அதிர்ச்சி.

பெண்மையக் கதைகள்
5 out of 5 (1 )

அவன் மனதில் கோடானக்கோடி ஆசைகள்.

ஆயிரம் ஆயிரம் கனவுகள்

வரப்போகும் மனைவியைப் பற்றி.

தினம் தினம் வரப்போகும் மனைவியைப் பற்றி கற்பனைகள்.

நெஞ்சில் பாயும் வெள்ளம் போல் ஏக்கம்.

அத்தனைக்கும் அவன் கல்யாணம் முடிவு

ஆகிடும் என்றே நினைத்தான் அவன்.

அழகு,

அறிவு,

அடக்கம்,

பணிவு,

பண்பு,

பாசம்,

நேசம் இப்படி எல்லாம் பண்பும் நிறைந்த நல்லா படிச்ச மனைவி அமைய வேண்டும் என்று ராஜா கனவு கண்டான்.

அப்படி கனவு கண்டத்தில் தவறு இல்லையே !!

இது பொதுவாக எல்லோரும் நினைப்பது தான்.

இளசுகளின் இப்படி ஆயிரம் ஆயிரம் கனவுகள், கற்பனைகள் ஆசைகள் இருப்பது ஒன்றும் தவறில்லையே !!

ராஜா இப்படி தான் தனக்கு வரவேண்டிய மனவியைப் பற்றி தினமும் தினம் ஆசையோடு நினைத்து நினைத்து நாட்களை தள்ளி வந்தான்.

கல்யாணம் முடிந்து அழகான மனைவி சியாமளாவுடன் பட்டுக்கோட்டை வந்தான் ராஜா.

அவன் ஆசைகள், கனவுகள், எல்லாம் மெழுகாய் உருகிக்கொண்டு இருப்பது அவன் அறிந்தான் .

அவன் எதிர்பார்த்தபடி சியாமளா இல்லை.

அவள் திருமணம் ஆனதிலிருந்து அவனுடன் சரியாக பேசவில்லை. ஏதோ ஒரு நடை பிணம் போல் தான் இருந்தாள்.

ராஜா என்ன பாவம் செய்தான்? அவளை கலியாணம் செய்து கொண்டது தான் பெரிய தவறு.

இந்த கல்யாணம் அவள் முழு சம்மதத்துடன் தான் நடந்ததா !!?

இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் ராஜாவுக்கு அப்படி இல்லை. தன் அப்பா அம்மா பார்த்து அவர்களுக்கு விருப்பம் போல் தான் எல்லோர் சம்மதத்துடன் கல்யாணம் நடந்தது.

ஆனால் சியாமளா விஷயத்தில் அப்படி இல்லை. அவளுக்கு இந்த கல்யாணத்தில் உடன் பாடில்லை. ஆமாம் அதற்கு காரணம் அவளுக்கு மட்டுமே இல்லை அவள் குடும்பத்துக்கே தெரியும். நடந்த விஷயங்கள் எல்லாம் மூடி மறைத்து தான் அவர்கள் கெளரவம் சமூகத்தில் மரியாதை போக கூடாது கெடக்கூடாது என்று எப்படியோ இந்த கலியாணம் முடித்து விட்டார்கள்.

பாவம் பலிக்கிடா ஆக்கப்பட்டான் ராஜா.

அழகு இருக்கும் இடத்தில் அபாயம் இருக்கும் என்றே சொல்வது சரிதான்.

எப்படியோ தன் அக்கா புருஷனோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ராஜா பார்த்து விட்டான் என்பது அவன் அவசர அவசரமாக பெட்டியை மூடும் போது மேக்கப் பாக்ஸ் வெளியே விட்டு விட்டான். அதை பார்த்து புரிந்துக்கொண்டாள் சியாமளா.

ராஜா போட்டோ வைப்பற்றி எதையும் கேட்க வில்லை. அது சியாமளாவிற்கு பெரிய தண்டனையாக இருந்தது.

வழக்கம் போல் ஸ்கூல் கிளம்பிட்டேன். உடனே சியாமளா ஓடி போய் பெட்டியை திறந்தாள். போட்டோ எடுத்து சுக்குநூறாக கிழித்தாள். டஸ்ட்டு பின்னில் போட போனாள். என்ன நினைத்தாளோ தீ குச்சி எடுத்து பற்றவைத்தாள்.

இரண்டு நாட்கள் போனது. சியாமளாவிற்கு குமட்டல். வாந்தி வர அவளால் எந்த வேளையும் செய்ய முடியவில்லை. தலைசுற்றல், அடிக்கடி வாந்தி நிற்கவில்லை.

ராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக விடுப்பு எழுதினான். அவன் நண்பர் கவிஞர் கோட்டை அம்பிதாசன் வர அவரிடம் ஒரத்தநாடு லேடி டாக்டர் வசந்தி இடம் தன் மனைவிக்கு உடம்பு சரி இல்லை அழைத்து போவதாக சொல்லி ஸ்கூல் HM.இடம் லெட்டரை கொடுக்க சொல்லி கொடுக்க அவரும் வாங்கிக்கொண்டு போனார்.

