தமிழகத்தில் காட்டு நாயக்கன் பழங்குடியினர் என்கிற இந்நூலில், காட்டு நாயக்கர்களின் வரலாறு சான்றுகளையும் வாழ்க்கை குறிப்புகளையும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, பதிமூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் முகம்மதியர் படையெடுப்புகளாலும், வலுவிழந்த தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் வாரிசு உரிமைக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், வடக்கில் விஜயநகர பேரரசு வலுவாக இருந்து, தமிழகத்தின் மீது படையெடுத்து, மதுரையைக் கைபற்றி தமிழகம் முழுவதும் பாளையங்களை அமைத்து நிர்வாகத்திற்காக, தெலுங்கர்கள் குடியமர்த்தபட்டார்கள். வடக்கில் இருந்து வாழ்வாதாரத்தைத்தேடி மலை, காடு மற்றும் சமவெளிப் பகுதிகள் என தமிழகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய பழங்குடிகளின் ஒரு பிரிவினர்தான் காட்டுநாயக்கர்கள். நாயக்கர் காலம் முதல் இன்றைய நவீன வாழ்வியல் மாற்றங்களையும், நீண்ட கள ஆய்வுக்குப் பிறகு, இதுவரை ஆசிரியர்க்கு கிடைத்த ஆதாரங்களை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது, குறவஞ்சி குறவர்கள், குரும்பர்கள், இருளர்கள், பளியர்கள் மற்றும் தோடர்கள் என இவர்களுக்கென்று காலம் தொட்டு பல நூறு வருடங்களுக்கு மேலாக வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆனால் தெளிவான வரலாற்று சான்றுகள் கிடைக்கப்பெறாத பல பழங்குடிகள் இன்றும் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. இன்றைய வாழ்க்கை முறையில் பழங்குடிகளுக்கும் தங்களுடைய மொழி, வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை இழந்து, இன்றைய சூழலில் அரசிடம் கையேந்தி மீட்டு எடுக்க போராடி வருகிறார்கள். காட்டு நாயக்கர்களின் வாழ்க்கை, கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை கொண்டுடங்கிய நூலாக இது இருக்கும்.