சேரம்:ஒரு வழிப்போக்கனின் நாட்குறிப்பு
மானுடத்தின் கனவு தான் பயணம். பயணமின்றி இவ்வுலகம் இல்லை. அகம், புறம் என எல்லாவற்றையும் புரட்டிப் போடும் ஆற்றல் ஒரு சிறு பயணத்திற்கு உண்டு. மரம் போல ஓரிடத்திலயே நின்று, மாறும் காலத்தின் சாட்சியாக நிற்பதைக் காட்டிலும் இரு சிறகுகளை விரித்து வான் எழும்பி காலத்தினூடே உலகைக் காண்பது அற்புதமானது. கூழாங்கல்லில் பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பொதிந்த குளுமையை உள்ளங்கையில் உணருங்கள். காட்டாற்றின் நெடிய பயணம் தெரியும். வானேகும் பறவையின் உதிர்ந்த சிறகு ஒன்றைச் செவியருகே அசைத்துப் பாருங்கள். பல்லாயிரம் மைல் பயணித்த கதை மௌனமாகக் கேட்கும். புதிய நிலங்கள் நம் மனதைப் புத்துருவாக்கம் செய்பவை. நூல் பல கற்பது அறிஞனாக்கும் எனில் நிலம் பல பார்ப்பதோ பண்பாளனாக மாற்றும்.
கேரளமெனும் கடவுளின் தேசத்தில் உங்கள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கட்டுரைகள் இவை. இளவெயில், அடர்பசுமை, மென்குளிர் போல மனதை வருடிச் செல்லும் ரஜினியின் மென்சாரல் மொழிநடையை வாசிக்கையில் இலக்கற்ற பயணம் கூட பயணமே ஓர் இலக்காக மாறிவிடும் உன்னத அனுபவம் தருகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners