JUNE 10th - JULY 10th
நித்தமும் நித்திரை இல்லாமல் தவிக்கும் என்னை கண்டு தவித்தாள் என் நேத்ரா... நேத்ரா,
அவளுக்கும் எனக்கும் ஆனா திருமணம் பெற்றோர் நிச்சயித்த ஒன்று ,எனினும் எட்டு
ஆண்டுகள் கழித்து இன்றளவும் பித்து அவள் மேல்.என்னை முற்றிலுமாக ஆட்கொண்டவள்
..இவளை கண் கலங்க விடுவது என்பது நான் செய்யும் பாவ கணக்கில் முதலாவதாக இருப்பு
வைக்க படும் சித்திரகுப்தனின் புத்தகத்தில்,அவ்வளவு படுத்தி விட்டேன் இந்த குறுகிய
காலத்தில். நேத்ரா என்னிடம் தயவு செய்து போய் மிருதுளா வை பாருங்க..அவளே இதை
சொல்கிறாள் !அவள் என்ன தான் மிருதுளாவிடம் பேசினாலும் அவள் மீது இவளுக்கு இருக்கும்
வெறுப்பு நியாயமானது தானே ...? என்னை எனக்கு முன் அறிந்தவள் மிருதுளா .. என் உற்ற
தோழி அவள்..எனக்காக எதையும் செய்ய துணிவாள். அவள்தோள் சாய்ந்தால் போதும் உலகில் உள்ள அணைத்து துன்பங்களும் ஓடோடி போகும்....உன்னால் முடியும் இதுக்கு போய் சோர்ந்து போற,அவள் கூறும் வார்த்தைகளின் மாயாஜாலம் என்னையும் ஒரு வெற்றியாளனாக மாற்றியது எனில் ,அவளின் வாழ்வை அவள் நன்றாக தான் அமைத்து இருப்பாள் ..அவளுக்கும் கார்த்திக் மேல் பித்து தான் ..ஆனால் அதை அவள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கும் ..அவள் அவளாக இருப்பாள் அவன்
அவனாக இருப்பான்..இருவரின் வாழ்வில் தலையீடல் இருந்ததில்லை ..கார்த்திக் ,இவனை பார்க்கும் போதெல்லாம் எவளோநபர்கள் உற்ற துணை அவளுக்கு என தோன்றும் .என் பெற்றவர்களை தாண்டி என்னையம் என்னவளை தண்டி நான் பார்த்து வியக்கும் நபர்கள்.
ஆண் ,பெண் நட்பு எல்லை தாண்டா
விடினும் ,அவர் அவர் துணைக்கு பொறாமை வர தான் செய்யும்...!என் நேத்ரா சொல்வது இது
..!
அவளுக்காக என் நேத்ராவுக்காக இதோ மிருதுளா வை பார்க்க காத்துக்கொண்டு
இருக்கிறேன் ..அவளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை நான் வந்து இருப்பது...ம்ம்ம்
நான் காத்து இருக்கும் இடத்தில் அவள் பெயர் தாங்கிய பலகை ..மிருதுளா கார்த்திக் (M
.S C PHYSCOLOGY ,M .D.PSYCHIATRY )
செவிலியர் சொல்லிவிட்டு சென்றார் அடுத்தது நான் என்று....!அவளை ஏன் காண வந்தேன்
?என்னை அறிந்தவள் அவள் எனில் நான் ஏன் அவளை மருத்துவமணையில் காண வேண்டும்
???
அவளும் என் தந்தையின் மரணத்தில் சற்று மனம் வாடி இருந்தால் ,ஆனால் என் எண்ண
அலைகள் இவ்வளவு சிக்கலாய் இருப்பது அவள் அறிந்து இருக்க மாட்டாள் ...அவள் அறிந்த
யாத்ரன் எதையும் யோசித்து செய்பவன் ,ஆனால் இன்று !
யதார்த்தங்களை தாண்டி யோசிப்பது தான் எத்தனை அபத்தமானது...
