JUNE 10th - JULY 10th
வளர்ந்து வரும் தொழில்நுட்ப
நாகரீகத்தில் விதிவிலக்கின்றி
மிகவும் பிரமாண்டமான முறையில் சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட அந்த 30 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் ஆளாக சிவாவும் அவனது குடும்பமும் குடியேற ஒத்திகைப் பார்க்க சென்றனர்........
" என்னங்க இது பாக்கவே பேய் பங்களா போல இருக்கு "
இதுல தனியா நாம் மட்டும் தா வந்துருக்கோம் அதுவும் முதல்ல இப்ப அந்த அளவுக்கு அவசரம் என்னங்க என்றாள் பூஜா சற்று பயத்துடன் அந்த குடியிருப்பையே உற்றுப்பார்த்தவாறு.......
" இப்பவே வந்ததுனாலதா ஜெஸ்ட் டென் லேக்ஸ் ல முடிஞ்சுது"
இல்லனா " மே பி டுவென்டி ஆர் டுவென்டி ஃபை வேக்ஸ் ஆகிருக்கும் '" அதனாலதா நாம முதல்ல வந்துருக்கோம் . நீ வீடு புடிச்சிருக்கா பாரு என்றான் சிவா....
" இவ்ளோ பெரிய பங்களா நமக்கு மட்டுமாங்க " என கிராமத்துக்கே உரிய அப்பாவி தனத்தால் கேட்டாள் பூஜா....
"அடிப்பாவி அவ்வளோ காசுக்கு நா எங்கவாது கொள்ளையடிச்சாதா உண்டு" என பதிலுக்கு சிவாவும் கடித்தான்....
ஏன்க இப்படி சொல்லுறீங்க என்றதும் பின்ன என்னடி இந்த குடியிருப்பு ல நடுவுல இருக்குற 255 நம்பர் தான் நம்ம வீடு . மத்தபடி அவங்க அவங்க வீட்டுக்கு இனிமே எல்லோரும் வருவாங்க என்றதும் சரி வாங்க உள்ள போயி பாக்கலாம் என பேச்சை நிறுத்திவிட்டு இருவரும் குடியிருப்பு முன்பகுதிக்கு சென்றனர்.....
உள்ளே வாட்ச்மென் மட்டும் தான் இருந்தான் இருவரையும் பார்த்துவிட்டு
" வாங்க சார் வணக்கம் " . எந்த பிளாட் சார் பாக்கனும் என்றான் பணிவாக ...
இருவரும் பதிலுக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு 255 பிளாட் என்றனர்.
"ஓஓ 255 அப்ப லிப்டிலேயே போகலாம் சார் என்று மூவரும் லிப்டின் வழியாக சிவாவின் பிளாட் இருக்கும் 26 வது மாடியை" அடைந்தனர் ..
என்ன சார் அதுக்குள்ள வீடு ஷிப்ட் ஆக வந்திட்டிங்க அடுத்த மாசம் தான் மத்த பிளாட்காரங்க எல்லாம் வாங்க என்றான் வாட்ச்மென் கேட்க......
அதுவா ..... வொர்க் இப்ப இந்த ஏரியாவுல மாத்திட்டாங்க அதாங்க என்றான் சிவாவும் பதிலுக்கு வாட்ச்மென் அண்ணாவும் சரிப்பா என்றார்.....
பிறகு அடுத்த இரண்டாவது வாரத்தில் சிவாவும் இன்னும் இரண்டு பேமிலியும் குடிபுக இவ்வாறு படிப்படியாக எல்லோரும் குடிபுகுந்தனர்......
சிவா உடனே தன் அம்மா சரோஜாவுக்கு போன் பண்ணி ம்மா.. "" நா , இங்க சொந்தமா வீடு வாங்கிருக்கமா இனிமே நீங்கள் அந்த வாடகை வீட்டில இருக்க வேண்டாம்மா உடனே அப்பாவா கூட்டிட்டு வாம்மா என்றான்...
அப்படியா... மகாராசா ""எங்க கடைசி வரைக்கும் அடுத்தவன் வீட்டிலேயே காலத்த ஓட்டிடுவமோனு "" அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாடுடா......
மளிகை கடை வரைக்கும் போயிருக்காரு இப்ப வந்துடுவாரு இருடா கட் பண்ணிடாதா போனை என்றாள் சரோஜா....
