மர்ம பைகள்...?

த்ரில்லர்
4 out of 5 (2 )

மர்ம பைகள்.....?

2000 ஆண்டில் நடந்த ஒரு உண்மை கதை......


ஒரு கிராமத்தில் சில மக்கள் வாழ்ந்து வந்தன....

அவர்கள் இடையில் நீண்ட நாட்களாக ஒரு குழப்பம் இருந்து வருகிறது...

அந்த குழப்பம் என்னவென்றால் தினமும் இரவில் திடீரென்று சில நேரம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில மர்மமான பல விஷயங்கள் நடக்கும்....

அது அந்த கிராமத்து மக்களின் ஒரு சிலருக்கு பயமும் சிலருக்கு ஒரு கட்டுக்கதையாக இருந்து வந்தது...

சில நாட்கள் கழித்து இரவில் ஒரு மர்ம கொலை நடக்கிறது...!

அதில் ஒரு 70 வயது முதியவர் இறந்துவிடுகிறார்....!

சரி..! கிராமத்து மக்கள் அனைவரும் வயதானவர் தானே இறந்து விட்டார் என்று அந்த சம்பவம் பற்றி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை...

நாட்கள் கடந்தன.....

சில மாதம் கழித்து அதே போல் இரவில் ஒரு 25 வயதுடைய பெண்மணி மர்மமான முறையில் இறந்து விடுகிறார்...!

இந்த சம்பவம் கிராமத்து மக்களின் மனதில் மிகுந்த பயத்தை உண்டாகுகிறது...!

நன்றாக இருந்த பெண்மணி திடீரென்று எப்படி இறந்து இருப்பாள் என்று கிராமத்து மக்கள் அனைவருக்கும் இந்த மர்ம இறப்புகளை பார்த்து பயப்பட தொடங்கின....!


அனைவரும் இந்த மர்ம கொலைகள் எப்படி நடைபெறுகிறது என்று சிலர் பேர் இந்த விஷயம் பற்றி பேச தொடங்கின...!!

நாள் இடையில் இது ஒரு மர்ம கொலையாகவே அந்த கிராமத்து மக்களின் மனதில் கருதப்பட்டு வந்தது...!


ஒரு வாரங்கள் கடந்தன....

இதே போல 37 வயதுடைய ஆண் மற்றும் அவரது மனைவி மிகவும் மர்மமான மற்றும் கொடுரமான முறையில் அவர்கள் வீட்டில் இறந்து கிடந்தன...!!

இது ஒரு பெரிய சந்தேகமாக கிராமத்து மக்களின் மனதில் மீண்டும் வர தொடங்கின....!!!

இவர்கள் இருவரும் சில மாதங்கள் முன்பு தான் திருமணமானவர்கள்,எப்படி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன என்று மிகப்பெரிய சந்தேகம் எழ அந்த கிராமத்துக்கு காவல்துறையினர் வந்தனர்...!!


காவல்துறையினர் விசாரணை....?

முதலில் வீட்டில் சோதனை செய்த பொழுது ஒரு மர்ம பை கிடைக்கிறது... அதில் நிறைய கிழிந்த மற்றும் சில சில்லறை காசு அந்த பையில் கிடைக்கிறது....!!!!!!

அதில் ஒரு துண்டு சீட்டு கிடைக்கிறது அதில் இருந்த வசனம் காவல்துறையினர் மத்தியில் மிகுந்து பயத்தை வர வைத்தது....!!!!

அந்த வசனம் என்னவென்றால்..? “நான் வந்து விட்டேன் இன்னும் என்ன என்ன செய்ய போகிறேன் பார்” என்று குறிப்பிட்டு இருந்தது...!!

இந்த கொலை வழக்கு காவலர்கள் மத்தியில் மிகுந்த பயத்தை உண்டாகியது...!!

காவல்துறையினர் கிராமத்து மக்களிடம் விசாரிக்க தொடங்கின...

இதற்கு முன்பு இதை போல் கொலை அல்லது தற்கொலை நடந்து உள்ளதா என அனைவரிடமும் கேட்டறிந்தன...

சில மாதம் முன்பு ஒரு பெரியவர் மற்றும் ஒரு சிறிய பெண்மணி இறந்தார்கள் என்றன.

காவலர்கள் அந்த சிறிய பெண்மணி இறந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர்...

அந்த வீட்டில் ஒரு பெரிய அதிர்ச்சி...!!!!

