ஒர் இரவு

காதல்
5 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

மின் விளக்குகளையெல்லாம் அணைத்து அறையை இருளில் மூழ்கச் செய்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இருட்டின் மீது கடந்த சில மாதங்களாகத் தீராக் காதல். சிறு வயதில் இருட்டை கண்டு பயந்ததுண்டு, பின் பயம் தவறி ஆர்வமின்மை சுழ்ந்திருந்தது. ஆனால் இப்போது இந்த ஆழ்ந்த இருமையில் அப்படியே கரைந்து விடலாம் போலிருந்தது.
இந்த இருமை என்னை அப்படியே செல் செல்லாகச் சிதைத்து ஏற்றுக் கொள்ளாதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். கட்டிலில் படுக்கச் செல்வதற்கு முன் செல்போனை சார்ஜில் போட வேண்டும் என நினைத்திருந்தேன்.
நாளை அது தேவை இல்லை என்றாலும் கூட, ஏனோ பழக்கத் தோசத்தில் அதை நினைக்க மட்டும் தவறவில்லை. கட்டிலின் அருகே மேசையில், ஒரு சொம்பு நிறைய தண்ணிரும், மாத்திரையும் வைத்திருந்தேன். நாளைய விடியலை காணப்போவதில்லை என்பது மட்டும் நினைவில் இருந்தது. சில மாதங்களுக்கு முன் அவள் இறந்ததிலிருந்து ஏனோ வாழப்பிடிக்கவில்லை. அவளை நான் பெரிதும் விரும்பவில்லை என்றாலும் கூட, எனக்காக இருந்தவள் அவள் ஒருத்தி மட்டும் தான். வாழ்க்கையில் வெறுமையை முழுதாக உணர்ந்திருந்தேன். வாழ்க்கை வாழ வேண்டும், நாம் ஒருமுறை தான் வாழப்போகிறோம், போன்ற மேற்கோள்களைச் சற்றும் விரும்பாதவன் நான். உணவின் மீதோ, பயணங்களின் மீதோ, இயற்கையின் மீதோ, செல்லப்பிராணிகள் மீதோ ஆர்வத்தை ஏற்படுத்தி வாழ்க்கையின் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாமென முயற்ச்சி செய்து தோற்றுப்போயிருக்கிறேன். ஏனோ மனிதர்கள் பக்கம் மட்டும் நான் திரும்பவே இல்லை. வாழ்க்கையின் கடைசி நாள் என்று பெரிதும் எதையும் செய்து கொள்ளவில்லை. ஒரே ஒரு ரெட் வெள்வட் கேக்கும், ஒரு டம்ளர் ஃபில்டர் காப்பியும் என் இருதி உணவாக எடுத்துக் கொண்டேன். என்மீது எனக்குள்ள பாசம் அவ்வளவே. பல சிந்தனைகள்குள் என்னை முழ்கி நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். சாவை நோக்கிய பயமா, இல்லை நான் இறந்தபிறகு இவர்கள் செய்யும் நாடகத்தை எண்ணிய பயமா என்று தெரியவில்லை. இறப்பிற்கு பிறகு இவர்கள் என்னைச் சாக்கடையில் அம்மணமாகத் தூக்கிப் போட்டாலும் ஒரு கவலை இல்லை. அதைக் காண, உணர நான் இருக்க மாட்டேன், அதனால் அந்தப் பயம் இல்லை என்றே எடுத்துக் கொண்டேன். இன்னொரு முறை வாழ்க்கைக்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளமா என யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தக் காரிருள் சூழ்ந்த இந்த அறையில் ஒரு முறையேனும் நான் ஒளியைக் கண்டுவிட்டால் நான் என் இறப்பை நாளைத் தள்ளிப்போடுகிறேன் என்று எண்ணிக் கொண்டேன். இவ்வளவு முட்டாள் தனமாக நான் யோசிப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்து இல்லை. என் வாழ்க்கையின் அடுக்த நாளை ஒரு ஒளித்துண்டு தீர்மானிக்க விடுவேனா? நான் முட்டாளா இல்லை சாக வேண்டாம் என்று இப்படி பட்ட ஏற்பாடுகளை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனா ? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் இது எனக்குப் பிடித்திருந்தது. இறுதியாக ஒரு விளையாட்டு. சரி ஒளி எங்காவது தெரிகிறதா எனத் தேடத் துவங்கினேன். எங்கள் வீட்டு ஒடுகளின் இடையில் கண்ணாடி ஒடை ஒன்றை சொறுகி வைத்திருப்பார்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக. அதன் வழியே நிலா தெரியும் என்று எட்டிப் பார்த்தேன். அன்று எனக்கு அமாவாசையா என்று தெரியவில்லை சிறு ஒளி கூட எட்டிப் பார்க்கவில்லை. வேறு எங்கும் ஒளி இருக்க வாய்ப்பே இல்லை. மீண்டும் என்னை இந்த இருள் நினைவலைகளில் முழ்கச் செய்தது.
சூரியன் சுள்ளென்று அடித்த மதிய வேளை. நானும் அவளும் இந்த வெயிலை பொருட்படுத்தாமல் பாறை உருண்டோடிக் கொண்டிருக்கும் மலைக்கோயிலுக்கு கீழே நின்று கொண்டிருந்தோம்.
" போலாமா ?", அவள் கேட்டாள்.
"கண்டிப்பா, செறுப்ப எங்க கழட்டி விடுறது ?".
" அதோ அந்த அக்கா ட்ட சொல்லிட்டு பக்கத்துலயே கழட்டிட்டு வா", என்றாள்.
"அந்த அக்கா ஒன்னும் சொல்லமாட்டாங்கலா ?".
" விளக்கு வாங்கிருக்கேன், ஒன்னும் சொல்ல மாட்டங்க, போ", என்றாள். அந்தச் சிறிய கடை அருகே என் செறுப்பை கழட்டி விட்டு வந்து நானும் அவளும் படிகளில் ஏற ஆரம்பித்தோம்.
" எதுக்கு தீடீர்னு இங்க வரலாம் னு சொன்ன ?", என்று கேட்டேன்.
" மேல போனா உனக்கே தெரியும்", என்றாள்.
"உனக்காகக் கூட நான் கடவுள் இருக்குனு ஒத்துக்க மாட்டேனு தெரியும்ல", என்றேன்.
" ஒன்னய யாரு இப்ப ஏத்துக்க சொன்னுது ", சற்றே என்னை எத்தனித்தாள்.
" நீ சொல்லல நாலும் நானே தெளிவு படுத்திட்டேன் ஒனக்கு, இது நான் எதோ பெருமைக்காக எடுத்த முடிவில்லை னு உனக்குத் தெரியும் ல", என்றேன்.
"போதும் பா, எத்தன தடவை இதையே சொல்லுவ, இன்னும் நாலு படி ஏறுனா கோயிலே வந்துரும் ", என்றாள்.
சட்டென்று இரண்டு இரண்டு படியாகத் தாண்டி அவளை முந்தி, கோயில் கிராரத்தில் நுழைந்தேன். சில்லென்ற காற்று என் உடலை நனைத்துக் கொண்டிருந்த அத்தனை ஈரத்தையும் எடுத்துக் கொண்டு சென்றது. எதிரே பூசை செய்ய ஆள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தான் அவன். வேறு யார் தமிழ்நாட்டின் மலைகளையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கும் முருகனே தான்.
" எங்க யாரும் இல்ல", அவளிடம் கேட்டேன்.
"மதியானம் சாப்பட போயிருப்பாங்க", யோசிக்காமல் சொன்னதை பார்த்தால் நேரம் பார்த்துத் தான் கூட்டி வந்திருக்கிறாள் என்று தோன்றியது.
நானும் அவளும் கருவரைக்கு முன்னே நின்று கொண்டிருந்தோம். ஏதோ கண்களை மூடி வணக்கிக் கொண்டிருந்தாள்.
" எனக்காக வேண்டுறியா", சிரித்துக் கொண்டே கேட்டேன்.
" இல்ல எங்க அப்பாக்காக ", என்றாள்.
" அவருக்கு எதுவும் ஆகாது, நல்லவங்கள முருகன் கை விடமாட்டான் ல", என்றேன்.
"நீ சொன்னா சரி தான்", என்றாள்.
கேட்பாரற்று கிடந்த திருநீர் தட்டிலிருந்து திருநீரை எடுத்து எனக்குப் பூசி விட்டாள்.
" கடவுள் நம்பிக்கை இல்லனு சொல்லிட்டு துண்ணூர் லாம் பூசிக்கிற", என்றாள்.
" நான பூசினேன், நீதான பூச விட்ட, நீ பூசி விட்டத அழிக்கவா சொல்ற", என்றேன்.
" அப்போ நான் பூசிவிட்ட அழிக்க மாட்டியா", என்றாள்.
"யாரு பூசிவிட்டாலும் அவங்க முன்னாடி அழிக்கமாட்டேன்", அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே கூறிய பதில் அது.
" ஒனக்கு ஒன்னு காட்லாம் னு நினைச்சேன், சரி வேணாம்", என்றாள்.
என்னை ஆர்வ மேடைகளில் ஏத்திவிட்ட பதில் கூறாமல் அலைய விடுவதில் அவளுக்கு என்றுமே ஆனந்தம் தான்.
" என்ன அப்படி காட்ட போற", என்றேன்.
" இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் வருவோம்", என்றாள்.
" அந்த அளவுக்குலாம் பொறுமை இல்ல, என்னனு இப்பவே சொல்லு", என்றேன்.
"சரி வா", என்று என் கைகளைப் பற்றிக் கொண்டு கோயில்பின் பகுதிக்கு இழுத்துச் சென்றாள். பின்னே பல படிகளை ஏற்றுக் கொண்டு அந்த மலை, இன்னும் உயரத்திற்கு சென்று கொண்டிருந்தது.
" மேல போலாமா?", என்றேன்.
" கொரங்குலாம் இருக்கும், பரவால யா", என்றாள்.
" அதெல்லாம் பாத்துக்கலாம் வா", என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு படிகளில் ஏற ஆரம்பித்தேன்.
இருவர் மட்டுமே இணைந்து செல்வதற்கு ஏற்று குறுகிய படிகள். பிடித்துக் கொள்ள கம்பிகள் கூட இல்லை. சர சரவென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஏறிக் கொண்டிருந்தேன்.
" மெதுவா போலாம் ல", என்றாள்.
" வேகமா போயிரலாம், வரப்ப மெதுவா வந்துக்கலாம்", என்றேன். குரங்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாவிக் கொண்டிருந்தன. எல்லாம் குழந்தை குரங்குக்கள். அவற்றின் தாய்மாறை காணும் பாக்கியம் அன்றைக்கு எனக்குக் கிட்ட வில்லை.
" பல மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி, நாமெல்லாம் அண்ணண் தங்கச்சிங்க னு தெரியும்ல", என்றேன்.
" அவங்க கிட்டயும் ஒன் பாலப் போன அறிவியலை ஆரம்பிக்காத", என்றாள். "சரி", என்றுக் கூறிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் மலை உச்சிக்கு வந்து சேர்ந்தோம். மேலே முருகனின் அண்ணன் ஆனைமுகத்த தானின் சந்நிதி.
" நீ இங்கயும் வந்துட்டியா ", என்றேன் கிண்டலாக.
கோயிலைச் சுற்றியும் காதலர்களின் பெயர்கள் விளக்கு எண்ணைப் பசையால் எழுதப்பட்டிருந்தது.
" இங்க யாரும் வர்ரது கூட இல்ல போல", என்றேன்.
" உச்சில இருக்க நால வர்றது இல்ல போல ", என்றாள்.
