உடைந்த கண்ணாடியில் பிம்பங்கள்

paranthamanvaradharajan
கற்பனை
4.7 out of 5 (3 रेटिंग्स)
कहानी को शेयर करें

திருவரங்க ஆலயத்தின் திருப்பாவை
காவிரி ஆற்றின் ஓசை மென்மையான காற்றில் கலந்த அலை போன்ற அலைவுகளில் மக்களைத் துயில் எழுப்புகின்றன. புள்ளினங்கள் சிறகு விரிக்கின்றன .மார்கழி மாதமானதால் இளம் பெண்கள் கூந்தலில் நீராடிய நீர்பனித்துளியாய் ஒரிரு சொட்டாய் சொட்ட அலைபாயவிட்டு வாசலில் அரிசி மாவுக் கோலங்கள் போடுகின்றனர்…
சுமரிதநிலா…போட்டக் கோலத்தை முடிக்க முடியாமல்
ஏதோ! புள்ளியில் சிக்கலில் தவிக்கிறாள்..

அருகில் செவ்வந்தி அந்த விடியற்காலைப் பொழுதில் கோலத்தை முடித்த அலுப்பில் தன்உடலை நிமிர்த்தி நிற்க…யோகாசானம் அவள் அறியாமல்…


என்னக்கா…உன் கோலத்தை முடிக்காமல் சிக்கலில் நிற்கிறாய்… நா…புதியதாக வேறுபுள்ளி வைத்து கோலம் போடவா?



வீட்டின் உள்ளேயிருந்தக் காயத்திரி சிறிது கோபத்துடன்…

கோலத்தைப் போட்டோமா! வந்தோமா…!
வந்து வீட்டு வேலையைத் கவனிப்போமா இல்லை…
ஏதோ…! ஆஸ்கார் அவார்டு வாங்கினா போல
அரைமணி நேரமா குனிந்த தலையை நிமிராமக் கோலத்திலேயே இருக்காள்…

அடுத்த வீட்டில் கோலம் போட்டுயிருந்த
செவ்வந்தி… என்னக்கா…! கோலத்தின் சிக்கலில் சிரிக்கிறாய்…..உங்கம்மா..காலையிலேயே கடுகடுப்பா
கத்துவு….

இன்னிக்கு… உங்க ஆத்தில நா….. போடட்டுமா யக்கா…. அப்பொழுது வானத்தில் மேகம் கலைந்து நகர்கிறது.,.கார் மேகமும் மேகத்தோடு இணையுது….

இல்லடீ….!கோலம் காலத்தின் கண்ணாடி….
போட்டக் கோலத்தைக் கலைத்து விட்டு வேறு புதிய
கோலத்தைப் போடுகிறாள்…அவள் வீட்டின் முகப்பில் பூசணிக் கொடியின் அரும்பு மஞ்சள் இதழ்கள் மலர்ந்து காலை சூரியக்கதிர்கள் வண்ணகதிர்களாக பூசனிப்பூவை வருடுகின்றன….

விடியற்பொழுதில் பனிசாரல் கலந்த ஈரக்காற்று மெல்ல வீசுகிறது…காவிரிப்பாலத்தின் அருகில் கேட்ட மெல்லிய புல்லாங்குழலின் ஓசைப் போன்று ஒரு கரியவண்டு மூங்கிலை துளைச்செய்து ரீங்காரம் இடும் ஓசையில் வந்தியதேவன் உறங்கியும் உறங்காமலுமபடுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறான்.. மெல்லிய காலைத் தென்றல் அவன் உடலை தவழ அவனை துயில் எழுப்புவது போல் உணர்கிறான்…

இரவில் நிறுத்தாமல் மறந்து உறங்கிவிட்ட தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து “அடம் பிடிக்கிறக் குழந்தைக்குக்கூடப் பிந்து அப்பளம்” என்ற குரல் எழுப்புகிறது… அய்யோ…டி.வி யை நிறுத்தாமல் தூங்கிவிட்டோமே..! இந்த அவுஸ் ஓனருக்குத் தெரிந்தா
என்ன நெனப்பாரு…படுக்கையை விட்டு எழுந்து காலண்டர் தேதியை கிழித்தார்… இன்று அம்மாவாசை
அவசர அவசர கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று அவன் மனம் அறிவுக்கு உணர்த்தியது…..

