முதலில் சில கொலைகள், பின் அதற்கான காரணத்தை தேடி இக்கதையின் முதன்மை கதாபாத்திரமான “ராகவன்” வருகிறார். ஒரு கொலையின் காரணத்தை தேடிச்செல்ல அது இன்னொரு கொலையை பதிலாக தருகிறது. இப்படி நிகழும் சில கொலைகளில் இருந்து அதன் காரணத்தை தேடிப் பிடிப்பாரா “ராகவன்” என்பதே இக்கதையின் ஓட்டம். கதை செல்ல செல்ல நீங்களும் ராகவனுடன் சேர்ந்தே சிந்திக்க தொடங்குவீர்கள். அவருடனே பயணம் செய்வீர்கள்.
இக்கதையின் ஆசிரியர் சிவக்குமார் ஒரு பொறியியல் முதுகலை பட்டதாரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர். கடந்த ஐந்து வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். அரசியலையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் நெருக்கமாக கவனித்து வரும் இவர் 2014ல் சமூகம் சார்ந்த கட்டுரைகளை தன் வலைதளத்தில் எழுத தொடங்கினார். இதுவரை ஏழு கட்டுரைகளை எழுதியுள்ளார். பின்னர் 2016ம் ஆண்டு தொடங்கிய "மை" என்னும் 2017ம் ஆண்டில் எழுதி முடித்தார். மேலும் இவர் இதுவரை 13 திகில் சிறுகதைகளை தன் வலைதளத்தில் எழுதியுள்ளார். சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சுவாரசியமாக விறுவிறுப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் கதைகளாக எழுதுவதே இவரின் நோக்கம். இக்கதையிலும் அது பிரதிபலித்துள்ளது.