ம்ம் ... சரிம்மா என்றதும் அப்பா ராமனும் வந்துவிடுகிறார் விஷயமறிந்ததும் ஆனந்த கண்ணீரோடு ரொம்ப சந்தோஷம்டா மவன
"நானும் அம்மாவும் வருகிறோம் கன்டிபாக " என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு சிவா பூஜாவிடம் சொல்லிவிட்டு தனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ரெட் பஸ்ஸில் ரிக்கெட் ரிசர்வேசன் செய்து அனுப்பி வைத்தான்.
ஒருசில தினங்களில் சிவாவின் அம்மாவும் அப்பாவும் சென்னை பேருந்து நிலையத்திலிருத்தை வந்தடைந்தனர்.. சிவாவிற்கு கால் செய்து சென்னை வந்த செய்தியையும் இருக்கும் இடத்தையும் அறிவித்தனர் .
தான் வர லேட்டாகும் என்றும் தனது ஆபிஸ் நண்பர் ஒருவரை பிக்கப் செய்ய அனுப்பி வைப்பதாகவும் இரவு தான் வீட்டிற்க்கு வருவேன் எனவும் சொல்லிவிட்டு சிவா ஆபிஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றான் சிவா....
இருவரும் அருகே இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் .
" திடீரென ராமனுக்கு நெஞ்சுவலி " வர மனைவி சரோஜா என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழ அருகில் இருந்தவர்கள் என்ன ஏதென்று விசாரிக்கவும் சிவாவின் நண்பர் வரவும் நேரம் சரியாக இருந்தது.....
உடனே இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை காற்றின் வேகத்தில் ஓட்டினார் குரு......
மருத்துவமனை சென்றதும் உடனடியாக அவர் சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு சிவாவிற்கு குரு கால் செய்து நடந்த விபரத்தைக் கூறினான் .....
ஐயோ....!!!!!
அப்பாவுக்கு என்ன ஆச்சு.....???? என்று பதட்டமாக கேட்க விவரம் அறிந்து அழுது கொண்டே சிவா நேராக மருத்துவனை சென்றான் .....
டாக்டரிடம் மூவரும் ராமனின் நலம் பற்றி விசாரிக்க நீங்க யாரு...?? என டாக்டர் கேட்டார்.
"ஐம் சிவா சாய் ஹீ இஸ் மை டாடி"
"ஹௌ ஆர் மை டாடி சார் " என்றான்..
கொஞ்சம் இப்படி வாங்க ... என்று அழைத்து , 12 மணி நேரத்திற்கு பிறகு தான் எதுவானாலும் உறுதியாக சொல்ல முடியும் " காலைல மேஜர் ஆப்ரேசன் இருக்கு பணத்துக்கு ஏற்பாடு பன்னுங்க என்று சொல்ல.....
எவ்வளவு சார் ஆகும் என சிவா கேட்க.....
" மே பி 8 - 10 வேக்ஸ் ஆகும் என்றார் டாக்டர் " ....
சரிங்க சார் அது ஒன்னும் பிராப்ளம் இல்லை நீ ஆப்ரேஷன் பன்னலாம என்றான் சிவாவும்.
" குட் அப்பறம் நர்ஸ்கிட்ட மெடிசின் சீட் கொடுக்குற வாங்கிட்டு வந்திருக்க"
என்று சொல்லிவிட்டு ராமனின் உடல் நிலையைபா பரிசோதிக்க சென்றார் டாக்டர்....
நர்ஸ் மருந்து சீட்டை சிவாவிடம் நீண்ட குரு இங்க கொடுக்க மேடம் என்று நான் வாங்கிட்டு வரேன் சார் என்று மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு மருந்து வாங்க குரு சென்றார்.....
சரோஜா மகனிடம் டாக்டர் என்னப்பா சொன்னாங்க என்று கேட்க...
டாக்டர் சொன்னதில் பாதியை மறைத்து சின்ன ஆப்ரேசன் தா மா சரியாகிடும் என்று சொல்லிருக்காங்க என்றான் சிவா
என்னது ஆப்ரேஷனா....????
ஐயோ....
கடவுளே உனக்கு கண்ணே இல்லையா ....??? எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத இவருக்கான இப்படி ஒரு நிலமைன்னு கதறி அழுதாள்.....
