மனங்களின் நிறங்கள் – நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் உள் மனதை வெளிப்படையாக வாசகர்களுக்கு கொடுப்பதற்கு ஒரு சிறு முயற்சி. பதினான்கு சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பு பல நிலைகளில் இருந்த அல்லது இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள். கதைகளில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்றாலும் மைய கரு மட்டும் ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு போல ஆசிரியரின் உள் மனம் சொல்வதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். தமிழில் எழுதப்பட்ட முதல் முயற்சி என்று சொல்ல முடியாதபடி விறுவிறுப்பாக கொண்டு செல்லும் கதைகளின் ஓட்டம் வாசகர்களை பிரமிப்புடன் கட்டியிழுக்கும். ஒவ்வொரு கதையின் நடுவே உள்ள புதிர்கள் சாமர்த்தியமாக கடைசியில் விடுவிக்க படுவதில் ஒரு அலாதி நிம்மதி.
முரளி ஒரு ஓய்வு பெற்ற இந்தியாவின் சர்வதேச வங்கி மேலதிகாரி. பல ஆண்டுகாலங்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பின் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆங்கிலத்தில் இரண்டு சிறுகதை புத்தகங்கள் வெளியிட்டபிறகு, தமிழில் இது ஒரு முதல் முயற்சி. சமூக வலைதளங்களிலும், வெளியூர் பயணங்களிளும் செலவிடும் நேரம் போக மற்ற நேரங்களில் இவர் தொழில் எழுத்து. பல வெளிநாடுகளில் நேரிடையாக பெற்ற அனுபவங்களாலும், இள வயதில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்;வுகளாலும் உந்தப்பட்டு அவைகளை தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் கற்பனையை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளே அன்றி இவை எவரையும் குறிப்பிடுவன அல்ல. சிறுகதைகளுக்கே உரித்தான யுக்திகளை கையாண்டு ஒவ்வொரு கதையின் முடிவிலும் புதிர்களை விடுவித்து வாசகர்களை கவர்ந்திழுப்பதில் இவருக்கு ஒரு அலாதி சுகம்.