JUNE 10th - JULY 10th
கி.பி.2035ம் வருடம். சென்னை
நவநாகரீக வளர்ச்சி அடைந்த நகரம்..
எங்கும் டெக்னாலஜி எதிலும் டெக்னாலஜி என்று ஓங்கி வளர்ந்திருந்தது மாநகரம்.. மனிதர்களைவிட அறிவியல் ஆதிக்கம் வளர்ந்து இருந்த வேளை...
உலகையே உலுக்கும் மனிதனை ரோபோவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார் jacob.
ரோபோக்களை பற்றிய ஆராய்ச்சியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டவர் இதற்காகவே தன் குடும்பத்தையே பிரிந்தார்.. தன் மகனை இந்த மனித ரோபோ முயற்சியில் ஈடுபடுத்த அதில் அவர் மகன் இறந்துவிட அதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவி தன் மகளை அழைத்துக்கொண்டு கண்காணாத தேசம் சென்றுவிட..இருப்பினும் தன் முயற்சியை கைவிடாமல் செய்து அதில் வெற்றியும் கண்டார் jacob.
மனித உடலில் உள்ள DNA வில் ரோபோ பற்றிய அணுக்கதிர் ஊசியை செலுத்தி DNA வை செயலிழக்க வைத்து 25 நாட்களில் முழு ரோபோவாக உருமாற்றம் செய்ய முடியும்..என கண்டுபிடித்தார்.
ஆனால் அந்த ஊசியை தாங்கி மரணம் வரை செல்லக்கூடிய ஒரு உடல் தேவை அதிலும் அவன் பலசாலியாகவும் அதேசமயம் உயிரையும் விடக்கூடியவனாகவும் வேண்டும் என்பதற்கு தேடி அலைந்தார்..அவனுக்கு பணமும் கம்மியாக கொடுக்கவேண்டும்.. அதனால் ஏழையாகவும் குடும்ப வாழ்க்கை வறுமையின் பிடியில் இருப்பவனாகவும் தேடினார்..அப்போது தான் அவரிடம் சிக்கினான் அவன்.
தன் குடும்ப வறுமை காரணமாக ஒரு ஜிம்பாய் போல உடலை வளர்த்துவிட்டவன்..படிப்பறிவு இல்லாததால் வேறு ஒரு கம்பெனியில் வாட்ச்மேன் வேலைக்கு சென்று கொண்டு இருந்தான்.. சஞ்சய்..
அவனை அதிக விலைக்கு பேரம் பேசினார் jacob.. தன் குடும்ப வறுமைக்காக அவனும் அவனையே இழக்க தயாராய் இருந்தான்..ஆனால் பணத்தை முதலிலேயே தன் குடும்பத்திற்கு கொடுத்து விட வேண்டும் என கூறியதால் அவரும் சரியென ஒத்துக்கொண்டார்..கிட்டத்தட்ட மரண சாசணம் எழுதி கொடுத்து விட்டது போல எழுதி கையெழுத்து போட்டு வாங்கி கொண்டு அவன் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து விட்டு அவனை அழைத்து சென்றார்..குடும்பத்தினருக்கும் எதுவும் சொல்லாமல் அவர் தன்னை வெளிநாட்டு வேலைக்கு அழைத்து போவதாக கூறியவன்.. எனக்கு நான்கு ஆண்டு காலம் வேலை எனவும் பணத்தை அனுப்பினால் தாயால் எடுக்க இயலாது அதனால் கையில் காசை கொடுக்க கேட்டதாக சொல்லி கிடைத்த பணத்தை தன் தாயிடம் கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றான்.. வரப்போகும் ஆபத்தை உணர்ந்தே இருந்தான் அவனும்.. ஆனாலும் தன்னால் தன் குடும்பத்திற்கு உதவமுடிந்ததை எண்ணியபடி கிளம்பினான்..ஆனால் தன்னால் நிறைய பேர் அழிவார்கள் என்று அவன் முன்னமே தெரிந்திருந்தால் இதற்கு ஒத்துக்கொண்டு இருக்க மாட்டானோ என்னவோ..???
