நாங்கள் மின்னிதழ் கடந்த ஒரு வருடமாக தமிழில் வருகிறது. முழுக்க முழுக்க மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்படும் இதழ். கடந்த ஒரு வருடமாக வந்த இதழின் முதலாம் ஆண்டு சிறப்பு இதழ் ஆண்டு மலர் இது.
இப்போது வரை நாங்கள் மின்னிதழில் சுமார் 100க்கும் மேலான இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் நமது இதழ் வெளிவருகிறது. இந்த அத்தனை வளர்ச்சியையும் ஒரு வருடத்தில் ஒரு சிறிய இளைஞர்கள் கூட்டத்தால் பெற முடிந்திருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.