JUNE 10th - JULY 10th
மாலைப்பொழுது , பனிமலர்னு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை அருகில் அதீதீ நின்றுகொண்டிருக்கிறாள் , இந்த மாதம் ஆகத்து வந்தால் அதீதீக்கு 27 வயது துவக்கம் , அம்மாவை இழந்து 7 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளுக்கு கல்லறைக்கு வருவது வழக்கம்.
கல்லறையை சுற்றியுள்ள குப்பையை சுத்தம் செய்து தண்ணிர் ஊற்றி கழுவி மாலை போட்டு கண்ணை மூடி வணங்கவும்' கைப்பையில் அலைபேசி ஒலிக்கிறது (அழைப்பில் தன்னோட நெருங்கிய தோழி தீயா )
தீயா - எங்க இருக்க அதீ ? (நடுங்கிய குரலில் )
அதீதீ- வெளிய வந்துருக்கன் ! ஏண்டி என்னாச்சு ?
தீயா - "Child Sex Tourism", பற்றி ஒரு ஆர்டிகள் எழுதுனல அது பெரிய Issue ஆ மாறிட்டுருக்கு ! நம்ம சானல்கே இரண்டு மூனு Threatening Calls வந்துருக்கு ! அந்த செய்திய நீதான் போட்ருக்க, வெளிய இருக்குறது உனக்கு பாதுக்காப்பு இல்ல நீ உடனை வீட்டுக்கு போ .
அதீதீ - என்னடி சொல்ற ? வீட்ல வேற யாரும் இல்ல , இப்ப என்ன பன்றது ?
தீயா - எதாவது பன்னு அதீ ' நீ வீட்டுக்கு போ , நா வீட்டுக்கு வரன் ! ஆ இன்னொரு விசயம் இந்த செய்திக்கும் அரசியல்வாதிக்கும் எதோ தொடர்பு இருக்காம் , நா அப்பவே சொன்னேன் இதலாம் நமக்கு வேணானு ; சரி இப்ப பேச நேரம் இல்ல நீ வீட்டுக்கு உடனே போ
"இரவு பதினோரு மணி" ஒரு பெரிய அறை ,புறவாசல் அருகில் ஒரு ஆணின் பெருத்த உருவம் ' கைமுழுக்க சணல் கயிறு, முகத்தில் வண்ண ஓவியங்கள், பழைய ஒட்டுபோட்ட கறுப்பு நிற கோட் ,காலில் பெரிய பூட்ஸ் , ஒரு கண் அழுகி மற்றொரு கண் மட்டுமே பார்வைக்கு தெரிந்தது, கையில் தடியை வைத்து அதீதீ வீட்டு கதவு அருகில் சுருட்டு புகையை பற்ற வைத்தபடி நிற்கிறான்
என்றும் வீசாத சுருட்டு புகை தன் இல்லத்தில் வீசுவதை உணர்ந்த அதீதீ கதவு தாழிட்டு இருப்பதை உறுதி செய்ய எழுந்து கொள்ள , கைப்பேசி ஒலித்தது (அவள் தோழி தீயா)
அதீதீ- தீயா வந்துட்டியா ?
தீயா : வந்துட்டே " கதவ்வ்வ்வ் ( எதிர்முனைல தீயா தலைல இரும்பு கம்பில நங்குனு மண்டைல அடிக்குற சத்தம் , அழைப்பு துண்டிக்க படுது )
அதீதீ பயந்து போய் திரும்ப தீயா எண்ணுக்கு அழைக்குறா , எண் சுவிட்ச் ஆப்னு வருது , பயத்துல முகமெல்லாம் வியர்த்து கொட்டுது , கைப்பேசிய தடுமாறி கீழ வைக்குறா " அமைதிய கிழிச்சிட்டு உள்ள ஒரு காலிங் பெல் சத்தம் கேட்குது ! அதீதீ நடுங்கி போய் திரும்ப, பக்கத்தில் இருந்த கண்ணாடி மீன் பானை கீழ விழுந்து உடையுது , கரண்ட் ஆஃப் ஆவுது !
பயந்துபோய் கைல இருக்க லைட்டர எடுத்து பத்த வைக்குறா , கீழ விழுந்த மீன் பாட்டில ஒன்னு சேர்க்க எடுக்குறா , கைகிழிச்சு ரத்தம் சொட்டுது , சமையலறைல கொழாய் தண்ணி சொட்றது அமைதிய கிழிச்சுட்டு கேக்குது
அதீதீ எழுந்து போய் கைய கழுவிட்டு குழாய மூட்றா , வெளிய கதவ டம் டம்னு தட்ற சத்தம் கேட்குது , அதீதீக்கு பயம் அதிகரிக்குது ; மெல்லமா நகர்ந்து கதவு கிட்ட போறா , போன் எடுத்து யாருக்காவது காள் பன்ன பாக்குறா போன்ல சிக்னல் இல்ல , வெளிய கதவ தட்டுன அந்த உருவத்தோட கால் தடம் அந்தப்பக்கம் நகர்ர சத்தம் கேக்குது
மெல்லமா கதவ திறந்து ' வெளிய வந்து தலைய மட்டும் நீட்டி பாக்குறா , வெளிய யாருமே இல்ல , புறா கூண்டுல புறா முனுமுனுக்குற சத்தம் மட்டும் கேக்குது, வெளிய சுவர்ல அதீதீ புகைப்படம் போட்டு கண்ணிர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியிருக்கு , பார்த்து அதிர்ச்சி அடையுறா , கருப்பா ஒரு உருவம் அதீதீய நோக்கி நெருங்கி வர சத்தம் கேக்குது " டக்குனு உள்ள போய் கதவ மூட்றா , ஆடை ஒரு துண்டு பகைவன் கையில மாட்டிகுது, போராடி கதவ சாத்திட்றா
கதவு கீழ் வழியா ஒரு கடிதம் வருவத அதீதீ பாக்குறா , கடிதம் வந்து வந்து போகுது அத தன்னோட கால வைச்சு தடுத்து புடிச்சு இழுக்குறா, மறுபக்கம் பகைவனும் இழுக்க இவங்க கைக்கு கடிதம் பாதிதான் கிடைக்குது
கடிதத்தை எடுத்து படிச்சு பாக்குறா ,அது ரத்துல எழுதபட்டுருக்கு , எதோ புரியாத மொழியில் குறியீடு போட்ருக்கு கண்ண உத்து பாக்குறா - ஒரு கைவந்து கடிதத்த புடிச்சு இழுக்குது, அலறி போய் ஒரு மூலைல உக்காந்துகுறா , உடல் முழுக்க வியர்வை , கரண்ட் வேற இல்ல வீடு முழுக்க கும் இருட்டு, தன்னோடு இதயத்துடிப்பு தனக்கே கேக்குற அளவு அமைதி, பயத்துல இன்னும் வேகமா துடிக்குது
அதீதீ பின்னால மெல்லாம ஒரு பொருள் அசையும் உணர்வு ஏற்படுது ஆனால் திரும்பி பார்க்க பயமா இருக்கு, திரும்பவும் ஏதோ நகர்ர சத்தத உணரமுடியுது , பகைவனின் கால் தடம் சத்தமும் சேர்ந்து கேக்குது, மெல்லமா தன்ன நோக்கி வரத உணர்ந்த அதீதீ டக்குனு திரும்பி பார்க்க இவங்க மேல பாயுது இவங்க வளர்த்த பூனைக்குட்டி , மியாவ்னு கத்த போன உசுரு வந்த மாதிரி பூனைய எடுத்து மடில வைச்சுகுறா
பகைவனின் காலடி சத்தமும் நெருங்கி வர பூனை அலறி எதிர் திசைய பார்த்து ஒடுது , அதீதீ பயந்து ஒளியுறா , சமையலறை கொழாய்ல சொட்டுன தண்ணி சத்தம் பகைவன அங்க ஈர்க்குது , அதீதீ ரத்ததுல கழுவுன கறைய பார்க்குறான் ! அதீதீ அருகில் தான் இருக்கானு இன்னும் உறுதியாகுது , அதீதீ கைல இருக்க ஸ்மார்ட்வாட்ச்ல அலாரம் செட் பன்னி அந்தப்பக்கம் தள்ளி விட்றாங்க , கடிகாரம் ஒலிக்கவும் பகைவன் அந்த திசைய நோக்கி வேகமா நகர்றான் , சொட்டுன கொழாய் தண்ணி இடத்துக்கு கீழ அதீதீ மறஞ்சுயிருக்காங்க
கடிகாரம் சத்தம் கேட்டு போய் பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுது , வெறி ஆகுறான்