அவன் விதி அவனை இப்படி இழுத்து செல்லும் போது யாரால் அதை மாற்ற இயலும்.
அவனை அங்கிருந்த தனது பெரிய ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்து சென்றவர் ஒரு டாக்டரை வரவழைத்து அவனது உடல்பலம் பற்றி ஆராய சொன்னார் அவரும் ஆராய்ந்து விட்டு ஓகே சொல்ல சரியென அவனுக்கு ஊசியை செலுத்தினார்.
அவன் முதுகெலும்பில் நடு விலா எலும்பு சேருமிடத்தில் ஊசி செருகப்பட உயிர்போகும் வலியை உணர்ந்தான் சஞ்சய்..
ஆனால் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவனால் அசையக்கூட முடியாமல் அலறினான். ஓஓஓஓவென கத்தியவன் மருந்து முழுதும் செலுத்தியதும் மயக்கம் ஆனான்.. அவனை கட்டிலிருந்து அவிழ்த்து ஒர் அறையில் மீண்டும் கைகால்கள் கட்டபட்டு chemicals நிறைந்த தொட்டியில் கிடத்தப்பட்டான். அந்த நேரம் அவன் உடல் விரைத்து போய் இருந்தது..அவனது சுவாசம் முற்றிலும் நின்றிருந்தது.. ஆனால் இதயம் மட்டும் துடித்துக்கொண்டு இருந்தது.
முதல் நாள்..
அவன் உடலை embalming செய்தார்.
embalming என்பது உடலை பதபடுத்துவது..பெரிய பெரிய விஐபிக்களின் உடலை பதப்படுத்துவார்கள்..பண்டைய காலத்தில் Egyptians உடலை பதபடுத்தி பிரமிடுகளில் மம்மியாக வைத்து இருப்பர்.. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அது பயன்படாமல் உடல் அழுகிவிடும். பிறகு வந்த சீனர்கள் அதை நவீன மயமாக்கினர் அதனால் உடல் நீண்ட வருடங்களுக்கு கெடாமல் அப்படியே பாதுகாக்கலாம். அதே முறையை அவரும் பயன்படுத்தினார்..
முதலில் blood and other fluids எல்லாவற்றையும் வற்ற வைக்க வேண்டும். அதன்பின் Embalming solutionஐ ஊசி முலம் உள்ளே செலுத்த வேண்டும்..அதுவும் artery எனப்படும் இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்..
அதுவும் முதலில் வலதுபக்கம் இதயத்தில் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.. அவ்வாறு செலுத்த அவன் இதயமும் துடிப்பை நிறுத்தி விட்டது..உடலின் எல்லா பாகங்களிலும் அந்த solution சீராக செலுத்தப்பட்டது. அப்படி அந்த solutionல் என்ன கலப்பார்கள்...
Embalming solution என்பது formaldehyde and methanol கலந்த கலவை.. இது இரண்டும் அதிகம் இருக்கும் மற்ற கலவைகள் விகிதம் கம்மி இருக்கும்..
formaldehyde என்பது ph அளவை கட்டுக்குள் வைக்கும் இந்த solution நமது உடலின் செல்லை சுற்றி படிந்து விடும்.ஏனெனில் பாக்டீரியாக்கள் அதை தாக்காத வண்ணம் பாதுகாக்கும் அதுதான் உடலை பதபடுத்துவது..இந்த solutionல் அதிகம் பயன்படுத்த படும் மற்றொரு வேதிப்பொருள் ஆல்கஹால்.. ஆல்கஹால் உடல் வேகமாக உலர்வதை தடுக்கும் உடலின் humidity level எப்போதும் சீரான நிலையில் இருக்க உதவும். இதையெல்லாம் சேர்த்து அவன் உடலை பதப்படுத்தியவர் அவன் இதயம் துடிப்பை நிறுத்திய இரண்டாம் நாள், அவன் இதயத்தில் சிறு அறுவை சிகிச்சை செய்து அதில் ஒரு சிப் பை பொறுத்தினார்.
embalming செய்யப்பட்டதால் அவன் உடல் அழுகாமல் இருந்தது..அந்த சிப்பின் IMEI noஐ தன் கணிணியுடன் இணைத்து அதை activate செய்ய..அப்போது இதயம் துடிக்க ஆரம்பித்தது. இயற்கையாக அல்ல செயற்கையாக.
அந்த சிப்பின் மூலம் அவனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் செயல்பட வைக்க இருபது நாட்கள் ஆனது..இப்போது அவன் ஒரு ரோபோ போல கட்டளைகளை இதயத்தின் மூலம் ஏற்று உட்கார நடக்க ஆரம்பித்தான்..இதையெல்லாம் கவனமாய் செய்தவர் அவன் மூளையை கட்டுப்படுத்துவது பற்றி அறியாமல் விட்டு விட்டார்..சிப் இதயத்திலிருந்து கட்டளைகளை பிறபிக்க சிப்பின் விளைவால் அவன் மூளை தனியே சிந்திக்க துவங்கியது..இதை கவனியாத jacob அவனுக்கு சில பயிற்சிகளை கொடுக்க அவன் அதை வேறு மாதிரி செய்யத்துவங்கினான் சஞ்சய் என்னும் மனித ரோபோ.
இவரோ புரியாமல் தனது கோட்களை செக் செய்ய எல்லாம் சரியாக இருக்க..எதற்கும் இருக்கட்டும் என தான் இதுவரை செய்த எல்லாவற்றையும் ஒரு fileஆக மாற்றி தனது பால்ய நண்பரான பிரபல psychologist cum scientist ஆன சக்திக்கு mail அனுப்பினார்.
கூடவே அவரது கண்டுபிடிப்பில் நடக்கும் குறையையும் அனுப்பினார்..அவரிடம் ஆலோசனை கேட்க.. அவர் பார்த்து விட்டு நாளை சொல்கிறேன் என்று சொன்னார்.. ஆனால்.
மறுநாள்.
jacob கொடூரமாக அவரது laboratoryல் கொல்லப்பட்டு கிடந்தார் என்ற தகவல் மட்டுமே சக்திக்கு வந்தது.
போலீஸில் அனுமதி கேட்டார் சக்தி labன் cctv footage கேட்டார்..ஆனால் அவர் பெற்ற தகவலோ அந்த footage எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதே.
சரியென யோசித்தவர் இவரே அங்கு சென்று தடயம் தேட permission கேட்க முதலில் மறுத்த கமிஷ்னர், பின்பு என்ன தோன்றியதோ
"சரி நீங்க தேடலாம் ஆனால் உங்க கூட எஙக officer ஒருத்தர் இருப்பார்..அவருக்கு all details நீங்க கொடுக்கனும்" என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தார். சக்தியும் ஒத்துக்கொள்ள தமிழகத்தின் புகழ்பெற்ற இதுபோன்ற கொலை கேஸ்களை கவனிக்கக்கூடிய ஸ்பெஷல் ஆபீசர் ஏ.சி.பி. ஹர்வாவை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.. வெளியூரில் இருந்தவன் புருவங்கள் முடிச்சிட இந்த நியூஸைத்தான் பார்த்தபடி புருவங்கள் முடிச்சிட அமர்ந்திருந்தான்.. அவனுக்கு இந்த கேஸில் மேலும் ஏதோ இருப்பதாக பட்டது.. அந்நேரம் அழைப்பு வர.. எடுத்தவன்..
எதிர்முனையில் சொன்ன செய்தி கேட்டு..
"ம்ம்..பார்த்தேன்.. எனக்கும் அது புரியாத புதிரா இருக்கு..மேபீ அவரை பார்த்து பேசினா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு தோணுது..நான் கிளம்பிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்.. அதுவரைக்கும். அவரை கண்காணிப்புலேயே வெச்சு இருங்க.." என்றுவிட்டு புயலென புறப்பட்டு சென்றான் சென்னை நோக்கி..
சக்தி அங்கு காத்திருக்க..
சற்று நேரத்திற்குள் அங்கு வந்து சேர்ந்தான் A.C.P. Harsha...
