GTK-yin eluthukal-Thoguthi-I / ஜி.டி.கே-யின் எழுத்துகள்-தொகுதி I இப்புத்தகம் "ஜி.டி.கே-யின் எழுத்துகள்", ஆங்கில மூலநூலான "G.T.K's Writings" -யிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
"ஜி.டி.கே-யின் எழுத்துகள்-தொகுதி I" என்ற இப்புத்தகமானது கிட்டத்தட்ட ஒரு வருட எழுத்துக்களின் தொகுப்பாகும், இது "Gtk's Writings" என்ற ஆங்கில முகநூல் பக்கத்தில் சமகால பிரச்சினைகள் குறித்து கிட்டத்தட்ட அனைத்து துறைகளையும் தொட்டுள்ளது ... கல்வி, அரசியல், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆன்மீகம் என; இதன் முக்கிய நோக்கம் மக்களை சிந்திக்க வைப்பது. இது முதலில் ஆங்கிலத்தில் "Gtk's Writings Vol-I" என்று 10/10/2019 அன்று வெளியிடப்பட்டது, தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தங்கள் கைகளில்....
மதுரையில் பிறந்து வளர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, அருணாசலப் பிரதேசத்தில் 19 ஆண்டுகள் (சி.பி.எஸ்.இ) வி.கே.வி. பள்ளிகளில் ஆங்கில ஆசிரியராகவும், தற்போது, 2010 முதல், தமிழ் நாட்டில் அ.ஆ.மே.நி.பள்ளி பந்தநல்லூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.