நவீன சகுனி

உண்மைக் கதைகள்
5 out of 5 (1 )

ஆடி திங்கள் 4 ஆம் நாள் 2019

இதோ இதுதான் என் வீடு. இந்த பெரிய கதவுல இருக்குற சாமந்தி பூ, மாவிலை தோரணம் எல்லாம் நல்லா இருக்கா? இது எங்க அம்மா கட்டுனது. எதுக்கு தெரியுமா? இன்னைக்கு எனக்கு பெயர் சூட்டும் விழா.

எங்க அம்மா எவ்ளோ அழகா இருக்காங்க! அவங்க பேரு லட்சுமி. எங்க அப்பா காணோமே! ஓ அதோ வராங்க அவங்க பேரு ஹரி. அதோ குட்டியா பட்டுபவடை போட்டு அழகா இருக்காங்களே அவங்க எங்க அக்கா ஆராதனா. அவங்களுக்கு இப்போ மூணு வயசு. நான் எங்க அம்மா மடில வேஷ்டி கட்டி தூங்குறேன். இது தான் எங்க குடும்பம். இப்போ நீங்களே நாங்க எப்டி இருக்கோம்னு பாருங்க.

அம்மு தம்பி தூங்கிட்டானாடி? பாப்பா எங்க? ஆருமா ஓடாதே.விழுந்துறுவடி தங்கம்.

ஆமா ஹரி. இப்போதான் தூங்குறான். நீ எங்க போன ? மழை வேற இப்படி பெய்யுது.இந்த மாசம் மழை பெய்யுது பாரு.நனஞ்சிட் டியா?எதுக்கு இதெல்லாம்? பாப்பா தொட்டில் நம்மட்ட புதுசா தான இருக்கு அப்பறம் எதுக்கு இந்த புது தொட்டில். உன்னோட.. சரி அத்தை மாமா எல்லாம் வந்துட்டங்களா? அப்பா அம்மாவுக்கு இப்போ தான் வண்டி அனுப்பிருக்கேன். வந்துட்டு இருக்கங்கடா.

அப்பா என்னோட குரங்க தம்பி பக்கத்துல தூங்க வைக்க போறேன்பா.

ஆருமா தம்பி மேல இடிக்க கூடாது மெதுவா வைங்க செல்லம்.

சரிங்க அம்மா!

இல்லடி நனையல. அவங்களுக்கும் வண்டி அனுப்பிட்டேன். எழும்பூர் வந்துட்டங்களாம். அரை மணி நேரத்துல வந்துருவாங்க.

சரி ஹரி. காசு செலவுக்கு எடுத்தியா? மதியம் சாப்பாடுக்கு சொல்லி இருந்தோம்ல அவங்களுக்கு காசு கொடுக்கனும்டா. தம்பியையும் பாப்பவையும் பாத்துக்கோ நான் போய் மத்த வேலைலாம் பாக்குறேன்.

சரிடி நீ போ நான் பாத்துக்கிறேன். அம்மு எனக்கு சில்லுனு ஒரு எலுமிச்சை ஜுஸ் போட்டுகுடுடி ப்ளிஷ்டி.

வெளிய பாருடா சரி மழை. இந்த மழைல உனக்கு சில்லுனு வேணுமாடா? சரி போடறேன் இரு.

மழை ல எப்படி எல்லாரும் வரபோரங்களோ தெரியலையே.

லவ் யூ அம்முமா.

தை திங்கள் 18 ஆம் நாள் 2020

ஆருமா தம்பி பாத்துக்கோங்க அம்மா அடுப்படி ல வேலை பார்க்க போறேன்டி.

பேபி என்ன பண்ற? சனிக்கிழமை என்ன வேலை பார்க்கிற? பாப்பா தம்பி ரெண்டு பேரும் இருக்காங்க பாத்துக்கோ .

சரி சரி நீ போ.

ஹரி!

என்னடி?

ஒரு உதவி

என்ன பாத்திரம் விலக்கனுமா?