சக்தியை சந்தித்த harsha தன்னை அறிமுகம் செய்துக்கொள்ள இருவரும் அறிமுகம் செய்து கொண்டு ஒன்றாக கிளம்பினர் jacobன் laboratoryக்கு. அங்கு ஆராய ஏதும் கிடைக்காமல் சோர்ந்து போனான் ஹர்ஷா ஆனால் சக்தி ஓயாமல் தேடியதில் அங்கே அவர் கண்ணில் பட்டது ஒரு மரத்தின் பட்டையில் கூர்மையான பகுதியில் சிறிய சதைப்பகுதி தென்பட்டது.. அதை கைபடாமல் எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்த அதை பார்த்த ஹர்ஷா
"இது என்ன sir.. jacob sirவோட சதைத்தானே இதை வெச்சு என்ன செய்ய போறீங்க?" என்றான் ஹர்ஷா
"கரெக்டா சொன்னீங்க இது சதை தான் ஆனா இது செத்துப்போன jacob சாரோடது இல்ல..வேற ஆளோடது" என்று கூற அதிர்ச்சியானவன்.
"எப்படி இவ்ளோ confirmஆ சொல்றீங்க..அவர்தான் கொடூரமான முறையில இறந்து போய் இருந்தாரே chemicals ஏதோ burst ஆகி இருக்கும்னு சொன்னாங்களே..அப்புறம் எப்படி அவரோடது இல்லனு சொல்றீங்க..?"என்றான்.
"எப்படியா? இது embalming செய்யப்பட்ட உடலின் சதைப்பகுதி..கொஞ்சம் தன் உடலில் இருந்து பிஞ்சாலும் உடனே அழுகிப்போகும்.." என்று கூற அதை கேட்டு திடுக்கிட்டவன்
"அப்போ இது planned murderஆ" என்று கேட்க
"planned murderனா இப்படி எல்லாத்தையும் கலைச்சு போட்டு சிதைஞ்சு அதும் chemicals burst ஆனா அவங்களும் இறந்துடுவாங்க so its not planned murder. இது வேற வகை mode of murder.. maybe தன்னை கட்டுபடுத்த முடியாத ஒரு நடமாடும் பிணத்தால் செய்யப்பட்ட ஆக்ரோஷமான கொலை..அந்த ஆக்ரோஷமானவனை முதல்ல கண்டுபிடிக்கனும்."
"என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலை..இறந்து போன பிணம் எப்படி கொலை செய்ய முடியும்.."
"jacob சாகுறதுக்கு முன்ன எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்..அதுல அவர் ஒருத்தனை மனித ரோபோவாக மாத்துறதா சொல்லி அதுல ஏதோ mistake ஆகி இருக்கு அதை செக் பண்ணி சொல்ல சொன்னார் ஆனா மறுநாள் அவர் இறந்துட்டார். அதான் சொல்றேன்."
"அது யாரா இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா?" என்று ஹர்ஷா கேட்க..
"ம்ம்ம்..கொஞ்சம் guess இருக்கு...அது கரெக்ட்டானு தெரியனும்..நீங்க உங்க departmentக்கு சொல்லி அலர்ட்டா இருக்க சொல்லுங்க எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்." என்று பேசிக்கொண்டு இருக்கையில் ஹர்ஷாக்கு ph வந்தது.
"யாரோ ஒருவன் பார்க்கவே அகோரமாய் இருக்கிறான் மனிதர்களை கொடூரமாக கொல்கிறான் gunfire செய்தும் அவன் சாகவில்லை..இரும்பு போல இருக்கிறான்" என்று தகவல் வர அதிர்ச்சியாய் சக்தியை பார்த்தான் ஹர்ஷா.
"உடனே கிளம்பலாம் அவனை தடுக்குற வழியை கண்டுபிடிக்கனும்..உடனே என் வீட்டுக்கு போகணும்.."என்று அவனை அவசரபடுத்த இருவரும் கிளம்பினர்.
அந்த பத்திரபடுத்திய சதைப்பகுதியும் எடுத்துக்கொண்டு சென்றனர்.
தன் வீட்டிற்கு சென்றுjacob அனுப்பிய கோட்களை செக் செய்தவர்.
