Share this book with your friends

Panam - Ungal Pirappurimai / பணம் - உங்கள் பிறப்புரிமை Panam Patriya Oru Pudhiya Adhigaram! / பணம் பற்றிய ஒரு புதிய அதிகாரம்!

Author Name: Srinivasan Ramanujam | Format: Paperback | Genre : Self-Help | Other Details

பணம் என்றாலே ஒரு மிரட்சியோடு பார்க்கும் குணம் நம்மிடம் உண்டு. அந்த மிரட்சிக்குக்காரணம், இடதா,வலதா என்று தெரியாமல் விழி பிதுங்கும் ஒரு வழி தவறிய ஆடு போல, பணம் நல்லதா கெட்டதா என்கிற கேள்வியே. பணம்தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. காலை கண் விழிப்பது முதல் இரவு உறங்கச்செல்லும் வரை பணம் தான் நம்மை இயக்குகிறது. 

ஆனால்...நம் எல்லோராலும் "பணக்காரன்" ஆக முடிகிறதா?

நாம் ஏன் இன்னும் ஒரு நடுத்தரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

பணம் பற்றிய மூட நம்பிக்கைகள் ஏராளம். யாரோ அமைத்த மேடையில் உட்கார்ந்து அவர்களின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நம் வரலாற்றை நாம் மாற்றியமைக்க மறந்து விடுகிறோம்.

பணக்காரர்கள் எல்லாரும் நம்மில் இருந்து வந்தவர்களே. உங்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்பயன்படுத்திக்கொள்வது நம் கடமை மட்டுமல்ல; அது நம் உரிமை!

ஆம்; பணம் உங்கள் பிறப்புரிமை! பணக்காரன் என்பது உங்கள் வாழ்வுரிமை!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சீனிவாசன் இராமானுஜம்

பொறியியல் பட்டதாரி. தொழில் முனைவோர் (Entrepreneur). Serial Entrepreneur. எழுத்தாளர். பயிற்சியாளர், பேச்சாளர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தொழில்நுட்பம் சார்ந்த இவரின் மேடைப்பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுவது இவரின் தனித்திறமை. செயற்கை நுண்ணறிவு பற்றியும் (Artificial Intelligence), Data Science பற்றியும்,  Digital Marketing பற்றியும், Blockchain, Cryptocurrency பற்றியும் இவர் பேசும் இனிய மற்றும் எளிய நடை எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பு.

பன்முக ஆற்றல் கொண்ட இவர், தன் கல்லூரி காலத்தில் ஆனந்தவிகடனில் 2000-ம் ஆண்டு மாணவ நிருபராக இருந்திருக்கிறார்.

பதினேழு வருடங்கள்  மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்து, பிறகு தானும் ஒரு முதலாளி ஆகவேண்டும் என்கிற கனவோடு 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இவரது நிறுவனம் (Mruthaa Technologies Pvt Ltd.,).

எழுதுவதும் எண்ணங்களில் இருக்கும் சொற்களோடு உரையாடுவதும் இவருக்கு மிகப்பிடித்தமான செயல்கள்.

Read More...

Achievements

+6 more
View All