உச்சிக்கல்லினுள் உறங்கும் உண்மைகளை தட்டி எழுப்ப மிகவும் காலம் தாழ்த்தியதால், அறிவியல் உச்சத்தில் இருந்த சோழ தேசமே! நீ முற்றிலும் இழந்தது மிக மிக அதிகம் !
இருப்பினும் “9.81 m/sec2 உச்சிக்கல்” என்ற இந்த ஆய்வு கட்டுரையில் தட்டி எழுப்பப்பட்ட அறிவியல் உண்மைகளால் நமது தமிழ் மண்ணை உலகம் இனி சற்று உற்றுப் பார்க்கும்! தஞ்சையின் புகழ் விண்ணை தொட்டுப் பார்க்கும்!
இராஜராஜ சோழன்…
மெய்ப்பொருள் காண்பதே அறிவு
காலம் காலமாக தஞ்சை பெரிய கோவிலை சுற்றி வலம் வரும் மைய மர்மங்களுக்கான ஆழ்ந்த அறிவியல் தீர்வுகளை தன்னகத்தே ஆழமாகப் புதைத்து வைத்துள்ள பெரிய கோவில் விமானம், தமிழர்களின் மறைக்கப்பட்ட அறிவியல் உச்சத்தின் மேன்மைகளை அறிவார்வமுள்ள மனிதர்களுக்கு ஆணித்தரமாக வெளிப்படுத்த ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறது!