Share this book with your friends

Akkavin Kudai / அக்காவின் குடை 19 Sirukathaikal 3 kurunavalkal adangiya thokuppu

Author Name: Sandeepika | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அச்சடித்த புத்தகவடிவில், எழுத்தாளர் சாந்திபிகா (சி.வி. ராஜன்) கடந்த 50 ஆண்டுகளில் எழுதிப் பிரசுரம் கண்ட 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் கொண்ட  மொத்தத் தொகுப்பாக இந்த  நூல் வெளிவந்திருக்கிறது. இதிலுள்ள பெரும்பான்மையான சிறுகதைகள் 1976-2001 கால கட்டத்தில் பிரபல தமிழ் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சாவி இவற்றில் பிரசுரமானவை. அப்போது அப்பத்திரிகைகளில் வந்திருந்த படங்களையும் இதில் காணலாம்.

இதே சிறுகதைகளின் தொகுப்பும், மற்ற குறுநாவல்களும் தனித் தனி மின் நூல்களாக ஏற்கனவே வெவ்வேறு தலைப்புகளில் அமேஸான் கிண்டிலில் பிரசுரமாகியிருக்கின்றன.

ஒரு எழுத்தாளரின் ஐம்பதாண்டு எழுத்து அனுபவத்தின் பரிணாம வளர்ச்சியை  நீங்கள் இந்த நூல் வழி ரசித்து அனுபவிக்க இயலும்.

இதிலுள்ள பெரும்பான்மையான கதைகளும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், ஒழுக்க, தார்மிக நெறிகள், கட்டுப்பாடுகள், சுகதுக்கங்கள், பலங்கள், பலவீனங்கள், சபலங்கள் இவற்றைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. 

சாந்தீபிகாவின் ஆதரிச எழுத்தாளரான லா.ச.ராவின் தாக்கம் இந்தக் கதைகளில் ஓரளவு காணக்கிடைக்கும் -- லா ச ராவின் எழுத்தின் பாணியும், வீரியமும், வார்த்தை ஜாலங்களும் வேறுவிதம் என்றாலும்.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் ...

கிராமத்து வைதிக சாஸ்திரிகளின் கதை முதல், கம்பியூட்டர் ஸாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இளைஞன் கதை வரை உண்டு. உலகைத் துறந்த சன்னியாசியின் கதை முதல், தீவிரமான காதல் கதை வரை உண்டு. நக்கலும் நகைச்சுவையும் கொண்ட கதைகளிலிருந்து, ஆழமாய் ஆன்மிகத்தைத் தொடும் கதைகளும், தாம்பத்திய உளவியலை அலசும்  கதைகளும்  உண்டு.

இக்கதைகள் எல்லாமே ஸ்டோரிடெல் நிறுவனத்தாரால் ஒலி நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சாந்தீபிகா

'சாந்தீபிகா' எனும் புனைப்பெயரில் தமிழில் சிறுகதைகளும் குறுநாவல் களும், சி.வி. ராஜன் எனும் பெயரில் ஆங்கிலத்தில் கதை கட்டுரை நூல்களும் எழுதும் சி. வரதராஜன், ஒரு ஓய்வு பெற்ற இயந்திரப் இயந்திரவியல் எஞ்சினீயர். ஓய்வு பெற்ற பின், தம் மனைவியுடன் கேரளாவிலுள்ள அமிர்தபுரி ஆசிரமத்தில் தமது சத்குருவான (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவியின் திருவடி நிழலில்  வாழ்ந்துகொண்டு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.

படிப்பதும் எழுதுவதும் இவரது பொழுதுபோக்குகள். தமது இருபதாம் வயதிலிருந்தே தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். பிரபல தமிழ் வார, மாத இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்த விகடன், சாவி, மங்கையர்மலர் போன்றவற்றில் இவரது சிறுகதைகள் 1976-90களில் வெளிவந்தன. 

இவரது பத்தொன்பது  சிறுகதைகளைத் தவிர, இந்தக் குறு நாவல் உட்பட இவர் எழுதியுள்ள மூன்று குறுநாவல்கள், மின் நூல்களாக அமேஸான் கிண்டில் வழி வெளிவந்துள்ளன. 

இவை எல்லாவற்றையுமே, பிரபல பத்நாட்டு ஒலி நூல்கள் வெளியிடுவோரான ‘Storytel’ நிறுவனத்தார் ஒலி நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

இவரது ‘வால்மீகி ராமாயணம் – இளம் பிள்ளைகள் படிக்க, படித்துக் கேட்க’ எனும்  நூலும், ‘ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மிகம்’ எனும் தொகுப்பும், ‘கதையில் வராத பக்கங்கள்’ எனும் சுவையான வாழ்க்கை அனுபவங்களும், ‘கதை ஓசை’, ‘Storytel ஒலிநூல் தளங்களில் தொடர்களாக ஒலி வடிவில் வந்துள்ளன. 

தவிர இவரது நான்கு ஆங்கில நூல்களும் அமேஸானில் பிரசுரமாகியுள்ளன.

இவரது முப்பதாவது ஆவது வயது தொடங்கி இவருக்கு இந்து மதம் காட்டும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் வந்தது. காஞ்சி மஹா சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவான் ரமணமகரிஷி போன்ற மகான்களின் வாழ்வும், வாக்கும் இவரில் ஏற்படுத்திய தேடல், இவரை அம்மாவின் திருவடி நிழலில் கொண்டு சேர்ப்பித்தது.

இவரது கதைப் படைப்புகள் பலவற்றிலும் ஆன்மிகத்தின் ஒரு சிறு தாக்கமாவது இருப்பதைக் காணமுடியும்.

இவரது 50+ வயதில் இவர் எழுதிய தமிழ் கட்டுரைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தினரின் 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக மாத இதழ்களில் அவ்வப்போது வெளி வந்தன. அம்மடத்திற்கு சில ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் தந்தார். 

சமீப காலத்தில் இவர் பிரபல 'கேள்வி-பதில்'  இணைய தளமான' Quora.com (கோரா) - இல் ஆங்கிலத்திலும் தமிழிலும் தலா ஆயிரத்துக்கும் மேலான பதில்களை எழுதியுள்ளார்.

இந்து மதத்தின் பற்பல பக்கங்களைப் பற்றி இக்கால இளைஞர்களும் ஆழமாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இவர் hinduismwayoflife.com எனும் இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளார். 

ஆங்கிலம்-தமிழ்-மலையாளம் இம்மொழிகளுக்கிடையே இவர் மொழிபெயர்ப்புப் பணிகளும் தொடர்ந்து செய்து வருகிறார். 

Read More...

Achievements

+2 more
View All