ஆமாடா

சரி சரி நீ அவங்கள பாத்துக்கோ நான் பண்றேன்

என் செல்லம் ! லவ் யூ பேபி

ரொம்ப பொங்காத போ போ

இன்னைக்கு சனிக்கிழமை அதான் பண்றேன்

ஹரி EMI எல்லாம் கட்டிடியா?

கார்க்கு இன்னைக்குதான் AUTOPAY எடுப்பாங்க. மத்ததெல்லாம் முதல் தேதியே AUTOPAY ஆகிருச்சு.

சரிடா.. தம்பிக்கு செல்வமகன் போடனும்.

இந்த வாரம் பண்ணுவோமா?

சரி போவோம்..

இன்னைக்கு சாயங்காலம் பெசன்ட் நகர் போவோமா ஹரி?

ஹை ஜாலி! அம்மா போகலாம் :)

தம்பிக்கு சளி பிடிக்காதா?

வேணாம் அம்மு வேணாம்.

அப்பா பிளீஸ் பா .

தம்பிக்கு 8 மாசம் தான் பாப்பா ஆகுது.. உங்க அம்மாவ தான் அடிக்கணும்.

ஹே எனக்கு ரொம்ப கடுப்ப இருக்குடா அதான் கொஞ்சம் ஜாலியா போலாம்னு கூப்பிட்டேன் போடா.

சரி சரி அப்போ சீக்கிரம் போயிட்டு வந்துரணும் சரியா?

சரி அப்பா

சரி பேபி

பங்குனி திங்கள் 1ஆம் நாள் இரவு 8 மணி 2020

ரெண்டுபேரும் தூங்கிடங்க போல.. ஆமாடா.. நீ சாப்பிட்டு படுக்க வா நான் எடுத்து வச்சுருக்கேன்.

சரிம்மா நீயும் தம்பி தூங்கும் போதே தூங்கு. நான் சாப்பிட்டு வரேன்.

தூங்கலையா இன்னும்? என்ன யோசனை அம்மாவுக்கு

இல்லடா EMI அதிகம் ஆகிருச்சு. இந்த மாசம் பாப்பவ பள்ளிகூடம் சேர்க்கணும். சிபிஎஸ்இ ல நிறைய காசு ஆகுமாம். இதுல வாரத்துல ஒரு நாள் மருத்துவ செலவு வேற வருது. என்ன பண்றது. நான் இப்போ வேலைக்கும் போக முடியாது. தம்பிக்கு ஒரு மூன்றை வயசு ஆச்சுனா போகலாம். ம் என்னமோ போ கடுப்பா இருக்குது…

ஹே விடுடி பாத்துக்கலாம்.

நீ தூங்கு நான் இருக்கேன்.

லவ் யூ பேபி .

பங்குனி திங்கள் 1 ஆம் நாள் இரவு 11 மணி 2020

அம்மு அம்மு ?

லக்ஷ்மிமா?

தூங்கிட்டியா?

நீ கவலைப்படாம தூங்குமா உம்மா…

பங்குனி திங்கள் 11 ஆம் நாள் 2020

வணக்கம். இன்றைய முக்கிய செய்தி. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்யயோ போச்சுடா என்ன ஹரி இப்டி சொல்றாங்க?

ஆமாடி.

சரி விடு வீட்ல இருந்து வேலை பார்க்க சொல்லிட்டாங்க ஜாலி தான்.

ஆனா எப்படி அம்மா அப்பா பார்க்க முடியும்.. அடுத்த மாசம் ஊருக்கு போகலாம்னு இருந்தோம் ல..

ஹ்ம்ம் அமைதி செல்லம்..

தம்பி அழுகுற சத்தம் கேட்குது பாரு போ.

பாப்பா அங்க என்ன பண்ற .. வெளிய போகாத உள்ள வா

அப்பா நான் விளையாடுறேன். இந்த காவியா என் cycle தள்ளி விட்டா..

நீ இப்போ உள்ள வா

அம்மு கதவை அடச்சிருடி.

பாப்பா இனி வெளியலாம் விளையாட போகாத

ஏன்பா?

வெளிய ஒரு நோய் பரவுதாம்.. நம்ம வீட்ல தம்பி இருக்கான் நீ இருக்க. உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் அந்த நோய் பரவுமாம். ஆதனால இனி வீட்டுகுள்ளதான் இருக்கனும் சரியா. அப்பா வும் வீட்ல இருந்து தான் வேலை பார்க்க போறேன் சரியா குட்டிமா

சரிப்பா:(

அம்மா அம்மா! அப்பா என்ன சொல்றாங்க?

பாப்பாவுக்கு போனவாரம் காய்ச்சல் வந்துச்சா அப்போ அம்மா என்ன சொன்னேன்? தம்பியை தூக்க கூடாது பாப்பா அப்டின்னு சொன்னேனா.. அது மாதிரி இப்போ வெளிய காய்ச்சல் மாதிரி ஒரு நோய் பரவுதாம். நம்ம மூக்குல அது போச்சுன்னா நமக்கு அந்த நோய் வந்துரும். சரியா அதனால் பிரதமர் தாத்தா நம்மள வீட்ல இருக்க சொல்லிருக்காங்க.

ஹ்ம்ம். எனக்கு ஒண்ணுமே புரியல போங்க.

பாப்பா இங்க வா இந்தா ஆச்சி போன்ல பேசுறாங்க பேசு.

கொடுங்க அப்பா

ஹலோ ஆச்சி எப்போ ஊருக்கு வருவீங்க.. அம்மாவும் அப்பாவும் என்ன வெளிய விடமாட்றாங்க.

அம்மா அப்பா சொல்றத கேளுடி செல்லம். ஆச்சி அடுத்த மாசம் வந்துருவேன் தங்கம்.

ஆனி திங்கள் 4 ஆம் நாள் 2020

ஹரி இந்தா பாயசம்.

எதுக்கு இப்போ பாயசம்.

தம்பிக்கு இன்னைக்கு பிறந்த நாள்

ஆமா ல நான் மறந்துட்டேன் மன்னிச்சிருடி பிளீஸ்.

நீ இப்போ லாம் எங்க ட பேசுறது கூட இல்ல. Lockdown போட்டப்போ என்ன சொன்ன… வீட்ல இருந்து ஜாலியா வேலை பார்ப்பேன் அப்டின்னு. ஆனா இப்போ இந்த அறைய விட்டு வரமாட்ற. அப்படி என்ன வேலை பார்க்கிற? உனக்கு என்ன பிரச்சினை சொல்லு?

நான் பாப்பா தம்பி ரெண்டு பேரும் வச்சிட்டு எவ்ளோ கஷ்டப் படறேன் நீ தம்பிய கூட பாத்துக்கல:(

அம்மு இல்லடி கொஞ்சம் வேலை அதிகம் டி கோவிசுக்காத.

ஆனி திங்கள் 18 ஆம் நாள் 2020

ஹரி கதவ திற

ஹரி

ஹரி

என்னடி என் உயிர வாங்குற உனக்கு என்ன வேணும் நிம்மதியா மனுசன இருக்கவிட மாட்ற.சே உங்களோட…

என்ன என்ன வேணும் இப்போ?

பேங்க் ல இருந்து போன் வந்துச்சு

நம்ம அக்கவுண்ட் ல AUTOPAY பண்ண காசு இல்லையாம்.

சரி நான் பேசிக்கிறேன் நீ போ.

இரு ஹரி பேசிட்டு போ.

என்ன பேசணும்?

என்ன பிரச்சினை உனக்கு? சம்பளம் எல்லாம் எங்க போகுது?

முதல் தேதி எடுத்து என்ன பண்ணுற?

நான் என்னமோ பண்றேன் உனக்கு என்ன? அது என் பணம் என் இஷ்டம்.

நீ என்னமும் பண்ணுபா. எங்களுக்கு ரெண்டு மாசமா சாப்பாட்டுக்கு கூட காசு குடுக்கல. நாங்க என்ன பன்றோம்னு கூட நீ கேட்கல. எங்க அப்பா குடுத்த காசுல போன மாசம் வரை வாங்கிட்டேன் எல்லாம். இப்போ காசு இல்ல. தம்பிக்கு மருந்து வாங்கணும். மளிகை வாங்கணும்.

