இதயம்

கற்பனை
4 out of 5 (1 )

கௌசல்யா சுப்ரஜா...பாடல் ஒலித்துக் கொண்டிருக்க..சிட்டுக் குருவிகள் பாட்டு இசைக்க.. சூரியக் கதிர்கள் ஜன்னல் சாரலத்தின் வழியே ஊடுருவி மதியின் முகத்தில் கோலமிட்டுக்கொண்டிருந்தன..இத்தனை சப்தங்களுக்கு இடையே நிசப்தமில்லாமல் மதி தூங்கிக் கொண்டிருந்தாள்..அலாரம் 6.15 ஐ எட்டும் போது ஒலித்தது..

சட்டென கண்விழித்து எழுந்தாள்..காலையில் நடைபயிற்சி முடித்து பார்வதியின் காபிக்காக காத்துக் கொண்டிருந்தார் நடராஜன்..

" குட் மார்னிங் " அம்மா.

"காஃபி பிளீஸ்" ...

அப்பா வாக்கிங் போயிட்டு வந்துட்டாரா? என்று கேட்டுக் கொண்டே ஹாலுக்கு சென்றாள் மதி.

அங்கு நடராஜன் நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தார்.

"குட் மார்னிங்" மதி..என்ன சீக்கிரம் எழுந்திட்ட ?

ஆமாம் பா எனக்கு இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு..அதான் சீக்கிரம் எழுந்திட்டேன்..

சரி அம்மாவ சீக்கிரம் டிபன் செய்ய சொல்லு மதி..நான் இன்னிக்கு முன்னாடியே ஆஃபிஸ் போகனும் என்றார் நடராஜன்..

சரி அப்பா..நானும் காலேஜ்க்கு சீக்கிரம் போகனும்..

அம்மாவுக்கு அடுப்படியியல் உதவி செய்துவிட்டு,மதி கிளம்பினாள்.

அப்பாவையும்,மகளையும் அனுப்பி விட்டு பார்வதியம்மா சற்று கண் அயர்ந்தாள்.

மணி 10 ஐ எட்டியதும், எழுந்து தன் கைபேசியில் ஓர் எண்ணுக்கு கால் செய்தார் பார்வதி.

"ஹலோ" எப்படி இருக்க பா? சாப்டியா? இந்த வாரம் எண்ணெய் தேய்ச்சு குளிச்சியா? என்று எதிர் முனையில் தன் மகன் வருணை பேச விடாமல் விசாரித்துக் கொண்டிருந்தார் பார்வதி.

நடராஜன் பார்வதியின் மூத்த மகன் தான் வருண்,மதியின் அண்ணன்.படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் சராசரி பொறியியல் பட்டதாரி.

அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி இன்றுடன் 3 மாதம் ஆகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பார்வதி.

கவலைபடாத மா..நான் என் நண்பன் கிட்ட கேட்டிருக்கேன்..இன்னும் 2 மாசத்துல எப்படியும் வேலை கிடச்சிரும்..வேலையோட தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் வருண்.

கவலையில் துவண்டு கொண்டிருந்தார் பார்வதி..

மதி அரசு ஓவியக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி..நன்றாக ஓவியங்கள் வரைந்து பலரிடம் பாராட்டு பெற்றவள்.அன்று மதியின் கல்லூரியில் மாநில அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது. அதில் அவள் கலந்து கொண்டாள்.

போட்டியில் மதி இரண்டாம் இடம் பிடித்தாள்.

அம்மா, இன்னிக்கு எனக்கு செகண்ட் பிரைஸ்..என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

சந்தோஷத்துடன் மதிக்கு முத்தமிட்டாள் பார்வதி.என்னம்மா ஒரு மாதிரியா இருக்க..உடம்பு சரியில்லையா என தொட்டு பார்த்தாள் மதி..

அதெல்லாம் ஒன்றுமில்லை டா..தலைவலி தான்..

அண்ண கிட்ட பேசினியா மா? அண்ணனை நினைச்சு கவலை பட்டு கிட்டே இருக்க! அதான் உனக்கு தலைவலி..

தன் மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் மதியை கட்டிஅணைத்துக் கொண்டு அழுதாள் பார்வதி.

