‘… கடைசியாத்தான் நா அந்த முடிவுக்கு வந்தேன். ஆனா, அதைக் கொலைன்னு சொல்லமாட்டேன். விடுதலை… பெரியவருக்கு… அந்த குடும்பத்துக்கு…’ - பீட்டர். (மீட்பன்)
•••
‘சமாதானம். அது ஒன்றே வழி, எங்களுக்குத் தேவை, என் அப்பன் சொக்கநாதன், அம்மை மீனாட்சி இருவரும் எந்த சேதாரமும் இல்லாமல் இருக்க வேண்டும், சுந்தரபாண்டித் தேவர் எங்களுக்கு உயிருடன் வேண்டும்…’ பாண்டிய அரசரின் நிலை...
எத்தனை தெய்வங்கள், எத்தனை வேண்டுதல்கள், எத்தனை மன்றாடல்கள், தேவகிரியில், ராஜபுதனத்தில், அனில்பூர் பதானில், எதுவும் என்னைக் காக்கவில்லை, எல்லா தெய்வங்களும் என்னை கைவிட்டன…விடமாட்டேன்… எந்த தெய்வத்தையும் விடமாட்டேன்… அபலைகளைக் கைவிடும் தெய்வத்துக்கு என்ன கோவில்? என்ன வழிபாடு? - மாலிக் காஃபூர் நிலை... (கால்கோல் விழா)
•••
திருமணத்துக்குப் பின் மாரி ஓடிப்போனதாக அமைந்தால், பணத்துக்கு ஆசான் ஜவாப்தாரி ஆக முடியாது. பணம் போனது ஒரு கோடு என்றால், மாரி ஓடிவிட்டது பெரிய கோடாக தெரியும், அதிலேயே எல்லார் கவனமும் இருக்கும், கூத்துக்குழுவினரின் திட்டம் (ஸ்திரிபார்ட்)
•••
அவர்கள் இருவரும் என் நண்பன் வீட்டுக்குள் நுழைய, நான் தூரமாக காரை நிறுத்தினேன். ஸ்டீரிங் வீலை இறுக்கமாக பற்றினேன்…
சில அடிகளில், என் நண்பரின் உடல், உடன் அவரைக் கொன்றவன்…
நான் மௌனமாக இருந்தேன்… என்பிடி மேலும் இறுகியது…
- தர்மா(இறுதிச்சடங்கு)
•••
கொஞ்ச நாள் இங்கே வேலை. பின், பின்னணி தெரிந்து, பக்கத்து கல்லூரியில் படிப்பதாக பொய் சொல்லி, திட்டமிட்டு காதலித்தவளை திருமணம் செய்ததும் - செந்தில்(திருப்பம்)