என்னை கண் கொட்டாமல் பார்க்கும் மிருதுளாவிடம் !(மருத்துவர் மிருதுளாவிடம் )நானாக
பேச ஆரம்பித்தேன் ..Dr ,என் அப்பா இறந்து இன்றோடு 3 மாதங்கள் ஆகிறது ..நான் இந்த
நிலைமைல இருக்கேனா அவர் தான் காரணம் ,அப்பா என் வாழ்வின் அகராதி அவர், எல்லாம்
அவருக்கு தெரியும், என் அப்பா அம்மாவின் திருமணம் காதல் திருமணம் .அவர்களை காண்போர் அனைவரும் சொல்லிவைத்தார் போல் சொல்வது குடுத்து வெச்சவ சுருதி ...அப்படி பாத்துக்குறான் செல்லப்பா ...எவ்வளவு சண்டை ,இவள் மாமிசம் உண்ணாதவள் அவனோ ஊரில் உள்ள அனைத்து மாமிச உணவுகளையும் உண்பவன் ...இவளுக்காக அவன் செய்தது எண்ணிலடங்கா ..அவன் தான் உலகம் என இவள் வாழ்ந்தது விவரிக்க வார்த்தைகள் பஞ்சம்.....என்னவளை ,என் வருங்கால மனைவியை அப்பா அம்மாவை பார்ப்பது போல பார்த்து கொள்ள கணவு கோட்டை கட்டியவன் நான் ... ,வேலை செய்ய விட்டதில்லை
எல்லாருக்கும் எல்லாமும் ஆனவர் !!!
எங்க அம்மாக்கு அப்படி ஒண்ணும் பெருசா தெரியாது, எல்லாமே அப்பா தான் பண்ணனும்
..எதை கேட்டாலும் அப்பாவ தான் கேட்கணும் ..அவளுக்கு அந்நாளில் இருந்தே வேலைக்கு உதவ வேலை ஆட்கள் ..காய் வாங்கியதாக நினைவில் இல்லை ..அவளுக்கு தெரியவும் தெரியாது ,எந்த காய் எப்படி வாங்க வேண்டும் என்று கூட அப்பாவுக்கு தான் தெரியும் ..படிப்பில் இவள் ஏதோ கோல்ட் மெடல் ஆம்..என்ன படித்தால் என அவளே மறந்து இருப்பாள் ..பேருக்கு படிச்சு இருக்காங்க ..அவ்வளவு தான்
...ஏன் என் திருமணத்திலும் அப்பா தான் முடிவு எடுத்தாங்க ..இப்ப எங்க குடும்பத்தோட ஆணி
வேர் என் மனைவி நேத்ரா தான் ..!என் பிரச்சனை என்னனு தெளிவா சொல்லணும் தான்
இவ்வளவு கதையை சொன்னேன் ...நான் அம்மா வ அப்பா மாதிரி பாத்துக்களையோ னு பயமா
இருக்கு ..அம்மா முன் மாதிரி இல்லை ,எதையும் என்ன கேட்கறது இல்லை அவுங்களா எல்லா
வேலையும் செய்யறாங்க ..அப்பா இருந்தப்ப ஒரு வேலை செஞ்சது இல்லை !இப்ப என்னனா
எங்கயாவது கிளம்பிடுறாங்க ,!!காய் வாங்கறேன் போறாங்க ,கோவிலுக்கு போறாங்க ,சித்தி
வீட்டுக்கு கிளம்பி போய்டுறாங்க ..அவுங்க தனியா போனதே இல்ல !அப்பா போவாங்க கூட,
இப்ப நான் கூட போக முடியல ...வேலை இருக்கு ..பாக்கறவுங்க எல்லாரும் என்ன பா அம்மா
வ வேலை செய்ய விடற கேட்கறப்ப கோவமும் ஆற்றாமையும் சேர்ந்து வருது ...நான் இப்ப
என்ன செஞ்சா அவுங்க மாறுவாங்க !என்ன செஞ்சு நான் இருக்கேனு புரிய வைப்பேன்
!!!அவுங்களுக்கு சொல்லி புரியவை நான் இருக்கேன், அவுங்களா எதுவும் செய்ய வேண்டாம்
...she is still our queen !!!!!
மிருதுளா அமைதியாக சொன்னால் அம்மா வரவேண்டாம் !நீ தான் இப்பொழுது
மனஉளைச்சலில் இருக்கிறாய் அவுங்க இல்ல !!மிருது என்ன சொல்லற நீ ??