சரியாகிடும் அம்மா..கவலைபடாத என்று ஆறுதல் கூறினாள் மதி்.

அலுவலகத்தில் இருந்து நடராஜன் வந்தவுடன் பார்வதி நடந்தவற்றை கூறினாள்..

நீங்க ஏதாவது வேலை வாங்கி தர கூடாதா? பாவம் அவன் 3 மாசமா கஷ்டபட்டுகிட்டு இருக்கான்.எப்படி இருக்கானோ,என்ன பண்றானோ தெரியலையே? என்றாள் பார்வதி்.

நானும் தெரிஞ்சவங்க கிட்டலாம் சொல்லி வச்சிருக்கேன்.அன்னிக்கு நான் என்ன கேட்டேன்னு அவன் அப்படி கோவப்பட்டு வெளிய போனான்.

என்ன வேலைக்கு போகலாம்னு ஐடியா வச்சிருக்க? எப்ப போக போரனு தான் கேட்டேன்..அதுக்கு அவன் நான் என்ன போக மாட்டனா? எப்ப பார்த்தாலும் இந்த வீட்ல இதையே கேட்டு தொல்லை பண்றீங்க.."ச்ச"! அப்படீன்னு சொல்லிட்டு போயிட்டான்.

பெத்தவங்க பசங்க நல்லா இருக்கனும் அப்படிதான் நினைப்பாங்க..அவன்தான் என்ன புரிஞ்சுக்கல..பசங்களுக்கு அப்பா எப்பவுமே எதிரிதான் என்று சொல்லிட்டு நடராஜன் படுக்க சென்றார்.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவுல நம்ம வாங்கின இந்த பரிசு முக்கியமில்லனு அப்பா கிட்ட காட்டாமல் மதி தூங்க சென்றாள்.

காலை நேரம்...மதி கல்லூரிக்கு செல்ல தயாரானாள்..

அம்மா..அம்மா..! என்ன அம்மா இன்னும் எழுந்துக்கல போல இருக்கே? என்று அம்மாவிடம் சென்று பார்த்தாள் மதி. அம்மா உடம்பெல்லாம் இப்படி ஜூரம் அடிக்கிதே!அப்பா... இங்க வாங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல..

என்னம்மா ஆச்சு..நடராஜன் வந்து பார்த்துவிட்டு ஹாஸ்பிட்டல் போலாம் மதி என்று இருவரும் அழைத்து சென்றனர்.டாக்டர் பாத்திட்டு சாதரண காய்ச்சல் தான், 3 நாள்ல சரியாகிடும் என்றார்.

மதி போன் செய்து வருண்ணிடம் பேசினாள்.வருண் அம்மாவை பார்க்க வந்தான்.அவனுக்கும் கஷ்டமாக இருந்தது அம்மாவை பார்க்க...பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் கண்களில் கண்ணீர் உடன் சென்றான்.

ஒரு வாரம் கழிந்தது...

மதி போன் செய்து வருணிடம் நேராக பேச வேண்டும் என்றாள்.வருண் கோயிலுக்கு வரச்சொன்னான் மதுவை.

வேலை பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்..சிறிது நேரம் கழித்து இருவரும் சென்றனர்

நடராஜன் தன் அலுவலக வேலையை வி.ஆர்.எஸ் செய்து விடலாமா என்ற யோசனையில் இருந்தார்.

மதி தன் கல்லூரியில் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.பல கல்லூரியில் பயிலும் பல மாணவர்கள் இப்போட்டியில் பங்கு கொள்ள வந்திருந்தனர்.

போட்டி ஆரம்பமானது.தன் எண்ண ஓட்டங்களை மனதில் நிறுத்தி,தன் கற்பனை வளத்தைக் கூட்டி ஒரு அழகான ஓவியத்தை வரைந்தாள் மதி.எப்படியாவது இப்போட்டியில் முதல் பரிசு பெற வேண்டும் என முயற்சி செய்து வரைந்தாள் மதி.

போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மூன்றாம் பரிசு சுந்தர்,பி.காம் 2 ஆம் ஆண்டு, மதி பெரும் வியப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.இரண்டாம் பரிசு ஸ்வேதா ,பி.இ,3 ஆம் ஆண்டு.

முதல் பரிசு....