சரி நாளைக்கு தரேன்.

எப்டி தருவ? சம்பளம் எல்லாம் காலி பண்ணிட்ட.

அதெல்லாம் உனக்கு எதுக்கு போ.

அப்பா அப்பா கதவ பூட்டாதீங்க. நானும் உள்ள வரேன் வாங்க யானை விளையாடலாம்.

ஹே பாப்பா போ.

அம்மா ஹூம்ம்ம்ம்ம் ஹூம்…

அப்பா விளையாட வரல

அப்பாக்கு வேலை இருக்கு பாப்பா முடிச்சிட்டு வருவாங்க.

போங்க அம்மா.அப்பா இப்போ லாம் நம்ம கூட விளையாட வர மாட்றாங்க.

ஹூம்ம்ம்ம்ம் ஹூம்…

ஐப்பசி திங்கள் 18ஆம் நாள் 2020

யாரு இப்படி கதவ தட்றாங்க…

யாரு

யாருங்க நீங்க?

நீ யாருமா?

ஹலோ இது எங்க வீடு. நீங்க வந்து மரியாதை இல்லாம என்ன யாருனு கேட்கறிங்க

உங்க புருஷன் பெயர் தான ஹரி.

ஆமா

அவன கூப்டுமா.

எதுக்கு? மரியாதை குடுத்து பேசுங்க முதல்ல. அவன் இவனு சொல்லாதீங்க..

அவன் எங்களுக்கு கடன் குடுக்கணும்.

கடனா? எவ்வளோ?

சொன்னா நீ குடுக்க போறியா?

25 லட்சம்

25 லட்சமா?

ஆமா.

அவ்ளோ காசு எதுக்கு குடுத்தீங்க?

அது உன் புருஷனுக்கு குடுக்கல.

அவன் வாங்குன சம்பளத்துக்கு குடுத்தோம்.

வாங்கி 2 மாசம் தான் வட்டி கட்டுனான்.

அப்பறம் வட்டி கட்டவே இல்லை.போன் பண்ணினா எடுக்க மாட்றான். அதான் நேர்ல வந்தோம்.

அவங்க வெளிய போனாங்க இன்னும் வரல. வந்ததும் சொல்றேன். உங்க காச நாங்க எப்டியாவது கொடுத்துருவோம். இப்படி வீட்டுக்கு முன்னாடி வந்து சத்தம் போடாதீங்க.

இந்த ஒரு வாரம் கெடு. அதுக்குள்ள எனக்கு வட்டி வந்துருக்கனும். இல்ல அவ்ளோதான் .

ஹரி ஹரி கதவ திற இப்போ இங்க ஒருத்தர் கத்திட்டு போனது உனக்கு கேட்கலயா?

அம்மு

ஹே என்னடா ஏன் இப்படி அழற?

என்னடா சொல்லி தொலை என்னதான் பிரச்சனை? அழுகாதீங்க நான் இருகேன்ல ப்ளீஸ். என்ன பேபி என்ன ஆச்சு?

சொல்லுமா?

அம்மு…

சொல்லுமா சொல்லு என்ன பிரச்சனை?

நான் வாங்குற சம்பளம் EMI க்கு சரியா போகுதுல.அதனால ஏதாவது வேற வேலையும் சேர்த்து பார்க்கலாம்னு நினைச்சேன்.அப்போ தான் ஆன்லைன் ல ஒரு கேம் விளம்பரம் வந்துட்டே இருந்துச்சு.விளையாடுனேன். அதுல நிறையா பணம் வந்துச்சு. உடனே எனக்கு ரொம்ப சந்தோசம் ஆகிருச்சு.

சில நேரம் காசு போகவும், அத பிடிக்க மறுபடி மறுபடி விளையாடுனேன். ஒரு சமயத்துல எல்லா காசும் போயிருச்சு.

என்ன பண்றதுனு தெரியல. கடன் வாங்கி விளையாடுனேன்.

அடப்பாவி சூதாடிருக்க? அய்யோ கடவுளே !

ஐப்பசி திங்கள் 25 ஆம் நாள் 2020

அப்பா அப்பா தம்பியை பார்த்தீங்களா?

எழுந்து நிற்கிறான்? நானும் இப்படி தான் எழுந்தேனா முதல்ல?

அப்பா அப்பா பேசுங்கபா?

பாப்பா நீ விளையாடுமா அப்பாக்கு ரொம்ப வேலை அதனால் சோர்வா இருக்காங்க . அடுத்த வாரம் எல்லாம் சரி ஆகிரும். நம்ம ஊருக்கு போறோம்.

ஹை ஜாலி அம்மா.சரி நான் விளையாட போறேன். டா டா.

பப்பு நாம தாத்தா வீட்டுக்கு போக போறோம். அங்க போனா தாத்தா,ஆச்சி, சித்தி, மாமா எல்லாம் இருப்பாங்க. அக்கா உனக்கு அங்க நிறைய பொம்மை வச்சிருக்கேன்.இப்போ இங்க அக்கா கூட விளையாடு. அடுத்த வாரம் நாம அங்க போய் விளையாடலாம்.

ஹரி அப்பாக்கு நேத்து போன் பண்ணேன்.

எதுக்கு ? எல்லாத்தையும் சொல்லிட்டியா?

இல்ல இல்ல நான் எதுவும் சொல்லல. கொஞ்சம் பணம் வேணும் நாங்க பிசினஸ் பண்ண போறோம் அப்படினு சும்மா சொல்லி வச்சிருக்கேன்.

அப்பாவுக்கு இந்த லாக்டவுன் ல ரொம்ப நஷ்டம் ஆகிருச்சாம்.

அவங்க கைல காசு இல்லையாம்.அதனால நிலத்த வித்து தரேனு சொல்லிருக்காங்க.இடம் என் பேர்ல இருக்கு.

நம்மள அங்க வர சொன்னாங்க. இரயில் லாம் போகுதாம் இப்போ. நம்ம அங்க போனா ஏதாவது தீர்வு கிடைக்கும். சரியா ?

ஹம் சரி.

இப்போதைக்கு நான் என் நகைய வச்சு காசு வாங்கி தரேன். வட்டி கட்டிரலாம். நீ விடு பாத்துக்கலாம்.

ஹம் சரி.

சரி நான் பேங்க் வரை போகனும் நீ இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கோ.

ஹம் சரி.

ஐப்பசி திங்கள் 25 ஆம் நாள் 2020

நண்பகல் 1 மணி

ஹலோ ஹரி சார்?

நீங்க மருந்து ஆன்லைன் ல சொல்லி இருந்தீங்க?

ஆமா சார்.

அது தூக்க மாத்திரை சார்.

டாக்டர் சீட்டு இல்லாம தர மாட்டோம்.

அது எங்க அம்மாவுக்கு. அவங்க முடியதவங்க அவங்களால் தூக்க மாத்திரை இல்லாம தூங்க முடியாது சார்.

மன்னிசிருங்க சார் டாக்டர் சீட்டு இல்லாம தர கூடாது.

ஐப்பசி திங்கள் 30 ஆம் நாள் 2020

அம்மு என்னடி இப்படி இருமலா இருக்கு உனக்கு?

ஹரி எனக்கு ரொம்ப இருமலா இருக்கு . மூச்சு விட கஷ்டமா இருக்கு.

இருமா நான் டாக்டர் கூப்டறேன்.

பாப்பா அம்மா கிட்ட போகாத. தம்பியையும் அம்மா தூக்க முடியாது. நான் பாத்துக்கிறேன். நீ தம்பி அம்மாகிட்ட போகாம பாத்துக்கோ.அம்மாக்கு உடம்பு முடியல.அம்மாகிட்ட போனால் உனக்கும், தம்பிக்கும் இருமல் வரும் . போகாத சரியா?

அப்பா பசிக்குது.

இரு அப்பா சமைக்கிறேன். கொஞ்ச நேரம்.

மார்கழி திங்கள் 28 ஆம் நாள் 2021

ஹரி மருத்துவ செலவுக்கு என்ன பண்ணுன?

என்னோட நண்பன் தினேஷ் கிட்ட வாங்கினேன்.

அவன் திருப்பி தர வேணாம்னு சொல்லிட்டான். அவன் தான் ரொம்ப உதவி பண்ணுனான்.

அந்த அண்ணா நமக்காக ரொம்ப உதவி பண்ணிருக்காங்க. அவங்கள சாகுற வரை நாம மறக்க கூடாது.. நமக்கு காசு வந்ததும் அவங்கட்ட அத கொடுத்திரு.

பாப்பா தம்பி எங்க?

அவங்க தூங்குறாங்க.

ஹரி உன் கண்ணெல்லாம் என்ன இவ்ளோ சிவந்திருக்கு?

நீ தூங்கவே இல்லையா?

என்னடா நம்மக்கு இப்படி அடுத்தடுத்து சோதனையா இருக்கு.

பங்குனி திங்கள் 1ஆம் நாள் 2021

ஹரி நாளைக்கு ஊருக்கு போறோம். கையில் காசு எல்லாம் செலவு ஆகிருச்சு. தேர்தல் வேற வருது.

நீ எதுக்கு இப்படி சோகமா இருக்க விடு எல்லாம் மாறும்.

அம்மு இன்னைக்கு நான் சமைச்சு உங்களுக்கு ஊட்டவா?

ஹே சூப்பர்டா. இப்போ தான் நீ என்னோட ஹரி.

ஹரி சூப்பரா இருக்குடா. இந்தா நீ சாப்டு.

எனக்கு வேண்டாம்.வயிறு சரி இல்ல. நான் அப்பறம் சாப்பிடரேன்.

என்னடா பாப்பவும் தம்பியும் சாப்டதும் உடனே தூங்கிட்டாங்க.

எனக்கும் தூக்கம் வருதுடா.. நான் தூங்கிட்டா என்ன சீக்கிரம் எழுப்பி விடு. ஊருக்கு போக எடுத்து வைக்கனும். லவ் யூ பேபி.

அப்பா எதுக்கு கத்தி எடுக்குறாங்க? அய்யோ அப்பா அம்மாக்கு வலிக்கும் விடுங்க..

அம்மு மன்னிச்சிருடி. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் நிறையா கடன் வாங்கிதான் மருத்துவ செலவு எல்லாம் பண்ணினேன். இன்னுங்கொஞ்ச நேரத்துல அந்த வட்டிகாரர் வந்துருவாரு. என்னால இந்த அவுமானத்த தாங்க முடியல.நான் மட்டும் செத்துட்டா நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க. எல்லாரும் ஒரே நேரத்துல போகனும்னு தான் காத்து இருந்தேன். நம்ம ஊருக்கு போய் என்ன பண்றது. உனக்கும் என்னால அவமானம் தான் கிடைக்கும். இதுக்கு மேல இந்த கடன் நம்மள நிம்மதியா வாழ விடாது.வாங்க எல்லாரும் போவோம். அம்மா போன சமயம் வரும் போது தூக்க மாத்திரை கொஞ்சம் விட்டு போனாங்க அதை சாப்பாட்டுல கலந்தேன். ஆனா அது நமக்கு சாவு குடுக்காது. நம்மள காப்பாத்திருவாங்க.எனக்கு வேற வழி தெரியல அம்மு.

ஹையோ அம்மு…

அப்பா நான் தான் பப்பு. இங்க பாருங்க நான் பேசுறேன். அம்மா எழுந்திருங்க. அப்பா என்ன பண்றாங்கனு பாருங்க. அக்கா நீ எந்திரி வா. அம்மா நாங்க கத்தி எடுத்தா திட்டுவிங்க… இப்போ அப்பவ பாருங்க. அக்கா ஊருக்கு போறோம்னு சொன்னில வா எழுந்திரு.. அம்மா அப்பா இனி நம்ம கூட ஜாலியா விளையாடுவங்க அப்டின்னு சொன்னீங்க. அப்பா என்ன பண்றாங்க பாருங்க.

[சென்னையில் பயங்கரம். கடன் தொல்லையால் குழந்தைகள் உட்பட கணவன் மனைவி நான்கு பேர் நேற்று மாலை வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்]

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...