இந்த நூலானது ஏலியன்கள், பறக்கும்தட்டுக்கள், பிரமீடுகள், காலப்பயணம் என இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது .” அறிய அறிய என்னுள் இருக்கும் அறியாமையைத் தான் நான் தெரிந்து கொண்டேன்”. என்னும் சாக்ரடீஸ் கருத்து போல வேற்று கிரக வாசிகளின் மர்மங்கள் மிகப் பழங்காலம் தொட்டே உலகம் முழுவதும் சில இடங்களில் ஏற்படும் மர்மமான நிகழ்வுகளால் நம்மிடையே இருந்து வருகின்றது. இவ்வாறு பல்வேறு விதமான மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூல் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது .ஏலியன்களின் மர்மங்கள் என்னும் இந்நூல் இந்த நூல் ஆசிரியரின் ஒரு புது முயற்சி.