அப்பொழுது அவன் விழிகளுக்குள் இருந்த உறக்கம் நீங்காமலும் உடல் மேல் இருந்த போர்வை மெல்ல விலகுகிறது…

செந்நிறச்சூரியக்கதிர்களின் ஒளி கூரையின்
ஓட்டை வழியே ஊடுயுருவி அவன் உடலில் காலத்தை
உணர்வையூட்டுகிறது…

வீட்டின் கீழ்தளத்திலிருந்து வீணையின்
நரம்பிலிருந்து எழும் ஏழு சுரங்கள் தென்றலாய்
மிதக்கையில் புகை அந்தரத்தில் தவழ்ந்தது போல வீணையின் மெல்லிய இனிமையான கீதம் அவன் விழிகளில் இருந்த உறக்கம் காய்ந்த மலர் செடியின் வேர்களில் விழுவதுபோல உதிர்கின்றன…அவள் விரல்கள் மீட்டிய இனிமையான தேன் சொட்டுக் களாக வீணையின் கீதம் அவன் உடலைத் தழுவியவாறு அவன் உணர்வில் மென்மையான புன்னகை…
அவன்… கருவிழிகள் இமைகள் ரீங்காரம் செய்து
கருவண்டாக மறுதலித்து…… அவனது மனத்துள் சிறகு முளைக்கிறது.

சுமிரித நிலாவின் வீணை ஒலியை ரசித்தவாறு படுக்கை விட்டு எழாமல் உள்ளத்தில் உற்சாகம் விழிக்க
மகிழ்ச்சி..

வந்தியதேவன் இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியாக மாற்றலாகி வந்த பதினைந்து நாட்களில் இவை தினந்தோறும் பழக்கமாகிவிட்டது…
வழக்கம் போன்று அவளது வீணையின் இசைக்காற்றில் மிதந்தவாறு இதயம் குளிர்ந்து வீட்டின் விளிம்பிற்குச் செல்கிறான்..ஏதோ…எதிர்பார்ப்பில்…
அவள் வீட்டு வாசலில் போட்டக் கோலத்தைக் காண்கிறான்…. வந்த நாளிலிருந்து வழக்கமாக ஒரே கோலத்தைக் கண்ட அவன் விழிகள் இன்று புதிய கோலத்தைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஐயம்… ஏதோ…சிந்தனை…ஏதோ முகத்தில் புன்முறுவல்…

சுமிரிதநிலா விரல்கள் வீணையின் நரம்புகளிலஎதிர்பார்ப்பில் தேய் தேய இசையின் சுரம் கேட்கிறது…. ஆனால் அவள் கோலத்தின் மாற்றம் அவனுக்குப் புதிராக இருக்கிறது….?


கையில் பிரஸ்யுடன்வந்தியதேவன் விழிகள் அலைபாயுகிறது….இவர் திருவரங்க ஆலய அதிகாரியா வந்தார்..இந்த ஊருக்கு புதுசு…பேட்சிலர் என்பதால் குடியிருப்பதற்கு வீடு கிடைக்குமா! பேட்சிலர் என்பதால் தெரு தெருவாக அலைய வேணாடுமா! யாராவது வாடகை புரோக்கரை அணுகலாமா! நடந்துக்கொண்டே சாலையில் கண்ணோட்டமாக கவனம் இருந்தது…
சாஸ்திரி ஐயர் வீட்டு மாடியில் இடம்
இருப்பதை அறிந்து ..எப்படியோ…வாடகை வீடு கிடைத்துவிட்டது எனப் பெருமூச்சு விட்டார்…அவர் வீட்டுக்கு வந்த முதல் சந்திப்பிலேயே சுமிரித நிலாவின் அழகில்…அவன் உணர்வில் அச்சமும் பயமும் இழையோடியது…

வந்தியத்தேவன் முதன்முதல் அவள் வீட்டுக் வந்தபொழுது சுமரிருதா நாணத்தில் நடுக்கத்தில் அவசரத்தில் சீனிபோடாத காப்பி கைகழுவி அவன் ஆடை கறையானது… அந்த நினைவு அவனை விட்டு அகலவேயில்லை… நினைவே உணர்வு அலைகளில் கலந்து பூங்காற்றாய்…அரும்பியது…மலர்ந்தது…மயங்கியது…

வந்தியதேவன் இவள் வீட்டிற்கு வந்து இருபது நாள் கூட ஆகவில்லை…மார்கழி பிறந்து முதல் நாள்
சுமரிதநிலா வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலம் போட்டு….கோலத்தின் நடுவில் மஞ்சள் வண்ணம் மிளிர பூசணி பூவைச் சுற்றி அகல் விளக்கில் ஒளிசுடர் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது….
சாஸ்திரி ஐயர் காவிரி கரைக்குச் சென்று புக்கு ஆத்துக்கு திரும்புவதற்கு முன்பாக….மார்கழி தீபாராதனை முடிந்தும்…..அம்மா….அப்பா வந்து ஆண்டாள் மீது திருவாய் மொழி பாடுவதற்கு முன்பாக
நெய்வேதியம் செய்த…..இந்த சர்க்கரைப் பொங்கலை மேலே குடிவந்திருக்கிற அவருக்கு கொடுத்து வந்துடும்மா….