அந்த வீட்டிலும் இதை போல் ஒரு பை இருந்தது....!!!!

பிறகு காவல்துறையினர் இந்த மர்ம கொலைகளை யார் என்று கண்டு பிடிக்க முடிவு செய்தனர்.


மீண்டும் ஒரு மர்ம கொலை....?

நாட்கள் கடந்தன கிராமத்தில் எந்த வித கொலைகளும் நடைபெறவில்லை, ஆனால் காவலர் ஒருவர் இரவு பணியின் பொழுது மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....!!!

அவர் அருகில் சென்று பார்த்த பொழுது அதே மாதிரியான பை கிடைத்து அதில் ஒரு வசனம் கிடைத்தது. அந்த வசனம் ஒரு தவறு செய்யும் முன்பு அது சரியா இல்லை தவறா என்று சிந்தித்து செயல் படு இல்லையென்றால்..! என இருந்தது...!!!


சூடு பிடித்த விசாரணை....

இந்த கொலை வழக்குகளின் விசாரணை சூடு பிடித்தது...

கொலையாளி யார் ஏன் இந்த கொலைகளை செய்கிறான் என்று காவல் அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்தில் விசாரிக்க தொடங்கின...!!

விசாரணை பொழுது சில அதிர்ச்சி தரும் விசயங்களை அந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்து மக்கள் சொல்ல தொடங்கின, அதில் அந்த கிராமத்தில் நடந்த கொலைகள் மாதிரி எங்களது கிராமத்திலும் கொலைகள் நடந்ததாகவும் இறந்தவர் அருகில் ஒரு பைகள் இருந்ததாகவும் கூறினர்.

காவல்துறையினர் மத்தியில் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது...

இந்த கொலைகள் செய்பவனை கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என்று காவலர்கள் அனைவரும் சபதம் எடுத்து கொண்டனர்..

விசாரணை நடந்து இருக்கும் பொழுது ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று நான்கு கொலைகள் நடைபெறுகின்றன....

இதில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்து விடுகின்றன...!!!


மீண்டும் பைகள் மீண்டும் வசனங்கள்....

இந்த கொலைகள் நடந்த இடத்தில் இருந்து சில பைகள் கிடைக்க அதில் ஒரே பெரிய வசனம் இருந்தது “ஒருவன் துன்பம் வரும் வேளையில் உன்னை தேடி வந்து கையேந்தி நிற்கிறான் என்றால் நீ அவனுக்கு உதவி செய்” என்று குறிப்பிட்டு இருந்தது.

மாட்டிக் கொண்ட சிலர்....

ஒரு சில மாதங்கள்கழித்து சந்தேகம் என்ற பெயரில் சில நபர்களை கைது செய்து விசாரணை நடத்தின....

அதில் ஒருவன் இரவில் நடந்த மர்ம கொலைகளில் நான் சில கொலைகளை பார்த்து இருக்கிறேன் என்றான்....!!!

இந்த கொலைகள் அனைத்தும் ஒரு இருண்ட இடத்தில் தான் அதிகம் பார்த்தேன் என்றான்....!!


மர்ம குரல்...

அந்த கொலைகள் நடைபெறும் இடத்தில் அருகில் சென்று பார்த்த பொழுது சில மர்ம குரலில் சத்தம் கேட்டேன்...!!!!!

அந்த சத்தம் நன்றாக உரத்த குரலில் மீண்டும் மீண்டும் எனக்கு தர்மம் பண்ணு எனக்கு தர்மம் பண்ணு என்று அழுத படி சத்தம் கேட்டது...!!

அருகில் சென்று பார்த்தேன் அங்கு யாரும் இல்லை ஆனால் சில ரூபாய் நோட்டுகளுடன் ஒரு பை இருந்தது என்றான்....!!!


தர்மம்....

காவல்துறையினர் விசாரணையில் இந்த தர்மம் என்ற வார்த்தையை யார் யார் அதிகம் பயன் படுத்துவார்கள் என்று யோசிக்க தொடங்கின....

விசாரணை சென்று கொண்டு இருக்க ஒரு நாக் ஒரு இடத்தில் ஒரு கடைக்கு ஒருவன் வந்தன் அவன் ஒரு பிச்சைக்காரன்....!!!

அவன் கடைக்காரன் அருகில் வந்து “ ஐயா எனக்கு மிகவும் பசிக்கிறது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது ஐயா எதுனா தர்மம் பண்ணுங்க” ஐயா என்றான்...!!!!