எல்லோரும் யாராக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

முதல் பரிசு மதிவதனி, 3 ஆம் ஆண்டு ஓவியக் கல்லூரி மாணவி.

என்று அறிவிக்கப்பட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டாள் மதி.

மதிக்கு முதல் பரிசாக 3 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

அன்று வீட்டுக்கு சென்றதும் எல்லோரிடமும் தன் பரிசைக் காட்டி சந்தோஷப்பட்டாள் மதி்.

அடுத்த நாள்...

அம்மா தன் உடல் நிலை தேறி தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

உடம்பு இப்ப பரவாலயா அம்மா..காபி போட்டு தரட்டுமா? என்றால் மதி..நான் குடிச்சிகறேன் டா..இப்ப எனக்கு உடம்பு சரியாகிடுச்சு..நீ அப்பா என்ன பண்றார் னு பார்த்திட்டு வாடா என்றாள் பார்வதி..

அப்பா...அப்பா..என அழைத்துக் கொண்டே மதி அவர் அறைக்கு சென்றாள்..அப்பா தூங்கிக் கொண்டிருந்தார்.

மணி 7 ஐத் தொட்டிருந்த நிலையில் அப்பாவை எழுப்பினாள் மதி.

என்னப்பா உடம்புக்கு முடியலையா? எப்பவும் சீக்கிரம் எழுந்திருச்சிடுவீங்க..

இல்ல மதி நல்ல தூங்கிட்டேன் என்றார்.காலை உணவு சாப்பிட்டு எல்லோரும் தங்கள் பணிக்கு திரும்பினர்.அன்று வெள்ளிக்கிழமை..மாலை வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார் நடராஜன்.

மதியும் வீட்டுக்கு கொஞ்ச நேரத்தில் வந்தாள்.மாலை நேர தேநீர் பருகியபடி தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மணி 7 ஐத் தொடும் போது வருண் வீட்டிற்கு வந்தான்.கையில் இனிப்புப் பண்டங்களை வாங்கி வந்திருந்தான்.

அம்மா...அப்பா.... மதி...என்று முக மலர்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

வருண் குரலைக் கேட்டதும் வீட்டில்உள்ள எல்லோரும் மிக மகிழ்ச்சியுடன் வந்து அவனை கட்டி அணைத்தனர்.

அம்மா,அப்பா காலில் வருண் விழுந்து வணங்கினான். அவர்கள் ஆசீர்வதித்தனர்.அவனது சந்தோஷத்திற்கு காரணம்,அவன் நினைத்தது போலவே வேலை கிடைத்து விட்டது என்று அனைவரும் எண்ணிணர்.

என்னப்பா வருண் வேலை கிடச்சிருச்சா? என பார்வதி கேட்டாள். முதலில் எல்லோரும் இனிப்பு எடுத்துக்கோங்க என்றான் வருண்.

எனக்கு வேலை கிடைத்துவிட்டது மா என்றான் வருண்.ரொம்ப சந்தோஷம் பா..நல்லா இருக்கணும் பா..என்றார் பார்வதி.

அப்பாகிட்ட பேசு பா..பாவம் அவரும் நீ இல்லாத ரொம்ப வருத்தபட்டார்.

அம்மா..நான் அப்பா கிட்ட முன்னாடியே பேசிட்டேன் என்றான் வருண்.அப்படியா! எப்போது பேசினீங்க?

அது ஒரு கதை மா..நான் சொல்றேன் கேளுங்க..

போன வாரம் அப்பா என்ன பார்க்க வந்தாரு..வேலையை பத்தி பேசினார்..பிசினஸ் பன்றியான்னு கேட்டாரு..உனக்கு பிடிச்சத பண்ணு..பணம் தேவைப்பட்டா கேளு..பணத்தோடமதிப்புதெரிஞ்சு உபயோகம் பண்ணு.யாருகிட்டையும் பணத்த கொடுத்து ஏமாறாத..இப்போதைக்கு இந்த பணத்தை வச்சிக்கோ.. அப்படின்னு சொல்லி பணம் கொடுத்தாரு மா..என்றான் வருண்..

அப்பா வந்திட்டு போன 2 நாளுக்கு அப்பறம் மதி என்ன பார்க்க வந்தா..அவ வரைந்த ஓவியத்துக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை என்னிடம் கொடுத்தாள்.இதை வேலை தேட தேவைபடுத்திக்கோ என்றாள்.