ஏண்டீ…நான்தான்…இங்க வேலையா…இருக்கேன்…நீ போய் அவர் டேபிள் மேலே வைச்சிட்டு வந்திடுடீ… தூங்குமூஞ்சி எழுந்து சாப்பிடுதோ…கடவுளுக்குதான் தெரியும்…
வந்தியத்தேவன் நாடக ஆசிரியர் ஆழ்வார் இனியன் தொடர்பில் நட்பால் கொடுத்த வரலாற்று மேடை நாடகத்திற்கு மெட்டுக்கு…. மொட்டாகப் பாடல் சரணம் எழுத…. மூளையைக் கசக்கி…‌கசக்கி…காகிதங்கள் பந்துகளாக மேஜையின் அருகில் கிடக்கின்றன….இது காரல்மாஸ்கின் கேப்பிடல்யிசம் கொள்கை போல காகிதங்கள் சிதறிக் கிடக்கின்றன…ஆனால்…மெழுகுவர்த்தி கவிழ்ந்து காகிதங்கள் எரிந்து சாம்பலாகதது தான் மிச்சம்….
கடைசியாய்… பாரதியார் எழுதிய “நல்லதோர் வீணைச்செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ”…..என்று எழுதிப் பாடலின் காகிதங்கள் மேஜையில் இருந்து காற்றால் சிறகு விரித்தல்..
வந்தியதேவன் அன்றைய பாதியிரவு


நாடகத்திற்கு மெட்டுக்கு பாட்டு எழுத சிந்துத்து சிந்தித்து அறிவும் மனதையும் உடலில் தொலைத்து என்றும் இல்லாத ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவன் விழிகள் ஏதோ..! காலடி ஓசைகள் கேட்டு விழிகள் இமைகள் மெல்ல அசைகின்றன…
வந்தியத்தேவன் விழிகள் முதன் முதலில் சுமரிநிலாவின் மென்மையான செந்தாமரைப் போல பாதங்களை காணுகிறான்…அம்பிகாபதி அமராவதியைக்
காணும் காதல் மின்னல் இழையோட ஓர் ஒளிர்வு வண்ணம்….
அவள் ஏலக்காயும் நெய்யும் மணக்கும் மார்கழி சர்க்கரைப் பொங்கல் அம்மா கொடுக்க சொன்னா…என
மேஜையில் சிதறிக் காகிதத்தில் கிண்ணத்தை வைத்து விடடு மெல்லிய புன்னகையில் வேகமாக மாடியை விட்டு இறங்கினாள்…ஓரிரு நாட்களுக்குப் பிறகு…

சமையல் அறையில் பொங்கல் செய்ய புகைந்துக் கொண்டிருந்த்து காயத்திரி…. சுமரிருதநிலா மீட்டிக் கொண்டிருந்த வீணையை என்றுமில்லாக் கோபத்துடன்…
வீணை வாசிக்கிறளாம் கழுத்தில தாலியே அறுந்திட்ட போது…. வீணைக்கு மட்டும் ஏன்டீ நாடி நரம்புகள்…பகவானாவது பாட்டாது…என அவள் மடியில் மீட்டீக் கொண்டிருந்த வீணையைப் பிடிங்கிப் பொத் என்று போடுகிறாள்… பாதரசம் பூசியக் கண்ணாடி சிதறுண்டால் எப்படியோ…அது போன்றும் சிதறிக் கிடக்கின்றன….வீணை சுமரிதநிலா போன்றும் சிதறுண்டு கிடக்கிறது…

சாஸ்திரி ஐயர் காவிரி கரைக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நுழையாது மா கொஞ்சம் ஜலம் எடுத்துவாடி…கொஞ்ச தூரம் நடந்தற்கே இப்படி வேர்த்து விரிது… எனச் சொல்லிக்கொண்டே கூடத்தில் சிதறுண்டு கிடக்கும் வீணையை பார்க்கிறார்….

