பொன்னான கல்லூரி நாட்களின் நினைவுகள் மனதை விட்டு விலகாமல் நீடித்து நின்று என் இதயத்தை எரித்துக் கொண்டிருக்க, எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா?
என் அருமையான நண்பனுடன் எனக்குத் திருமண நிச்சயம். நான் அற்புதமான மானேஜ்மென்ட் பொஸிஷனில் இருக்கிறேன். நான் பரவசமான நிலையில் இருக்க வேண்டியவள். ஆனால் என்னால் முடியவில்லை. சித்துவின்பால் எனக்கு இருந்த பேரார்வம் காலத்தால் மங்கவில்லை என்று எனக்கு புரிகிறது. என்னுடைய மேனேஜ்மென்ட் பொசிஷன்? எனக்கு அதில் துளிக்கூட ஆர்வம் இல்லை!
என் தந்தை காலமாகிவிட்டார் என்ற துயரமான செய்தியை கேட்டதும் இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நிகழ்காலத்துக்கு திரும்பினேன். என் பிரியத்துக்குரிய அப்பாவின் கடந்தகால காதல் விவகாரத்தில் தடுக்கி விழுந்தேன். அப்பாவின் ரகசியத்தை கண்டுபிடிப்பது என்பது ஒரு பிரயாணத்துக்கு தேவையான காரணமாக இருந்தது.
குறிக்கோளில் வெற்றி பெற்றேனா? அந்த ரகசியம் என்னவென்று கண்டுபிடித்தேனா? நான் என்னுடைய தேவையில்லாத ஐயங்களை காற்றில் பறக்கவிட்டு என் விலை மதிப்பற்ற உள்ளுணர்வு சொல்வதை கேட்டேனா?