்டு விழித்தாள். சட்டென்று அருணனை வாரி எடுத்து மடியில் கிடத்த ...அருணனின் இன்னும் அழுது கொண்டிருந்தான்.
"என்னங்க....!!!" வாசல் அருகில் கட்டிலில் படுத்திருந்த மாணிக்கம் அருணனின் முதல் குரலில் விழித்திருந்தான். மிருதுளா அவனுக்கு பசியாற்றுவாள் என்று சமாதானப்படுத்தி கொண்டு அமைதியாய் படுத்திருக்க, மிருதுளாவின் படபடப்பான குரலில் தெரிந்த அந்த பரபரப்பில் சரேலென்று கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.
"என்ன மிருதுளா ..என்னாச்சு ....குழந்தைக்கு பால் கொடுத்தியா....ஏன் அழுவுறான்.... "
"இங்க கொஞ்ச வந்து சட்ன்னு லைட் போடுங்களேன்...இப்போ அரை மணி முன்னலாதான் தாங்க பால் கொடுத்து தூங்க வெச்சேன். இப்போ பசிக்கு அழற மாதிரி தெரியல..ஏதோ உடம்பு முறுக்கி அழறான். அழலை ..எதோ வலி மாதிரி கத்தறான். பூச்சி ஏதாவது கடிச்சிருக்கான்னு லைட் வெளிச்சத்துல பாப்போம். என்னன்னு தெரியலையே....!!!" மிருதுளா அழைக்க விரைந்து வந்து மின் விளக்கை தட்டி விட, குழந்தை அருணன் இன்னும் அதிகமாக அழ தொடங்கினான். மிருதுளா அவனை புரட்டி பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. சற்றே மனதைரியம் குறைந்தவளாய் அழ தொடங்கினாள். அருகில் வந்தமர்ந்த மாணிக்கமும் என்ன செய்வதென்று புரியாது திகைத்த நேரத்தில் அவனுக்கு அந்த யோசனை உதித்தது.
"மிருதுளா ..இரு இதோ விபூதி எடுத்துட்டு வர்றேன். கொஞ்சம் பூசி விடுவோம். அப்பவும் அருணன் அழுகை நிறுத்தலேன்னா சிரமம் பாக்காதா நம்ம வீட்டு பெரியய்யாட்ட தூக்கிட்டு போவோம். "
"ஏங்க ..இந்த நேரத்துலயா... "
"இரு மொதல்ல விபூதி தடவி பாப்போம். ... இதோ வர்றேன். "
"ஏங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.... கல்யாணம் ஆகி பதினஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நமக்கு கெடச்ச வரம்ங்க...எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலையே...!!!!
"ஒன்னும் ஆகாது மிருதுளா .... நம்ம குலதெய்வம் அய்யனார் அய்யா நம்மள கை விட மாட்டார்..நீயும் வேண்டிக்கோ. இந்த நல்ல வேண்டிட்டு விபூதி பூசிவிடு. "
"அய்யா அய்யனாரே.. உன்னோட ஆசிர்வாததுல எங்க குல விளக்கு - எங்களோட குழந்தைக்கு எந்த கஷ்டமும் இல்லாத நீதானப்பா காப்பத்தனும்....அவனுக்கு துணையா இருப்பா...!!!" மனம் முழுவதும் பக்தி நிரப்பி அய்யன்னரை இருவரும் சரணடைந்து தங்களின் பிள்ளை அருணனுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
வாசலில் மெல்லிய நிழல் படர்ந்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் அந்த நிழல் நீளமாய் வீட்டிற்க்குள் அவர்கள் அருகில் விழுந்தது. வாசலுக்கு வெளியே நின்றிருந்த நிழலுக்கு சொந்தமான உருவம் மெல்ல கண் மூடி ஒரு வினாடி அமைதியாக நின்று தன்னுள் சென்று ஏதோ தேடியது. ஏழடி உயரம், முடிச்சு விழுந்த தலை முடி கற்றைகள் முதுகு வரை படர்ந்திருந்தது. பழுபேறியிருந்த கைகளும் கால்களும் திடகாத்திரமாய் இருந்தது. விரல்களில் வெட்டப்படாத கூரான நகங்கள். கால்களில் அதே நகங்கள் சற்றே தடிமனாக வளர்ந்திருந்தது. கூரான மூக்கும், திருத்தப்பாடாத தாடியும், உதடுகளை மொத்தமாக மாறைதிருந்த மீசையும், மெல்லிய எக்கிய வயிறு, கெட்ட வாடையே வராத கந்தல் துணி உடுத்தியிருந்த அந்த உருவம் திறந்த கண்கள் - கோவை பழம் போல் சிவந்திருந்தது - அதில் கோவத்திற்கு பதில் ஒரு தவிப்பு இருந்தது.
வான் நோக்கி தலை நிமிர்த்தி அந்த உருவம் கேள்வியோடு பார்க்க - உள்ளே எண்ணிக்கை போல் முனகி கொண்டிருக்க, சற்று நேரத்தில் மனம் நிறைந்த பதில் கிடைக்க பெற்றது போல் தன் இடத்திற்கு நகர்ந்த நேரம் - மிருதுளாவும், மாணிக்கமும் வாசலை திரும்பி பார்த்தார்கள். குழந்தையின் அழு குரல் சற்றே தாழ தொடங்கியிருந்தது.
"ஏங்க ...அவன் வாசல்ல நிக்கிறாங்க....!!! "
"யாரு..... பைரவனா....!!! மாணிக்கம் எதேச்சையாக கேட்க மிருதுளா அந்த நள்ளிரவு விளக்கு வெளிச்சத்தில் ஆச்சர்யமாய் அவனை பார்த்தாள்.
"ஆ...ஆமா...ங்க ..நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆனாலும் எனக்கு அவனை பார்த்தா ஒரு பயம் வர்ற தான் செய்யுதுங்க....!!! "
"அவன் ரொம்ப நல்லவன்மா ....யாருக்கும் எந்த கெடுதலும் செய்யமாட்டான். பசிச்சா வந்து நிப்பான். பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டான். தண்ணி வேணும்ன்னா மட்டும் தண்ணி தண்ணி ன்னு சத்தம் போட்டு சொல்லுவான். அவனை பத்தி நான் தான் பலமுறை சொல்லிருக்கேனே ... இன்னைக்கும் அவனுக்கு என்ன வயசாச்சுன்னு இந்த ஊர்ல உள்ள யாருக்கும் தெரியாது. அவன்கிட்ட கேட்ட வாடை சுத்தமா வராது. அவன் யாரு, எங்கேருந்து வந்தான்...அவனுக்கு சொந்தம் இருக்க இல்லியா...எதுவும் விவரம் தெரியாது. ஆனா..அவனுக்கு பசிக்கும்போது சோறு போட்டு அவன் சாப்ட்றதை பாத்தா எனக்கு அவ்ளோ திருப்தி. இப்போ கூட நம்ம புள்ள அழுகை கேட்டு வந்துருக்கானோன்னு தோணுது. இதோ பாரு அருணன் தூங்க தொடங்கிட்டான். நீயும் படுத்துக்கோ. இன்னும் மூணு மணி நேரத்துல விடிஞ்சுடும். காலேல பெரியய்யாட்ட போய்ட்டு வரலாம். "
"சரிங்க.... "
****************************************
"அப்புறம் என்னடி ஆச்சு.... " அருகில் அமர்ந்து அத்தனையும் நம்ப முடியாது வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்த மாலதி திகைத்து கேட்க ....
"அப்புறம் என்ன... விடிஞ்சுடுச்சு நானும் கண்ணு முழிச்சு குளிச்சு, வீட்ல வெளக்கேத்தி, சாமி கும்பிட்டு, இட்லி சாப்ட்டு,. உன்னோட கோவில் போயிட்டு, இதோ இன்னைக்கு சாயங்காலம் என்னை பொண்ணு பாக்க வர்ற போற மாப்பிளைக்காக காத்திருக்கேன். சரி ..சாப்பிட்டு தூங்க வேண்டாம்ன்னு தோணிச்சு. நீயும் இருந்தியா. ..என்னோட கனவை உன்கிட்ட சொன்னேன் ....
...... என்றாள் மிருதுளா.
"நல்ல கனவுடி...சரி அதை விடு...ஏய் ..மிருது...இந்த தடவை உன்னை பாக்க வர்ற மாப்பிளை யாருடி. என்ன வேலை ..எந்த ஊர்... நான் ஒரு வாரம் ஊர்ல இல்ல. போன எடத்துல மொபைல் ரிப்பேர். ரொம்ப சொதப்பல். எப்பட ஊர் வந்து சேருவோம்ன்னு ஆகிடுச்சு. வந்தா எங்க வீட்ல சொன்னாங்க - உன்னை இன்னிக்கு பொண்ணு பாக்க வர்றாங்கன்னு ..!!! இது எப்படி ஒரு வாரத்துல எப்படி ஏற்பாடாச்சு...!!! "
"தெரியல மாலதி. நாங்க ரெண்டு வாரம் முன்ன எங்க குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு, திரும்பி வரும்போது ஒரு எல்லைசாமி கோவில் பார்த்தோம். எனக்கு உடனே அங்க போய் சாமி கும்பிடம்ன்னு தோணிச்சு. எல்லோரும் போலாம்னு சொன்னோடனே...அந்த கோவிலுக்கு போனோம். அங்க அன்னதானம் நடந்ட்டு இருந்திச்சு. சாமி தரிசனம் முடிஞ்சதும் எங்களையும் சாப்ட சொன்னாங்க. அருமையான சாப்பாடு. அங்க எங்க அப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் பார்த்தோம். அப்பா எப்பவும் போல் என்னோட கல்யாண கவலை பத்தி சொல்ல ..இப்போ அந்த சிநேகிதர் இருக்காரே அவர் ஊர்தான் மாப்பிள்ளையாம். அவரும் வர்றாராம். நேத்திக்கு தான் விவரம் சொன்னாங்க "
"மாப்பிளை..பேரு என்னடி..... "
"தெரியலையே.... எனக்கு கேக்கணும்ன்னு தோணலை... சரி சாயங்காலம் பார்த்துக்கலாமேன்னு கேக்கல. அப்படியே விட்டுட்டேன்."