அப்போது அந்த இடத்தில் விசாரணையில் இருந்த காவலர்கள் இந்த தர்மம் என்ற வார்த்தை இந்த பிச்சைகாரன் சொன்னதும் அவன் மீது சந்தேகம் எழ அந்த இடத்தில் இருந்த காவலர்கள் அனைவரும் அவனை சந்தேகம் என்ற பெயரில் உற்று நோக்கின...!!!

அவன் தோற்றம் பார்ப்பதற்கு மிகவும் பரிதமகவும் மிகவும் கவலையாகவும் காணப்பட்டான்....

அவன் ஒரு 30 முதல் 35 மதிப்புதக்க நபர்... அவன் இடம் சென்று ஒரு காவலர் நீ ஏன் தம்பி பிச்சை எடுக்கிறாய் நீ நன்றாக தானே இருக்கிறாய் நீ உழைத்து சாப்பிடு என்றார், அதற்கு அவன் ரொம்ப தெனாவட்டாக நான் உன்னிடம் தர்மம் கேட்கவில்லை உன் அறிவுரை எனக்கு வேண்டாம் என கூறி அந்த இடத்தை விட்டு சென்றான்...


தரையில் கிடந்த மர்ம பொருள்...

அவன் சென்ற பிறகு அவன் வைதிருந்த பையில் இருந்து ஒரு துண்டு காகிதம் கிழே விழுந்தது அதை அவன் பார்க்கவில்லை,ஆனால் காவலர்கள் அதை பார்த்துவிட்டன அவன் சென்ற பிறகு எடுக்கலாம் என்று இருந்தன....!!!

அந்த காகிதம் எடுத்து பார்த்தால் அதில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.....!!!!!

அதில் ஒரு வசனம் இருந்தது “தவறு செய்த அனைவருக்கும் மரணம் நிச்சியம்” என்று வசனம் இருந்தது.

இதை பார்த்த அந்த இடத்தில் இருந்த சில காவலர்கள் அவனை பின் தொடர்ந்தன...!!!


வசமாக மாட்டிகொண்ட கொலையாளி...!

அவனை பின்தொடர்ந்த பொழுது அவன் அருகில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவே உள்ள, தனியாக பழைமையான ஒரு குடிசைமற்றும் யில் இருந்தான்...!!!

மெதுவாக அந்த குடிசை அருகில் சென்று பார்த்த பொழுது காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்தன...!!!!

அவன் ஒரு கத்தியை எடுத்து கொண்டு வேக வேகமாக அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தான்...!!!

அந்த குடிசையில் நிறைய பைகள் மற்றும் வசனம் நிறைத்த காகித துண்டு இருந்தது. இதை பார்த்த காவலர்கள் இதை நாள் இந்த கிராமத்தில் நடந்த அனைத்து கொலைகளுக்கும் காரணம் இவன் ஒருவன் மட்டும் தானா என்று முடிவு செய்தனர்...!!!

அவனை வேகமாக துரத்தி கொண்டு சென்றன காவலர்கள்...

அவன் கிராமத்து அருகில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தான்...!!

காவலர்கள் வேக வேகமாக சென்று அவனை தடுக்க முயற்சி செய்தன ஆனால் அங்க...!!

அந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் இறந்து கிடந்தான்.... அவன் அருகில் இருந்த கொலையாளியை கையும் களவுமாக பிடித்தனர்.

அவனிடம் விசாரணை தொடங்கியது...?

அவனை விசாரணை செய்த பொழுது இந்த மற்றும் பக்கத்துக்கு கிராமத்தில் நடந்த மர்ம கொலைகளுக்கு நான் மட்டும் தான் முழு காரணம் என்று ஓப்பு கொண்டான்...

நீ ஏன் இந்த கொலைகள் அனைத்து செய்தாய் என்று கேட்டபொழுது அவன் உரத்த குரலில் ஒரு வசனம் கூறினான். “கொடுமையில் பெரிய கொடுமை பசியின் கொடுமை தான்” என்றான். காவலர்கள் அவனை கோபமாக அடித்து நாங்கள் உன்னிடம் ஏன் கொலைகளை செய்தாய் என்று கேட்டால் நீ வசனம் மா கூறுகிறாய் என்று அவனை பலமாக தாக்கினர்...

அவன் ஐயா ஐயா அடிகாதிங்க அடிகாதிங்க ஐயா நான் ஏன் இந்த கொலைகளை செய்தேன் என்று தனக்கு நடந்த கொடுமைகளை சொல்ல தொடங்கினான்...!!

FLASH BACK

அழகான குடும்பம்....

இந்த கிராமத்தில் தான் நான் இருந்தேன், நானும் எனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம் ஆனால் எங்களை இந்த கிராமத்து மக்கள் ஒதுக்கி வைத்து விட்டன...

நான் பெரிய இடத்து பிள்ளை நான் மிகவும் வசதி குறைவாக மற்றும் கிழ் சாதியில் உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்... இதனால் கிராமத்துக்கு ஊருக்கு ஒதுக்கு புறமாக எங்களை கிராமத்து மக்கள் துரத்தினர்....

எங்களுக்கு என்று ஒரு குடிசை கட்டி கொண்டு நாங்கள் வாழ தொடங்கினோம்.... நாட்கள் கடந்தன எங்களுக்கு இரு ரெட்ட குழந்தை பிறந்தது... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் இருக்கவில்லை...!!

சில மாதங்களுக்கு பிறகு....

என் மனைவி மிவவும் பாசக்காரி அவள் எல்லோரிடமும் அன்பாக இருப்பாள்.... அந்த அன்பு தான் அவளுக்கு மரணத்தை பரிசாக அளித்தது...

காவல் அதிகாரிகள் இப்போது உன் மனைவி மற்றும் உன் குழைந்தைகள் எங்கு என்று கேட்ட பொழுது அவன் மிகவும் மனம் நொந்து அழுத படி அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று அழுத படி கூறினான்... காவலர்கள் எப்படி உன் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்தனர் என்று கேட்டனர்...

அவர்களுக்கு நடந்த கொடுமை....

அவன் தனது மனைவி மற்றும் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று அழுத படி சொல்ல தொடங்கினான்...!!!

என் மனைவி வழக்கமாக அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க செல்வது வழக்கம் ஆனால் அங்க தான் ஒரு மிக பெரிய பிரச்னை அங்கு மேல் சாதி மக்கள் தண்ணீர் வந்து எடுத்து சென்று பிறகு தான் நாங்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும்...ஆனால் ஒரு நாள் என் மனைவி தண்ணீர் தேவை அவசரம் என்பதால் மேல் சாதி அவர்கள் இருக்கும் பொது தண்ணீர் பிடிக்க சென்று விட்டால் அப்போது அங்கு இருந்தவர்கள் என் மனைவியை மிகவும் கீழ் தனமான வார்த்தைகளால் பேசியதாகவும் அதில் சிலர் என் மனைவியை நீ என் இப்போது வந்து தண்ணீர் பிடிக்க வந்தாய் உங்களுக்கு தான் நாங்கள் சென்ற பிறகு தான் வந்து தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று உனக்கு தெரியாத என்று கூறி அவளை சில மிகவும் பலமாக அடித்தனர்...

பிறகு அவளிடம் நீ இந்த கிராமத்தை விட்டு வெளிய சென்று விடு இல்லை என்றால் என்று அவளை மிரட்டின அங்கு இருந்த அனைவரும்.

இந்த விஷயத்தை அழுத படி வீட்டிற்கு வந்து அவன் கணவனிடம் இந்த குளம் தண்ணீர் தேவைக்கு மட்டும் தானா , இதில் ஏன் கீழ் சாதி மேல் சாதி என பிரித்து பார்க்கின்றன என மிகவும் அழுத படி அவன் கணவன் மடியில், அங்கு இருந்த ஆண்கள் யாரும் என்னை அடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவர்களும் என்னை பார்த்து சிரித்து கொண்டு தான் இருந்தன என்றால்....

நாட்கள் மிகவும் வலியுடன் கடந்தன...

சில நாட்கள் கழித்து அதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது , ஒரு குழத்தை ரொம்ப நேரம்மாக அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து இருந்தது அதை பார்த்த என் மனைவி அந்த குழத்தை அருகில் சென்று யாரு நீ ஏன் இங்கும் அங்குமாக சென்று கொண்டு இருக்கிறாய் என்று கேட்க அந்த குழந்தைக்கு வாய் பேச முடியவில்லை ,பிறகு என் மனைவி அந்த குழந்தையை வீடு வீடாக சென்று அவள் அம்மாயிடம் குடுக்க சென்றால்...