ஓ...இவ்வளவு நடந்துருக்கா!!! அப்பாவும் சரி, மதியும் சரி என்னிடம் இதைப் பற்றி சொல்லவே இல்லையே என்றாள் பார்வதி்.

உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சிருக்காங்க போல இருக்கு, என்றான் வருண்.

சரி..வேலைக்கு சேர எவ்வளவு செலவு ஆச்சுபா..

அதுவே அப்பா குடுத்த 5 லட்சம், மதி கொடுத்த 3 லட்சம் மொத்த 8 லட்சம் அம்மா என்றான் வருண்.

நல்ல வேலையா பா..பணத்த ஏமாத்த மாட்டாங்களே என்று வெகுளி தனத்துடன் கேட்டாள் பார்வதி.

அதெல்லாம் இல்ல மா..இதோ பாரு வேலைக்கு சேர்ந்த 2 நாள்ல அந்த 8 லட்சத்தையும் கொடுத்துட்டாங்க.

என்னப்பா சொல்ற..நிஜமாவா?

சும்மா சொன்ன மா..நான் அப்பா,மதி கொடுத்த பணத்த வச்சு வேலைக்கு சேரல..என்னோட தகுதிக்கு கிடைத்த வேலை இது..

இந்தாங்க பா நீங்க கொடுத்த பணம்.மதி் இந்தா உன்னோட பணம்..

உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைச்சதுங்க,என்றாள் பார்வதி.

நான் என் வேலையை வி.ஆர்.எஸ் கொடுத்திட்டன் என்றார் நடராஜன்.

அதுவும் நல்லது தான் பா...இனிமே நீங்க ஓய்வு எடுத்துகோங்க என்று அன்போடு சொன்னான் வருண்.

இனி நான் வேலைக்கு போயி உங்க எல்லாரையும் பாத்துக்கறேன்..

நம்ம மதி படிக்கும் போதே பணம் சம்பாதிச்சிரிக்கா பாரு..வெரி குட் மதி..என்றான் வருண்.

ஆமா அந்த பணத்த எனக்கு கொடுக்கனும்னு எப்படி தோணுச்சு.

தேங்யூ டா அண்ணா!!!

அதுவே வேற ஒன்றுமில்லை..

உன்ன நினைச்சு வீட்ல எல்லாரும் கவலை பட்டிட்டு இருந்தோம்.அந்த நேரம் தான் என்னோட ஓவியப் போட்டி வந்தது.

அதில் நான் எடுத்து கிட்ட தலைப்பு " இதயம் ".

அதை மையமா வைத்து தான் என்னும் ஓவியத்தை வரைந்தேன்.

இந்த சின்ன இதயம் எத்தனை உணர்வுகளை,உறவுகளை,பந்தங்களை, பாசங்களை,அன்பு,மகிழ்ச்சி, துக்கம்,ஏக்கம்,ஆசை அப்படின்னு எவ்வளவு விஷயங்களை சுமக்கிறது..

இந்த இதயம் பலமாக இருந்த நாம நல்ல இருப்போம்.

இதயம் பலமா இருக்கணும்ணா,நம்ம குடும்ப உறவுகள் பலமா இருக்கணும்.

இந்த விஷயம் தான் எனக்கு தோணிச்சு என்றாள் மதி.

எல்லாரும் வாயடைத்த போனார்கள்..இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய விஷயம் யோசிச்சு இருக்க..

யு ஆர் கிரேட், என்றான் வருண்.

மத்தவங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கற எல்லா இதயமுமே நல்ல இதயம் தான் என்றார் நடராஜன்.

எப்படியோ நம்ம எல்லாரும் இப்போ திரும்ப பழைய படியே ஒத்துமையா ஒண்ணா வாழப் போறோம்.. அதுவே எனக்கு போதும் என்றார் பார்வதி்.

பார்வதி அம்மா எல்லாருக்கும் திருஷ்டி எடுத்தார்கள்..

மதி,வருண்,நடராஜன்,பார்வதி அனைவரும் ஆனந்த மழையில் நனைந்தனர்

நன்றி

சுபம்

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...