"idiot.. idiot...எல்லாம் செக் பண்ணினவன் brain control access பண்ணாம விட்டுட்டானே..இப்போ அவன் மிருகத்தனமான ரோபோவா இருக்கானே எப்படி control செய்ய..மிஸ்டர்.ஹர்ஷா சீக்கிரமே security tight பண்ணுங்க..இல்லைனா எல்லாருக்கும் ஆபத்தாகிடும்..நான் அவனை அழிக்க என்ன பண்ணலாம்னு கண்டுபிடிக்கிறேன்.." என்றபடி தன் robo வை அழைத்து.
"honey..human body part scanner" என்று கூற
"yes mr.shakthi" என்றபடி ஒரு கண்ணாடித்தாளை நீட்டியது..அதில் அந்த சதைப்பகுதியை வைத்தவர்.
"i need all details about this person immediately..be quick..and fast verification"
என்று கூற
உடனடியாக அடுத்த 5 secondல் அவனை பற்றிய முழு விவரம் வர..அதை படித்தவர் அதிர்ந்து
"how to deactivate him..and how to destroy that human robo" என்று கேட்க அது ஒரு தகவலை தர.
"ok..u may leave now." என்று சொல்ல அது கிளம்பிவிட்டது.
இதை ஒன்றும் புரியாமல் பார்த்தவன் எரிச்சலாய் "என்னதான் நடக்குது..எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..please sakthi sir." என்று அவன் கேட்க
"சொல்றேன் ஹர்ஷா.. முதல்ல security alert பண்ணுங்க please இல்லனா நிறைய உயிர் போயிடும்..important don't use metal devices" என்று சொல்ல நிலமையை ஓரளவு யூகித்தவன் உடனே control roomக்கு phசெய்து full force alert செய்துவிட்டு இவரிடம் திரும்ப சக்தி எல்லா விவரமும் தர அதிர்ச்சியில் கத்தியே விட்டான் ஹர்ஷா..
"sir என்ன சொல்றீங்க..இதுலாம் நடக்க possible இருக்கா? இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு..அவர் பாட்டுக்கு இப்படி ஒரு பிரச்சினை பண்ணிட்டு போய்ட்டாரே..இதுக்கு என்னதான் solution அவனை அழிக்கவே முடியாதா..?" என்று ஆத்திரமாய் கேட்டான் ஹர்ஷா
"வழி இருக்கு..அவனோட கோட்ஸ்லாம் decode பண்ணனும் அப்படியே அவனோட சிப்பை recharge செய்ய power supply இல்லாத அளவுக்கு செய்யனும் சின்ன light வெளிச்சம்கூட அவனுக்கு rechargeable energy source கொடுத்துடும்...அந்த powerயே அவனுக்கு ரொம்ப நேரம் ஆக்டிவ்ல இருக்க வைக்கும்..ஒரு village நாசம் பன்ற அளவுக்கு so அதை முதல்ல தடுக்கனும்..சின்ன சின்ன sensor things கூட இல்லாத இடத்தில தான் அவனை control பண்ண முடியும்.. அதை செஞ்சா மட்டும் தான் அவனோட சிப்பை எடுத்து de activate பண்ண முடியும்.. அவன் மனுஷன் உருவத்துல இருக்குற பேராபத்து so இது மட்டும் தான் ஒரே வழி அது முடியுமா உங்களால.." என்று சக்தி கேட்க சிறிது நேரம் யோசித்தவன்.
"sir சென்னைல ஒரு ஆர்மி ஏரியா இருக்கு..அங்க எந்த நெட்வொர்க் சென்சார்ஸ் எதுவும் வேலை செய்யாது அது 2005ல ரெடி பண்ண இடம்.ஒரு வேலை நியூ டெக்னாலஜி வொர்க் ஆகலனா கூட அங்க manual powers i mean humans only not use any robotic things and all new inventions..உலகமே அழிஞ்சா கூட அந்த இடத்துல எல்லாம் அப்படியே இருக்கும்.. அப்படி உருவாக்கி இருக்காங்க எந்த விதமான டெக்னாலஜி யும் யூஸ் பண்ணாம இருக்கறதால...அங்க இருக்குறவங்களுக்குலாம் இருட்டுல கூட எல்லாம ஈஸியா ஹேண்டில் பன்ற மாதிரி டிரெயினிங் கொடுத்து இருக்காங்க அவங்க எல்லாரும் hand signals or any incidents தான் signalஆ யூஸ் பண்ணுவாங்க.. for example இப்போ அட்டாக் பண்ணனும்னா single gun fire full destroyனா bell sound அப்படி...so அந்த place ஓகேவா இருக்கும்ல.."