" அணைந்த விளக்கின் அருகில் இருந்த கருஞ்சாந்தை எடுத்து இருவரின் பெயர்களையும் இடையே ஹார்டினையும் இட்டிக் கொண்டிருந்தேன்.
" எதுக்கு தேவ இல்லாம பண்ணிட்டு இருக்க", என்றாள்.
" இது வரலாறு டி", சிரித்துக் கொண்டே கிறுக்கிக் கொண்டிருந்தேன்.
சட்டென என் கையைப் பிடித்தவள், என்னை மலை விளிம்பிற்கு அழைத்துச் சென்றாள்.
" எவ்ளோ பச்சயா இருக்கு", என்று தூரத்தில் தெரியும் கருப்புத் தோட்டத்தைக் காட்டிக் கொண்டிருந்தால்.
"ஆமா, அறுவடை சமயம் ல", என்றேன். சட்டென என் கைய பற்றி என் முகத்திற்கு அருகில் வந்தால்.
" முத்தம் கொடுக்கப் போறியா ", என்றேன் கிண்டலாக.
" ஆமா", சற்றும் ஆட்சேபனை இல்லை அவள் குரலில்.
திடீரென்று ஒரு துளி நீர் மேலே இருந்து என் முகத்தில் வந்து வீழ்ந்தது. விழித்துப் பார்த்தால் மீண்டும் அதே இருண்ட அறைக்குள்ளே நான். வெளியே சட சட வென்று மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அதைக் கூட அறியாமல் நினைவலைகளில் மூழ்கிப் போயிருந்தேன். சிறிது நேர இன்பம் இந்த மழைக்கு பொறுக்க வில்லை போலும். மழை வந்தால் மின்னல் வரும் அல்லவா, அப்போது கண்டிப்பாக அந்தக் கண்ணாடி சுவட்டில் ஒளி தெரியும் என்று நினைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இந்திரனுக்கு கூட நான் வாழ்வது பிடிக்க வில்லைபோல என்று நினைத்துக் கொண்டேன். சிறிதேனும் கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் கூட எந்தக் கடவுளேனும் உதவிக்கு வந்திருப்பார்கள். மின்னலில்லா மழை அவளில்லா வாழ்க்கை. இரண்டுமே அழகற்றது தான் என்று எண்ணிக் கொண்டேன். சற்றே முடியப் போகிறது, அவ்வளவுதான். சிறிது நேரம். அவளுக்கும் அவள் இறக்கப் போவது தெரிந்திருந்தது. எப்பேற் பட்ட துயரத்தில் இருந்திருப்பால். என்னை விட்டுச் செல்ல முடியாமல் நிச்சயமாகத் தவித்திருப்பாள். ஒவ்வொரு நொடியிலும் தவித்திருப்பால். நான் ஒளியைத் தேடுவதைப் போல, நிச்சயம் அவள் என்னைத் தேடியிருப்பாள். திடீரென்று என் மெத்தை சிறு அதிர்வை ஏற்படுத்தியது. என் செல்போன் இல் இருந்து ஒளி, இந்த இருளின் சிறு பகுதியைக் கிளித்துக் கொண்டிருந்தது. இகுதியாக ஒளியைக் கண்டு கொண்டேன். என்னையே அறியாமல் கண்களில் தண்ணீர். செல்போனை எடுத்துப் பார்த்தேன், சார்ஜ் பத்து சதவிகத்திற்கு கீழ் வந்ததால் ஏற்பட்ட குருஞ்செய்திக்கான ஒளி அது. சற்று திகைத்து என் செல்போனை சார்ஜில் சொறுகினேன். பெறும் மாற்றம் இல்லை என்றாலும் கூட நாளை ஒர் நாள் நான் உயிரோடு இருக்கப் போகிறேன். நாளை என்னக் கொண்டு வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாளை நான் உயிரோடு இருக்கப் போகிறேன். கண்டிப்பாக அவளும் இதையே தான் விரும்பி இருப்பாள்.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...