JUNE 10th - JULY 10th
“சஜின் இன்னைக்கு குடுக்க வேண்டிய உணவுகள் எல்லாம் ரெடியா இருக்கா, கிளம்பலாமா……..”!
“மேடம், எல்லாம் ரெடியா தான் இருக்கு, அந்த பேனர் மட்டும் இன்னும் வரல….”
“என்ன பேனரா? எதுக்கு இப்போ. நான் போன தடவையே சொல்லிட்டேன் அதெல்லாம் ஏற்பாடு பண்ணாதீங்க இங்கே பாருங்க நான் விளம்பரத்துக்காக செய்யல, என் மன நிம்மதிக்காக செய்கிறேன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கிளம்புங்க போலாம். அப்படியே அந்த மாஸ்க், சானிடைசர் எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க.”
“சரிங்க மேடம்,”
காரில் ஏறும் போது வீட்டுக் காவலாளி முருகேசன் கதவு ஓரத்தில் புகைப்பிடிப்பதை அமலா பார்த்தார்.
கார் கதவு சத்தம் கேட்டதும் நிமிர்ந்து நின்ற காவலர் பதற்றத்துடன் தனது ஆறாவது விரலை கீழே எறிந்துவிட்டு, அம்மா மன்னிக்கவும் என்றார்.
கதவை தாண்டி கார் வேகமாக கடற்கரை சாலையில் சென்று நின்றது, அன்னதானம் கொடுப்பதை முன்னரே ஏற்பாடு செய்து இருந்ததால் அங்கு மிகவும் கூட்டமாக இருந்தது
“ஐயா, பாருங்க எல்லாருக்கும் உணவு இருக்கு சமூக இடைவெளி விட்டு நில்லுங்க அவசரப்படாதீங்க எல்லாருக்கும் இருக்கு.”
“சஜின், அந்தம்மா மட்டும் ஏன் ஓரமா இருக்காங்க,”
“அம்மா, இங்கே வாம்மா”
“எனக்கு எதுவும் வேணாம் பா”,
“என்ன சஜின் கூப்பிட்டீங்களா அவங்கள….”
“மேடம், அவங்களுக்கு வேண்டாமாம்”
“ஏன், என்ன ஆச்சு நான் கேட்கிறேன்….”
“என்ன ஆச்சும்மா வாங்க, வந்து சாப்பாடு வாங்கிக் கோங்க சாப்பிடுங்க,”
“அம்மா நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது,”
“அப்படிலாம் சொல்லாதீங்க, என்ன பிரச்சனை உங்களுக்கு”
“’இனிமே வாழ்ந்து நான் என்னம்மா பண்ண போறேன், யார் இருக்கா எனக்கு?”
“ஏன்மா அப்படி சொல்றீங்க,”
“போன வாரம் தான் என் புருஷன் கொரோனா நோய் தாக்கி செத்தார், இந்த வாரம் என் புள்ள பசியால செத்தான், என்னம்மா பண்ண போறேன் நான் உசுரோட இருந்து”
“அப்படிலாம் சொல்லாதீங்க அம்மா, நாம வாழற வாழ்க்கை கடவுள் கொடுத்தது…”
“உனக்கு என்னம்மா அப்பா, அம்மா, கை நிறைய பணம், நல்லா சந்தோஷமா வாழுற அதான் இப்படி சொல்ற, ஒருவேளை சோறு கிடைக்காம பசியில செத்தான் என் புள்ள….”
“அம்மா உங்க பேர் என்ன,”
“கவிதா,”
“அம்மா நாங்களும் கஷ்டப்பட்டுதான் முன்னேறி இருக்கும், இந்த நிலைமைக்கு வர என்னென்ன இழந்திருக்கோம் தெரியுமா…”
“ஆமா…. அப்படி என்ன பெருசா….,”
“பொறுமையா நான் சொல்றத கேக்கறீங்களா,”
“அப்படி என்னத்த சொல்ல போற”
“அம்மா, என் பெயர் அமலா, “
“அதுக்கு என்ன இப்போ”
“என் அச்சன் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், கேரளாவில் பாலக்காடு அவர் சொந்த ஊர். அவர் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார், கிளீனர் ஆகவும் சில சமயங்களில் மாஸ்டர் ஆகவும்.”
“ஹோட்டல்ல கிளீனராக இருந்த இவ்ளோ சொத்து செத்துட்டாரா உங்க அப்பா”
“அம்மா பொறுமையா சொல்றதை கொஞ்சம் கேளுங்க”
“சரி சொல்லு, உன் கதையும் தான் கேப்போமே….”
“அவருக்கு அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சம்பளம் இல்லை இருந்தாலும் அவர் தனியே வாழ்ந்ததால், அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதே ஓட்டலில் வேலை செய்தவர்தான் என்னம்மா, இருவருக்குள் ஒரு நட்பு ஏற்பட்டு திருமணம் முடிந்தது.”
“ஹோட்டலில் சரியான வருமானம் இல்லாததால் ஹோட்டலை மூடினார் ஹோட்டலின் முதலாளி. என் அச்சன் அம்மாவிற்கு வேறு வேலை தெரியாததால் அவர்கள் வசித்த வீட்டிலேயே சிறிய அளவில் உணவு கடை ஆரம்பித்தார்கள்.”
“அவர்களுக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் நான் பிறந்தேன், தொழில் வளம் இல்லாத ஊர் என்பதால் எங்களுக்கு வருமானம் போதாத நிலையாய் இருந்தது. எங்கள் வருமானம் பெருக்க என் தந்தை இருசக்கர மிதிவண்டியிலும் என் தாய் வீட்டிலும் வியாபாரம் செய்தார்கள். அடுத்த ஒரு வருடத்தில் எனக்கு ஒரு தங்கையும் பிறந்தாள். என் அச்சனுக்கு ஒரு வருத்தம் அடுத்ததும் பெண்ணாக பிறந்ததால்.”
“நாட்களின் ஓட்டத்தில் நாங்களும் வளர்ந்தோம் அப்போ எனக்கு ஏழு வயது என் தங்கைக்கு ஆறு, எங்கள் ஊரில் திருவிழா பத்து நாள் கொண்டாட்டமாக இருக்கும். எனக்கு என் அச்சன் என்றால் மிகவும் பிடிக்கும். எங்கு சென்றாலும் நான் என் அச்சன் கை பிடித்தபடியே செல்வேன் என் தங்கையை என் அம்மா தூக்கி வருவார். நான் எது கேட்டாலும் எனக்கு வாங்கிக் கொடுப்பார் என் அச்சன்.”
“ஐந்தாம் நாள் திருவிழா அன்று நான் கூட்ட நெரிசலில் வேறு ஒருவர் கை பிடித்து சென்று விட்டேன், பின்புதான் தெரிந்தது அவர் என் அச்சன் இல்லை என்று, தெருவோரமாய் தேம்பித் தேம்பி அழுது கொண்டு நின்றிருந்தேன். “
“நல்ல வேளையாக என்னை கண்டுபிடித்து விட்டனர்.”
“அன்று முதல் திருவிழா என்றாலே, எனக்கு ஒரு பயம் தொலைந்து விடுவோமா என்று.”
“எங்கள் வசதி குறைவு காரணமாக நாங்கள் அரசு பள்ளியில் படித்தோம்.”
“அச்சனின் கடின உழைப்பு ஒரு விதையாய், இருசக்கர மிதிவண்டியில் இருந்து நான்கு சக்கர தள்ளுவண்டி ஆக மாறியது.”
“இப்போது என் தாயும் அங்கேயே சமைக்க செல்வாள்.”
“நாங்கள் பள்ளி முடித்தவுடன் அங்கு சென்று விடுவோம் அப்பாவுக்கு உதவியாக சில வேலைகள் செய்ய. ஆனால் மழைக்காலங்களில் எங்களுக்கு தொழில் சரிவர இருக்காது.”
“அம்மா மீண்டும் கருவுற்றாள் இந்த தடவையாவது ஒரு ஆண் மகன் பிறப்பான் என்று. “
“எண்ணம் போல் வாழ்க்கை என்பது போல் இந்த தடவை அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், ஆம் எனக்கு ஒரு தம்பி.”
“அவனுக்கு ஹரிதாஸ் என்று பெயர் சூட்டினார்கள், செல்லமாக ஹரி நாயர் என்று கூப்பிடுவார்கள்.”
“தம்பி பிறந்து மூன்று மாதத்தில் எங்கள் தள்ளுவண்டி உணவகம் சிறு கடை எடுத்து உணவகம் அமைக்கும் அளவிற்கு முன்னேறியது.”
“எங்கள் ஹோட்டலுக்கு ஹரிதாஸ் என்ற பெயர் சூட்டினார் என் அச்சன், அதில் மொத்தம் நான்கு பேர் வேலை செய்தார்கள் ஒரு டீ மாஸ்டர் ஒரு சப்ளையர் இரண்டு சமையல் உதவியாளர்கள்.”
“இப்போதெல்லாம் என் தந்தை என் மீது கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்த்தும் அளவுக்கு என் தந்தை தம்பியிடம் அன்பாக இருந்தார், எனக்கும் சிறிது பொறாமையாக இருந்தது.”
“இருந்தாலும் அவன் எங்களை விட மிகவும் சுட்டித்தனமாக இருந்தான் ஆகையால் அவனை எங்கள் அனைவருக்கும் பிடிக்கும் எங்கள் வீட்டின் செல்ல குட்டி அவன்.”
“சிறிது சிறிதாக எங்கள் அச்சன் விதைத்த விதை மரமாக வளர்வது தெரிந்தது.”
“இப்போது தனியார் பள்ளியில் சேர்க்கும் அளவிற்கு நாங்கள் முன்னேறி இருந்தோம், எங்கள் தம்பியை ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் சேர்த்தார்கள்.”
“அவன் நான்கு வயதிலேயே என் அச்சன்வுடன் அமர்ந்து கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போடுவான்.”
“எங்கள் ஓட்டு வீடு மெத்தை வீடாக மாறியது,, அன்று முதல் என்றும் நிலா சோறு தான் எங்கள் வீட்டில். “
“ஒரு நாள் அப்படி நிலாச்சோறு உண்ணும்போது நான் ஒரு கேள்வி கேட்டேன், நாங்கள் படித்து என்னவாக ஆகவேண்டும் என்று,
“'அச்சன் அதற்கு', ஆழ்மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய் மற்றவர் சொல்வதை கேட்காதே உன் மனதுக்கு எது படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை சொல் நான் நிறைவேற்றுகிறேன் மற்றும் எது செய்தாலும் உங்கள் முழு இருதயத்தோடு செய்யுங்கள்….”
“நீ விரும்புவதை செய்வதில்…. உன்
சுதந்திரம் அடங்கியுள்ளது!
நீ செய்வதை விரும்புவதில்…. உன்
மகிழ்ச்சி அடங்கியுள்ளது!”
“அச்சனின் பதில் என்றும் என் மனதில் இருக்கும் படி இருந்தது.”
“ஒரு நாள் என் அச்சன், கேரளா மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறு பார்க்க கூட்டிசெல்வதாக சொன்னார், மேலும் அந்த ஆற்றைப் பற்றி அச்சன் கூறியது சுவாரசியமாய் இருந்தது.”
“ஆற்றின் பெயர் பாரதப்புழா முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது, பின் அரபிக்கடலில் சென்று கலக்கிறது.”
“நாங்கள் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிளம்பினோம்.”
“நாங்கள் அங்கு சென்று ஒரு மணி நேரம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம் திடீரென்று அச்சனுடைய நண்பரான ஜோசப் அங்கே வந்தார். அவர் எங்களை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார், அங்கு சென்றதும் அச்சன் எங்களை போய் சுற்றிப் பாருங்கள் என்று கூறினார்.”
“நான் ஏன் என்று கேட்டேன், 'அச்சன்', இனி இது நம் வீடு என்று கூறினார். அழகான வீடு அதுவும் ஆற்றங்கரையோரம், சொல்லவா வேண்டும் எங்கள் சந்தோஷத்தை அப்படி ஒரு சந்தோஷம் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் அன்று.”
“அந்தப் புது வீட்டுக்கு குடி வந்த நாள் முதலே நாங்கள் ஆற்றங்கரை ஓரத்திலே தான் குளிப்போம். நாங்கள் வீட்டில் தோட்டம் அமைத்தோம், பூ பழங்கள் என்று. எங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு.”
“ஒரு நாள் நாங்கள் ஆற்றங்கரையோரம் குளிப்பதை பார்த்த அச்சன் எங்களுக்கு நீச்சல் சொல்லித் தருகிறேன் என்றார். அவர் தன் கை மேல் எங்களை படுக்க வைத்து நீச்சல் கற்றுக் கொடுத்தார். அது என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தங்கைக்கும் ஒரு பயம் ஆகையால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் என் தம்பியோ நன்றாக நீந்துவான்.”
“வருடங்கள் செல்ல செல்ல எங்களின் உணவகம் எண்ணிக்கையும் அதிகமானது, ஆம் ஒன்றிலிருந்து இப்போ 5 உணவகங்கள். எங்கள் வளர்ச்சி மற்றவர்கள் கண் உறுத்தும் படி இருந்தது. என் அச்சனின் கடின உழைப்பால் உருவானது இந்த உணவகங்கள்.”
“என் தம்பியின் பள்ளியில் நடக்கும் நீச்சல் போட்டியில் அவனே முதலில் வருவான் அந்த அளவுக்கு கெட்டிக்காரனாக இருந்தான்.”
“அச்சன் அவனை உற்சாகப்படுத்துவார், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றான். அவன் எப்போதும் ஆற்றில் தான் பயிற்சி எடுத்துக் கொள்வான், இந்தக் கரையில் இருந்து அந்தக் கரை சென்று வர நேரம் கணக்கீடு செய்வான்.“
“அப்படி ஒருநாள் அவன் ஆற்றில் பயிற்சி செய்யும்போது ஆற்றில் பெருவெள்ளம் வந்து அவனை சூழ்ந்து இழுத்துச் சென்றது, அவன் எவ்வளவோ போராடி அவனால் கரையேற முடியவில்லை. அடுத்த ஊரிலே கரை ஒதுங்கினான் பிணமாக. மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்தோம் நாங்கள்.”
“என் அச்சன், தம்பியின் மரணம் அவரால் நேர்ந்ததோ என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார். “
"ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை
காற்று ஒன்றை இந்தக்
கட்டையிலே விட்டு வைத்த
கூற்றுவனைக் காணாமல்
குழப்பம் அகல்வதில்லை
என்று வாழ்ந்து வந்தார் நடைப்பிணமாக.”
“எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லாதது போல் வாழ்ந்து வந்த எங்களுக்கு அச்சனின் மரணம் மேலும் ஒரு அதிர்ச்சி அளித்தது ஒரு வருடத்தில்.”
“கனவுகளில் நான் கண்டு வந்த காட்சிகளை நிஜமாக்கி செல்ல நீ வேண்டும் என்னருகில் என்றபடி செய்வதறியாது நின்றிருந்தோம் நாங்கள்.”
“எங்கள் வாழ்க்கையின் முடிவோ இது என்று தோன்றும் அளவு இருந்தது எங்கள் சோகம் அச்சனின் பிரிவில்.”
“அச்சன் பார்வையில் இருந்த உணவக நிர்வாக கணக்கு மற்றும் வங்கி கணக்குகளும் நான் பார்க்கும் நிலை வந்தது. வெளி உலகம் தெரியாத பெண்களுக்கு வரும் பிரச்சனையாய் இருந்தது அது எனக்கு. பணம் பரிவர்த்தனை சீட்டு கூட எழுத தெரியாத எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தபோதும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன் அனைத்தையும் சொல்லித் தர ஆளில்லாமல்”
“இன்பமான நாட்கள் துளைத்து இரண்டு வருடம் கழிந்தும் அகலா துன்பத்தில் வெறுமையாய் இருந்தது எங்கள் வாழ்க்கை.“
“ஜனவரி 30 2020, கொரோனா என்னும் உயிர்க்கொல்லி கிருமி த்ரிஷரில் முதன் முதலில் வந்தது, அது வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தது. அதன் காரணமாக பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.”
“பல மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வந்தவர்கள் பலபேர் மற்றும் ஏழ்மையில் வாழும் பல பேர் வேலை இன்றி உணவு இன்றி வாழும் நிலைமை வந்தது. எங்கள் உணவகங்களும் மூடப்பட்டது.”
“செய்திகளின் வாயிலாக வரும் தகவல்கள் சற்று அச்சமாகவும் பரிதாபமாகவும் இருந்தது, சிலர் பட்டினியாலும் சிலர் கிருமியின் தாக்கத்தினாலும் மடிந்தனர் என்பது.”
“கிருமியால் சாவதைவிட பட்டினியால் சாவது மிகவும் கொடுமை என்று, அன்று நாங்கள் முடிவெடுத்தோம் இனி ஒருவரும் பட்டினியால் சாக கூடாது என்று. எங்கள் ஐந்து உணவகங்களின் வாயிலாக இலவச உணவு வழங்கினோம்.”
“பசியாறி அவர்களின் கண்களில் தெரிந்தது நாங்கள் இழந்த சந்தோஷம்,
பணம் என்பது நாம் வாழ்வதற்கு வேண்டுமே தவிர அதுவே நம் வாழ்க்கை இல்லை என்று”
“அன்றே தொடங்கினோம் ஹரிதாஸ் அறக்கட்டளை.”
வள்ளுவன் - கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
ஈங்குக் கற்க வேண்டுவனவற்றைக் கற்று அவற்றிலுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர், பிறர்க்குத் தோன்றாத நெறிகள் எல்லாம் விளங்கித் தாம் சிறப்புறுவர்.
“அம்மா இப்ப சொல்லுங்க நம்ம வாழ்க்கை அவர்களோடு முடிந்துவிடுமா,”
“இறைவனளித்த வரம் நாளை முதல் நடைமுறையில்….”
“இனி என்றென்றும் இன்புறும் நாளாய்....”
“இறைவனின் ஆசியுடன்...!!!”
“ஊருக்காக இந்த தோணி பயணப்படும் இந்த பயணத்தில் துடுப்பு போட நீங்களும் இணைந்து கொள்ளலாம்.”
**அந்தம்**
#30
59,820
14,820
: 45,000
297
5 (297 )
kskselvakumar86
வளரும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் எனது கதை https://notionpress.com/ta/story/ssc/19561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D#.YrfF
rajeshkumar.e.007
pistorista
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50