"correct அங்கதான் apt ah இருக்கும்..நீங்க உடனே அங்க permission வாங்கி ரெடி பண்ணுங்க.."
"but one small doubt sir அந்த மனித ரோபோவ எப்படி அந்த இடத்துக்கு வர வைக்கிறது" என்றான் ஹர்ஷா
"அது கொஞ்சம் கஷ்டம்தான்..wait let me inform.." என்ற சக்தி கொஞ்சம் யோசித்து விட்டு..
mr.harsha எனக்கு அந்த ஏரியா entranceல ஒரு லேப்டாப் அண்ட் சென்சார் கண்ட்ரோல் போர்டு ரெடி பண்ணி கொடுக்க முடியுமா..நான் அதை யூஸ் பண்ணி அவன் சிப் கூட connect பண்ணி orders கொடுத்து வரவைக்கிறேன்.."
அங்கே..இதற்குள் அவன் நிறைய பேரை கொன்னு விட்டான் அந்த சிப் அவனை இயல்பாக இருக்க விடவில்லை..ரோபோக்கள் கண்ட்ரோல் இழக்கும் பட்சத்தில் அவை தாறுமாறாக வேலை செய்யும் அதேதான் அவனும் செய்து கொண்டு இருக்கிறான்.அவன் மூளை தாறுமாறாக கட்டளை கொடுக்க இதயத்தில் வைக்கப்பட்ட சிப் மூளையின் கட்டளையை ஏற்று அதன்படி செயல்பட துவங்கி இருந்தது..கண்ணில் பட்டதையெல்லாம் அழித்துக்கொண்டு இருந்தான்.
இங்கே ஒரு மணி நேரத்தில் சக்தி கேட்டதையெல்லாம் ரெடி பண்ணான் ஹர்ஷா.
"ஹர்ஷா.." என அழைத்த சக்தி அவனிடமும் மற்றவர்களிடமும் தன் planஐ சொல்லி ஹர்ஷா செய்ய வேண்டியவற்றை சொல்லிவிட்டு ஒருவேளை அவன் தன்னையும் அழித்துவிட்டால் அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என ஹர்ஷா க்கு சொன்னார்.
"sir என்னை நம்பி.." என்று அவன் இழுக்க அவனை பார்த்த சக்தி
"உங்கமேல நம்பிக்கை இருக்கு ஹர்ஷா.." என்றுவிட்டு அவன் மணிகட்டில் ஒரு சிப்பை பொறுத்தினார்..வலித்தாலும் மற்றவர் நன்மைக்காக என்று அதை பொறுத்திக்கொண்டான்.. ஒருவேளை அவரால் அழிக்க முடியவில்லை என்றால் அவனது சிப் மூலம் அதை அழிக்க வேண்டும்.. அது அவனை செயலிழக்க வைத்தபின் தான் செய்ய முடியும்.
சக்தி சொன்னது போல அந்த மனித மிருகத்தின் கோட்ஸ்ஸை டிகோட் பன்ன ஆரம்பிக்க..யாரோ தன்னை கட்டுப்படுத்துவதை உணர்ந்த அந்த மனித ரோபோ அவரது locationஐ search செய்ய அது location காட்ட அங்கே செல்லும்படி உத்தரவு பிறபிக்க அதை ஏற்று கொள்ள ஆரம்பித்தது அந்த சிப்.
அவன் காலில் இருந்து ராக்கெட்டின் தீப்போல புறப்பட்டது அது அவனை அங்கே அழைத்து சென்று நிறுத்தியது.
