புத்தரின் போதனைகளில் மானுட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் சமூகநீதி, வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, முறையாக பொருள் சேர்த்தல், அவற்றறை இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், பகிர்ந்தளித்தல், பெண்ணின் பெருமை மற்றும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு மற்றும் கருணை கொள்ளுதல், தீவினை களைந்து அறநெறி வாழ்வு ஏற்று வாழ்வில் இன்பம் எய்துதல், இயற்ககைக்கு மாறான மேலான படைப்பு சக்தி எதுவும் இல்லை என நம்புதல், மூட நம்பிக்கைகளை கைவிட்டு நல்ல வற்றில், உழைப்பில் நம்பிக்ககை யும் விடாமுயற்சியும் வெற்றிக்ககான வழிகள் என்னும் புத்தரின் பல்வேறு கோட்பாடுகளை வள்ளுவர் தமது குறளின் மூலம் வடித்துத் தந்துள்ளார். புத்தரின் சமகாலத்தவர்களால் முன்வவைக்க்ப்ப்ட்ட இதர, சமூக நீதியற்ற, பகுத்தறிவுக்குப்புறம்பான இந்திய தத்துவங்களின் கோட்பாடுகளுக்கும், அணுகுமுறை களுக்கும், மாற்றாக, சமூகபொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மிகவும் முழுமையான , மிகவும் புரட்சிகரமான , ஒரு முயற்சியை , நீதியான சமத்துவ சமூக அமைப்பை உருவாக்குவதின் அவசியத்தை உலகில் முதன் முதலாக, பௌத்தம் பிரதிநிதித்துவப்படுத்தியது இக்கருத்துக்களையே வள்ளுவமும் வலியுறுத்துகிறது.