ஒரு பெண் மணவாழ்க்கையில் வெற்றி பெறுவது இன்று எளிதானதாக இல்லை.கணவன் தொழிலில் நஷ்டப்பட்டால் அவள் வறுமையில் வாட வேண்டியுள்ளது. வயதான காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக தன் படிப்பு, வேலை, அந்தஸ்துக்கு பொருத்தமற்ற மணமகனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் மணவாழ்வு பெரும்பாலும் இனிமையானதாக அமைவதில்லை.சில பெண்களுக்கு நல்ல கணவன் அமைந்தும் விபத்தில் சிக்கி இளம் வயதில் விதவையாகி விடுகிறார்கள். சில பெண்களுக்கு திருமணமாகியும் வயது முப்பதைத் தாண்டியும் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கிறார்கள்
சில பெண்களுக்கு அமையும் கணவன் ஊதாரியாக, அவளது நடத்தையில் சந்தேகப்படுபவனாக, சோம்பேறியாக, பிறரை ஏமாற்றி பணம் பறிப்பவனாக, மனைவியை அடித்து துன்புறுத்துபவனாக அமைந்து விடுவதும் உண்டு. சில பெண்களுக்கு கணவன் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், போதைப்பழக்கம் உடையவனாக அமைந்து விடுவதும் உண்டு. சில பெண்கள் கணவனால் கைவிடப்படுகிறார்கள். சில பெண்களுக்கு கணவன் துர்நடத்தையுடையவனாக, ஒழுக்கமில்லாத, பிறர்மனை நாடக்கூடியவனாக கணவன் அமைந்து விடுவதும் உண்டு.
சில பெண்கள் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து மனவளர்ச்சியில்லாத குழந்தையை பெற்று தவிக்கிறார்கள். இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் தனது அலுவலக வாழ்விலும், மணவாழ்விலும் வெற்றி பெறுகிறாள் என்றல் அவள் உண்மையிலேயே சிங்கப்பெண்தான்.
மாபெரும் வெற்றி பெற்ற 25 சிங்கப் பெண்களை இந்த புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளேன். இன்று பெண்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளையும் அதற்க்கான தீர்வுகளையும் இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளேன். பெண்கள் விழிப்புணர்வு பெறவும், வீட்டுக்கு ஓரு சிங்கப்பெண் உருவாகவும், வருடந்தோறும் மகளிர் தினம் மகிழ்வுடன் கொண்டாடவும்
வாழ்த்துக்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners