பல தலைமுறைகளாகக் கிறிஸ்தவர்களாயிருக்கும் குடும்பங்களில் பிறந்து, கிறிஸ்தவ அறிவிலும் அனுபவத்திலும் வளர்க்கப்பட்ட போதிலும், “அநேகரை நீதிக்குட்படுத்தி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்கிற’’ கிறிஸ்தவர்கள் எத்தனை சொற்பப் பேர்! அப்படியிருக்க, பிராமணப் புரோகிதக் குடும்பத்தில் பிறந்து, சகல சம்பத்தும் செல்வாக்குமுடையவளாய் வாழ்ந்து, பின் சகலத்தையும் இழந்து, குலத்தாரின் இகழ்ச்சிக்குள்ளாகி, உலகத்தாரின் தூற்றுதல்களுக்காளாகித் துயருற்ற நாளில், தானறிந்து ஆறுதல் பெற்ற ஒரு அந்நிய தெய்வ நம்பிக்கையின் சுவிசேஷகியாக வேற்று மனிதர் வாழும் நாட்டில் அதைப் போதித்து, அனைத்துலகும் அதிசயிக்கும் வண்ணம் வளர்ந்து பெருகும் ஒரு மாபெரும் கிறிஸ்தவத் திருச்சபையின் தாய் என்னும் கிருபையின் ஆசீர்வாதத்திற்கு ஒரு பெண், அதிலும் ஒரு கைம்பெண், உரியவளாயின், ஆஹா, என்னே எம் பெருமான் இயேசுநாதரின் இணையற்ற இரக்கம்! அடுப்பினடியில் கிடந்த கோகிலா, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட சிறகுகளையுடைய வெண்புறாவானாள். வெந்தணலில் வேகவிருந்த வெளியிடையாள், அக்கினியினின்று மீட்கப்பட்ட கொள்ளியாகி ‘எரிந்து பிரகாசிக்கிற விளக்’கானாள்.
முதல் முதலாவது இந்தத் திருநெல்வேலி நாட்டில் அறிமுகப்படுத்தும் இந்திய சுவிசேஷகியாகும் சிலாக்கியம் இவளுக்குக் கிடைத்த திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவள், முதல் சுவிசேஷ முதல் சபையை நாட்டினவள், அதின் முதல் அங்கமானவள். சபையை ஆதரித்தவர்களில் முதல்வள், முதல் ஆலயம் கட்டினவள், அதின் முதல் உபதேசியாரை நியமித்தவள், முதல் பள்ளிக்கூடத்தை நிறுவி ஆதரித்து, அதன் முதல் ஆசிரியரை நியமித்தவள், முதல் கிறிஸ்தவ குடும்பத்தை ஆக்கியவள், திருநெல்வேலி திருச்சபையின் தாய்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners