புத்தகத்தின் நான்கு முக்கிய அம்சங்கள்:
247 எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுதப்பட்ட உலகின் முதல் நூல் இதுவாக இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இது தமிழ் மொழியின் முழுமையான அழகை (முற்றுருவை) உலகிற்கு உணர்த்தும் ஒரு தனித்துவமான இலக்கண முயற்சி.
எளிமைப்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்வி: வாசிப்புப் பயிற்சியை எளிமையாக்க, மொழியின் அடித்தளமாகிய 31 எழுத்துக்களை (உயிர் 12, ஆய்தம் 1, மெய் 18) வெறும் இரண்டு வாக்கியங்களில் பயன்படுத்தும் சிறப்பம்சம் இதில் உள்ளது.
216 உயிர்மெய்க்குப் பிரத்யேகப் பயிற்சி: கடினமாக உணரப்படும் 216 உயிர்மெய் எழுத்துக்களுக்கும் தனித்தனியே 18 சிறிய வாக்கியங்களை அமைத்து, வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய கற்பித்தல் வியூகத்துடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கதைக்குள் இலக்கணமும் ஞானமும்: இந்த முழு இலக்கணக் கட்டமைப்பும் புத்தகத்தின் முதன்மைக் கதையான 'கௌதமின் இரண்டாம் ஆயுள்' என்ற சுவாரஸ்யமான கதைக்குள் முழுமையாக இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாசகர்கள் தமிழின் அழகோடு சேர்த்து ஆரோக்கியத்திற்கான ஞானத்தையும் பெறுவார்கள்.