அவனை கண்ட சக்தி கொஞ்சம் அரண்டுதான் போனார்.இரும்பில் செய்த ரோபோவிற்கு சதையை பொறுத்தியது போல ஆனால் விகாரமாய் இருந்தான். மேனி முழுவதும் ரத்தக்கறையாக மற்றும் அங்கங்கே புல்லட் பாய்ந்த சதை கிழிந்து உள்ளே இருந்த embalming solutions வெளியேறிக்கொண்டு இருந்தது..அவனை தடுக்கவும் அழிக்கவும் எவ்வளவோ முயன்றும் ஆகாததால் தான் ஹர்ஷா சொன்னவுடன் இதற்கு சம்மதம் தந்தது இராணுவம்..
அகோரமாய் தன்முன் நின்றவனை கண்டு பயந்தாலும் அவனை decoding செய்யும் வேலையை வேகமாக்கினார் சக்தி.
அதில் அவன் பாகங்கள் செயலிழப்பது போல தோன்ற ஆனால் வெளியே இருந்த சென்சார்ஸ் மூலம் அவன் மீண்டும் சார்ஜ் ஆக வெறிகொண்டவன் போல தாக்க துவங்கினான்.
அவன் தாக்கியதில் சக்தி தூரம் தூக்கி எறியப்பட்டான். அதற்குள் அவரது லேப்டாப்பையும் அதன் கண்ட்ரோல் சிஸ்டம் எல்லாம் அடித்து உடைக்க அதற்குள் ஒளிந்திருந்த ஹர்ஷா ஓடிவந்து decoding sensorஐ கைப்பற்றினான்..அதை எடுத்துக்கொண்டு ஆர்மி ஏரியாவிற்குள் நுழைய அவனை துரத்திக்கொண்டு ஓட மட்டும் கட்டளை பிறப்பித்தவன் அவனும் உள்ளே ஓடினான்.. சற்று தூரம் சென்றதும் கும்மிருட்டாய் இருந்தது..அதற்குள் அந்த மனித ரோபோவின் பாகங்கள் செயலிழக்க துவங்கியது..அரைமணி நேரத்தில் பித்து பிடித்தவன் போல அந்த இருட்டில் அலைய ஆரம்பித்தான்..அவன் உள்ளே ஓடி வரும்போதே அவன் முதுகில் ரேடியத்தை தூவி இருந்தான் ஹர்ஷா.. அதன்பின் நிதானமாய் அவனை கண்காணிக்க அந்த ரோபோ அரக்கன் தன் முழுக்கட்டுப்பாட்டை இழக்க அதிகமாய் embalming solution வெளியேறியதால் அவன் உடல் அழுகும் நிலைக்கு மாறியது. அந்நேரம் ஹர்ஷா அவனை ரேடியம் தூவிய இடத்தில் தாக்க நிலைக்குலைந்து அவன் குப்புற விழுந்தான் அவனை திருப்பியவன் பின்புறம் ரேடியம் தூவிய இடத்தில் முன்புறம் நேராக குத்தி அவன் இதயப்பகுதியை கிழித்தான்.. இப்போது அந்த ரோபோ மனிதன் முழுதும் செயலற்று கிடந்தான் அந்நேரம் அவன் இதயத்தில் பொறுத்திய சிப்பை வெளியே எடுத்தான் ஹர்ஷா.. அதை எடுத்ததும் அவன் உடல் அழுகும் நிலைக்கு செல்ல ஹர்ஷா தன் கையை உயர்த்தி சிட்டிகை மூன்று முறை செய்தான்.. அப்போது லைட் ஆன் செய்யப்பட்டது..அப்போது அவனுக்கு சக்தி சொன்னது நினைவு வர அந்த உடலை அப்புறப்படுத்தும்படி சொல்லிவிட்டு அந்த சிப்பை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான் வந்தவன் தயாராக இருந்த லேப்டாப்பில் connect செய்தான் சக்தி சொன்ன எல்லா வேலையும் செய்தவன் தனது கையில் பொருத்திய சிப் மூலம் அந்த சிப்பை destroy செய்தான்..அதன்பிறகு தான் அவனுக்கு மூச்சே சீராய் வந்தது.. மற்ற ராணுவ வீரர்கள் மற்றதையெல்லாம் சரிசெய்ய துவங்கினர்.. நேராக கிளம்பியவன் army hospital உள்ளே சென்றான். அங்கு icuவில் தலையில் கட்டுடன் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு கிடந்தார்..அந்த ரோபோ மனிதன் தூக்கி எறிந்ததில் அவருக்கு அடிப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது..