அங்கு நடந்த விஷயம் என் மனைவிக்கு மிகுந்த மன வலியை உண்டாகியது...!!

அந்த குழந்தையின் அம்மா யாரு நீ என் குழந்தையை தொட உனக்கு எவ்வளவு தைரியம் வேண்டும் என கூறி அவளை திட்டி அசிங்கம் படுத்தின...

இதில் மிகவும் மிகவும் மனம் உடைந்து போனால் என் மனைவி.

இந்த பிரச்சனையை நான் எங்கள் ஊர் பெரியவர்கள் இடம் சொல்லி பஞ்சாயத்தை வைத்தேன். இதில் தான் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அது நீங்கள் இருவரும் இந்த கிராமத்தை விட்டு வெளியை செல்லுங்கள் இல்லை உங்களுக்கு இதை போல் தான் நிறைய அசிங்கம் கிடைக்கும் என்று அந்த கிராமத்து பெரியவர்கள் அவர்களை மிரட்டிய படி கூறினர்.இதில் மிகவும் மனம் நொந்து போன இருவரும் கிராமத்தை விட்டு போக முடிவு செய்தனர்.

இருவரும் அருகில் உள்ள கிராமத்திற்கு வெளியே குடி சென்றன. நாட்கள் போகின.... நாங்கள் வறுமை பிடியில் மாட்டி கொண்டோம். நான் இதனால் அருகில் உள்ள கிராமங்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன் இதனால் எனக்கு மிகவும் அவமானம் தான் கிடைத்தது என்றான். எனக்கு வேற வழியும் இல்லை எனக்கு இந்த கிராமத்து மக்கள் எந்தவித வேலையும் தர மாட்டர்கள். ஒரு நாள் எனது சொந்த கிராமத்துக்கு பிச்சை எடுக்க விட்டேன் இங்கு தான் என் வாழ்கையை மாற்றி விட்டது. அந்த இடத்தில் என்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அதில் சிலர் என்னை அடித்து எனது கையை உடைத்து விட்டனர் என்றான். நான் மிகவும் பசியில் எனது வீட்டிற்கு வந்து விட்டேன். எனது மனைவி மிகவும் அழுத என் அருகில் வந்து நம் மற்றும் நம்ப குழைந்தைகள் இறந்து விடலாம் என்றால். சில நாட்கள் கழித்து எனது மனைவி பசி காரணமாக பிச்சை எடுக்க சென்றால். என்னை கொடுமை செய்த போல் அவளையும் அசிங்கம் படுத்தி கொலை செய்தன. அதில் சில என்னை பலமாக தலையில் அடித்தன என்று கூறி என் மடியில் அழுத படி இறந்து விட்டால். பசியில் எனது அழகான இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன இதனால் நான் இந்த கொலைகள் அனைத்தும் செய்தேன் என்று கர்வமாக கூறினான்... இவன் இப்படி கூறியதும் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஆக்கியது தன் மனைவி மற்றும் குழந்தைக்காக இவ்வளவு கொலை செய்த இவனை நிச்சியமாக மரண தண்டனை தான் கிடைக்கும் என்று கூறினர்.


மீண்டும் ஒரு மர்ம கொலை...?

கொலையாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் தருவாயில் மீண்டும் ஒரு மர்ம கொலை அந்த கிராமத்தில் நடந்தது. ஆனால் அந்த மர்ம கொலை நடந்த இடத்தில் கிடைத்தது ஒரு மர்ம பை...!!!!!!!!!!!!.


Conclusion

இந்த நிகழ்வின் முலமாக நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காதல் ஒரு அழகான உணர்வு அது இருமனங்களுக்கு இடையில் வரும் அழகான பாலங்களின் இணைப்பு போன்றது. இது தவறு இல்லை இந்த சமூகத்தில் ஆனால் அதன் பின் அவர்கள் மீது நடக்கும் இந்த சமூக கொடுமை மிக பெரிய விஷயம்.

இந்த கதையின் முடிவில் நாம் தெரிந்து கொள்வது நாம் ஒருவருக்கு எதை செய்தோம் மோ அதுதான் நமக்கு திருப்பி கிடைக்கும், அது நல்லது என்றாலும் சரி கேட்டது என்றாலும் சரி.

அழகான காதலுக்கு சாதி எப்பொதும் ஒரு இருட்டறை.

A STORY BY AKBARHUSSAIN L

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...