"அடியே ..மாலதி.இப்பிட்யே உன் சிநேகிதி கூட பேசிட்டே இருந்தா எப்பிடி...நேரமாச்சு ..சட்டுபுட்டுன்னு அவளை அலங்காரம் செஞ்சுக சொல்லு. இப்ப ஆரம்பிச்சாதான் அவங்கெல்லாம் வர்றதுக்குள்ள தயாரா இருக்க முடியும். "
"இதோ ..நான் இருக்கேம்மா மிருதுளாக்கு ...எல்லாம் சரியான நேரத்துக்கு தயார் ஆகிடலாம். "
"என்னமோ செய்ங்க..சீக்கிரம் ரெடி ஆகிடுங்க. இல்லேன்னா மிருதுளா அப்பா கோவம் உனக்கும் தெரியும் சொல்ல்லிடேன். "
"ஏய் ..மிருதுளா ...வா..ரூமுக்கு போய் ரெடி ஆகுற வேலை பாப்போம். " - மிருதுளா உள்ளே ஒரு கேள்வியுடன் தன் அறை நோக்கி அலங்காரம் செய்து கொள்ள சென்றாள்.
மாலை ஐந்து மணி.
அப்பாவின் சிநேகிதருடன் அந்த மாப்பிளை வீட்டார் வந்திறங்கி வீட்டில் ஜமுக்கலததில் அமர்ந்திருக்க... ஜன்னல் வழியே எட்டி பார்த்த மாலதி
"ஏய் ..மிருதுளா...மாப்பிளை லட்சணமா இருக்கருடி. உனக்கு நல்லதொரு பொருத்தம். நீ காபி கொடுக்கும்போது நல்லா பார்த்துக்கோ ..!!! "
மிருதுளா அமைதியாய் இருந்தாள். உள்ளே ஒரு படபடப்பு எகிறி கொண்டிருந்தது.
"மிருதுளா, அந்த காபி தட்டை எடுத்து வந்து, வந்தவங்க எல்லாருக்கும் கொடும்மா... "அப்பாவின் குரலில் அம்மா அறைக்கு வந்திருந்தாள் .
மிருதுளா காபி தட்டுடன் ஹாலுக்கு வந்து, ஒவ்வொருவராய் முகம் பார்த்து புன்னகைத்து, பணிவாக விருந்தினர்களுக்கு ஒவ்வொரு காபியை நீட்டி கொண்டே சென்று, மாப்பிளை நெருங்கி முகம் பார்க்க ..
இருவரின் கண்களும் சந்தித்து கொள்ள....
இருவருக்குள்ளும் ஒரு அதிர்ச்சி அலை பரவியது.
இது எப்படி சாத்தியம். இது நிஜமா. ...!!! இருவருக்குள்ளும் படபடப்பு உச்சம் அடைய ...
"அம்மா...நா பொண்ணுட்ட ரெண்டு வார்த்தை பேசணும் தனியாய்..." மெல்ல அம்மாவின் காதில் அவன் சொல்ல...
அடுத்த இரண்டு நிமிடத்தில் - மிருதுளாவின் அறையில் அவர்கள் இருவரும்.
"இது நிஜமா..." இருவரும் ஒரு சேர கேட்க... இருவருமே திகைத்தார்கள்.
"அப்போ நீங்க நிஜம் தானா......உங்க பேரு ...மாணிக்கம்மா ..!!! உங்க ஊர்ல தான் பைரவன் இருக்கானா ????? மாணிக்கத்தை யாரோ உலுக்கி விட்டது போல் நிமிர்ந்து பார்த்தான்.
"அப்போ நீ ...மிருதுளாவா...!!!! இப்போது மிருதுளா கிட்டதிட்ட மயங்கியிருந்தாள்.
வீட்டின் தோட்டத்தில் படர்ந்து வளர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் அடியில் - ஏழடி உயரம், முடிச்சு விழுந்த தலை முடி கற்றைகள் முதுகு வரை படர்ந்திருந்தது. பழுபேறியிருந்த கைகளும் கால்களும் திடகாத்திரமாய் இருந்தது. விரல்களில் வெட்டப்படாத கூரான நகங்கள். கால்களில் அதே நகங்கள் சற்றே தடிமனாக வளர்ந்திருந்தது. கூரான மூக்கும், திருத்தப்பாடாத தாடியும், உதடுகளை மொத்தமாக மாறைதிருந்த மீசையும், மெல்லிய எக்கிய வயிறு, கெட்ட வாடையே வராத கந்தல் துணி உடுத்தியிருந்த அந்த உருவம் - பைரவன் - மெல்லியதொரு புன்னகையுடன் நின்றிருந்தான்
#328
मौजूदा रैंक
46,943
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 1,110
एडिटर्स पॉइंट्स : 45,833
23 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.8 (23 रेटिंग्स)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
roshinirohit
roshini2000r
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स