முன்னமே ஹர்ஷா எல்லா ஏற்பாடும் செய்து இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தனர்...வந்தவன் அவர் அருகில் அமர அந்நேரம் கண் விழித்தவர் என்ன என்று கேட்க..
success என்று கட்டை விரலை உயர்த்தி அவன் காட்ட சிறு புன்னகை புரிந்தவர் மீண்டும் மயக்கமாகி விட சரியென எழுந்து வெளியே வந்தவனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள.. திரும்பி அந்த பழைய ஆர்மி ஏரியாவை பார்த்தவன்.
"தன்வினை தன்னைச்சுடும்..என்ற பழமொழிக்கு ஏத்தமாதிரி நாம நல்லதுனு செய்ய நினைக்கிறது ஒரு சில நேரங்களில் நமக்கு மட்டுமல்ல நம்மை சுத்தி இருக்குறவங்களுக்கும் ஆபத்தாய் மாறிடும்... அதை எதிர்த்து போராடி ஜெயிக்கிற மனப்பான்மையும் தைரியமும் வேணும்..
ஏழைகளின் வாழ்க்கையை பணம்தான் தீர்மானிக்கிறது.. இதை தடுத்தால்தான் நாளைய சமுதாயம் நம்மிடமிருந்து நல்லதை கற்று வளரும்..more technology has critical ending..and always old is gold...thank you..." என்றவன் தன் போலீஸ் தொப்பியை அணிந்துகொண்டு மிடுக்காய் கிளம்பினான்.
எப்போதுமே டெக்னாலஜி நம்மை காப்பாற்றும் என்று நம்புவது நம் மூடத்தனம்.. டிஜிட்டல் உலகம் இல்லாதவரை நம் பூமியில் இயற்கை எங்கும் பரந்து விரிந்து இருந்தது.. டெக்னாலஜி புது புது விஷயங்களை கற்று கொடுக்கலாம் ஆனால் கூடவே அழிவையும் தரும் என்பதை மறக்ககூடாது..
குடும்பத்தின் வறுமைக்காக இன்று ஒரு சஞ்சய் நாளை எத்தனை பேரோ..வாழ்க்கை போராட்டத்தில் விதியின் சதியால் இறந்த சஞ்சய்யும் புதிய டெக்னாலஜியை கண்டுபிடிக்க சஞ்சய்யின் உயிரை துச்சமாக எண்ணிய ஜேக்கப்பின் மரணமும் பணம் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதற்கு சான்றாகும்..இன்றைய நிலையில் டெக்னாலஜியை ஆக்குவதை விட அழிவிற்கே அதிகம் பயன்படுத்த படுகிறது என்பதையும் எப்பொழுதுமே டெக்னாலஜி பயன்படாது சில சமயங்களில் டெக்னாலஜி இல்லாத வாழ்க்கையும் நாம் வாழப்பழக வேண்டும்.
முற்றும்.
#266
66,480
1,480
: 65,000
32
4.6 (32 )
thejeshthangadurai
Anonymous
இந்த டெக்னாலஜிஸ் பல இயற்கை வளங்களும் அழிவு பாதை நோக்கி செல்கிறது. நான் கேள்விப்பட்டேன் சேலத்தில் எனது சின்னம்மாவின் சினேகிதியே ஒருவர் வீடு கூட்ட ரோபோ வாங்கியிருப்பதாய். இவ்வாறு இருந்தால் உடலில் நோய்கள் தான் சேரும். இந்த கதையை பொறுத்தவரை சஞ்சய் பாவம். Jacob அவனது ஏழ்மை நிலையை பயன்படுத்திவிட்டார். தவறு செய்வது மனித இயல்பு, அதை ஜேகப் நிருபித்து விட்டார். டெக்னாலஜி மனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழகாக கூறியிருக்கிறீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
anuradhasenthil1382
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50