யாத்ரா,தயவு செய்து நிதானமாய் கேள் நான் சொல்ல வரும் கூற்றுகளை ..!!!
அம்மா இத்துணை நாள் இருந்தது ஒரு தங்க கூண்டில் ,எவ்வளவு அபிப்ராய பேதம் அவள் மேல்
உனக்கு ..உனக்கு தெரியும் அம்மா ஒரு கோல்ட் மெடலிஸ்ட் ..அவள் வீட்டில் அடைந்து கிடக்க
துணிந்தது உனக்காக ..உன்னை கவனிப்பார் யாரும் இல்லை ,!!எங்கேயும் தனியா
சென்றதில்லை ஏன்? அப்பா விட்டதில்லை அதில் இருக்கும் முரண் புரிந்த கொள்ள
முயன்றதில்லை நீ ..!உனக்கும் எதுவும் தெரியாது சொல்லி சொல்லி யே அவளே
வெறுத்துவிட்டால் அவளை ..and why she should seek your permission to go out ..!!நேத்ரா உன்
மனதில் அம்மா இப்டி இருந்தா நல்லா இருக்கும் னு யோசிச்ச பிம்பம் ...அப்பா தான்
நேத்ராவை பார்த்து வைத்தார் ,அதனால் தான் நேத்ரா நன்றாக பார்த்து கொள்கிறாள் ..உன்
மாய பிம்பம் அது !!நான் ஒண்ணு சொல்லட்டுமா ,நீ நேத்ராவுக்கு குடுத்த சுதந்திரம் ,முடிவு
எடுக்கும் உரிமை அம்மா வுக்கு மறுக்கப்பட்டது !அவள் இதை புன்முறுவலோடு ஏற்றாள்
...அப்பாவை அவ்வளவு ஆழமாக நேசித்தால் ...அப்பா உலகிற்கு நல்லவர் தான் ஆனால்
அவரே அறியாமல் அம்மாவின் வாழ்வில் அவர் தான் எதிரி ..!!அவனுக்காக அவளின்
சுயத்தையும் இழந்து அவனை முன்னேற்றினால் ..அப்பா எனும் பிம்பத்தை கதாநாயகனாக
சித்தரித்து உன் முன் கோமாளியாய் இருந்தால் போல் இத்துணை நாளும் ..!!!
உன்னை ஆளாக்கினால் மனிதனாக ..அவள் விரும்பும் மனிதனாக ...
தங்க கூண்டில் இருந்து இப்பொழுது தான் விடுதலை பெற்றாள் ...மீண்டும் கூண்டில்
அடைப்பது நியாயமா சொல் !!அம்மா அவளாகவே இல்லை ,அவள் அவனோட வாழ்வை வாழ்ந்து இருக்கிறாள் .அதை விரும்பியே செய்தாலும் இது ஒரு வகை கூண்டில் அடை பட்ட நிலை என அறிய காலமாகும் ..காலம் முடியும் முன் வாழ்வு முடிந்து இருக்கும் சில மனிதர்களுக்கு ...இதோ அப்பாவின் வாழ்வை போல் ...அம்மாக்காகவே வாழ்த்து இருக்கிறார் ஆனால் அவளை அழிக்கிறார் என அவர் அறியவில்லை பாவம் ..இன்றைய சமூகத்தில் பாதி பேரின் நிலை இது தான் ...காதல் என அழியாத காவியம் அவர்களை அழிக்கும் ...
உன் நண்பியாக நான் கூறியவை எடுக்காவிட்டால் மருத்துவராக சொல்லிவிட்டேன் காதில்
வாங்கிக்கொள் ..
yes she is still a queen ..!!!!!
அவர் அவர் வாழ்வை அவர்கள் வாழ்ந்தால் போதும் ,நீ யாருடைய
வாழ்விலோ கெட்டவனாக நிச்சயம் இருப்பாய் ,நல்லவனாகவே இருப்பது என்பது இயலாத
ஒன்று ஆண்டவனாலும் ..!!!
"தங்க கூண்டு "
#853
मौजूदा रैंक
35,050
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 50
एडिटर्स पॉइंट्स : 35,000
1 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (1 रेटिंग्स)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स