நேஹா ஒரு இளமையான, எளிமையான மற்றும் நிதித்துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற புத்திசாலிப்பெண். அவள் சிறுவயதில் இதயம் நொறுங்கக்கூடிய சோகங்களை கடந்து வந்தவள். ஆனாலும், அவளது எதிர்காலம் அவளிடம் மிகவும் கருணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறாள். ஆனால், சில எதிர்பாராத நிகழ்வுகள், அவளுக்கு ஏற்றபடி அமைந்த, அர்ஜுன் என்ற அழகான துணிச்சலான தொழிலதிபருடன் திருமணத்தில் முடிந்தது. அவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மட்டும் திருமணம் செய்து வாழலாம் என்று ஒத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் கவனமாக தீட்டிய திட்டங்கள் எல்லாம் ஒரு வருட திருமண காலத்தில் நொறுங்கியது. அர்ஜுன் அவன் நம்பியது போல நேஹா ஒரு வழக்கமான சாதாரண பெண் அல்ல என்று கண்டறிந்தான். அவளுக்குள் வலுவான மனம் படைத்த புத்திசாலிப்பெண் மறைந்திருப்பது அவனை கவனிக்கச் செய்தது. நேஹாவும் அர்ஜுனுக்குள் இருக்கும் அவளுக்கு பிடித்ததை போல அற்புதமான நபரை கண்டறிந்தாள்.
அவர்கள் இருவரும் விரும்பி கேட்கப்பட்ட விவாகரத்து கிடைத்ததா? அல்லது வாழ்க்கை அவர்களுக்கு வேறு ஏதாவது பாதுகாத்து வைத்திருந்ததா?
கல்யாண முடிச்சு - இதயத்திற்கு இதமான மகிழ்ச்சியான காதல் நிறைந்த புத்தகம். உங்களை மறுபடியும் மறுபடியும் காதலில் விழ வைக்கும்