இனிமையான குடும்ப வாழ்வில் திடீரென வீசிய புயல். மாஷா இதை எப்படி எதிர் கொண்டாள்? ஒவ்வொரு நிலையிலும் அவள் சந்தித்த உடல், மனம் சார்ந்த போராட்டங்களிலிருந்து இருந்து மீண்ட கதை.
லியா என்ற புனைப் பெயரில், தன்னுடைய கான்சர் போராட்டத்தை சிறுகதை வடிவில் சுவையாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். இது லியாவின் முதல் தமிழ் சிறுகதை. கடந்த ஆண்டு, தன் ஆசிரியப்பணி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இளம் ஆசிரியர்களுக்கு வழி காட்டும் இரண்டு ஆங்கில புத்தகங்களை ( "To the Budding Teachers" மற்றும் "Pep Talk") எழுதியுள்ளது மிகுந்த பாராட்டைப் பெற்றது.