கொதிப்போடு அவர் கண்களில் அனல் பறக்கின்றன… அவர் உதடுகளில் வார்த்தைகள் முழுமையாக வெளிப்படாமல் அரைக்குறையாக உதிர்கின்றன….
ன்
ஏன்டீ….!காயத்திரி என்னாச்சு உனக்கு…அடுப்புக்கு விறகு இல்லன என்னைக் கேட்க கூடாதா…! இப்படி… கோயில் சிலையே…போட்டு உடைஞ்சது போல உடைச்சுயிருக்கே….
நேக்கு ஒண்ணுமே புரியலடீ…!
நேக்கு என்னாச்சு…சுமிதா…! நீவாது சொல்லித் தொலையண்டீ…! அவர் முகம் கோபத்தில் சிவக்கிறது…

பின்ன என்னன்னா..! அவ வாழ்க்கைத்தான் தொலைச்சிட்டா…! அந்த கவலையாவது மறந்திருக்கணும் தான்…
அடிப்பாவி….! நேக்குத் தெரியுமாடீ..மகாகவி பாரதியார் கூட நல்லதோர் வீணை செய்தே….அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி…சிவசக்தி! நிலச்சுமையென வாழ்ந்திடும் புரிகுவையோ? என்று தான் பாடியிருக்கிறார்….

ஆனா… நீ… நம்ம மகளையே…! போட்டு உடைச்சிட்டியேடீ…!

நானாங்க…இவ வாழ்க்கையை உடைச்சேன்.. நன்னா…சொல்றே..!
இன்னொரு தரம் என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க…!
இவ வாழ்க்கையில சந்தோஷம இருக்கணும்…வரனா வந்தவங்க வரதட்சணையாக ஐம்பது சவரன் கேட்ட போது…அதையெல்லாம் கொடுத்துப் புக்காத்துக்கு அனுப்பி வைச்சோம்…
இவ…வாழ்க்கையில் துன்பத்தை மறக்க ஆசையா கேட்ட இந்த வீணையை வாங்க….திரூவரங்கத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் போய் தேடி அலைந்து அலைந்து கடைசியில் மயிலாப்பூரில் சங்கீத வித்துவான் தெருவில் இந்த வீணையை வாங்கினோம்…

பணமில்லாம தவித்த போது என் காலடியில் இருந்த நகையை விற்று இந்த வீணையை வாங்கிக் கொடுத்து அவ புக்கு ஆத்துக்கு அனுப்பி வைச்சோம்..

அந்த பாவி குருக்கள் ஆலயத்தில் அர்ச்சகராக இருக்க தகுதியே கிடையாது.... எந்த தெய்வத்திற்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்தாரோ….அந்த தெய்வத்தையே ! சிலைகடத்துற கும்பலில் சேர்ந்து அற்புதமான அதிசயமான பசும்பொன்சிலைக் கடத்தி மாட்டிகிட்டதால…மானத்திற்கும் பயந்து உயிரை விட்டுட்டான்..
இது எல்லாம் இவ வாழ்க்கையில் நடக்கும்ன்னு….கனவு கூட காணலியே!
ஆனா…! வாழ்ந்த ஆறே மாதத்திலே…இவ வாழ்க்கையே சிதறியிருக்கும் போது…இந்த வீணை நமக்குத் தூசுங்க….!

அவ மனசுல அந்தப் புகுந்த வீட்டு கவலை எல்லாம் பித்தா மாறிட கூடாதுன்னுதா…!
அவ…. வாழ்க்கையே சோகமா மாறிட்டப்போ… இந்த வீணைக்கு மட்டும் சுரம் எதற்கு ?
சுவை இழந்த சுவை எதற்கு ?
என வீணையை விறகுகாக்கினேன்….
மாடியில் விழிகளில் நீர் பெருகப் பார்த்துக் கொண்டிருந்த வந்தியதேவன் உணர்வு நிலை தடுமாறுகிறது. அவன் உதடுகள் மெல்ல அசைகின்றன… பூவுக்குள் வண்டு விழுவது போல் அவன் மனத்துக்குள் அறிவு மயங்கியது.. அவன் தன்னை அறியாமல்…இத்தனை நாளாக..என்னை எழுப்பிய பூங்காற்றே! இத்தனை நாள் எங்கிருந்தாய்….மெல்லிய அலையாய் அவன் உதட்டிலிருந்து சப்தமாக காற்றோடு கலக்கிறது..
சுமரிருதநிலா சோக விழிகளால் அவனை மேல் நோக்கிப் பார்க்கிறாள்…இருவர் விழிகள் இமைகள் வண்ணங்களால் சிறகு விரிகின்றன….

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...