இரத்த கண்ணீர்

அறிவியல் புனைவு
4.8 out of 5 (15 )

இரவு 7 மணி அளவில் வீதியே ஒலிக்கும்படி ஐயோ அம்மா என்று ஒரு சத்தம் வலியை பொறுக்கமுடியாமல் கத்தினால் அமுதா.

கொஞ்சம் பொறுத்துக்கோ அமுதா இதோ கார் வந்துடும் நம்ம இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம் என்கின்றான் ஈஸ்வரன்.

வலி தாங்க முடியல மாமா பணிகுடம் உடைந்துவிட்டது போல தெரிகிறது என்று அமுதா கூறிக் கொண்டிருக்கும் போதே அவளின் கால்களுக்கிடையே நீர் கசிய ஆரம்பித்தது.

காருக்காக காத்திருந்து பயனில்லை என்று உணர்ந்த ஈஸ்வரன் அமுதாவை தன் இரு கைகளினாலும் தூக்கிக்கொண்டு மெயின் ரோட்டிற்கு செல்கின்றான்.

ஒரு ஆட்டோவை நிறுத்தி அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றான் ஈஸ்வரன்.

ஆட்டோவும் மருத்துவமனையை அடைந்தது மருத்துவமனை உள்ளே வேகமாக சென்ற ஈஸ்வரன் அங்குள்ள மருத்துவரை அழைத்து தன் மனைவியின் நிலைமையை கூறுகிறான்.

டாக்டர் நரசை அழைத்து ஸ்ட்ரக்சர் கொண்டு வாங்க என்று ஆட்டோவின் அருகில் சென்று அமுதாவை இறக்கி ஆபரேஷன் தியேட்டருக்கு விரைந்தார்.

ஈஸ்வரனுக்கு பதற்றம் குறையவில்லை எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தான்.

அவனுக்கோ அமுதாவை தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை தன் காதலுக்காக தன் குடும்பத்தை விட்டு வந்தவள் அமுதா.

அவளை நல்லா பாத்துக்கணும் என்ற எண்ணம் மட்டுமே ஈஸ்வரனுக்கு ஆப்ரேஷன் தியேட்டரில் அமுதா அலறிய சத்தம் ஈஸ்வரனின் காதில் கேட்க முடியாமல் கண்கலங்கினான்.

தன் கண்களை இருக்கமாக மூடிக்கொண்டு இருக்க தன் பழைய காலங்கள் நினைவுக்கு வந்தன.


என்னுடைய சிறுவயதிலேயே எனது அப்பாவும் இறந்துவிட்டார் அம்மாதான் என்னை வேலை செய்து படிக்க வைத்தாள்.

வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அமுதா அவளின் குடும்பத்தில் நான்கு தலைமுறைக்கு பிறகு இவள் ஒருத்தியே பெண் வாரிசு என்பதால் அவளை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அவள் ஆசைப்பட்ட எதையும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள் அவர்கள் குடும்பத்தினர்.

கல்லூரி காலங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து ஆனால் எங்கள் காதலுக்கு அவளது குடும்பமே எதிர்ப்பு தெரிவித்தன.

என் அம்மா தலைமையில் தான் எங்கள் கல்யாணம் நடந்தது.

அம்மாவும் உடல்நிலை சரியில்லாததால் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் இறந்தார்.

இப்போ நாங்கள் இருவரும் கேட்பாரற்று அனாதை அனாதையாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அம்மா என்று அலறினாள் அமுதா.

அமுதா சத்தமிட்ட இரண்டாவது நொடியே வீர் என்று குழந்தையின் சத்தமும் கேட்டது.

திடுக்கென்று கண் விழித்தான் ஈஸ்வரன் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ஒரு நர்ஸ் குழந்தையுடன் வெளியே வந்தாள்.

சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறிக்கொண்டே குழந்தையை ஈஸ்வரன் கையில் கொடுத்தாள்.

ஈஸ்வரன் தன் கைகளால் குழந்தையைப் பற்றிக் கொண்டான்.

அமுதா எப்படி இருக்கா அவளை நான் பார்க்கலாமா என்று வினவினான் ஈஸ்வரன்.

அவங்க நல்லா இருக்காங்க சார் ஒன்றும் பயப்பட தேவையில்லை சின்ன மயக்கம்தான் நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துவிடுவோம்.

ஒரு அரை மணி நேரம் கழித்து நீங்கள் போய் பார்க்கலாம் என்று கூறி விட்டு நகர்ந்தாள்.

அமுதா கண்கள் விழித்ததும் ஈஸ்வரன் அவளின் அருகில் சென்று எப்படி இருக்க அமுதா என்று கேட்டான்.

நல்லா இருக்கேன் மாமா எனக்கு ஒன்றும் இல்லை நமக்கு குழந்தை எங்கே என்று கேட்டாள்.

ஈஸ்வரன் தனது குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி அமுதாவின் கையில் கொடுத்தான் ஆனந்த கண்ணீருடன் தன் குழந்தையை கையில் வாங்கி நெற்றியில் முத்தமிட்டால் அமுதா.

மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தனர் மூவரும.் ஈஸ்வரன் மற்றும் அமுதா தனது குழந்தைக்கு காவியா என்று பெயர் வைத்தனர்.

சில தினங்கள் கழிந்தன அமுதமும் எப்பவும் போல தன் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அன்று காலை அமுதாவின் அம்மாவும் அப்பாவும் அமுதாவை பார்க்க வந்தனர்.

அமுதாவிற்கு ஒன்றும் புரியவில்லை என் மேல் இருந்த கோபம் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இவ்வளவு சீக்கிரத்தில் சரியாகி விட்டதே என்று மகிழ்ச்சி வேறு.


தன் மகள் காவியாவை தன் அப்பாவிடம் கொடுத்து விட்டு தாங்கள் உங்கள் பேத்தி என்று கூறி மகிழ்ச்சியில் சிரித்தாள்.

இப்படியே அமுதாவின் குடும்பம் அமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஈஸ்வரனும் வீட்டிற்கு வந்தான்.அமுதாவின் அப்பா எப்படி இருக்கீங்க மாப்ள எங்க மேல எதுவும் கோவம் இல்லையே என்று வினவினான்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா நீங்கள் வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தான் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று கூறி பேச ஆரம்பித்தனர்.

அடிக்கடி வீட்டுக்கு வாங்க மாப்பிள்ளை என்று அமுதாவின் அப்பாவும் கூறினார் இப்படியே பழக்கம் நீடித்தது மாதம் ஒருமுறை அமுதாவின் அப்பா வீட்டிற்கு இவர்கள் செல்வதும் அவர்கள் வருவதுமாக நாட்கள் கடந்தன.

காவியாவிற்கு ஆறு வயது இருக்கும் தோழிகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது காவியாவிற்கு பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது அவள் அதை கவனிக்கவில்லை.

வீடு வந்ததும் அவள் அம்மாவை பார்த்து அம்மா எனக்கு பசிக்குது அம்மா சாப்பாடு வையுங்கள் என்றாள்.

அமுதா காவியாவை பார்த்து அதிர்ந்து போனாள் என்ன இது அவளுக்கு நெற்றி கழுத்து தலை ஆகிய இடங்களில் ரத்தங்கள் வியர்வை போல இருக்கின்றது என்று அதிர்ச்சி.

உடனே அமுதா காவியாவை அழைத்து என்னடி எங்க கீழே விழுந்த ரத்தமாய் இருக்கு என்றாள்.

அம்மா நான் எங்கும் விலகவில்லை மாலதியிடம் தான் விளையாடி கொண்டிருந்தேன் என்றால் காவியா.

அமுதாவிற்கு ஒன்றும் புரியவில்லை குழப்பத்தில் இருந்தாள். இரவு ஈஸ்வரன் வீட்டுக்கு சந்தோஷம் காவியாவின் நிலையைப் பற்றி கூறினால் அமுதா.

அவனும் பயந்து போனான் காளி ஹாஸ்பிடல் போய் என்ன என்று பாப்போம் என்று கூறிவிட்டு தூங்கினார்கள்.

அனைவரும் காலையும் வந்தது ஈஸ்வரன் கவியாவயும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

டாக்டரை பார்த்து ஈஸ்வரன் காவியாவின் உடல்நிலையை குறித்து அவளுக்கு ரத்தம் தலை கழுத்து கால் கை அனைத்து இடங்களிலும் வருவதாகவும் கூறினான்.

அதற்கு டாக்டர் ஒன்றுமில்லை சத்து குறைவாக இருந்தால் இந்த மாதிரி இருக்கும்.

ஒன்றும் பயப்பட வேண்டாம் சின்ன பிரச்சனை தான் என்று கூறி விட்டு இந்த மாத்திரையை மருந்தைக் கொடுங்கள் சரியாகிவிடும் என்றார்.

அதையும் வாங்கி வந்து காவியாவிற்கு கொடுக்க ஆரம்பித்தார் ஆனாலும் சரியான பாடில்லை இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தது காவியம் பள்ளிக்கு சென்று வந்தாள் காவியாவின் பாட்டி அமுதாவை அழைத்து காவியாவிற்கு வந்தது நோயில்லை அவளுக்கு யாரோ செய்வினை வச்சிருக்காங்க நீ ஒரு மந்திரவாதியை போய் பாரு என்றாள்.

அமுதாவும் காவியாவை அழைத்து மந்திரவாதி ஓட்டுபவர் கோயில் குளம் மசூதி சர்ச் அனைத்திற்கும் அழைத்துச் சென்று வந்தாள் அப்போதும் காவியாவிற்கு மாறுதல் வந்ததாக தெரியவில்லை அப்படியே சில காலம் கழிந்தது.

அமுதாவின் தம்பி வெளிநாட்டில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பினார் தனக்காக குடும்பத்தை பார்க்க அமுதா வீட்டிற்கு வந்தான் ஆதி.

காவியாவின் உடல்நிலையை அமுதா தன் தம்பியிடம் கூறி அழுதாள் ஆதியும் இதைப்பற்றி இணையதளத்தில் தேட ஆரம்பித்தான்.

அடுத்த நாள் ஆதி அமுதாவை அழைத்து காவியாவிற்கு வந்தது ஒரு நோய்தான்.இதக்கு பெயர்ஹீமாடோஹைட்ரோசிஸ் என்றும் ஆனால் பயப்படும்படி இல்லை காவியாவை போல் இந்தியாவிலே இந்த நோய் நிறைய பேருக்கு இருக்கிறது.

அதெல்லாம் சரியாயிடும் என்று ஆறுதலாக கூறினான் சிறந்த மருத்துவர்களை நானே பார்க்கிறேன்.

காவியாவின் உடல் நிலைக்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் இனிமேல் அவளை நினைத்து கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துகிறேன் என்று ஆதி கூறினான்.

கதை முடிந்தது......


ஹீமாடோஹைட்ரோசிஸ் இந்த நோய் பற்றிய சில தகவல்கள்....

கால்வினோ இன்மேன்
மைக்கேல் ஸ்பான்
காரா ஹாப்கின்ஸ்
டெல்ஃபினா செடெனோ
ரஷிதா கட்டூன்
ப்ரீத்தி குப்தா
யாரிட்சா ஒலிவா
ஜேன் மோதிபே
லின்னி இக்கேடா
மார்னி-ரே ஹார்வி

போன்ற பலருக்கு இந்த நோய் இருக்கிறது.

​ஹீமாடோஹைட்ரோசிஸ் வரலாறு

ஹீமோலாக்ரியா (இரத்தக் கண்ணீர்) மற்றும் ஹீமாடிட்ரோசிஸ் (இரத்த வியர்வை) வழக்குகள் வரலாறு முழுவதும் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆம் நூற்றாண்டில், அன்டோனியோ பிரஸ்ஸாவோலா என்ற இத்தாலிய மருத்துவர் ஒருவர் ஒரு கன்னியாஸ்திரி இரத்தக் கண்ணீரால் அழுதார் என்று அறிக்கை செய்துள்ளார். 1581 ஆம் ஆண்டில், ஃபிளாண்டர்ஸைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ஒரு பெண் மாதவிடாய் ஓட்டத்தை கருப்பையின் வழிக்கு பதிலாக கண்களில் இருந்து இரத்தப்போக்கு மூலம் வெளியேற்றுவதாகக் கூறினார்.

1980 லிருந்து 2004 வரை இது போன்ற அரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே மாதிரி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளின் வழக்குகள் சுமார் 11 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. கைகள், கால்கள், நெற்றியில் இரத்தம் தன்னிச்சையாக வெளியேறுவதை சிலர் இயேசு கிறிஸ்துவத்துடன் ஒப்பிட்னர். இப்படி மதம் சார்ந்த நிறைய கட்டுக்கதைகளின் மத்தியில் சிலரின் ஹீமாடோஹைட்ரோசிஸ் பாதிப்பை மருத்துவ ரீதியாக பார்க்க வைத்தனர். அவற்றுள் ஒருவர் தான் ட்விங்கிள் திவேதி.

ஹீமோலாக்ரியா மற்றும் ஹீமாடோஹைட்ரோசிஸ் போன்றவை குறித்து இன்னும் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்கு சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஹார்மோன் மாற்றங்கள் : பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்தக் கோளாறுகள் இருப்பதால் ஹீமோலாக்ரியா உண்டாகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கூட இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அழுத்தத்தால் வியர்வை சுரப்பிக்கு அருகிலுள்ள இரத்த நாளங்கள் சேதமடைந்து இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கின்றனர்.

டெல்ஃபினா செடெனோவின் வழக்கில் அவரது இரத்த ஓட்டத்தில் அட்ரினலின் அளவு ஒரு சாதாரண மனிதனை விட பத்து மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இரத்த நாளங்களை சிதைக்க காரணமாகிறது.

முடிவு

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பதட்டத்தை பெறுகின்றனர். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில் இரத்தம் தன்னிச்சையாக வெளிவந்து தானாகவே நின்று விடவும் செய்கிறது என்றார்.

இந்த நோயை மதத்தின் புனித தன்மையாக பார்ப்பதா இல்லை உடல் நடத்தும் அதிசயமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஹார்மோன் மாற்றங்கள் : பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்தக் கோளாறுகள் இருப்பதால் ஹீமோலாக்ரியா உண்டாகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கூட இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அழுத்தத்தால் வியர்வை சுரப்பிக்கு அருகிலுள்ள இரத்த நாளங்கள் சேதமடைந்து இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கின்றனர்.

இந்த நோயை பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்து அதை பற்றி இணைய தளத்தில் படித்ததை கற்பனை கலந்து பகிர்ந்தேன்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...