உலகத்தின் மொத்த பரப்பளவில் இரண்டாவது மிகப் பெரிய தேசமான கனடாவில் சுற்றுலா சென்று வந்த என்னுடைய பயண அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளேன். கனடாவின் இயற்கை எழில் காட்சிகள் பரவசமூட்டுபவை. கனடாவின் ஒன்டாரியா மாகாணத்தின் தலைநகரான டொரன்டோ வட அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரம். இந்நகரில் டவுன்டவுன் (Down Town) என்கிற பகுதிதான் மையப்பகுதியாகும். இங்குள்ள யாங் தெரு (Yonge Street) உலகத்திலேயே மிக நீண்ட தெரு என்று சொல்லுகிறார்கள். யாங் தெருவில் டன்டாஸ் சதுக்கம் உள்ளது. டொரோண்டோ நகரின் மத்தியில் காசாலோமா அருங்காட்சியகம் இருக்கிறது. டொரன்டோ நகரின் சிறப்பு மிக்க அடையாளச் சின்னம் சி.என் டவர் ஆகும். இராயல் ஒன்டோரியம் அருங்காட்சியகம், சிட்டி சென்டர். அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் இருக்கும் மையத் தீவு, டொரன்டோ நூலகம், கனடாவின் கிழக்கு ஒன்டாரியா (Eastern Ontario) மாநிலத்தில் உள்ளது கிங்ஸ்டன் நகரம். கனடாவின் கியுபெக் நகரம். மாண்ட்ரியல் மவுண்ட் ராயல் அருங்காட்சியகம் (Montreal Mount Royal Museum) சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இது வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்று. வாடிகன் நகரத்திலுள்ள தேவாலயத்திற்கு அடுத்ததாக உலகத்திலேயே மிகப் பெரிய தேவாலயமாகவும் இதை கூறுகிறார்கள். ஆன்ரோ என்கிற பாதிரியாரால் உருவாக்கப்பட்டது. இதற்கு செயின்ட் ஜோசப் ஆரடரி என்று பெயர். கனடாவின் மிகவும் அதிசயிக்கத்தக்க இயற்கை காட்சிகள் உள்ளடங்கிய ஆயிரம் தீவுகளை இயந்திரப் படகுகளின் மூலம் காண்பது மிக மகிழ்ச்சியான ஒன்று. நயாகரா ஆறானது, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் இயற்கை எல்லையாக அமைந்தது. இதுவே ஒரு முழுமையான பயண நூல் அல்ல.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners