இறைவன் , நமக்கு நிகழும் சோதனைகள் மற்றும் நோய் உள்ளிட்ட அனைத்து விசயங்களை உருவாக்கும் முன் , அதற்கான தீர்வையும் நிவாரணத்தையும் படைக்காமல் உருவாக்குவதில்லை
அனைத்திற்கும் வழிகாட்டியான திருக்குர்ஆன் மனித வாழ்வில் நிகழும் நோய் நொடிகள், சோதனைகள், எதிரிகளின் சூழ்ச்சிகள் , ஷைத்தானின் தீங்குகள் , பொறாமை , நயவஞ்சகம் போன்ற கொடியவற்றில் இருந்து பாதுகாப்பும் ஈடேற்றமும் பெற நபிமார்கள் செய்த துஆக்களை நமக்கு கூறுகின்றது
அந்த துஆக்களை தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ வழமையாக ஓதி வருவதன் மூலம் இம்மை, மறுமை ஈருலக வாழ்விலும் ஈடேற்றத்தைப் பெறமுடியும்
முஃமினுடைய வாழ்வின் அனைத்திற்கும் போதுமானது இந்த இறைமறையின் இனிய துஆக்கள்
(இறுதியில் துஆ செய்த நபிமார்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது)