Share this book with your friends

Makkal Sevaiyin Magathuvam / மக்கள் சேவையின் மகத்துவம் An Impact of Social Service/சமூக சேவையின் தாக்கம்

Author Name: Dr. G.N.DEVARAJ | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

மக்கள் சேவையின் மகத்துவம் என்ற இந்த புத்தகத்தில் நூல் ஆசிரியர், தனது வாழ்க்கை பயணத்தில் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும், தனது அனுபவங்களைப் பற்றியும், தான் பங்கேற்ற விழாக்களில் ஆற்றிய உரை களைப் பற்றியும், தான் பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளைப் பற்றியும், பொது நல நோக்கில் எழுதிய கடிதங்களைப் பற்றியும், தான் ஆற்றிய சமூக பணிகளைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் விவரித்துள்ளார். இந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்கள் ஏதாவது ஒரு வகையில் சமூகப் பணிகள் ஆற்ற ஊக்குவிப்பாக அமைந்தால் அதுவே  இப்புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். அனைவரும் சுயநல வாதிகளாக இல்லாமல் பொதுநலவாதியாக மாற வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

முனைவர் ஜி.என். தேவராஜ்

மக்கள் சேவையின் மகத்துவம் என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர் முனைவர் ஜி.என்.தேவராஜ், தமிழ் நாடு நீலகிரி மாவட்டத்தில் 1964- ல் பிறந்தார். தந்தை நஞ்சுண்டன் மத்திய அரசு நிறுவனமான அறுவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி 2005-இல் காலமானார். உடன் பிறந்த 2 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் திருமணம் செய்து நல்ல நிலையில் உள்ளனர். தாயார் மீனாட்சி தோட்டம் துறவுகளை பார்த்து வருகிறார். நூல் ஆசிரியருக்கு ஒரு மகள் ஆர்த்தி திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஒரு மகன் கோகுல் அசெஞ்சர் கம்பனியில் கோவையில் பணியாற்றுகிறார். ஆசிரியர், எம்பிஏ, எம்பில், பிஜில், படித்து பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு கல்வி அறக்கட்டளையின் சாதனையாளர் விருதும், உலக தமிழ் பல்கலை கழகத்தின் மான்புரு முனைவர் பட்டமும், அறம் விருதும் பெற்றுள்ளார். எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். 3 ஆண்டுகள் தனியார் நிருவனங்களிலும், 34 ஆண்டுகள் அரசு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். மக்கள் சட்ட உரிமைகள் மற்றும் சமூக சேவை இயக்கத்தின் மக்கள் நாயகன் விருது பெற்றுள்ளார். அகில இந்திய குறும்பட பெடரேஷன், பெங்களூரு சார்பில் நடைபெற்ற போட்டியில் சிறந்த நடிகராக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்.

Read More...

Achievements