மரங்கள் எப்போதும் தனிமையை விரும்புவதே இல்லை. அது தனக்கு நெருக்கமானவர்களோடு எப்போதும் உரையாடிக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறது. அந்த வகையில் இக்கதையில் வரும் புளியமரமும் அப்படிதான்....
கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் வட்டம். காட்டுப்பையூர் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வாசு குரு. வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளர். திரைப்படதுறையிலும் கால் பதிக்க பெருங்கனவோடு வலம் வருபவர்.