அம்மா ஒன்னும் ஆகாதும்மா அப்பாவுக்கு ... நீங்கள் அழாதீங்கம்மா என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு ஓராமாக சென்று அழுது கொண்டிருந்தான் சிவா.....
விஷயம் அறிந்து பூஜாவும் மருத்துவமனை வந்து சேர்ந்தாள். கணவன் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ..
"" என்னங்க அழாதீங்க மாமாவுக்கு ஒன்னும் ஆகாது நீங்களே அழுதா அத்தைக்கு யாரு ஆறுதல் சொல்லுவா என்று தன் கணவனைத் தேற்றினாள் பூஜா....
நேரம் 11.30 ஆனது .. சார் அப்பாவுக்கு எதுவும் ஆகாது சார் மணி 11.30 ஆச்சு அம்மா வேற வயசானவங்க அதுமட்டுமல்ல சுகர்வேற இருக்கு தப்பா நெனக்கலனா நா வேனா எல்லாருக்கும் சாப்ட ஏதும் வாங்கி வரட்டுமா...???? என்றார் குரு..
எனக்கு பசிக்கல என்று கூறிக்கொண்டே பூஜாவைப் பார்க்க " தனக்கும் பசிக்கல என்று ஜாடைக்காட்டினாள் பூஜா" சரி அம்மாவுக்கு மட்டும் வாங்கி வாங்க என்றதும் இல்லப்பா எனக்கும் வேண்டாம் . முதல்ல அப்பா கண்முழிக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறிவிட ...
அந்த நேரத்தில் வந்த நர்ஸ் " சார் பேஷன்ட் கூட யாராச்சும் இரண்டு பேரு மட்டுமே இருங்க பாக்கிபேருலா காலைல வாங்க என்றார்.. சிவா உடனே குருவிடம் நீங்கள் பூஜாவ வீட்டில் விட்டுவிட்டு நீங்களும் வீட்டுக்கு போங்க என்றான்....
இல்லீங்க நானும் கூட இருக்க என் சொல்ல வாயெடுக்க இல்ல பூஜா காலைல ஆப்ரேசனுக்கு பணம் கட்டணும் அதனால் நீ வீட்டுக்கு போயிட்டு காலைல அப்டியே வரும்போது பணம் எடுத்துட்டு வா என்றான் . சிவா சொல்ல வந்ததை அறிந்துக்கொண்டவள்
" என்னங்க நீங்க இதுக்குலா என்கிட்ட அனுமதி கேட்கலாமா நீங்கள் ""
" நமக்கு இப்ப சொந்த வீட்டை விட மாமா தாங்க முக்கியம் என்று "
தனக்கும் மாமாவின் மேல் அக்கறை உள்ளதை தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.
பின் சற்று நேரத்தில் சரிங்க .. என்று பூஜாவும் குருவும் வீட்டுக்குப் புறப்பட்டனர். பூஜாவை வீட்டில் விட்டுவிட்டு மேடம் காலைல எப்ப வரனும்னு கால் பன்னுங்க பிக்அப் பன்னிக்கிற மேடம் என்றான் குரு..
சரிங்க குரு. காலைல ஒரு 9.00 பணிக்காக வாங்க என்றாள் . ம்ம் சரிங்க மேடம் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் .
பூஜாவும் வீட்டிற்குள் சென்றாள். அந்த இரவு நேரத்தில் தமது வீட்டின் பத்திரங்களை எல்லாம் எடுத்து ஒரு கவரில் போட்டு விட்டு அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டாள்.....
மறுநாள் காலை ....
பத்திரங்களை எடுத்துக்கொண்டு அப்பார்ட்மெண்ட் உரிமையாளரிடம் புறப்பட தயாரானாள் . சரியாக குருவும் வந்து பிக்கப் செய்து கொண்டு இருவரும் அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் வீட்டிற்கு வந்தனர்.
ஏற்கனவே சிவா எல்லா விஷயங்களையும் இவரிடம் சொல்லிருந்ததால் இவர்களுக்காகவே எதிர்பார்த்தார்.
வந்ததும் வாங்க என்று அமரவைத்து விட்டு பத்திரத்தை வாங்கிக் கொண்டு பத்து லட்சும்
ரூபாயை சூட்கேஸ் சேப் இல்லை என்பதால் ஒரு காலேஜ் பேக்கில் போட்டுக் கொடுத்தார்.....
பணத்தைப் பெற்றுக்கொண்டு இருவரும் மருத்துவமனை விரைந்தனர். பணத்தை கட்ட , ஆப்ரேஷனும் நல்லபடியாக நடந்து முடிந்தது ..
இரண்டு நாட்கள் கழித்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர் ஆனால் இந்த முறை புதியதாக வாங்கிய வீட்டிற்கு இல்லை ஏற்கனவே இருந்த வாடகை வீட்டிற்கு தான் சென்றனர்....
ராமனுக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தாலும் தன்னால் தான் தன் மகன் ஆசையாக வாங்கிய சொந்த வீட்டிற்கு போக முடியவில்லை என்று அதையே நினைத்து நினைத்து ஒருசில வாரங்களில் இறந்து விடுகிறார்.....
குடும்பமே சூரியனில்லா பகலைப்போல சோகத்தில் ஆழ்ந்திருந்தது... பிறகு சரோஜாவும் தனது சொந்த ஊருக்கே தன் கணவன் வாழ்ந்த வாடகை வீட்டிற்கு சென்று அங்கும் இங்குமாக அமர்ந்து சிரித்தும் அழுதும் பேசிக்கொண்டிருந்தாள் ....
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சரோஜாவிற்கு போன் வந்தது சிவாவிடம் இருந்து, தனக்கு ""மகன் பிறந்திருப்பதாகவும்"" அதுமட்டுமின்றி அப்பா ஆசைப்பட்டது போலவே மீண்டும் அதே 255 பிளாட்டை வாங்கி விட்டதாகவும் கூறினான்....
ஆனால் இம்முறை சரோஜா மறுத்துவிட
ராமனின் நினைவுகள் காதருகே வந்து
" அடியேய் முதல்ல நீ கெளம்பி ஊருக்குப் போடி சொந்த வீட்டில் உன்கூட சேர்ந்து வாழ எனக்குதா கொடுத்து வைக்கல நீயாவது போடி என்றது"...
" நீங்கள் இல்லாத எந்த விருப்பும் எனக்கு வேண்டாங்க " என்றாள்.
"என் கூட இவ்வளவு நாளும் உண்மையா இருந்தது நெசம்னா நா சொல்லுற நீ போடி "
என்று சொல்லி விட்டு மறைந்தார்.....
மறுநாள் காலையே தன் மகன் வீட்டிற்கு சென்றாள். சரோஜா தன் கணவனின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு ....
சென்னை சென்றதும் இம்முறை தானே அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
உங்க பேரனைப் பாருங்க அத்த என்று தனது மகனைக் காட்ட அந்த பிஞ்சு முகத்தில் தன் கணவனின் சாயலைப் பார்த்தவள். " டேய் சிவா இங்குப் பாருடா அப்படியே உங்க அப்பா போலவே இருக்கான் என்று அழுதாள்...
ஆமாம்மா .... என்றவன் அப்பாவோட ஆசை அவரு இருக்கும் போதே அத நிறவேத்த முடியல என்ற குற்ற உணர்ச்சி இருந்துச்சிம்மா ஆனா இப்ப அது இல்ல....
நீங்க என் கூடவே இருங்க அப்பாவும் என் மகன் உருவத்துல நம்பக்கூடவே இருக்காரு இது போதும்மா என்றான் சிவா...
ஆமாம் டா என சரோஜாவும் சொல்ல
"அத்த இங்க பாருங்க மாமா உங்கள பாத்து முத்தும் கொடுக்கிறாரு" என்றாள் பூஜா. வெட்கத்தில் போமா நீ வேற என்க..
அட... இங்கப்பாருங்க அத்தைக்கு இந்த வயசுல வெக்கத்தே என்றாள் பூஜா அட ஆமாம் என்றான் சிவாவும் உண்மையில் சரோஜாவும் வெட்கப்பட்டாள்...
ஒருவழியாக சிவா அவனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் தனது சொந்த வீட்டில்....
எழுத்து
அன்புடன்.ராஜா
#400
55,760
760
: 55,000
16
4.8 (16 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Praveena Thangaraj
nice raja... முயற்சிகள் மேலோங்கட்டும்.
mmuralikrishnan304
Mass
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50