முரஞ்சியூர் முடி நாகராயர் என்ற புலவர் தனது புறப்பாடல்
ஒன்றில் வடக்கேயுள்ள இமயமும், தெற்கேயுள்ள பொதிகை மலையும்
ஒன்று என்கிறார்.
பொற்கோட்டு இமயமும் பொதியமும் ஒன்றே என்பது அந்த வரி.
பொதிகை மலைச் சித்தர்களின் அற்புதங்கள், தத்துவம், மருத்துவம்,
நம்பிக்கைகள் போன்ற பல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட
அற்புதமான, அவசியமான கையேடு இந்த தமிழ் நூல்.