எதிர்திசைல ஒடுன பூனை மெல்லமா அதீதீ இருக்கும் சமயலறை நோக்கி வருது , அதீதீய பார்த்து மியாவ்னு கத்துது , பூனை குரல கேட்ட அதீதீ பதட்டமடையுறாங்க ; பகைவனும் பூனை சத்தம் கேட்டு அதீதீ இருக்கும் இடத்த நோக்கி விரையுறான், சமயலறைல யாரும் இல்லாதத பார்க்குறான் இந்தமுறையும் பகைவனுக்கு ஏமாற்றம் ,மேலும் வெறியாகுறான் கைல இருக்க தடிய இருட்டுல அங்கு இங்கு ஓங்கி அடிச்சு தன் வெறிய வெளிபடுத்துறான்
பகைவன் சத்தம் கேட்டு அதீதீ இன்னும் பயத்துல பாதுகாப்பா மறஞ்சுக்குறா ,ஒரு கட்டதுல தடி சத்தம் அடங்கி அமைதி நிலவுது ரொம்ப அமைதியா எழுந்து நடக்குறா , ஒவ்வொரு காலடி சத்தத்தையும் அடி மேல அடி வைச்சு நடக்குறா ,
பின்பக்கம் தலைக்குமேல மெல்லமா திரும்பி பார்க்க ' பரனை மேல அமர்ந்த படி அதீதீய பார்த்துட்டு இருக்கான் பகைவன், அதீதீ பேரச்சம் அடையுறா , அமைதிய நொருக்கிட்டு கத்திட்டே ஒரு தாவுல அதீதீ மேல குதிக்குறான் பகைவன்
பகைவன தழுவிட்டு ஓட்டம் பிடிக்குறா அதீதீ , தடிய வேகமா தட்டி அதீதீய தேடிவரான் பகைவன்,
ஒரு அறைல அதீதீ ஒளிஞ்சி இருக்க வெளிச்சம் தெரியுது , தடிய உருவி உள்ள ஒரு நீண்ட வாள்கத்தி வெளிய வருது , அதீதீ அருகில் நெருங்கி ஓங்கி வீசுறான், அங்க இருந்த கண்ணாடி சுக்குநூறாக உடையுது , எதிர் முனையில் அமர்ந்த அதீதீயின் பிம்பம் கண்ணாடியில் தெரிந்ததை கண்டு அதீதீனு எண்ணிய பகைவனுக்கு மறுபடியும் ஏமாற்றமே
பகைவன் உச்சகட்ட வெறி பிடித்தவனாகிறான் , அதீதீக்கு தன்வீட்டு அறைகள் அத்துபடி என்றாலும் மின் இணைப்பு இல்லாத இருட்டு கொஞ்சம் தடுமாற்றத்தை கொடுத்தது, படியில் தடுக்கி விழுந்த அதீதீ கீழே விழ , மின் இணைப்பும் சேர்ந்து வந்து அதீதீயை பகைவனிடம் சிக்க வைத்தது, தன் கால்கள் அருகில் பகைவனின் பெருத்த உருவத்தை கண்டு அதீதீ நடுங்கிவிடுகிறாள் , பகைவன் தன் கையில் இருந்த வாளை எடுத்து ஓங்கி அதீதீயின் நெஞ்சு பகுதியில் துளவ அலறி அடித்து கொண்டு தன் படுக்கை அறையிலிருந்து எழுந்து கொள்கிறாள் அதீதீ , இதயத்துடிப்பு பலமாக அடிக்கிறது கடிகாரத்தை நோக்கினாள் சரியாக ஏழு மணி இருபது நிமிடம் , தன் பணி செய்வது பத்திரிகை துறை என்பதால் இதுபோன்ற கணவுகள் புதிது அல்ல பழகிவிட்டது அதீதீக்கு . அலுவலகத்தில் கொடுக்கும் அலுத்தம் வாரம் ஒருமுறை மட்டுமே விடுப்பு அதுவும் சில முக்கிய அரசியல் நிகழ்வுகள் என்றால் அதுவும் ரத்து போன்ற செயல்கள் மேலும் மன உளைச்சலையே கொடுத்தது, அதனடிப்படையில் இதுபோன்ற தீய கணவுகள் வருவது பழகிவிட்டது அதீதீக்கு
அதீதீ விழித்து பார்க்க தன் தாய் பனிமலர் கையில் ஒரு கோப்பை தேநீரை வைத்து விட்டு வெந்நீர் போட்டதாக சொல்லிவிட்டு திரும்ப
அதீதீ - அம்மா ?
அம்மா - என்னடா ?
அதீதீ- கல்லறையில் பனிமலர்னு பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நினைவு வந்தது , (சின்ன புன்னகையுடன்) ஒன்னு இல்லமா !!
#358
52,587
920
: 51,667
20
4.6 (20 )
Ramaa Govindarajan
karthikdravidan
தங்கள் கதையை ஒரு காணொளியாகத்தான் கற்பனை செய்து பார்த்தேன். அருமை எழுத்தாளரே ! வாழிய செந்தமிழ் !
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50