இக்கதையின் களம் ஒன்றும் புதுமையானதல்ல, ஆனால் அதற்கான காரணம் சற்று புதுமையானது தான். நாம் அன்றாடம் மிக சுலபமாக கடந்து செல்லும் விசயத்தில் இருக்கும் நுட்பமான பிரச்சனையை பற்றி பேசுவது தான் இந்த 423. இன்று நம் கண்களுக்கு பெரிதாக புலப்படாத இந்த விசயம் இனி வரும் காலங்களில் நம் சமூகத்தையே தீர்மானிக்க போகிறது என்று எண்ணும் பொழுது சற்று மிரட்சியாகத் தான் உள்ளது. அதே மிரட்சி உங்களுக்கும் ஏற்படுகிறதா என்று இக்கதையை படித்துவிட்டு கூறுங்கள்.