" ரெடி ஆகு டாக்டர் கிட்ட போகலாம் "

என்றான் ராஜா சியாமளாவை பார்த்து.

" வேண்டாங்க எனக்கு ஒன்றும் இல்லை சரியா போயிடும் " என்றாள் மறுத்தாள். ஆனால் ராஜா விடவில்லை.

வற்புறுத்தி எப்படியோ அழைத்துக் கொண்டு கீழப்பாளையம் பஸ்ஸ்டாப்பிங் வந்தான். சியாமளாவால் நடக்க கூட முடியவில்லை. வாந்தி குமட்டல். சட்டென்று ஒரு யோசனை கடையில் எலுமிச்சம்பழம் வாங்கி கொண்டு அவளிடம் கொடுத்தான் ராஜா.

எலுமிச்சம்பழம் முகர்ந்தால் குமட்டல் வாந்தி வருவது நிற்கும் என்று சொல்வார்கள்.

தஞ்சாவூர் பஸ் வந்தது

பஸ்சில் இருவரும் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது. சீட்டில் பக்கத்தில் உட்கார்ந்த சியாமளா அவனிடம் எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். பாப்பாநாடு ஸ்டாப்பிங்கில் பஸ் நின்றது.

அந்த ஸ்டாப்பிங்கில் ராஜா வோடு வேலைசெய்யும் கிளார்க் வனிதா அவர் கணவர் இருவரும் ஏறினர்

ராஜாவை பார்த்து "சார் எங்கே சார் போறீங்க இன்னிக்கு ஸ்கூல் போகவில்லையா லீவ்வா. "என்றாள் வனிதா "ராஜா ஆமா டாக்டரை பார்க்க போறோம் "

"யார் சார் உங்க மனைவியா "

"ஆமா என் மனைவி சியாமளா" அறிமுகம் செய்தான் அவன்.

பின்னாடி சீட்டில் உட்கார்ந்தார்கள் அவர்கள்.

இவற்றை கண்டு கொள்ள வில்லை சியாமளா. ஒப்புக்கு நமட்டு சிரிப்பு சிரித்து வைத்ததாள்.

" என்ன சார் உங்க மனைவிக்கு உடம்பு சரி இல்லையா "

கேட்டாள் வனிதா.

" ஆமாம் லேடி டாக்டர் வசந்தியை பார்க்க போறோம்" என்றான் அவன்.

பட்டுக்கோட்டையில் நிலோபர் பெரிய ஸ்பெஷலிஸ்ட். MD அவர் அவரிடம் காட்டி இருக்கலாம். ஆனால் டாக்டர் வசந்தி பெரிய பெண்கள் நல மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். கைராசி பெயர் பெற்றவர். இவருக்கு நல்ல பெயர் இருக்கு. அதனால் அவரைப் பற்றி கருவூலத்திற்கு வரும் போது கேள்வி பட்டிருக்கிறான்.

ஸ்கூல் பில் சம்பள பட்டியல் எல்லாம் இங்கு வந்து தான் பாஸ் பண்ணுவார்கள். அதன் பின் தான் பேங்க் மூலம் சம்பளம் வரும்

இப்போ கூட வனிதா ஸ்கூல் பில் கொண்டு போய் ட்ரஸுரி அதான் கருவூலத்தில் கொடுக்க போய்க்கொண்டு இருக்கிறார்.

ஒரத்தநாடு வந்து விட்டது. எல்லோரும் இறங்கி ராஜாவும் சியாமளாவும் டாக்டர் வசந்தி கிளினிக் போனார்கள்.

வனிதா போகிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.

அந்த கிளினிக்கில் கூட்டம் இல்லை. ரொம்ப வசதியாக போய் விட்டது. டோக்கன் போட வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.

நர்ஸ் மேடம் கூப்பிடுறாங்க போங்க என்று ராஜாவையும், சியாமளாவையும் போக சொன்னாள்.

"உள்ளே டாக்டர் வாங்க உட்கருங்க" என்று டாக்டர் சொல்ல

இருவரும் உட்கர்ந்தார்கள்.

" யாருக்கு பார்க்கணும். "

"என் மனைவிக்கு தான் டாக்டர் "

" என்ன செய்யுது "

" வாமிட்டிங் டாக்டர் "

"ஓ "

கையை பிடித்து பார்த்தார் டாக்டர்.

"சரி நீங்க வாங்க "

தனி அறைக்கு அழைத்து போனார் அவர்

கால் மணி நேரம் செக்கப். பின் பிளட் டெஸ்ட் அப்புறம் யூரின் டெஸ்ட். ரிசல்ட் வர ஒரு மணி நேரம் ஆனது வெளியே வந்தார்கள்.

டாக்டர் சியாமளாவை உட்கார சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தார்.

ரிசல்ட் ரிப்போர்ட் நர்ஸ் கொண்டு வந்து டாக்டர் மேஜை மீது வைத்தாள்.

டாக்டர்

"சார் நீங்க சந்தோச படுற விஷயம் தான்.

உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க இதுக்கு முன்னாடி வேற டாக்டரை போய்

பார்த்தீர்களா. செக்கப் செய்தீர்கள். "

என்றார்

" இல்லைங்க டாக்டர். யாரையும் போய் பார்க்கலே இங்கே தான் வரோம் "

ஓ அப்படியா குழந்தை நல்லா கிரௌத் (வளர்ச்சி ) நல்லா ஆரோக்கியமா இருக்கு பயப்பட ஒன்றும் இல்லை. ஆனால் இப்போ இருந்து உங்க மனைவியை கவனமாய் பார்த்துக்கோங்க. ரொம்ப தூரம் பயணம் செய்ய கூடாது. கொஞ்சம் நாள் இப்படி தான் இருக்கும். தலை சுற்றல், அசதி, வாந்தி, அப்புறம் சரியா போயிடும்

பயப்பட தேவை இல்லை. நான் மாத்திரை, டானிக் எழுதி தரேன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிடணும். அடிக்கடி வந்து செக்கப் செய்து கொள்ளுங்கள். உடம்பில் கொஞ்சம் ரத்தம் குறைவா இருக்கு. டெய்லி பேரிச்சம் பழம் பாலில் ஊரவைத்து சாப்பிடுங்க. பழங்கள், கீரை சாப்பிடுங்க..

எதுக்கும் கவலை படக்கூடாது. மசக்கை என்று சொல்வார்கள். மாங்காய் சாப்பிட தோணும், சாம்பல் சாப்பிட தோணும் கண்டதை சாப்பிட கூடாது.நல்லா தூங்கணும். வைட்டமின் மாத்திரை எழுதி தர்றேன் தவறாம சாப்பிடணும். "

சொல்லிக்கொண்டே போனார்.

"நீங்க என்ன செயிரிங்க சார் " என்று ராஜா வை பார்த்து கேட்க. "நான் டீச்சரா இருக்கேன் டாக்டர் " என்றான் டாக்டர். "சரி நீ வெளியே இருமா "என்று சியாமளா வை சொல்ல சியாமளா எழுந்து வெளியே போனாள்.

டாக்டர் ராஜாவை பார்த்து" இனிமேல் கொஞ்சம் நாள் நீங்க ஒழுங்கா இருக்கணும் தள்ளி படுக்கணும். அவங்களுக்கு தொந்தரவு செய்ய கூடாது. உங்க மனைவி கன்சீவ் ஆகி மூன்றுமாசம் ஆகியிருக்கு "

என்ற குண்டை போட்டார்.

தலை வெடித்து சிதறியது அவனுக்கு கலியாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகியிருக்கு அதற்குள் மூன்று மாதமா..

ஐயோ..

டாக்டர் ரிப்போர்ட் எழுதி பக்கம் பக்கமா கொடுக்க வாங்கிக்கொண்டு பீஸ் ரூ 1500/

செக்கப் உட்பட கொடுத்து விட்டு வெளியே வந்தான் அவன்.

வானத்தில் பறப்பது போல் நடை பிணமாய் சியாமளாவை அழைத்துக்கொண்டு ஒரத்தநாடு பஸ்ஸ்டாண்ட் வந்து பட்டுக்கோட்டை பஸ் ரெடியாக இருக்க இருவரும் எறிந்தனர் அதற்கு முன் மாத்திரை மருந்து டானிக் எல்லாம் மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிக்கொண்டான் ராஜா. காபி சாப்பிடும் எண்ணம் கூட வரவில்லை. சியாமளா விற்கு வாந்தி நிற்பதற்குஇன்ஜெக்ஷன் போட்டு மாத்திரையும் கொடுத்து இருந்தார் அவர்.

பஸ்சில் சீட்டு வாங்ககூட தோணவில்லை அவனுக்கு லேசா ஜுரம் வந்தது போல் உடம்பு சூடேறியது ராஜாவுக்கு. பேசிக்கொள்ளவே இல்லை. அவன் கண்கள் ஏனோ கலங்கி கண்ணீர் விழும் தருணத்தில் தன் கைகுட்டையை எடுத்து மூச்சில் துடைத்துக்கொண்டான் டாக்டர் சியாமளாவை வெளியேஅனுப்பி விட்டு சொன்னது அவளுக்கு தெரியாது.

பஸ்சில் பின் சீட்டில் ஒரு பெண் "கத்தரிக்காய் முன்றினா கடை தெருவுக்கு வந்தேயாகணும் " என்று சொன்னது ஏனோ இவனுக்கு சொன்னது போல் இருந்தது.

இதயா

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...